Id, Ego, Super-Ego.....

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,126
Likes
14,733
Location
California
#1
இந்த மாத நீயா நானா தலைப்பில் பலர் ஈகோவை பற்றி புரட்டி எடுத்திருந்தார்கள். நானே கூட என் ஈகோ தான், என் நிம்மதிக்கு , முதல் எதிரி என்று எண்ணியதுண்டு. பிள்ளைகளிடம் காட்டும் பெற்றோர் என்ற ஈகோ.... உறவுகள் செய்யும் பிழையை பெரிதுபடுத்தி மன்னிக்கவே விடாமல் மனதை சிறைபிடிக்கும் ஈகோ .... சிலசமயங்களில் கணவரிடம் விட்டுக்கொடுக்க விடாமல் தடுக்கும் ஈகோ.... இப்படி ஈகோவை ஒரு எதிரியாக மட்டுமே பார்த்து, அதை தோல்வி அடைய செய்ய வேண்டும் என்று விடாமல் போராடி, எல்லா தருணங்களிலும் மண்ணை கவ்வியது என்னவோ நான் தான்.....


ஈகோ என்பது உண்மையிலேயே எதிர்மறையான ஒன்றா??? ஈகோ என்பது ஒருவரின் சுய பிம்பம்... அது இல்லாமல் சுய நினைவில் இருக்கும் எவருமே இருக்க முடியாது .... அது தான் நம்மை வாழ்க்கை பாதையில் முன்னோக்கி செல்ல தூண்டுகிறது என்று ஒரு கருத்து நிலவுகிறது. இல்லை, ஈகோ தான் ஒருவனை இயல்பு வாழ்க்கையிலோ ,உறவுகளிலோ விரிசலை ஏற்படுத்துகிறது என்று முற்றிலும் மாறுபட்ட எதிர் மறை கருத்தும் நிலவிவருகிறது..... சரி எது தான் உண்மை ????


நவீன மனநல மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஆஸ்திரிய மருத்துவர் சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud), மானிடரின் குண இயல்புகள் பின்வரும் மூன்று சூழ்நிலை உணர்வுகளாலேயே ஏற்படுகிறது என்று கூறினார். அவை,


உணர்வால் உந்தப்படும் இயல்பு (Id)
முனைப்பால் உந்தப்படும் இயல்பு (Ego)
மிகையான அகத்தால் உந்தப்படும் இயல்பு (Super Ego)


இந்த மூன்று குணநலன்களுக்கு இடையில் நடக்கும் போராட்டமே மனித ஆளுமையை நிர்மானிக்கும் என்று கூறினார். 

Attachments

Last edited:

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,126
Likes
14,733
Location
California
#2
உங்களுக்குள் இருக்கும் மூவர்:
அது 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டி இலங்கையிடம் இந்தியா படு தோல்வி அடைகிறது. அப்போது களத்தில் பேட் செய்து கொண்டிருந்த நட்சத்திர வீரரான வினோத் காம்ளியால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அழுகை பீறிடுகிறது. பத்திரிகைக்காரர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள் என்று உணர்ந்து அழுகையை அடக்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை. அழுது கொண்டே உடை மாற்றும் அறைக்குள் ஓடிவிடுகிறார்.

தமிழக சட்டமன்றம், எதிர்கட்சி தலைவர் எனும் பெரும் பொறுப்பில் விஜயகாந்த் அமர்ந்திருக்கிறார். ஆளுங்கட்சி மந்திரி ஏதோ சொல்லிவிட்டார் என்று தான் வகிக்கும் பொறுப்பை மறந்து நாக்கை மடித்து வசைபாடுகிறார். அந்த காணொளி தமிழகம் முழுக்க பரவி அவரது மதிப்பு சரிகிறது.

ரிச்சர்ட் கிரி என்கிற நடிகர் மேடையில் பேசிக்கொண்டிருந்த ஷில்பா செட்டியை திடீரென கட்டி பிடித்து முத்தம் கொடுக்க அது பெரிய சர்சையாகி போராட்டங்கள் வெடித்து கிளம்புகிறது.

