Indore braces up for 'Hingot' fight after Diwali - தெய்வ நம்பிக்கையின் பெயரில் வின

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
Re: Indore braces up for 'Hingot' fight after Diwali - தெய்வ நம்பிக்கையின் பெயரில் வி&#2

[h=1]அதிசய கோயில்: இலை, தழைகள் பாறைகளாக மாறும் விடைதெரியாத மர்மம்..![/h][h=1][/h]



இந்த உலகம் பல அதிசயங்கள் நிறைந்தது. இன்னும் பல அதிசய நிகழ்வுகளுக்கு விடை தேடிக்கொண்டு இருக்கின்றன. அப்படியொரு விடைதெரியாத அதிசயம்
சுருளிமலையில் உள்ளது.
அந்த காலத்தில் கோயில் கட்டும் போது ஒவ்வொரு கோயிலிலும் ஏதாவது ஒன்றைத் தனித்தன்மையுடன் அமைத்துள்ளனர். அந்தவகையில் இந்த முருகன் கோயிலுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு!
தேனி மாவட்டம், கம்பம் அருகில், சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது சுருளி அருவி. மேற்குத்தொடர்ச்சி மலையின் சுருளிமலையில் அருள்மிகு சுருளிவேலப்பர் கோயில் கொண்டுள்ளார். சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இங்கு சுருளிவேலப்பர் மூலவராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.
பொதிகை மலையும் சதுரகிரி மலையும் இணைந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பிரிவுகளில் சுருளி மலை அமைந்துள்ளது. முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தெட்டாயிரம் ரிஷிகளும், பதினெண் சித்தர்களும் தவம் புரிந்து அருள்பாலிக்கும் அற்புதமான மலை இது. சுருளி அருவியான பல மூலிகைகள் பட்டு மருத்துவ குணங்களுடன் வெள்ளியை இறைத்தது போல் கொட்டுவதால் இதற்கு சுருளி தீர்த்தம் என்று பெயர். பழனி முருகனின் நவபாசான சிலையை உருவாக்கிய போகர் சித்தர் தனது இறுதி மூலிகையை இந்த மலையில் இருந்து தான் எடுத்ததாகக் கூறப்படுகிறது. அவரின் குருநாதர் காலாங்கி சித்தர் பன்னெடுங்காலம் தவம் செய்த பூமி இது. சுருளி மலையைச் சுற்றி சுமார் 225 குகைகள் உள்ளதாகவும் இன்றும் பல சித்தர்கள், ரிஷிகள், தவமிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
அப்படிப்பட்ட குகைக்கோயிலில் தான் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். அங்குள்ள விபூதிக் குகையில் என்ன சிறப்பு என்றால், அங்கிருக்கும் ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுகிறதாம். இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிக்கிறது. 48 நாட்களில் இந்நீரில் விழும் இலை, தழைகள் பாறை போல மாறுமாம். பாறை மீது நீர் விழுந்தாலும் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது. இந்தக் கோயில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்றுநீர் பொங்கி வந்து கொண்டிருப்பது அதிசயமாகும்.
இங்குப் பிரதானமாக வீற்றிருக்கும் சுருளியாண்டவர் சந்நதியில் கிழக்கு பாகத்தில் அமைந்துள்ள இமயகிரி சித்தர் குகை மிகவும் பிரசித்தி பெற்றது. இமயமலையில் வாழ்ந்த சித்தர் ஒருவர் சுருளி மலையில் தங்கி தவமியற்றி சிவபெருமான் தரிசனம் பெற்ற குகையில் சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்துள்ளார். இது இமயகிரி சித்தர் குகை என்று அழைக்கப்படுகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
Re: Indore braces up for 'Hingot' fight after Diwali - தெய்வ நம்பிக்கையின் பெயரில் வி&am

[h=1]அதிசய கோயில்: இலை, தழைகள் பாறைகளாக மாறும் விடைதெரியாத மர்மம்..![/h]



