Inflammatory Bowel disease-அடிவயிற்றில் சங்கடம்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அடிவயிற்றில் சங்கடம்




இரப்பை, காயம், ரணத்தால் பாதிக்கப்படும் வியாதி Inflammatory Bowel disease என்பார்கள். இந்த வியாதியில், வயிறு ரணமாகி, வயிற்றுதசைகள் இழுப்பு சுளுக்கு இவற்றால் அடிக்கடி பாதிக்கப்படும். பேதி உண்டாகும்.

இந்த வியாதியில் உள்ளடங்கியவை

பெருங்குடலின் பாகமான கோலோன் (Colon) சுவர்கள் ரணமாவது. இது அல்சரேடிவ் கோலைட்பீஸ் (
[Ulcerative colitis) எனப்படும்.

க்ரோன்ஸ் வியாதி
Crohns disease
- ஜீரணமண்டல பகுதிகள் வீங்கி, ரணமாகி, புண்ணாகுவது Crohns disease குறிப்பாக இந்த பாதிப்பு சிறுகுடலின் அடிபாகத்தில் ஏற்படும்.

காரணங்கள்
சரியான காரணம் தெரியவில்லை. பாரம்பரியமாக வரலாம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாலும் இது ஏற்படலாம். கொழுப்பு நிறைந்த உணவுகள், அதுவும் அசைவ உணவுகளால் Ulcerative
Colitis
உண்டாகலாம். அதேபோல் அதிக இனிப்பு சாப்பிடுவர்களுக்கும் Inflammatory Bowel disease (IBO) ஏற்படலாம்.

அறிகுறிகள்
பேதியாவது முதல் அறிகுறி. மலச்சிக்கலும் ஏற்படும். மாற்றி, மாற்றி பேதியும் மலச்சிக்கலும் ஏற்படலாம்.

இரப்பையில் தசை இழுப்பு (Cramps) ஏற்படும். வலி உண்டாகும்

சாப்பிடும் வேளையில் வலி உண்டாகும்.

எடை குறைவு, மூட்டுவலி, கண்களில் தொற்று, தோல்களில் புண், பவுத்திரம், ஜீரம் இவை உண்டாகலாம்.

ஆயுர்வேத அறிவுரைகள்
பெரிய உணவுகளை உண்பதை தவிர்த்து, சிறிய உணவுகளாக அடிக்கடி எடுத்துக் கொள்ளவும். மோர் அதிகம் குடிக்கவும்.

சர்க்கரை, பச்சைப்பயிறு, மைதா போன்ற வெள்ளை நிற மாவு உணவுகளை தவிர்க்கவும். ஊறுகாய், மசாலா இவற்றையும் தவி£க்கவும். மாமிசம், மீன், முட்டை போன்ற அழுகும் பொருட்கள் நல்லதல்ல. இவற்றை குறைக்கவும்.

குடலை சுத்திகரிக்கும் பழங்கள், தயிர், காய்கறிகளை உங்கள் உணவில் இடம் பெற வேண்டும். இந்த அடிவயிறு சங்கடம் உள்ளவர்கள் இந்த உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். காரசாரமில்லாத உணவு நல்லது.

உங்களுக்கு உணவு ஒவ்வாமை இருந்தால், ஒத்துக்கொள்ளாத உணவுகளை அறவே தவிர்க்கவும்.

உண்டபின், படுக்காமல், ஓய்வெடுங்கள்.

க்ரோன் வியாதியால் வைட்டமின், இரும்பு, துத்தநாக குறைபாடுகள் ஏற்படும். ஆயுர்வேத மருத்துவர் இதற்கான டானிக்குகளை பரிந்துரைப்பார்.

வில்வப்பழ கோதுடன் வெல்லம் சேர்த்து உண்ணலாம்.

மாதுளம் பழத்தோல், குடசப்பாலை பட்டை (Holarrhena Antidysenterica) சம பாகம் எடுத்து தயாரித்த கஷாயம், 3-4 தேக்கரண்டி எடுத்து ஒரு தேக்கரண்டி தேனுடன் சேர்த்து, தினமும் இரு வேளை குடிக்கவும்.

சமீப ஆராய்ச்சிகளில் பரங்கி சாம்பிராணி (Boswellia serrata) பிசின் 350 மி.கி. அளவில், தினமும் மூன்று வேளையாக, ஆறு வாரங்களுக்கு கொடுக்க அடிவயிறு சங்கடம் (I.B.D.) நீங்கியது தெரியவந்துள்ளது. இதே போல அதிமதுரம் மற்றும் கற்றாழை இவைகளும் இதே பயனை அளிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.