Interesting Facts Every Day !!

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம்: மே 11- 1897

1526050564143.png


ஜடாதரய்யர் காமாட்சி தம்பதியின் நான்காவது குழந்தையாக 1897 மே 11 இல் தமிழ்நாடு சிவகங்கை யில் சுத்தானந்தர் பிறந்தார். அவரின் இயற்பெயர் வேங்கட சுப்பிரமணியன். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் 'பாரத சக்தி' எனும் மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில் சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று இரண்டாம் அகவையில் காலமானார்.

திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார், 1968 ஆம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த பதிப்பு கழகத்தாரால் வெளியிடப்பட்டது.

1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றார் கவியோகி சுத்தானந்த பாரதி. அவர் எழுதிய ஆயிரக்கணக்கான நூல்களில், "பாரத சக்தி மகாகாவியம்" அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய காவியம் ஆகும்.

சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி ஜூன்கோ டபெய்: மே 16- 1975

1526449434088.png

ஜப்பானில் பிறந்த ஜூன்கோ டாபி 10-வயதாக இருக்கும் போதே மலையேறும் பயிற்சியில் சேர்ந்தார். ஜப்பானில் உள்ள நாசுமலை சிகரத்தில் ஏறுவதற்கு பயிற்சி பெற்றார். டோக்கியோ அருகில் உள்ள ஷோவா பெண்கள் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பட்டம் பெற்றார்.

படிக்கும்போதே மலையேறும் கிளப் ஒன்றில் உறுப்பினராக சேர்ந்தார். 1969-ம் ஆண்டில் பெண்கள் மலையேறும் கிளப் தொடங்கினார். இதற்கு ஜப்பான் பெண்கள் மலையேறும் கிளப் என்று பெயரிட்டார்.

திருமணத்துக்கு பின்னர் கணவருடன் இணைந்து பல சிகரங்களில் மலையேறும் பயிற்சிகளை மேற்கொண்டார். ஜப்பானில் உள்ள புஜி மலை உள்ளிட்ட சில உயரமான சிகரங்களில் ஏறி பயிற்சி பெற்றார். சுவிஸ் ஆல்ப் மலை சிகரங்களில் உள்ள மாட்டர்ஹார்னிலும் மலையேறும் பயிற்சி பெற்றார். பல பயிற்சிகளின் காரணமாக 1972-ம் ஆண்டு ஜப்பானின் மிகச்சிறந்த மலையேறும் பெண் பயிற்சியாளர் என்ற பெயரை பெற்றார்.

இதையடுத்து ஜப்பானில் இருந்து வெளிவரும் யோமியுரி நாளிதழ் மற்றும் நிகான் தொலைக்காட்சி ஆகியவை இணைந்து ஜப்பானில் உள்ள பெண்கள் மலையேறும் குழுவை எவரெஸ்ட் சிகரத்துக்கு அனுப்ப முடிவு செய்தன. ஜூன்கோ டாபி உட்பட 15 பெண்களை தேர்வு செய்தனர். இதற்காக அவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 1975-ம் ஆண்டின் தொடக்கத்தில் காத்மாண்டுவுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு உள்ளூரை சேர்ந்த 9 பேரை வழிகாட்டிகளாக அழைத்துக் கொண்டனர்.

1953-ம் ஆண்டு எவரஸ்ட் சிகரத்தை அடைந்த எட்மண்ட் ஹில்லாரி, டென்சிங் நார்காய் ஆகியோர் சென்ற வழியில் பெண்கள் குழுவினர் எவரஸ்ட் சிகரத்தை நோக்கி சென்றனர்.

மே மாதம் எவரஸ்ட் சிகரத்தில் 6 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்தை அடைந்து அந்த பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். அப்போது அந்த பகுதியில் தீடீரென பனிப்பாறைகள் சரிந்தன. எல்லா பெண்களும் பனிப்பாறைக்கு அடியில் புதைந்து போயினர். ஜூன்கோ டாபியும் சுயநினைவை இழந்துவிட்டார். அந்த சமயத்தில் ஒரு வழிகாட்டி ஜூன்கோ டாபி உள்ளிட்ட பெண்களை மீட்டார்.