இங்கு ஒருவர் மட்டும் படுத்துக்கொண்டு போகக்கூடிய இந்தக் குகையில் சிறிது தூரம் தவழ்ந்து சென்றதுமே குகையின் உள்ளே பெரிய அறை போன்ற அமைப்பு உள்ளது. தரையில் தண்ணீர் எப்போதும் வடிந்துகொண்டே இருக்குமாம். இந்தக் குகைக்குள் ஒருவர் ஒருமுறை சென்று வந்தால் நாம் எடுக்கவேண்டிய பிறவிகளில் ஒன்று குறைவதாக ஐதீகம்.
சுருளி ஆண்டவர் சன்னதியின் மேற்பாகத்தில் மரத்தின் வேர்களைப் பிடித்து மேலே சென்றால் அங்கு ஆகாசகங்கை வரும் வழியில் பல குகைகளைக் காணலாம்.
துர்வாச மகரிஷி, கண்ணுவ மகரிஷி முதலான ரிஷிகள் சதுரகிரி மலை அடிவாரத்தில் தபோவனம் என்னும் மாவூற்றில் யாகங்கள் யக்ஞங்கள் வளர்த்து இறைவனை நோக்கித் தவம் செய்தார்கள். அத்தவத்தைக் கண்டு சிவபெருமான் தவம் செய்த முனிவர் ரிஷிகளுக்கு தேவலோக வாழ்வைக் கொடுத்து தாமும் மகாலிங்க சொரூபமாய் அங்கேயே அமர்ந்திருந்தார். அந்த சொரூபந்தான் இப்போது இருக்கின்ற சதுரகிரி மலையில் மூலவராகிய மகாலிங்கம். இமயகிரி சித்தர் சுருளிமலையின் பெருமைகளை அறிந்து அங்கேயே சில காலம் தவம் செய்தாக கூறப்படுகிறது.
இங்குள்ள குகையில் சிவபெருமான் நுழைந்ததால் இந்த குகை கையிலாச குகை என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத சிறப்பான குகை என்றும் சொல்லப்படுகிறது. மேலும், இங்கு சர்ப்ப குகை, கிருஷ்ணன் குகை, கன்னிமார் குகை என முக்கியமான குகைகளைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக இங்கு வந்து செல்கின்றனர்.
ஆடிப்பூரம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என விழாக்கள் அதிகம் இருந்தாலும், தைப்பூசத் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அந்தநாளில் காவடி எடுத்து, பால் குடம் ஏந்தி வழிபட்டால், நினைத்த காரியம் அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் சுருளி வேலப்பர் என்கின்றனர்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை ஆகிய நாட்களின்போது, இங்கு வந்து அன்னதானம் வழங்கினால், முன்னோரின் ஆசீர்வாதமும் முருகக்கடவுளின் பேரருளும் கிடைக்கும் என்பது உறுதி!
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
Re: Indore braces up for 'Hingot' fight after Diwali - தெய்வ நம்பிக்கையின் பெயரில் வி&am

[h=1]அதிசய கோயில்: இலை, தழைகள் பாறைகளாக மாறும் விடைதெரியாத மர்மம்..![/h]



மேலும் இங்கு உள்ள கையிலாச குகைக்கு பெளர்ணமி நாளில் பாதயாத்திரையாக வந்து தரிசித்தால், சிவனாரின் அருளும் கிட்டும் என்பது ஐதீகம். வனம் மற்றும் மலைப் பகுதியில் உள்ள ஆலயம் என்பதால், காலை 7 மணிக்குத் துவங்கி மதியம் 2 மணிக்கு நடை சார்த்தப்படுகிறது. முக்கியமான நாட்களில், இரவு 8 மணி வரை நடை திறந்திருக்குமாம்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,042
Likes
3,158
Location
India
`300 ஆண்டுகளாக நடக்கும் பிடாரி அம்மன் தூக்குத் தேர்த் திருவிழா’ - பக்தர்களின் தோளில் ஏறி பவனிவரும் தேர்!

