Immune system of our body-உடலைக் காக்கும் உளவாளிகள்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உடலைக் காக்கும் உளவாளிகள்!

கோடிக்கணக்கான நுண் கிருமிகள் உடலின் திசுக்களுக்குள்ளும் உறுப்புகளுக் குள்ளும் புகுந்து நம்மை ஆட்டிப் படைக்கின்றன. மனித உடலில் ‘தடுப்பாற்றல் மண்டலம்’ (Immune system) என்ற தற்காப்புப் படை உள்ளது.



இதுதான் நுண் கிருமிகளிருந்து உடலைப் பாதுகாத்து வருகிறது.நாம் நடந்தாலும் ஓடினாலும் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தாலும் உறங் கினாலும் 24 மணி நேரமும் இடையறாது நம்மைக் காவல் காக்கிறது. நம் ரத்தம்தான் இதன் கேம்ப் ஆபீஸ்.

ரத்த வெள்ளை அணுக்கள்தான் தளபதிகள். ‘T’ அணுக்கள், ‘B’ அணுக்கள், ‘மேக்ரோபேஜ்’ அணுக்கள், ‘எதிர் அணுக்கள்’ (Antibodies) என்று பலதரப்பட்ட சிப்பாய்கள் இந்தத் தற்காப்புப் படையில் இரவு பகல் பாராமல் பணிபுரிகின்றனர். ரத்தக்குழாய்களும், ரத்தக் குழாய்க்கு வெளியில் இருக்கும் நிணநீர்க் குழாய்களும்தான் யுத்தம் நடக்கும் இடங்கள்.
சரி, யாருடன் யுத்தம்?

கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகளுடன்தான் யுத்தம். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா ஆகிய நான்கு வகைகளில் அவை அடங்கும். இந்த ‘எதிரிகள்’ நம் உடலுக்குள் நுழையும்போது, ‘‘ம்... ஓடுங்கள்! எதிரி உள்ளே புகுந்துவிட்டான்’’ என கட்டளை யிட்டு ‘சிப்பாய்’களை அனுப்பு கிறது தளபதி. அந்தச் சிப்பாய்கள் எதிரிகளைக் கொன்று விடுவார்கள். சில சிப்பாய்கள், கொல்லப்பட்ட எதிரிகளை அப்படியே விழுங்கி, அந்த இடத்தைத் துப்புரவு செய் கின்றனர்.

இந்த எதிரிகளை நினைவில் வைத்துக்கொண்டு, இனியும் இதுபோன்ற எதிரிகள் உடலுக்குள் நுழைகிறார்களா என்பதை வேவு பார்க்க உளவாளிகளும் உண்டு. இப்படி, நம் எதிரிகளை அழித்து, அவை உண்டாக்கும் பல நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது, உடலின் தற்காப்புப்படை. இதற்கு ‘நோய் எதிர்ப்பு சக்தி’ அல்லது ‘நோய்த் தடுப்பாற்றல்’ (immunity) என்று பெயர்.

நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை, ‘இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ (Innate Immunity ), ‘செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ (Acquired immunity) என இரண்டு வகைகள் உண்டு. ‘இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ என்பது உடலில் பிறவியிலேயே அமைந்திருப்பது. செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி என்பது, தடுப்பு மருந்துகள் தருவது.

‘முள்ளை முள்ளால் எடுக்கிற வித்தை’தான் இங்கு கைகொடுக்கிறது. ஒரு நோய்க் கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்புச் சக்தி கிடைக்க வேண்டும் என்றால், அந்தக் கிருமியையே உடலுக்குள் செலுத்த வேண்டும். இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் தடுப்பூசிகள்.

தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் (Oral vaccines) மூலம் வீரியம் குறைந்த நோய்க் கிருமிகளைச் சிறிதளவு நம் உடலுக்குள் செலுத்தினால், அந்தக் கிருமிகளுக்கு எதிராக ‘எதிர் அணுக்கள்’ உருவாகி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும். பிறகு, மற்றொரு சமயத்தில் இதே நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும்போது, ஏற்கனவே உள்ள எதிர் அணுக்கள் அந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு அழிக்கின்றன.
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#2
அருமையான விளக்கம், லெட்சுமி.
நம் உடலில் இருக்கும் அணுக்களை, மாபெரும் யுத்தவீரர்கள் போல சித்தரித்திருப்பது ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தாலும், அவைகளின் சேவை நமது உடலுக்கு எந்தளவுக்கு தேவை என்பதை விவரித்து இருப்பது நன்று.
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#3
ஹாய் தோழிகளே,

தோழி லெட்சுமி பகிர்ந்து இருக்கும் கட்டுரையை படித்து பாருங்கள்.
படிக்கும் பொது சிரிப்பு வந்தாலும், அதிலே இருக்கும் முக்கியத்துவம் புரியும்.@Parasakthi @sumathisri @chan @sumitra @jv_66 @gkarti @kodiuma @femila @sujivsp @salma @RathideviDeva @malbha @saidevi @Dangu @shansun70 @jayakalaiselvi @Suganya Vasu @ashsuma @gowrymohan @rajisugu @Prabha RK @amirtha mks @bharathi saravanan @porkodit @jeyanthy c @ramyaraj.
 

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,339
Location
sivakasi
#5
nice sharing lakshmi sis
and thanks for tagging me mathy :cheer:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.