அதன் பின்னர் 12 நாள் கழித்து ஜூன்கோ டாபி மட்டும் 1975-ம் ஆண்டு இதே நாளில் எவரெஸட் சிகரத்தை அடைந்தார். இதைதொடர்ந்து மேலும் பல சாதனைகளை செய்தார். இப்போது 61 வயதாகும் இவர் வயது காரணமாக மலையேறும் சாதனைகளை குறைத்துக் கொண்டார்.

இதே தேதியில் முக்கிய நிகழ்வுகள்:-

* 1811 - கூட்டுப் படைகள் (ஸ்பெயின், போர்ச்சுக்கல், மற்றும் பிரித்தானியா) பிரெஞ்சுப் படைகளை ஆல்புவேரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தன. * 1916 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை அங்குள்ள சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டது. * 1920 - ரோமில் ஜோன் ஆப் ஆர்க் திருத்தந்தை 15-ம் பெனடிக்ட்டினால் புனிதப்படுத்தப்பட்டார். * 1932 - பம்பாயில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். * 1960 - கலிபோர்னியாவில் ஹியூஸ் ஆய்வுகூடத்தில் தியொடர் மாய்மன் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.

* 1966 - சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. * 1967 - ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது. * 1969 - சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கியது. * 1975 - பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது. * 1975 - ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற்பெண் ஆனார்.

* 1992 - எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியது. * 2006 - தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோவில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. * 2006 - நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
சிக்கிம் இந்தியாவுடன் இணைந்த நாள்: மே 16- 1975

1526449521153.png

சிக்கிம் இமய மலைத்தொடரில் அமைந்த இந்திய மாநிலமாகும். தனி நாடாக விளங்கிய சிக்கிம், 1975-ம் ஆண்டு இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது. சிக்கிமின் தலைநகர் கேங்டாக் ஆகும். நேபாள மொழி அதிகாரப்பூர்வ மொழி.

இந்து மதமும், வஜ்ராயன புத்த மதமும் இம்மாநில மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்திய மாநிலங்களிலேயே கோவா மாநிலம் மட்டும்தான் சிக்கிமை விட சிறிய மாநிலம்.

சிக்கிமின் மேற்கில் நேபாளமும், வடக்கில் சீனாவும், கிழக்கில் பூடானும், கிழக்கில மேற்கு வங்களாமும் உள்ளன. உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரமான கஞ்சன்சங்கா சிக்கிமில் உள்ளது.

1947-ல் இந்தியா விடுதலையடைந்த போது, சிக்கிமும் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று முடியாட்சியாக தொடர்ந்தது. அதன் விடுதலைக்கு இந்தியா பாதுகாப்பு கொடுத்தது. இந்தியாவுடன் இணைவதற்கான வாக்கு வெற்றி பெறாததால் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு சிக்கிமிற்கு சிறப்பு அந்தஸ்து (SPECIAL PROTECTORATE STATUS) கொடுத்தார்.

சிக்கிம் இந்தியாவின் மேலாண்மையை ஏற்ற நாடாக விளங்கியது. அதன்படி சிக்கிமின் பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு போன்றவை இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. மற்ற அனைத்து துறைகளிலும் தன்னாட்சி பெற்றிருந்தது.

நேபாளிகளின் ஊடுருவல் அதிகமாகத் தொடங்கவே, 1975-ல் சிக்கிமின் பிரதமராகப் பொறுப்பேற்ற காஜி என்பவர் சிக்கிமை இந்தியாவின் ஒரு மாநிலமாகவே இணைத்துக் கொள்ள இந்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி எடுக்கப்பட்ட பொது வாக்கெடுப்பில் 97.5% சிக்கிம் மக்கள் இந்தியாவுடன் இணைவதை ஆதரிக்க, 16.05.1975-ல் சிக்கிம் இந்தியாவின் 22-ஆவது மாநிலமாக இணைந்தது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
இலங்கை இறுதிக்கட்ட போர்: பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை - மே 17, 2009

1526541954065.png

இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும், ராணுவத்திற்கும் இடையே 1983-ம் ஆண்டு முதல் தொடர்ந்து சண்டை நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த உள்நாட்டுப்போரின் உச்சகட்டமாக 2009-ம் ஆண்டு ராணுவம் உக்கிரமான தாக்குதலை நடத்தியது.

