Human Brain

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#1
மூளைச் செல்களுக்கு நியூரான்கள் என்று பெயர். மில்லியன் கணக்கான நியூரான்கள் நம் மூளையில் உண்டு. இரண்டு நியூரான்கள் இடையே உள்ள இடைவெளியை synaptic cleft என்கிறோம். இரண்டு நியூரான்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுவதற்குக் காரணமான வேதிப் பொருட்களை “நியூரோ – டிரான்ஸ்மிட்டர்கள்’ என்கிறோம்.

* அசிட்டைல்கோலின், டோப்பமின், செரடோனின் போன்று நிறைய நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் உள்ளன. இதில ‘டோப்பமின்’ மிக முக்கியமானது. இரண்டு நியூரான்களுக்கு இடைப்பட்ட சின்ன இடத்தில் ‘டோப்பமின்’ மிக முக்கியமானது. அதன் விளைவாக பல்வேறு வேதியியல் பரிமாற்றங்கள் நடக்கின்றன.

* எத்தனையோ தகவல்களும், சமாச்சாரங்களும் மூளையின் மேற்புற கார்டெக்ஸ் cortex பகுதியை எட்டுவதற்கு முன் அவற்றை வடிகட்டி தேவையான வற்றை மட்டும் அனுப்பும் பணியைச் செய்யும் ஒரு மையம் தலாமஸ் எனப்படும்.

* வடிகட்டப்பட்ட அந்த தகவல்களை நன்றாகப் புரிந்து கொண்டு, அதன்பின் காரண, காரியங்களை அலசி, அடுத்து என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என்ற முடிவை கார்டெக்ஸ் எடுக்கும்.


imagesbrain.jpgimagessynapse.jpg
 
Last edited by a moderator:

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#2
உலகிலேயே மிகப்பெரிய ஆச்சரியம் மனித மூளைதான். கோடிக்கணக்கில் நுட்பமான உயிரணுக்கள், பல கோடி நியூரான்கள், மற்றும் நரம்பு செல்கள். ஓய்வில்லாத மின் ரசாயன ஓட்டம்தான் நம் சிந்தனை. மனிதன் உயிர் வாழும் வரை இந்த செல்களிடையே மின் துடிப்புகள் இருக்கும். சராசரி மூளை, சுமார் ஒண்ணரை கிலோ எடை இருக்கும்.

மூளையின் மூன்று பாகங்கள்

1. முன் மூளை 2. நடு மூளை 3. பின் மூளை

* முன் மூளை என்பது இரண்டு பாதியாக இருக்கிறது. நடுமூளை என்பது கீழே இருந்து வரும் தண்டின் மேல்பகுதி, பின் மூளை என்பது நடு மூளையின் கீழ் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பிற பகுதிகள்.

* பெருமூளை : முன் மூளையில் மடிப்பு மடிப்பாக, மூளையின் முக்கால் பாகம் அமைந் திருக்கும். நம் புத்திசாலித்தனத்துக்கு காரணமான கார்டெக்ஸ்பகுதி மரத்துக்கு மேல்பட்டை போலிருக்கும். இதில் கசகசவென்று எண்ணூறு கோடி நரம்பு செல்கள் உள்ளன. சிந்தனை சம்பந்தப்பட்ட அத்தனை காரியங்களும் இந்த கார்டெக்ஸ் பகுதியில் நிகழ்வதால், இத்தனை அடர்த்தி.

* கார்டெக்ஸ்
பகுதி பழுப்பு நிறம். இதற்குக் கீழே நிறைய வெள்ளைப் பகுதி. கோடிக்கணக்கான நரம்பு செல்கள் சிக்கலாகத் தென்படுகின்றன. ஆறு வயதிற்குள் நம் மூளை ஏறத்தாழ 90% வளர்ந்து விடுகிறது.

images3pts.jpg
 
Last edited by a moderator:

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#3
நம் மூளையின் வலப்பகுதியும் இடப்பகுதியும் தனித்தனியான முறைகளில் வளர்கின்றன. நடுவில் கார்ப்பஸ் கலோசம் இல்லையேல், ஒரு பக்கத்துக்கு மற்ற பக்கத்தின் அறிவு விருத்தியைப் பற்றித் தெரியவே தெரியாது! முன்மூளையில் உள்ளுக்குள்ளே ‘பேசல் காங்லியா’ என்று இரு நரம்பு முடிச்சுகள் இருக்கின்றன. இவை கைகால் அசைவு, நடப்பது ஓடுவது போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.

* கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது போன்ற கலை அம்சங்கள் வலது பாதி மூளையில். புத்திசாலித்தனம், கணக்கில் திறமை, பிரச்சனைகளை அலசுவது, சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்குவது, மொழி அறிவு முழுவதும் இடது பாதிமூளையில்.

* புத்திசாலிகளுக்கான தகுதிகள், ஞாபகம், பகுத்தறிவு, எண் திறமை, வார்த்தைத் திறமை, புரியும் வேகம், பொருட்களை மனதில் எண்ணிப்பார்க்கும் திறமை போன்றவை.
 
Last edited by a moderator:

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#4
* ஈ.ஈ.ஜி யைப் பார்க்கும் போது சாதாரணமாக மூளையில் நான்கு வகை மின்அலைகள் தெரிகின்றன. இவற்றை பீட்டா, ஆல்ஃபா, தீட்டா, டெல்ட்டா என்பர். நம் சிந்தனை செயல்பாட்டுக்கு ஏற்ப இந்த அலைகளின் துடிப்பு எண்ணிக்கைகள் மாறுகின்றன. பீட்டாவும் ஆல்ஃபாவும் நம் எல்லோருக்கும் உள்ளது. தூங்கும் போது இவை மெதுவாகின்றன. வலிப்பு நோய் உள்ளவர்களிடம் இந்தத் துடிப்பலைகளின் கிறுக்கல் அதிமாகிற

imageseeg.jpgimageseeg1.jpg
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#5
சி.டி.ஸ்கேன் : தலையை நுட்பமான எக்ஸ்ரே கதிர்களால் துளைத்து அந்தப் பக்கம் வெளிவரும் கதிர்களைப் பல கோணங்களில் அளந்து அதை ஒரு கம்ப்யூட்டர் மூலம் மூளையின் குறுக்கு வெட்டுப் படமாக மாற்றுவார்கள். மூளையின் உள்ளே ரத்தம் உறைந்திருந்தாலோ சேதம் ஏற்பட்டிருந்தாலோ கட்டி இருந்தாலோ தெரிந்துவிடும்.

MRIஸ்கேன் : நம் உடலில் உள்ள ப்ரோட்டான் களை மின்காந்த அலைகளைக் கொண்டு பிடித்து மூளையின் வடிவத்தைக் கணக்கிட்டு வரைவது. மிக மிக நுட்பமான தெளிவான மூளைக் காட்சிகளைத் தருகிறது.

ct1.jpg imct.jpg

CT Brain

mr.jpg mri.jpg
MRI Scan
 
Last edited by a moderator:

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#6
ஸ்ட்ரோக்

என்றால் மூளைக்குள் ரத்தக் கசிவோ ரத்த ஓட்டத்தடையோ ஏற்பட்டால் சட்டென்று ஆளை வீழ்த்தி விடும். இதில் மூன்று வகை.

1. மூளையின் இரத்தக் கசிவு :

மூளைக்குள் ரத்தக்குழாய் வெடிக்க, ரத்தக் கசிவு ஏற்பட்டு, இரத்தக் கட்டியாகி அந்தக் கட்டி மூளை செல்களை நாசமாக்கி, மூளைத் தண்டையும் அமுக்குவது.

2. மூளையில் இரத்த உறைவு :

மூளையின் ரத்தக் குழாய்களுக்குள் ரத்தம் கட்டி அடைத்து விடுவது. இதனால் மூளைக்கு குளுக்கோஸ், ஆக்ஸிஜன் போகாமல் மூளையின் இரத்த செல்கள் மடிந்துவிடுவது.


