Interesting International News

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
காபுல் ஐ.எஸ். தற்கொலைப்படை தாக்குதல் பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு

1524414165534.png

தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க பாதுகாப்புப்படைகள் வாபஸ் பெறப்பட்ட மூன்றாண்டுகளுக்கு பின்னர் கடந்த 2014-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார்கள் எழுந்தன. நடப்பு பாராளுமன்றத்தின் காலம் முடிவடைவதற்குள் நியாயமான வகையில் அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உள்ளூர் மக்களும் சர்வதேச அரசியல் நோக்கர்களும் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், புதிய வாக்களர்கள் கணக்கெடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலவரங்களை காரணம் காட்டி அடுத்தடுத்து தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டில் நடத்தி முடிக்க வேண்டியுள்ளது. இதனால், அதிபர் தேர்தலுக்கு முன் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படுமா? என்ற சந்தேகம் அந்நாட்டு மக்களிடையே நிலவி வந்தது.

இந்நிலையில், கடந்த 1-4-2018 அன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆப்கானிஸ்தான் தலைமை தேர்தல் கமிஷனர் குலா ஜான் அப்துல் பாடி சயத், அக்டோபர் 20-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து, புதிய வாக்களர் சேர்க்கை மற்றும் அடையாள அட்டை வழங்கும் பணிகளில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் வாக்காளர் பதிவு மையங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.



இந்நிலையில், காபுல் நகரின் தாஷ்-இ பார்சி என்ற பகுதியில் செயல்பட்டு வந்த வாக்காளர் பதிவு மையத்தில் இன்று பிற்பகல் நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டி வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததாகவும், 56 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் இணையதளம் குறிப்பிட்டுள்ள நிலையில் இன்று மாலை நிலவரப்படி பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது. பலியானவர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோல, பக்லான் என்ற பகுதியில் உள்ள வாக்காளர் பதிவு மையத்தில் இன்று குண்டு வெடித்ததில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (93). இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71), அமெரிக்காவின் 43-வது அதிபராக பதவி வகித்தவர். பார்பரா புஷ் கடந்த செவ்வாய் கிழமை மரணமடைந்ததார். அவரது இறுதி சடங்கு சமீபத்தில் நடைபெற்றது.



இந்நிலையில், ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் கிருமி தொற்று ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
கனடாவில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

1524534986260.png

கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று டிரக் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.

அந்த டிரக்கை ஓட்டியவர் அந்த இடத்தில் இருந்து டிரக் உடன் தப்பியோடினார். அவரை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர். இந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக டொரோண்டோ போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
ஊழல் வழக்கில் இந்தோனேசியா முன்னாள் சபாநாயகருக்கு 15 ஆண்டுகள் சிறை

1524571052558.png

தென்கிழக்கு ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள இந்தோனேசியா நாட்டில் சுமார் 26 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள ‘ஆதார்’ அட்டை திட்டத்தைப்போல் அந்நாட்டு மக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க அரசு முடிவு செய்தது.

இதுதொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் செய்து நாட்டுக்கு 17 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக ஆளும் கோல்கார் கட்சி தலைவரும் இந்தோனேசிய பாராளுமன்ற பாநாயகருமான சேட்யா நோவான்ட்டோ மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, 11-12-2017 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிரான ஊழல் வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.

இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் சேட்யா நோவான்ட்டோ-வுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர். தண்டனை காலம் முடிந்து ஐந்தாண்டுகளுக்கு (இன்றிலிருந்து 20 ஆண்டுகளுக்கு) அவர் பொது பதவிகளை வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு 11 பேர் பலி

1524571129728.png

தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கி வரும் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர்.

அந்நாட்டின் மேற்கு பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், போலீசார் 18 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஃபரா மாகாணத்தில் சோதனைச்சாவடி மீது இன்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். கஸ்னி மாகாணத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி மீது நடந்த தாக்குதலில் 4 போலீசார் கொல்லப்பட்டனர்.

மேற்கு பட்கிஸ் மாகாணத்தில் உள்ள ஒரு சோத்னைச்சாவடியில் இரு போலீசாரை சுட்டுக்கொன்ற தலிபான் பயங்கரவாதிகள் 6 போலீசாரை சிறைபிடித்து சென்றுள்ளனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
500,000 Afghan children affected by drought: Unicef






Unicef announced on Tuesday that 500,000 Afghan children have been affected by a drought in the country.
Out of the country's 34 provinces, 10 were worst hit where 20 to 30 per cent water sources are reportedly dry, threatening the lives of about 1 million people, Xinhua news agency quoted Unicef as saying in a statement.

An additional 2 million people could feel its effects over the coming months.

"These areas have pre-existing high rates of malnutrition. Without adequate nutritious food and safe water for drinking, as well as for hygiene and sanitation, children's health will only worsen," the statement said.

The impact of the drought couldn't have come at a worse time, as cases of severe acute malnutrition, or seasonal malnutrition, are on the rise by about 25 per cent.