2009ம் ஆண்டு மே 17-ம் தேதி இடைவிடாமல் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் நடந்த இரண்டு நாட்களில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள் வருமாறு:

1498 - வாஸ்கோடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.
1521 - பக்கிங்ஹாமின் மூன்றாவது நிலை சீமானான (Duke) எட்வர்ட் ஸ்டாஃபேர்ட் தூக்கிலிடப்பட்டான்.
1590 - டென்மார்க்கின் ஆன் ஸ்காட்லாந்து அரசியாக முடி சூடினாள்.
1792 - நியூயார்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.
1809 - பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டான்.
1814 - நார்வே நாட்டின் அரசியல் நிர்ணயம் அமைக்கப்பட்டது.
1915 - பிரித்தானியாவின் கடைசி லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.

பிறப்புகள்

1873 – ஞானியார் அடிகள், சைவ மறுமலர்ச்சிக்கு உழைத்த துறவி, உரையாசிரியர் (இ. 1942)
1897 – தீரேந்திர வர்மா, இந்தியக் கவிஞர், மொழியியல் ஆய்வாளர் (இ. 1973)
1920 – பி. சாந்தகுமாரி, தென்னிந்திய நடிகை, பாடகி
1938 – கே. ஜமுனா ராணி, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
1945 – பி. சி. சந்திரசேகர், இந்தியத் துடுப்பாளர்
1956 – கு. ஞானசம்பந்தன், தமிழகத் தமிழறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், நடிகர்
1967 – முகம்மது நசீது, மாலைத்தீவுகளின் 4வது அரசுத்தலைவர்.

இறப்புகள்

1961 – மைசூர் வாசுதேவாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (பி. 1865)
1998 – சரோஜினி யோகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
2007 – நகுலன், தமிழக எழுத்தாளர்
2014 – சி. கோவிந்தன், தமிழறிஞர், புலவர்
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
இந்தியாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ராஜா ராம் மோகன் ராயின் பிறந்தநாளை டூடுலாக கொண்டாடும் கூகுள்

1526970122327.png


இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படும் ராஜா ராம் மோகன் ராய் மே 22, 1772 -ம் ஆண்டு வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரம்ம சமாஜத்தை நிறுவியவர். இவரைப் புதிய இந்தியாவை நிறுவியர் என்றும், புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் கூறுவர். பிரம்ம சமாஜம் கி.பி. 1828 இல் நிறுவப்பட்டது. இதுவே முதல் சீர்திருத்த இயக்கமாகும்.

அவர் இந்து சமுதாயத்தில் இருந்த மூடநம்பிக்கைகளுக்கும் மற்றும் ஏனைய தீமைகளுக்கும் எதிராக குரல் எழுப்பினார். இந்த நிறுவனத்தை நிறுவியதன் மூலம் அவர் ஒரு புதிய சமயத்தைப் பரப்ப விரும்பவில்லை. மாறாக இந்த அமைப்பில் அனைத்துச் சமயங்களின் அரிய கோட்பாடுகள் அமைந்திருந்தன. எல்லா மக்களும் சாதி, சமய பாகுபாடின்றி ஒன்றாக சேர்ந்து ஒரே இறைவனை வழிபட இந்நிறுவனம் வழிவகுத்துக் கொடுத்தது.


அக்காலத்தில் இந்துப் பெண்களுக்குக் கட்டாய வழக்கமாக இருந்த உடன்கட்டை ஏறல் (சதி) என்ற சமுதாயக் கொடுமையை ஒழிக்க இவர் பெரிதும் பாடுபட்டார். தனது விடா முயற்சியால் சதி என்னும் மூட நம்பிக்கையை ஒழித்தார். மேலும், குழந்தைகள் திருமணம், ஜாதி முறை, பலமணம், கொத்தடிமை முறை மற்றும் கல்வியறிவின்மைக்கு எதிராக போராடினார்.

இந்தியாவில் மேற்கத்திய கல்வியை புகுத்துதில் ராஜாராம் ஆர்வமாக இருந்தார். இந்திய மறுமலர்ச்சிக்காக பாடுபட்டார். அவர் வேதாந்தா கல்லூரி, இந்து கல்லூரி மற்றும் ஆங்கிலோ இந்து பள்ளியை தொடக்கினார்.