3. முளைக்குள் செல்கள் உருண்டு அடைத்தல்:


ஏதாவது ஒரு இரத்தக்கட்டி மூளைக்குச் செல்லும் நாளத்தில் மாட்டிக்கொண்டு அடைத்துவிடுவது.

* ஸ்ட்ரோக் ஏற்பட்டால் முதலில் கண் சுழலும். பேச்சுக் குழறும். தலை வலிக்கும். வாந்தி வரும். மரத்துப் போகும். கோமா மயக்கம்.


stroke.jpg
 
Last edited by a moderator:

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#7
பார்க்கின்சன் நோய்
ஐம்பது வயதிலிருந்து எழுபத்தைந்து வயதிற்குள் ஏற்படும். சரியாக நிற்க முடியாது. கைகால் உதறும். நடக்கும் போது சின்னச் சின்ன அடியெடுத்து நடப்பார்கள். முகமும் பார்வையும் வெறுமையாகத் தோன்றும். கையெழுத்து கிறுக்கலாகவும் பொடிப் பொடியாகிவிடும். பட்டன் போட முடியாது. சிலருக்குப் படிப்படியாக மோசமாகும். சிலருக்கு வருடக்கணக்கில் ஒரே மாதிரி இருக்கும்.
park.jpg
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#8
அல்ஸ்ஹைமர்
மூளைக்கு ரத்த ஓட்டம் படிப்படியாகக் குறைவதால், வயதானவர்களுக்கு அல்ஸ்ஹைமர் என்னும் நோய் வருகிறது. ஞாபகங்கள் அனைத்தும் மறைந்துபோய், சுயநல எண்ணங்கள் மட்டும் மிச்சமிருக்க உயிர் வாழ்தல் மட்டும் ஆசை என்ற நிலை.

alz.jpg
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#9
ஹிப்னாடிஸம் :

இதில் தூக்கம் ஏதும் இல்லை. சரியாகச் சொன்னால் தற்காலிகமாக மற்றொருவரால் கட்டுப்படுத்தப்படும் மாற்று கவனம் என்று சொல்லலாம். ஆழ் கவனத்தில் நூறில் ஐந்து பேரைத்தான் ஆழ்த்த முடியும்.

இஷ்டமில்லாத ஆட்களை ஹிப்னாடிசம் பண்ண முடியாது. ஒருவர் படுத்துக் கொண்டோ அல்லது இருக்கையில் சுகமாகச் சாய்ந்து கொண்டோ ஒரு பொருளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க ஹிப்னாடிசம் செய்பவர் திரும்பத் திரும்பச் சொல்லும் வாக்கியங்கள் மூலம் மயக்கம் அல்லது அரைத்தூக்கம்.

அந்த நிலையில் சில ஆச்சர்யகரமான காரியங்களை அவரால் செய்ய முடிகிறது. விழித்தவுடன் ஏதும் ஞாபகம் இராது. ஹிப்னாடிச நிலையில் கொடுத்த ஆணைகளை நிறைவேற்றுவார்கள்.

ஹிப்னாடிசம் மூலம் உடலின் மூச்சுவிடும் வேகம், இதயத்துடிப்பு ஆகியவற்றையும் பாதிக்க வைக்க முடிகிறது. மற்றவர் உதவியின்றி நம்மை நாமேகூட ஹிப்னாடிசத் தூக்கத்தில் ஆழ்த்திக் கொள்ள முடியும்.

hyp.jpg
 
Last edited by a moderator:

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#10
கோமா :

மூளையில் ரத்தக் கசிவினாலோ அடிப்பட்டதாலோ ஞாபகம் பாதிக்கப்பட்டு – மூச்சு விடுதல், இதயத்தைக் கட்டுப்படுத்தும் தன்னிச்சையான இயக்கங்கள் மட்டும் செய்லபடுகின்றமயக்க நிலை. கோமா நிலையில் மூளையின் செயல்கள் பாதிக்கப் படும்.
bm.jpg
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.