Ice Therapy- ஐஸ் தெரபி ஜில்லுனு ஒரு சிகிச்சை!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஐஸ் தெரபி ஜில்லுனு ஒரு சிகிச்சை!

புதுமை

வீக்கத்துக்குப் புளி பத்து போட்டது, வலிக்கு சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுத்தது எல்லாம் அந்தக் காலம். அதற்கெல்லாம் இப்போது அவசியமே இல்லை. வலியா, வீக்கமா... இருக்கவே இருக்கிறது எளிமையான, குளுமையான சிகிச்சை ‘ஐஸ் தெரபி’. ஐஸ்கட்டிகளின் மூலம் அளிக்கப்படும் புதிய சிகிச்சைக்குத்தான் இந்தப் பெயர். என்ன செய்கிறார்கள் இச்சிகிச்சையில்? என்னென்ன பிரச்னைகளுக்கு கொடுக்கலாம்? யாருக்கெல்லாம் கொடுக்கலாம்? நமது கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் பிஸியோதெரபிஸ்ட் பி.சுரேஷ்...





‘‘நம் அன்றாட வாழ்க்கையில் எளிதாகச் செய்யப்படுகிற சிகிச்சை முறையின் நவீன வடிவம்தான் இது. வீட்டில் இருக்கும் போது தவறி விழுந்துவிடுகிறீர்கள். காயமோ, வீக்கமோ ஏற்படுகிறது. அதைத் தணிக்க உடனடியாக ஒரு டவலில் கொஞ்சம் ஐஸ் கட்டிகள் போட்டு சுற்றி, அந்த இடத்தில் ஒத்தடம் கொடுப்போமே... இதனால் வலியும் வீக்கமும் குறையும்.

சிறிய அளவிலான வெட்டுக்காயங்களில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்தவும் ஐஸ் தெரபி உதவும். இது திசுக்களில் ஏற்படும் பிரச்னைகளை குறைத்து, காயங்களை எளிதில் ஆற வைக்கிறது. தசைகளில் ஏற்படும் சுளுக்கு, பிடிப்புகளை சரிசெய்யவும், கெட்டியாக இருக்கும் தசைகளை தளர்வாக்கி ரிலாக்ஸ் செய்யவும் உதவுகிறது.

டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு குதிகால், தோள்பட்டை, முன் கைமூட்டுகளில் ஏற்படும் வலி, சுளுக்கு போன்றவற்றை உடனடியாக சரி செய்ய ஐஸ் தெரபி தான் செய்கிறார்கள். நடனக் கலைஞர்களுக்கும், சாகசம் செய்பவர்களுக்கும் ஏற்படும் திடீர் தசைப்பிடிப்புகளை போக்குவதற்கும் இம்முறைதான் பயன்படுகிறது.

வெளிநாடுகளில் பல நூற்றாண்டுகளாக இம்முறை பயன்படுத்தப்பட்டாலும், இங்கிலாந்தில்தான் ஐஸ் மூலம் அளிக்கப்படும் அனைத்து சிகிச்சைகளையும் நவீனப்படுத்தியுள்ளார்கள். இப்போது பிஸியோதெரபி சிகிச்சையின் ஒரு பகுதியாகவே ‘ஐஸ் தெரபி’ உள்ளது. சிலர் அதிக முதுகுவலியால் அவதிப்படுவார்கள். தொட்டாலே வலி என்பார்கள். ‘அக்யூட் டிஸ்க் பல்ஜ்’ என்னும் பிரச்னையில் முதுகுவலி கடுமையாக இருக்கும். இதற்கென இருக்கும் ஐஸ்பேக்கை வலி இருக்கும் இடத்தில் வைப்பதன் மூலம் வலியின் கொடுமையை குறைத்து விட்டு, நோயாளி ரிலாக்ஸ் செய்த பின் சில
நாட்கள் கழித்து, மற்ற பிஸியோதெரபி சிகிச்சைகளை ஆரம்பிப்பார்கள்.

தாடை எலும்பில் ஏற்படும் வலி, விபத்துகளால் ஏற்படும் ரத்தக்கட்டு மற்றும் பல் வலியினால் உருவாகும் வீக்கத்தையும் ஐஸ்பேக் வைப்பதன் மூலம் குறைக்கலாம். சிலநேரம் படியேறும்போது கால் பிசகி அதனால் வீக்கம் ஏற்படும். இதற்குக் கொடுக்கப்படும் சிகிச்சையை ஸிமிசிணி (
Rest, Ice,Compression, Elevation) என்று சுருக்கமாக அழைப்போம். முதலில் ஓய்வு. அதன் பிறகு வீக்கம் உள்ள இடங்களில் ஐஸ் தெரபி. அதன் பிறகு அந்த இடத்தை கம்ப்ரஷன் பேண்டேஜால் சுற்றி இரண்டு, மூன்று தலையணைகளை வைத்து, அதன் மீது காலைத் தூக்கி வைக்க வேண்டும். இப்படி செய்தால் விரைவில் வீக்கம் வற்றிவிடும்.