இந்நிலையில், இந்தியாவில் பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்து, மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ராஜா ராம் மோகன் ராயின் 246-வது பிறந்த நாளை கூகுள் நிறுவனம் இன்று டூடுலாக கொண்டாடி வருகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
சீனர்களின் காதலர் தினத்துக்கு நிலவுக்குச் செல்லும் `குய்ஹியாவோ' செயற்கைக்கோளுக்கும் என்ன சம்பந்தம்

விண்வெளி விஞ்ஞானம் இன்று அபரிமிதமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. உலகின் பல நாடுகளும் செயற்கைக்கோள்களை நிலவுக்கும் செவ்வாய்க்கும் அனுப்பி, சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. மனிதன் நிலவில் காலடி பதித்த 1969-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை பல நாடுகளும் விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பி ஆராய்ச்சிகளை மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. மேலும், தகவல் தொடர்பு வசதியைப் பெறுவதற்காகவும் பல செயற்கைக்கோள்கள் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் நிலவின் மர்மமான பக்கங்களை ஆய்வுசெய்வதற்காக, சீனா ஒரு செயற்கைக்கோளை நிலவுக்கு அனுப்பியிருக்கிறது. அந்தச் செயற்கைக்கோளின் பெயர் 'குய்ஹியாவோ' (Queqiao) .இதற்கு `வால் காக்கைப் பாலம்' (Magpie Bridge ) என்று அர்த்தம். சீனா அனுப்பியிருக்கும் செயற்கைக்கோளைவிட சுவாரஸ்யமானது அதற்குச் சூட்டப்பட்டிருக்கும் பெயரான `குய்ஹியாவோ.’

இந்தப் பெயரின் பின்னணியில் ஒரு தேவதையின் காதல் கதை சொல்லப்படுகிறது.

அந்தக் கதை...

சீனப் புராணக் கதைகளின்படி, சொர்க்கத்தில் வாழ்ந்துகொண்டிருந்த ஸின்யூ என்ற பெண் தேவதை ஒருமுறை பூமிக்கு வருகிறாள். பூமிக்கு வந்தவள் மாடு மேய்க்கும் இளைஞன் ஒருவனைப் பார்க்கிறாள். அவன் பெயர் நியூலங். அவனைக் கண்டதும், தான் ஒரு தேவதை என்பதையும் மறந்து அவனிடம் காதல்கொள்கிறாள். அவனைத் திருமணம் செய்துகொண்டு வாழத் தொடங்குகிறாள். இருவரின் அன்புமயமான இல்லற வாழ்க்கையின் பயனாக இரண்டு குழந்தைகளும் பிறக்கிறார்கள்.

காலம் இப்படி இனிமையாகச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், சொர்க்கத்தில் இருந்த ஸின்யூவின் தாய், பூமிக்குச் சென்ற தன் மகள் பூமியிலேயே வசித்து வருவதைக் கண்டு கவலைகொள்கிறாள். மேலும், பூமியில் வசிக்கும் தன் மகள், `மரணமில்லாப் பெருவாழ்வு' என்னும் தெய்விகத் தன்மையைச் சிறிது சிறிதாக இழந்துவருகிறாளே என்றும் வருத்தப்படுகிறாள். உடனே தன்னுடைய தெய்விக சக்தியால் தன் மகளை மறுபடியும் சொர்க்கத்துக்கே அழைத்துக்கொள்கிறாள். அப்படிச் செல்லும்போது நியூலங் வளர்த்து வரும் ஓர் எருதுவுக்கு, சில ஆற்றல்களைத் தந்துவிட்டுச் செல்கிறாள்.திடீரென்று மாயமாக மறைந்துபோன தன்னுடைய காதல் மனைவி ஸின்யூவை நியூலங்கும் அவனது இரண்டு குழந்தைகளும் பல இடங்களிலும் தேடி அலைகிறார்கள். எங்கு தேடியும் அவனால் தன் காதல் மனைவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அழுது புலம்புகிறான்.