நகரும் கோயில்' என்று சிறப்பிக்கப்படுவது தேர். கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் தேர்த் திருவிழா மிகவும் சிறப்பானது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுக்க, இறைவன் எழுந்தருளியிருக்கும் தேர் ஆடி அசைந்தபடி வரும் காட்சி, காண்பவரையெல்லாம் பரவசத்தில் ஆழ்த்தும். ஆனால், ஒரு தேரையே பக்தர்கள் சுமந்து வந்தால், அந்தக் காட்சி நம்முள் ஏற்படுத்தும் பரவசத்தை விவரிக்க வார்த்தைகளே இருக்காது.

பக்தர்கள் சுமந்து செல்லும் தேருக்குப் பெயர், `தூக்குத் தேர்.'





கோபம் என்பதையே குணமாகக் கொண்டவள் பிடாரி. கிராம தேவதை அவள். கிராமத்தின் காவல் தெய்வம்; காளியின் அம்சமாக விளங்குபவள். பக்தர்கள் தேரைத் தூக்கிச் செல்லும் திருவிழா பிடாரி அம்மன் கோயில்களில் மட்டுமே இன்றைக்கும் நடைமுறையில் இருக்கிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகே இருக்கிறது சூரப்பள்ளம் எனும் கிராமம். அங்குதான் பிடாரி அம்மனின் கோயிலான ஸ்ரீ சூரமகா காளியம்மன் கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில்தான் முந்நூறு வருடங்களுக்கும் மேலாக தூக்குத் தேர் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.



முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சையை ஆண்டவர் சாளுவ நாயக்கன் எனும் சிற்றரசர். அவரது காலத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் திடீரென்று தேர் மண்ணுக்குள் புதையத் தொடங்கியதாம். பிறகு, மண்ணில் புதையத் தொடங்கிய தேரைத் தூக்கி தங்கள் தோள்களில் வைத்துக்கொண்டு கோயிலுக்குக் கொண்டுவந்து சேர்த்தார்களாம். அப்போதிருந்து தொடங்கப்பட்டதுதான் இந்த 'தூக்குத் தேர் திருவிழா' என்று கிராம மக்கள் கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாக இன்றும் கோயில் இருக்கும் பகுதி 'சாளுவன் நாயக்கர் கொல்லை' என்றே அழைக்கப்படுகிறது.

சித்திரை மாதத்தில் ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமையன்று காப்பு கட்டி திருவிழாவைத் தொடங்குகிறார்கள். காப்புக் கட்டிய செவ்வாய்க் கிழமைக்கு அடுத்த செவ்வாய்க்கிழமை முதல் மண்டகப்படி தொடங்குகிறது. முதல் இரண்டு நாள்களில் நடைபெறும் கீழத்தெரு மண்டகப்படியில் பிடாரியம்மன் யாளி மீது அமர்ந்து உலா வருகிறாள். அடுத்த இரு நாள்கள் நடைபெறுவது 'நடுத்தெரு மண்டகப்படி'. இந்த இரண்டு நாள்களிலும் அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளுகிறாள் பிடாரி. அடுத்த இரண்டு நாள்கள் காமதேனு வாகனத்தில் பிடாரி எழுந்தருளும் மண்டகப்படி மேலத்தெரு மண்டகப்படி எனப்படுகிறது. ஏழாவது நாள் கட்ட வேளாளர் தெரு மண்டகப்படி. அன்று ரிஷப வாகனத்தில் காளி அருள்புரிகிறாள். எட்டாவது நாளில் வெண்ணெய்த் தாழியுடன் தவழ்ந்த கோலத்தில் பவனி வருகிறாள் காளி தேவி. 9 - வது நாள் காவடியில் வலம் வருகிறாள். விழாவின் பத்தாவது நாளே தூக்குத் தேர்த் திருவிழா நடைபெறுகிறது.