வினோத் காம்ளி, விஜயகாந்த்,ரிச்சர்ட் கிரி மூவருமே பெரிய பிரபலங்கள் அவர்களின் இந்த செயல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தவர்கள்.ஆனாலும் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ள காரணம் என்ன? அவர்கள் மட்டும் அல்ல நாமும் இது போல் சில நேரங்களில் நமது கட்டுபாடுகளை இழந்து ஏதாவது செய்து விடுவோம். அதன் பிறகு ஏன் இப்படி செய்தோம் என்று யோசிப்போம். அதற்கெல்லாம் காரணம் உங்களுக்குள் இருக்கும் மூன்று பேர். உடல் பிரச்னைகளை தீர்ப்பதில் முன்னேறி இருந்த மருத்துவம், மனப் பிரச்னைகளை கையாள முடியாமல் தவித்த காலம்.அதற்கான தீர்வை சிக்மன்ட் பிராய்ட் கொண்டுவந்தார்.அவர் தான் மனிதனுக்குள் இருக்கும் மூன்று நபர்களை கண்டு பிடித்தார். அவர்கள் பெயர் இட்(ID ), ஈகோ(ego), சூப்பர் ஈகோ(super ego). அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.

1) இட் இன்டர்நேல் ட்ரைவ் என்பதன் சுருக்கம் தான் இட். இவர் தான் எல்லோருக்கும் மூத்தவர் முதன் முதலில் உருவானவர்.உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயம் நடந்ததும் துள்ளி குதிப்பது இவர் தான். சோகமான நிகழ்வில் உங்களை தற்கொலை செய்து கொள்ளச் சொல்பவரும் இவர் தான். ஒரு குழந்தையை கண்டதும் தூக்கி முத்தமிடச் செய்வதும், சுடு சொல் தாங்காமல் அருவாளைத் தூக்கி தெருவில் விரட்ட வைப்பதும் இவர் தான். இவர் ஒரு சுதந்திரப் பறவை. இவர் பாட்டுக்கு ரோட்டில் விசிலடித்துக் கொண்டிருப்பார். சுற்றி இருப்பவர்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை. குரங்கில் இருந்து மனிதனாக வந்தவுடன் நமக்கு இட் மட்டுமே இருந்தது.

2) ஈகோ இவர் தான் சுயம். இவர் தான் உண்மையான நீங்கள். இவர் இட் உருவாகிய பின் உருவானவர். இவர் மிகவும் பொறுப்பானவர். நீங்கள் தான் உங்களது ஈகோவை உருவாக்குகிறீர்கள். உங்களது பெற்றோர் சொன்னது, உங்களது பாட்டிகள் சொன்ன கதைகள், உங்களது மதம் சொன்னதாக உங்களுக்குச் சொல்லப்பட்டது, நீங்கள் படித்த புத்தகங்கள், நீங்கள் பார்த்த படங்கள், போன்றவையில் இருந்து தாங்கள் உள்வாங்கிக் கொண்டவைதான் உங்களது ஈகோவை உருவாக்குகிறது. உங்களது இட்டை கட்டுப்படுத்துவது தான் ஈகோவின் வேலை. எது சரி எது தவறு என்று இதுவரை உங்களுக்கு கிடைத்த அனுபவத்தில் இருந்து முடிவெடுப்பார். நீங்கள் நடு ரோட்டில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். அப்போது திடீரென துள்ளலான இசை ஒன்று கேட்கிறது. உங்கள் இட் உங்களை “ஆடு மச்சி ஆடு” என்று உசுப்பேற்றி விடுவார் . ஆனால் ஈகோவோ “வேணாம்… நடு ரோடு எல்லாம் பாத்திட்டு இருப்பாங்க.. அமைதியா வா ” என்று அடக்கிக் கூட்டிக்கொண்டு போவார். உங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வது ஈகோவை வளர்க்க நல்ல வழி. இன்டர்வியூவுக்குப் போகும் போது உங்கள் இட் உங்களை பயமுறுத்துவார். “சரியா பண்ணு… அதுக்கு மேலயும் வேல கிடைக்கலனா… நஷ்டம் கம்பெனிக்குத் தான் ” என்று சொல்லிக் கொள்வது உங்களது ஈகோவை வளர்க்க உதவும். இன்டர்வியூ முடிவு எப்படி வந்தாலும் உங்களைப் பாதிக்காது. இட்டும் ஈகோவும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அதில் இட் சில சமயங்களிலும் ஈகோ பல சமயங்களிலும் வெல்வார்கள். ஆனால் இப்போது பலபேருக்கு ஈகோவே இட் மாதிரி தான் இருக்கிறது. அதை பலவீனமான ஈகோ என்று சொல்கிறார்கள். பேச்சு வழக்கில் ‘அவனுக்கு ஈகோ அதிகம்’ என்றால் அதிகம் திமிர் பிடித்தவர்கள் , கெட்டவர்கள் என்று அர்த்தமாக்கிவிட்டார்கள். உண்மையில் அதிக ஈகோ வின் காரணமாக தான் செய்வது சரி என்று நம்பும் ஆட்களையே அவ்வாக்கியம் குறிக்கும். அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதை அவர்களது ஈகோவின் தரமே முடிவு செய்கிறது. ஹிட்லருக்கு இருந்ததும் காந்திக்கு இருந்ததும் தங்களது ஈகோவின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை தான் அவர்களை மகாத்மாவாக்கியவது வில்லனாக்கியதும் அவற்றின் தரமே. ஈகோ இருப்பவர்கள் கெட்டவர்கள் அல்ல அதை கெட்டதாய் வைத்திருப்பவர்களே கெட்டவர்கள்