அப்போது அவன் வளர்த்து வந்த எருது அவனிடம் வந்து, ``உன் மனைவி சாதாரணப் பெண் கிடையாது. அவள் சொர்க்கத்தில் வசிக்கும் தேவதை. என்னைக் கொன்று என் தோலை ஆடையாக அணிந்துகொள். அப்போது உன்னால் சொர்க்கத்துக்குப் பறந்து செல்ல முடியும். உனக்காக உன் காதலி அங்கே காத்துக்கொண்டிருக்கிறாள். அவளும் உன்னை நினைத்து அங்கே வருந்திக்கொண்டிருக்கிறாள்’’ என்று சொல்கிறது.Image Courtesy : Google Doodle

தான் வளர்த்த எருதைக் கொன்று, அதன் தோலை ஆடையாக அணிந்துகொண்டு தன் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சொர்க்கத்துக்குப் பறந்து செல்கிறான் நியூலங். சொர்க்கத்தில் தன் காதலியைப் பார்த்ததும், அவளை நோக்கி ஆசையுடன் ஓடுகிறான். ஸின்யூவும் நியூலங்கைக் கண்டதும் ஓடி வருகிறாள். ஸின்யூ மீண்டும் பூமிக்குச் சென்றுவிட்டால், அவளது தெய்விகத் தன்மை அழிந்துவிடும் என்பதை அறிந்த சொர்க்கத்தின் கடவுள், தன் கூந்தலை முடித்திருந்த குத்தூசியை எடுத்து வானில் ஒரு கோடு கிழிக்கிறாள். உடனே அகலமான ஓர் ஆறு உருவாகிறது. அது, நியூலங்கையும் ஸின்யூவையும் பிரித்துவிடுகிறது. ஒரு கரையில் ஸின்யூவும், மறு கரையில் நியூலங்கும் நின்றுகொண்டு, ஒருவரையொருவர் பார்த்தபடி அழுகிறார்கள்.

சொர்க்கத்திலிருக்கும் வால் காக்கைப் பறவைகள், காதல் தம்பதியின் அழுகுரல் கேட்டு வருத்தம் கொள்கின்றன. அவர்களைச் சேர்த்து வைப்பதற்காக அந்தப் பறவைகள் அனைத்தும் ஒன்று கூடி ஆற்றைக் கடக்க ஒரு பாலம் அமைக்கின்றன. வால் காக்கைப் பறவைகள் ஏற்படுத்திய பாலத்தில் காதலர்கள் இருவரும் கூடி மகிழ்ச்சியுடன் சேர்ந்துகொள்கிறாள். தன் மகளின் துயரத்தைப் பார்த்த சொர்க்கத்தின் கடவுள், வருடத்தில் ஒருநாள் மட்டும் காதலர்கள் இருவரும் சந்திக்க அனுமதிக்கிறாள். அந்த ஒருநாள் சீன நாட்காட்டியின் படி ஏழாவது மாதத்தின் ஏழாவது நாள்.Image Courtesy : Google Doodle

ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் ஸின்யூவின் தாய் அமைத்த ஆற்றைக் கடக்க, வால் காக்கைப் பறவைகள் அனைத்தும் ஒன்று கூடி பாலம் அமைக்கும். அந்தப் பாலத்தின் வழியே ஆற்றைக் கடந்து காதலர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து மகிழ்வார்கள். மற்ற நாள்களில் இருவரும் ஆற்றின் இரு கரைகளில் அமர்ந்து ஒருவரையொருவர் பார்த்தபடி காலத்தைக் கழித்துக்கொண்டிருப்பார்கள்.

காதலர்கள் இணையும் நாளைத்தான் சீனர்கள், `குய்ஹியாவோ' என்ற பெயரில் காதலர் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

வால் காக்கைப் பறவைகள் காதலர்கள் இருவரும் இணையப் பாலம் அமைத்ததைப்போலவே, நிலவுக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோளும், நிலவுக்கும் பூமிக்கும் ஒரு பாலமாக இருந்து, நிலவின் மறுபக்க மர்மங்களை வெளிப்படுத்தும் என்று சீனர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் தங்களது செயற்கைக்கோளுக்கு `குய்ஹியாவோ' என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

வால் காக்கைகள், காதலர்கள் இருவரும் ஒன்றுகூட ஏற்படுத்திய பாலத்தைப் போலவே குய்ஹியாவோ செயற்கைக்கோள் நிலவின் மர்மத்தை வெளிப்படுத்தி, பூமிக்குப் பாலமாக அமையட்டும்!
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
விக்டோரியா மகாராணி பிறந்த தினம்: மே 24- 1819

1527143166980.png

விக்டோரியா (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா மே 24, 1819 – ஜனவரி 22, 1901) பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக 1837-ம் ஆண்டு ஜூன் 20-ம் நாள் முதலும், இந்தியாவின் முதல் பேரரசியாக 1876 மே 1-ம் நாள் முதலும் இறக்கும் வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இதுவரை பிரிட்டன் அரசை ஆண்டதில் இதுதான் அதிக வருடம். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.

