Importance of hormones in human body - ஹார்மோன்களின் முக்கியத்துவம்

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு மற்றும் தாம்பத்ய வாழ்க்கை, குழந்தைப் பேறுக்கு ஹார்மோன்களின் பங்கு மிக முக்கியமாகும்.நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் அனைத்தும் சரியாக சுரந்தால்தான் உணவு செரிமானம் முதல், உறக்கம் வரை அனைத்தும் இயல்பாக நடக்கும். ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுவதற்கு மன அழுத்தம் தான் முக்கியமானதாக இருக்கும். அதிகப்படியான மன அழுத்தத்துடன் கூடிய வாழ்க்கை முறை எளிதாக ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்திவிடுகிறது.பெண்களின் உடலில் ஏற்படும் பல்வேறு ஹார்மோன் சமநிலையின்மையால், மாதவிலக்கு தடைபடுதல் அல்லது அதிக போக்கு, எடை அதிகரித்தல் அல்லது இளைத்தல், உணர்ச்சி குறைதல், குழந்தைப் பேறு தள்ளிப்போதல், மாத விலக்கு தள்ளிப் போதல் அல்லது குறுகிய காலத்துக்குள் மீண்டும் வருதல், உடல் சோர்வு போன்றவை ஏற்படுகிறது.ஒருவருக்கு எந்த வயதிலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். தற்போது அதற்கு நிறைய மருந்துகள் வந்து விட்ட போதிலும், உணவு மற்றும் யாகா, உடற்பயிற்சிகளின் மூலமாகவும் ஹார்மோன் சமநிலையின்மையை சரி செய்து விட முடியும் என்பதே சிறந்த தகவல்.சிலருக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மைக்கு தேங்காய் எண்ணெய் தான் சிறந்த வழியாக உள்ளது. அதாவது உணவு பொருட்களில் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்ல மருந்தாக அமையும். மன அழுத்தம் காரணமாக ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டவர்கள், அவ்வப்போது தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படும் போதோ அல்லது மனதுக்கு ஒவ்வாத காரியம் நடக்கும் போது மனக் குமுறல் ஏற்பட்டாலோ அப்போது தண்ணீர் குடிப்பதால் மன அழுத்தம் குறையும். இதனால், மன அழுத்தம் ஹார்மோன் சுரப்பை பாதிப்பதில் இருந்து தவிர்க்கலாம்.புரதச் சத்துள்ள தானியங்களை ஹார்மோன் பாதிப்புள்ளவர்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். முந்திரி,பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற பருப்பு வகைகளும் ஹார்மோன் சமநிலையின்மைக்கு மாமருந்தாகும்.அவகேடா எனப்படும் பழம் மற்றும் வாழைப் பழம் சிறந்த பழங்களாகும். அதேப்போல, சில வகை ஹார்மோன் பாதிப்புகளுக்கு மருத்துவர் மீன் சாப்பிடக் கூடாது என்று சொல்லியிருப்பார். அவர்களைத் தவிர மற்றவர்கள் மீன் வகைகளை சாப்பிடலாம். பூண்டு, பீன்ஸ், காளிபிளவர், க்ரீன் டீ போன்றவையும் ஹார்மோன் பாதிப்புகளுக்கு உதவும் உணவுகளாகும்.

Courtesy;''magalir special/dinamani
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Very useful information about harmones and their importance. thank you!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.