10-ம் நாள் மதியம் காளிதேவி சூல வடிவமாக ஊர் மக்களைத் தேடிச் செல்கிறாள். இவளுக்குப் பெயர் சூலப் பிடாரி. சூலப் பிடாரி வலம் வரும் வேளையில் ஊரில் இருக்கும் துர் சக்திகள் அனைத்தும் பயந்து விலகிவிடும். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அருள் வழங்கிச் செல்கிறவள் அடுத்த நாள்தான் கோயிலுக்குத் திரும்புகிறாள். சூலப் பிடாரி கோயிலுக்குத் திரும்பிய பிறகே தூக்குத் தேர் விழா தொடங்கும். தூக்குத் தேர் விழாவின்போது துர்சக்திகளால் இடைஞ்சல் எதுவும் ஏற்படாமலிருக்கவே முந்தின தினம் சூலப் பிடாரி வீதியுலா வருகிறாள் என்பதால், சூலப் பிடாரியை, `வழிகாட்டி பிடாரி’ என்றே அழைக்கிறார்கள்.



மற்ற தேர்களைப் போன்று அல்லாமல், தூக்குத் தேரை ஒரு நாளைக்கு முன்பாகத்தான் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து செய்கிறார்கள். மூங்கில் கழிகளையும், மூங்கில் கீற்றுகளையும் கொண்டே தேர் கட்டமைக்கப்படுகிறது. பக்தர்கள் தேரைச் சுமப்பதற்கு வசதியாக இரண்டு வாரை கொண்டு தேர் கட்டப்படுகிறது. தேர் கட்டப்பட்ட பிறகு, தேருக்கு அலங்காரம் செய்வார்கள். நன்றாக அலங்கரிக்கப்பட்ட தேரில் பிடாரி அம்மனை எழுந்தருளச் செய்வார்கள். அம்மன் எழுந்தருளியிருக்கும் தேரை, கங்கணம் கட்டி விரதமிருக்கும் பக்தர்கள்தான் தூக்கிச் செல்ல வேண்டும். பக்தர்களின் ஆரவார முழக்கத்துடன், இசை வாத்தியங்கள் முழங்க பவனிவரும் தேரைக் காணும்போது ஏற்படும் பரவசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

வாழ்வாதாரம் தேடி இளைஞர்கள் நகரங்களுக்குச் சென்றுவிட்டதால், பல கிராமங்களில் அம்மன் அமர்ந்திருக்கும் தேரும் சரி, மற்ற வாகனங்களும் சரி... மாட்டு வண்டிகளிலும், டிராக்டர்களிலும் வைத்து வீதியுலா வரும் இந்தக் காலத்திலும், சூரப்பள்ளத்தில் நடைபெறும் திருவிழாவில், பிடாரி அம்மன் எழுந்தருளியிருக்கும் தேரை, பக்தர்களே தங்கள் தோள்களில் தூக்கிக்கொண்டு வருகிறார்கள். முந்நூறு வருடங்களாக நம் பண்பாடும், பழக்க வழக்கங்களும் தொடர்ந்துகொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாரம்பர்யத்திலிருந்து விலகாமல் இன்றைக்கும் தூக்குத் தேரில் பவனி வரும் பிடாரி அம்மனை தரிசித்து, அனைத்து நன்மைகளையும் பெறுவோம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
`இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு!''- `திகீர்' திருவிழா!

தமிழ்கூறும் நல்லுலகம் எத்தனையோ ரக திருவிழாக்களை கண்ணுற்றிருக்கிறது. ஆனால், கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள மேட்டுப்பட்டியில் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் `எருமை வெட்டு' திருவிழாவைப் பார்த்திருக்குமா என்பது தெரியவில்லை. ஏனெனில், இந்தத் திருவிழா, பார்ப்பவர்களை திக்திக் எனப் பதறச் செய்யும் பகீர் ரகம்! ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடும் இந்தத் திருவிழாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட எருமைகளை வெட்டி, அவற்றின் பிணங்களைக் கோயிலுக்கு எதிரே உள்ள பெரிய குழியில் கொத்துக் கொத்தாகத் தள்ளி புதைத்துவிடுகிறார்கள்.

இதுதான் அந்தத் திருவிழா! இப்படிக் கேட்கவே நமது மனதுக்குள் பகீரைக் கிளப்பும் இந்தத் திருவிழா நடப்பது கரூர் மாவட்டத்தில்தான். `கடைசியாக எப்போது நடந்தது, எத்தனை எருமைகளை வெட்டினார்கள், அடுத்த திருவிழா எப்போது நடக்கவிருக்கிறது... இத்தனைக் கேள்விகளுக்கும் விடை தேட,மேட்டுப்பட்டிக்கே ஒரு எட்டு பயணப்பட்டோம்.