குதிகால்களில் வலி உள்ளவர்களுக்கு ‘கான்ட்ராஸ்ட் பாத்’ என்னும் சிகிச்சைமுறையைச் செய்கிறோம். ஒரு வாளியில் தண்ணீரில் ஐஸ் கட்டிகளை நொறுக்கிப் போட வேண்டும். இன்னொரு வாளியில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு வாளிகளிலும் குதிகாலை மாற்றி மாற்றி முக்க வேண்டும். குறைந்தது 5 முறை இவ்வாறு செய்ய வேண்டும். கால் வலிகளுக்கு இந்த சிகிச்சை நல்ல பலனளிக்கும். காலின் ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

விளையாட்டு வீரர்கள் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்ற பிறகு ஏற்படும் கடுமையான அசதி மற்றும் உடல்வலியைப் போக்க ஐஸ் பாத் எடுக்கலாம். குளியல் தொட்டியில் தண்ணீரை நிரப்பி அதில் ஐஸ் கட்டிகளை கொட்டிவிடுவார்கள்.

அதனுள் படுத்துக் கொள்வார்கள். தசைகளின் இறுக்கம் தளர்ந்து ரிலாக்ஸ் ஆகும். உடல் வலியும் குறையும். உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்படையும். இந்தச் சிகிச்சையை 15 நிமிடங்களுக்கு மேல் செய்யக்கூடாது. கண்டிப்பாக ஒரு பிஸியோதெரபிஸ்ட்டின் மேற்பார்வையில் இந்தச் சிகிச்சையை மேற்கொள்வது நல்லது...’’ என ஐஸ் தெரபியின் பயன்பாடுகளை கூறிய சுரேஷ், யாரெல்லாம் ஐஸ் தெரபி எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் சொல்கிறார்.

‘‘முதுமையில் சிலருக்கு சருமம் மிகவும் வறண்டு காணப்படும். இவர்களுக்கு ஐஸ் தெரபி கொடுக்கக் கூடாது. சிலருக்கு சருமத்தின் உணர்வுகள் சரியாக இருக்காது. அதிகமாக குளிர்ச்சி இருந்தால் கூட அவர்களால் உணர இயலாது. இதனால் ஐஸ் பர்ன் எனும் புண்கள் ஏற்படும். ரத்த ஓட்டத்தில் பிரச்னை இருந்தாலும் ஐஸ் தெரபி கொடுக்க முடியாது.

பெரிதாக இருக்கும் திறந்த காயங்களில் இந்த தெரபியை பயன்படுத்தக் கூடாது. ‘ரேனாட்ஸ் பினொமெனன்’ என்ற அபூர்வ பிரச்னை உள்ளவர்களுக்கு ரத்த நாளங்கள் மிகச்சிறியதாக இருக்கும். இவர்களுக்கு ஐஸ் தெரபி கொடுத்தால் அந்த இடம் நீலமாகி விடும்...’’ நவீன ஐஸ் தெரபிக்கு பயன் படும் உபகரணங்கள் பற்றி விளக்குகிறார் சுரேஷ்.

‘‘வெவ்வேறு வடிவங்களில் ஐஸ் பேக்குகள் கிடைக்கின்றன. இதில் தண்ணீரை ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எளிதாகப் பயன்படுத்தலாம். ரெடிமேடாக ஐஸ் ஜெல் பேக் கிடைக்கிறது. இதை அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மின்சார இணைப்போடு கிடைக்கும் ஜெல் பேக்கை ஹாட் பேடாகவும் பயன்படுத்தி வலி குறைப்புக்குப் பயன்படுத்தலாம். ‘ஐஸ் தெரபி சர்க்குலேட்டிங் சிஸ்டம்’ என்னும் கருவி இப்போது கிடைக்கிறது.

இதில் உள்ள குடுவையில் ஐஸ் மற்றும் தண்ணீரை ஊற்றி வைத்துவிட்டு இதில் இருந்து செல்லும் இணைப்பு குழாயின் மூலம் ஐஸ் தெரபியின் விளைவை கடத்தி உடலின் எந்த பாகத்துக்கும் எளிதாக சிகிச்சை அளிக்கலாம். சிகிச்சை அளிக்கும் பாகத்தில் ஸ்ட்ராப் பொருத்திக் கொள்ளவேண்டும். முதுகு, மூட்டு, தோள்பட்டை, கணுக்கால் போன்றவற்றில் வரும் வலிகளுக்கு இந்த உபகரணத்தை பயன்படுத்துகிறோம்.

பாதங்களில் வலி ஏற்படுத்தும் பிரச்னையான ‘ப்ளான்டர் பேஸிடிஸ்’க்கும் ஐஸ் தெரபி உதவுகிறது. ஒரு பாட்டிலில் நீரை ஊற்றி அது ஐஸ் ஆகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். அந்த பாட்டிலை எடுத்து தரையில் வைத்து பாதத்தால் உருட்ட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பாத வலி சரியாகும். மேற்சொன்ன எல்லா சிகிச்சைகளையும் குறிப்பிட்ட மருத்துவர் அல்லது பிஸியோதெரபிஸ்ட்டின் ஆலோசனைப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும்.

சரியான நேரத்தில் உரிய முறையில் செய்தால் உடலுக்கு மட்டுமல்ல... மனதுக்கும் குளுமை தரும் அருமையான சிகிச்சை இந்த ஐஸ் தெரபி...’’ என்கிறார் சுரேஷ்.டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு குதிகால், தோள்பட்டை, முன்கை மூட்டுகளில் ஏற்படும் வலி, சுளுக்கு போன்றவற்றை உடனடியாக சரி செய்ய ஐஸ் தெரபிதான் செய்கிறார்கள்...
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.