விக்டோரியா ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலத்திலேயே ஐக்கிய இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சி ஆகிவிட்டது. இதில் அரசியோ அரசனோ மிகக் குறைந்த அரசியல் அதிகாரத்தையே கொண்டிருந்தனர். எனினும் விக்டோரியா ஒரு மிக முக்கியமான குறியீட்டு நபர் என்னும் நிலையில் மிகத் திறமையாகவே பணியாற்றி வந்தார். இவரது காலம் தொழிற்புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராச்சியத்தில், சமூக, பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவருடைய காலத்திலேயே பிரித்தானியப் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன், அக்காலத்தின் முன்னணி உலக வல்லரசு ஆகவும் திகழ்ந்தது.

இவர் முழுவதுமாக ஜெர்மானிய வழியினர். மூன்றாம் ஜார்ஜின் பேத்தியும், இவருக்கு முன் ஆட்சியில் இருந்த நான்காம் வில்லியத்தின் பெறாமகளும் ஆவார். இவர் தனது காலத்தில் தனது ஒன்பது பிள்ளைகளுக்கும், 42 பேரப் பிள்ளைகளுக்கும், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் திருமணம் செய்து வைத்ததன் மூலம், ஐரோப்பாவை ஒன்றிணைத்தார். இது அவருக்கு, "ஐரோப்பாவின் பாட்டி" என்னும் பட்டப் பெயரை ஈட்டிக் கொடுத்தது. இவர் புனித ரோமன் பேரரசின், பேரரசியான மரியா தெரேசாவின் இரண்டு விட்ட சகோதரியும் ஆவார்.

63 ஆண்டுகள், ஏழு மாதங்களுக்கு இரண்டு நாட்களுக்கு விக்டோரியா மகாராணி பிரிட்டனையும் அதன் காலணிகளையும் ஆண்டார்.உலகில் மிக அதிக நாள் ராணியாக இருந்த வரலாற்றையும் இவர் படைத்துள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
First violins imitated human voices: Study

Music historians have long suspected that the inventors of the violin wanted to imitate the human voice, and a study out on Monday shows how 16th to 18th century luthiers in Italy did it.


Researchers at National Taiwan University asked a professional violinist to play 15 antique instruments, including one from 1570 by Andrea Amati, who is considered to be the father of the modern four-string violin. Others played in the study were from the Stradivarius family, conceived by Antonio Stradivari, who improved Amati’s design.


Performing a thorough acoustic analysis, they found that an Amati violin and a Gasparo da Salo violin mimicked the basses and baritones of male singers.


“In contrast, Stradivari violins were marked by elevated formants, making them relatively more similar to female voices,” such as tenors and altos, the researchers added.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்ட நாள்: மே 27, 1937

1527405558553.png


கோல்டன் கேட் பாலம், பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும்.

1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

* 1703 - ரஷ்ய சார் மன்னன் முதலாம் பீட்டர் புனித பீட்டர்ஸ்பெர்க் நகரை அமைத்தான்.

* 1860 - இத்தாலியின் ஒற்றுமைக்காக கரிபால்டி சிசிலியின் பலேர்மோ நகரில் தாக்குதலை ஆரம்பித்தான்.

* 1883 - ரஷ்யாவின் மன்னனாக மூன்றாம் அலெக்சாண்டர் முடி சூடினான்.

* 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் பிஸ்மார்க் போர்க் கப்பல் வட அட்லாண்டிக்கில் மூழ்கடிக்கப்பட்டதில் 2,100 பேர் கொல்லப்பட்டனர்.

* 1960 - துருக்கியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது செலால் பயார் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

* 1965 - வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தெற்கு வியட்நாம் மீது குண்டுகள் வீசித் தாக்குதலைத் தொடுத்தன.