கரூர் மாவட்டத்தின் தெற்கு எல்லையில் இருக்கிறது மேட்டுப்பட்டி. ஊரைச் சுற்றியிருக்கும் மானாவரி நிலங்கள், `மழை எப்போ வரும்?' என்று அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஊரின் முகப்பில் தென்பட்ட பெருசு ஒருவரிடம், ``இந்த எருமை வெட்டுற திருவிழா நடக்குற கோயில் எங்கே இருக்கு?" என்று கேட்டோம். பதில் ஏதும் சொல்லாத அந்தப் பெருசு, நம்மைக் கூர்ந்து பார்த்தபடி, ``நீ யாரு தம்பி? அதை ஏன் கேட்கிற? அங்கெல்லாம் அசலூரு ஆளுங்க போகக் கூடாது" என்று தடா போட்டார்.

சுதாரித்துக் கொண்ட நாம், ``அந்தக் கோயிலுக்குப் பக்கத்துல என் நண்பன் நிக்கிறான். அவனைப் பார்க்கணும்" என்று சொல்லவும், நம்பாமல் நம்மை ஏற இறங்க பார்த்தபடி, ``கிழக்குப் பக்கம் ரெண்டு பர்லாங் தொலைவு போ. ரோட்டை யொட்டியே எருமைக் கிடா வெட்டப்படுற திருவிழா நடக்கும் ஸ்ரீ துர்க்கையம்மன் கோயில் வரும்" என்றபடி,மேற்குப் பக்கம் நோக்கி நடக்கத் தொடங்கினார். நாம் கிழக்குப் பக்கமாக நடந்தோம்.



`பத்திரிகைகாரங்க..' என்று சொல்லி அந்தக் கோயிலுக்குப் போகமுடியாது என்பதை உணர்ந்த நாம், உள்ளூர் நண்பர் ஒருவரை வரவழைத்து, அவரோடு அந்தக் கோயிலுக்குச் சென்றோம். கோயில் முகப்பில் உட்கார்ந்து ஊர் கதை பேசிக் கொண்டிருந்த இரண்டு பெருசுகள், ``பூசாரி ஊர்ல இல்லை. அவர் இல்லாம யாரும் உள்ளாரப் போக முடியாது" என்று தடுத்தனர். நம்மை அந்தப் பெருசுகளிடம், அறிமுகப்படுத்தும் விதமாகப் பேசிய நண்பர் ``இவங்க பழங்காலக் கோயில்கள் பத்தி ஆராய்ச்சி பண்ண சென்னையிலிருந்து வந்திருக்காங்க.

சும்மா உள்ளே போய் பார்த்துட்டு உடனே வந்துருவோம்" என்றார். `சென்னை' என்றதும் கொஞ்சம் மனசு இறங்கிய அந்தப் பெருசுகள், ``உடனே வந்துரணும்'' என்றபடி உள்ளே அனுப்பினர். அந்தக் கோயிலில் முக்கிய சாமி ஸ்ரீ துர்க்கையம்மன்தான் என்றாலும், வலதுபுறம் இருக்கும் வைரவனுக்குத்தான் எருமை கிடா வெட்டும் திருவிழா நடத்தப்படுகிறதாம். அந்த வைரவன் சன்னிதியை ஒட்டியே நான்கு புறமும் கல் சுவர்களால் சூழப்பட்ட, அடைப்பு தெரிகிறது.

அவற்றில்தான் இரண்டாயிரம் எருமை கிடாய்களையும் அடைத்து வைத்து, ஒவ்வொன்றாக வெளியே இழுத்து வெட்டுவார்களாம். வெட்டுவதற்கு முன்பே இந்தச் சுவர் தடுப்புக்குள் நிற்கும் இரண்டாயிரம் எருமைகளையும் கட்டைகளால் அடித்து நையப்புடைத்து, முக்கால் உயிரை எடுத்துவிடுவார்களாம்.