3) சூப்பர் ஈகோ: இட்டின் முட்டாள் தனத்தை ஈகோ தடுக்கும் ஈகோவே முட்டாளாய் இருந்தால்... இட்டால் சில விஷயங்களை அவசரப்பட்டு செய்துவிட்டதால் வருந்துவீர்கள்(சே.. அவசரப்பட்டு லவ் சொல்லி கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமோ?..), ஈகோவால் சில விஷயங்களை தயங்கி செய்யாமல் விட்டதால் வருந்துவீர்கள்.(ப்ச்….அன்னைக்கே தைரியமா லவ்வ சொல்லிருக்கலாமோ?). இந்த குழப்பத்தை போக்கத் தான் சூப்பர் ஈகோ வருகிறார். சித்தார்த்தனை புத்தனாக்கி கடவுளாக மாற்றியதும், ஈ.வே.ராமசாமியை பெரியாராக்கி சமூகபோராளி ஆக்கியதும் இவர் தான். நீங்கள் நீண்ட நாட்களாக ஒரு விஷயத்தை செய்து கொண்டிருப்பீர்கள். திடீரென்று ஒரு நாள் இது வரை நீங்கள் செய்தது எல்லாம் தவறு என்று உணர்வீர்கள். அதற்கு காரணம் உங்கள் சூப்பர் ஈகோ. எளிதாய்ச் சொல்ல வேண்டும் என்றால் அவர் ஒரு நீதிபதி மாதிரி.நீங்கள் தவறு செய்திருந்தால் மனசாட்சியாக வந்து குத்துவார். நீங்கள் சரியாக நடந்து இருந்தீர்கள் என்றால் தொடர்ந்து அதைப் போல் செயல்படச் சொல்லி உங்களை பாராட்டுவார். நீங்கள் இக்கட்டில் மாட்டி சோர்ந்து இருந்தீர்கள் என்றால் ஊக்கப்படுத்தி ஆலோசனை வழங்குவார். (அந்த நேரம் பார்த்து திடீர்னு எனக்கு ஒரு ஐடியா தோணுச்சுப்பா…) சிலர் இதை கடவுளின் குரல் என்று தவறாக நினைத்துக் கொள்வார்கள். இவற்றால் இட்டையும் ஈகோவையும் கட்டுப்படுத்த முடியும். இப்போது என்ன பிரச்னை என்றால் இந்த சூப்பர் ஈகோ தான் மதங்கள் போன்ற கருத்துகளை நம்புவதில் பெரும் பங்கு வகிக்கின்றன .இது தான் நம்ம ஊர் சாமியார்களின், மத குருக்களின் டார்கெட். இதை மிகச் சுலபமாக வசியப்படுத்தி மடத்தனமான பக்தர்களாக்கவும் மதத்தை மாற்ற வைக்கவும் முடியும். சூப்பர் ஈகோ தான் ஒருவரை சமூகத்திற்காக உண்ணாவிரதம் இருந்து இறக்கவும் அவரையே ஆயுதம் ஏந்தி போராடவும் தூண்டுகிறது. காதல் , மற்றும் சமூக பொறுப்புகள் எல்லாமே சூப்பர் ஈகோவே கவனித்துக் கொள்கிறார்.அதனால் தான் அவரை சூப்பர் ஈகோ என்கிறோம்.

-புதிய பரிதி
Source:Maattru.com
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.