* 1994 - சோவியத் அதிருப்தியாளர் அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ரஷ்யா திரும்பினார்.

* 1997 - முல்லைத்தீவுக் கடலில் கடற்புலிகள் படகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

* 2006 - ஜாவாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6,000 பேர் வரை பலியாயினர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964

1527405641046.png


ஜவகர்லால் நேரு உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் 1889-ஆம் ஆண்டு நவம்பர் 14-இல் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக பிறந்தார்.

சிறுவயதிலேயே ஜவகர்லால் நேருவுக்கு இந்தி மொழி, சமஸ்கிருதம் மற்றும் இந்தியக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெறவேண்டும் என்று விரும்பி, அதற்காக அவரை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார்.

ஜவகர்லால் நேரு, ஹார்ரோவிலுள்ள பள்ளி வாழ்க்கையை முற்றிலும் விரும்பவில்லை. இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார். 1910 அக்டோபர் இன்னர் டெம்பிளில் சட்டம் பயில பதிவு செய்து கொண்டார்.

ஹார்ரோ மற்றும் கேம்பிரிட்ஜில் அவர் விரும்பியோ, கவரப்பட்டோ சட்டம் பயிலவில்லை. மாறாக தந்தையின் வேண்டுகோளுக்காகப் படித்தார். நேரு இறுதித்தேர்வில் 1912இல் வெற்றி பெற்று, ஆண்டு இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார். சட்டப் பணிசெய்ய விரைவில் இந்தியா திரும்பினார்.

1916-ஆம் ஆண்டு கமலா கவுல் என்ற 16 வயது நிரம்பிய பெண்ணை மணந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திரா பிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள். பின்னாளில் அவர் ஃபெரோஸ் காந்தியை மணம் புரிந்ததால் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாக செயல்பட்டார். ஆனால் 1936 இல் புற்றுநோயால் இறந்தார். அதன்பின் நேரு கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார்.

1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளை சந்தித்தார். 1919 இல் ஜாலியன் வாலாபாக்கில் ஆயுதம் ஏதும் இன்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவை காங்கிரஸ் கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ள காரணமாக இருந்தது. நேரு விரைவாக காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார்.

1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு முதல் முறையாக சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டி வந்தது.

சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்த படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததுடன், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது.

முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடதுசாரி தலைவரானார்.

நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். ஆகஸ்ட் 15, 1947 புதுடெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் பழமையையும், அமைப்பையும் செதுக்க அவருடைய நீண்டகால பதவி ஒரு கருவியாகப் பயன்பட்டது. சில சமயங்களில் இவரை ‘நவீன இந்தியாவின் சிற்பி’ என்று குறிப்பிடுவதுண்டு.

இவருடைய மகள் இந்திரா காந்தி மற்றும் பேரன் ராஜீவ் காந்தியும், இந்தியாவின் பிரதம மந்திரிகளாக இருந்திருக்கிறார்கள். தேர்தலில் நேரு காங்கிரசை மிகப்பெரிய வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆனாலும் அவருடைய அரசு விமர்சனங்களை எதிர்கொண்டது.

உள்கட்சி ஊழல்கள் மற்றும் சுரண்டல்களால் வெறுத்துப்போன நேரு பதவியை துறக்க நினைத்தாலும் தொடர்ந்து சேவை செய்தார். 1953 நேருவின் ஆரோக்கியம் குறைந்து வந்ததால் மாதக் கணக்கில் அவர் காஷ்மீரில் கட்டாய ஓய்வுக்காகத் தங்க வேண்டி வந்தது.

சில வரலாற்றாளர்கள் இதை சீன ஊடுருவலில் இருந்து தப்பிக்க நடத்தப்பட்ட நாடகமாக கதை கட்டி எழுதியதை, நேரு நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகமாகக் கருதினார். 1964 இல் காஷ்மீரில் இருந்து திரும்பியதும் நேரு பக்கவாதத்தாலும், மாரடைப்பாலும் அவதிப்பட்டார்.

அவர் 1964 மே மாதம் இதே நாளில் அதிகாலை இறைவனடி சேர்ந்தார். அவர் பூதவுடல் இந்து சடங்குகள் முறைப்படி யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது. டெல்லித் தெருக்களில் இருந்தும், மயானத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.