அதன்பிறகு, ஒரே வெட்டில் சாய்க்க, ஒவ்வோர் எருமையும் உயிரை எளிதாக விட்டுவிடுமாம். இந்த எருமை வெட்டும் திருவிழா ஏழு வருடங்களுக்கு ஒருமுறைதான் நடக்கிறது. ஒவ்வொரு முறையும் வைகாசி மாதம் கடைசியில் நடக்குமாம். இந்தத் திருவிழாவில் வெட்டப்படும் இரண்டாயிரம் எருமைகளையும் கோயிலுக்கு எதிரே தோண்டப்படும் பிரமாண்டக் குழியில் தள்ளிப் புதைத்துவிடுவார்களாம். ஏழு வருடங்களில் அத்தனை எருமைகளும் மக்கி மண்ணோடு மண்ணாகப் போய்விடுமாம். மறுபடியும் அடுத்த திருவிழாவுக்கு அதே இடத்தில் குழியைத் தோண்டி, அந்தத் திருவிழாவில் வெட்டப்படும் எருமைகளைப் புதைப்பார்களாம். இத்தனை தகவல்களையும் நம்மை அழைத்துப் போன நண்பர்தான் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அதற்குள், அத்தனை இடத்தையும் நமது புகைப்படக்காரர் நைச்சியமாகப் புகைப்படங்கள் எடுக்க, நைசாக வெளியேறினோம். அந்தப் பெருசுகள் குழாம் நம்மைச் சந்தேகக் கண்ணோட்டத்தோடே பார்த்தது.



``இந்தத் திருவிழா பற்றி யாரிடமாவது நாங்க பேச முடியுமா?" என்று நண்பரிடம் கேட்டோம். பதறிப்போன அவர், ``அதெல்லாம் முடியாது சார். இது கோக்குமாக்கான ஊர். லேசா உங்களைச் சந்தேகப்பட்டாலே, என்ன ஏதுன்னு கேட்காம கேமராவைப் பிடுங்கி உடைச்சுடுவாங்க. உங்களையும் உட்கார வெச்சுடுவாங்க" என்று பயமுறுத்தினார். நாம் விடாமல், ``பேசியே ஆவணுமே" என்று கறார் காட்ட, அந்த ஊரில் பிறந்து பக்கத்து ஊரில் வாக்கப்பட்ட பெண்ணிடம் அழைத்துப்போய், ``ஆராய்ச்சி பண்றவங்க..." என்ற அதே பழைய பொய்யைச் சொல்லிப் பேசவைத்தார்.



``இந்தக் கோயில் கடவூர் ஜமீனுக்குச் சொந்தமானது. ஐநூறு வருடங்களுக்கும் மேலாக இந்தத் திருவிழா நடக்குது. வைரவன்கிட்ட மக்கள் பல்வேறு வேண்டுதல்களை வெச்சு வேண்டிக்குவாங்க. அது நிறைவேறுனதும், திருவிழா நடக்கும் வருடத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பே எங்க ஊர்ல வந்து எருமைகளை விட்டுடுவாங்க.

அதுங்க காடு கரையில் மேய்ஞ்சுட்டு கோயிலுக்கு முன்பு உள்ள திடல்ல ராப்பொழுதுகள்ல படுத்துக்கும். திருவிழா நடக்குறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே அங்கங்கே திரியும் எருமைகளைப் புடிச்சு வந்து, கல்சுவர் அடைப்புல அடைச்சுடுவாங்க. கடைசியா இங்க திருவிழா 2012-ல நடந்துச்சு. அடுத்த திருவிழா வர்ற வைகாசி மாதம் இறுதியில நடக்க இருக்கு.

திருவிழாவின்போது இரண்டாயிரம் எருமைகளை வெட்டுறது ஒருபக்கம்னா, இன்னொரு பக்கம், ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள், நூற்றுக்கணக்கான கோழிகளை வெட்டி, சாமிக்குப் படைச்சு, அந்தக் கறியைப் பக்தர்களுக்குப் பிரசாதமாகக் கொடுப்பாங்க. திருவிழாவின்போது சுத்துப்பட்டு ஐம்பது கிராமங்களைச் சேர்ந்த ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கோயில்ல கூடுவாங்க. ஸ்ரீதுர்க்கையம்மனுக்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாசம் கடைசி வெள்ளிக்கிழமை பால்குடங்கள் எடுத்துத் திருவிழா நடத்துவாங்க.

கடந்த 2012-ல் நடந்த திருவிழாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட எருமைகளை வெட்டினாங்க" என்றவர், ``உண்மையில் ஆராய்ச்சி பண்ணத்தானே கேட்கிறீங்க?" என்று கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டார். ``ஆமாங்க, ஆமாம்" என்றபடி, சூதானமாக அங்கிருந்து நகர்ந்த நாம், சூட்டோடு சூடாக கரூருக்குப் பஸ் பிடித்தோம்!
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,042
Likes
3,158
Location
India
தூக்க நேர்ச்சை திருவிழா!





ன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில், கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில். தமிழக - கேரள எல்லையோரத்தில் அமைந்திருந்தாலும், வழிபாட்டு முறைகள் எல்லாம் கேரள கலாசாரத்தை ஒத்துள்ளது. இங்கு நடைபெறும் தூக்க நேர்ச்சை திருவிழா, வெகுபிரபலம்!





குழந்தை வரம் வேண்டுபவர்களும், குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு வேண்டும் பெற்றோர்களும் தூக்க நேர்ச்சை நேர்த்திக்கடன் செலுத்த வருவர். கடந்த 1,500 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம், பரணி நட்சத்திரத்தன்று இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது.


சுமார் 30 அடி உயரமுள்ள, இரண்டு வில்கள் பூட்டப்பட்ட ரதத்தில் ஒவ்வொரு வில்லிலும் இரண்டு தூக்கக்காரர்கள் என நான்கு பேரும், அவர்களின் கையில் ஆறு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள பச்சிளம் குழந்தைகளும் என, ஒரே நேரத்தில் எட்டு பேர் ரதத்தில் கோயிலை ஒரு முறை சுற்றி வரும்போது, தூக்க நேர்ச்சை நிறைவுபெறும். வரும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து தொடர்ந்து ஒன்றரை நாள் வரை இந்த தூக்க நேர்ச்சை நடைபெறும்.


குமரி மாவட்டத்தில் இட்டகவேலி, மூவோட்டு கோணம் ஆகிய கோயில்களிலும் இதே போன்று தூக்க நேர்ச்சை நடைபெறும். ஆனால், ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுவது, கொல்லங்கோட்டில் மட்டுமே.





10 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் விழா நாட்களில் தினமும் காலை பள்ளியுணர்தல், நிர்மால்யதரிசனம், அபிஷேகம், மதிய பூஜை, சமூக விருந்து, தீபாராதனை, இரவு பூஜை நடைபெறும். தூக்கக்காரர்கள் திருவிழா முடியும் வரை பத்து நாட்களும் கோயிலிலேயே இருக்க வேண்டும். மூன்றாம் நாள் திருவிழாவின்போது, தூக்கக்காரர்களுக்கு உடற் பரிசோதனை மேற்கொள்ளப்படும். தூக்கக்காரர்கள் உடற்பரிசோதனை முடிந்து தேர்வானவுடன் குடும்பத்தினர் முதற்கொண்டு அனைவரும் விரதம் இருப்பர். விரதம் இருப்பவர்களுக்கு அரிசிக் கஞ்சியும், திருப்பயிறும் வழங்கப்படும்.


ஒன்பதாம் நாள் திருவிழாவில் தூக்க நேர்ச்சைக்கு ஆயத்தமாக வண்டியோட்டம் நடைபெறும். அப்போது தூக்கக்காரர்கள் கடலில் நீராடி நமஸ்காரம் செய்வர். பத்தாம் நாள் திருவிழாவில்தான் முக்கிய அம்சமாக, தூக்க நேர்ச்சை நடைபெறும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.