Some 1.6 million children and 443,000 pregnant and lactating women suffer from malnutrition across Afghanistan, according to the statement.





"The priority is to prevent the situation from deteriorating, by responding to the needs of children and families in the worst affected areas," said Adele Khodr, Unicef's Afghanistan Representative.

The Unicef estimate that emergency nutrition assistance is needed for 92,000 Afghan children and 8,500 pregnant and lactating women.


Between July and December 2018, some 121,000 acutely malnourished children under five and 33,000 pregnant and lactating women could need life-saving nutrition services.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
இந்தோனேசியா - பெட்ரோல் கிணறு தீபிடித்த விபத்தில் 15 பேர் பலி

1524655146512.png


இந்தோனேசியா நாட்டின் கிழக்கு பகுதியில் சுமத்ரா தீவின் வடக்குமுனையில் உள்ள ஆசே மாகாணத்துக்குட்பட்ட பல பகுதிகளில் பெட்ரோல் ஊற்றுகள் தென்படுகின்றன.

அரசின் அனுமதி இல்லாமல் பலர் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் பெட்ரோல் கிணறுகளை அமைத்து கள்ளத்தனமாக பெட்ரோல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில், பசி புட்டி கிராமத்தில் புதிதாக பெட்ரோலிய எண்ணை கிணறு தோண்டப்படுகிறது. சுமார் 250 மீட்டர் ஆழத்துக்கு தோண்டப்பட்ட இந்த கிணற்றில் இருந்து ஊற்றெடுத்து வழியும் கச்சா எண்ணையை பிடித்து செல்வதற்காக சில நாட்களாக ஆண்களும், பெண்களும் இங்கு முகாமிட்டுள்ளனர்.


இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் ஒன்றரை மணியளவில் அந்த பெட்ரோல் கிணற்றில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. மிகப்பெரிய தீப்பிழம்புகள் எழுந்தன. விறுவிறுவென பரவிய தீயில் அருகாமையில் உள்ள 5 வீடுகள் நாசமடைந்தன. கச்சா எண்ணையை பிடித்து செல்வதற்காக காத்திருந்த சுமார் 50 பேர் தீயில் சிக்கிக் கொண்டனர்.

இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். காயமடைந்த சுமார் 40 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
 

Aravind parasu

Minister's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
3,024
Likes
891
Location
chennai
இம்ரான் கான் வீட்டு வளர்ப்பு நாய்களால் பிரச்சனை - தாய்வீட்டுக்கு சென்ற புது மனைவி

1524743787964.png

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்(64). இவர் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் என கட்சி தொடங்கியுள்ளார். பாகிஸ்தான் அரசியலில் அது எதிர்க்கட்சியாக உள்ளது.

கடந்த 1995-ம் ஆண்டு மே 16-ந்தேதி லண்டனை சேர்ந்த ஜெமிமா கோஸ்டுஸ்மித் என்ற பெண்ணை இம்ரான் கான் திருமணம் செய்தார். இவர் மூலம் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணமான 9 ஆண்டுகளில் 2004-ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன் பின்னர் 2015-ம் ஆண்டில் ஜனவரி 8-ந்தேதி டி.வி.தொகுப்பாளர் ரீசும் கான் என்பவரை 2-வது திருமணம் செய்தார். இவர்களது திருமண வாழ்வு 10 மாதங்கள் மட்டுமே நிலைத்தது. அதன் பின்னர் இவரையும் இம்ரான் கான் விவாகரத்து செய்தார்.

அதை தொடர்ந்து தனிமையில் இருந்த இம்ரான்கான் கடந்த பிப்ரவரி மாதம் புஷ்ரா மனேகா என்ற விவாகரத்து பெற்ற பெண்ணை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். ஆன்மிக இளைப்பாறலுக்காக புஷ்ரா மனேகாவை அடிக்கடி சந்தித்துவந்த இம்ரான் கான் அவரை காதலித்து வந்ததாக முன்னர் வெளியான தகவல்களுக்கும் வதந்திகளுக்கும் இந்த திருமணத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


திருமணமானதும் இஸ்லாமாபாத் நகரில் உள்ள இம்ரான் கானின் மாளிகைக்கு வந்த புஷ்ரா மனேகா, அங்கு ஏராளமான வளர்ப்பு நாய்கள் இருப்பதை கண்டு எரிச்சல் அடைந்ததாக தெரிகிறது. ஆன்மிகம் மற்றும் வழிப்பாட்டில் ஈடுபடுபவர்கள் வசிப்பிடத்தில் நாய்கள் வளர்ப்பது சரியல்ல என்னும் மனேகாவின் விருப்பப்படி அந்த நாய்கள் எல்லாம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறொரு இடத்தில் பராமரிக்கப்பட்டு வந்தன.

திருமணத்துக்கு முன்னர் புஷ்ரா மனேகாவிடம் இம்ரான் கான் சில நிபந்தனைகளை விதித்திருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டரங்கள் குறிப்பிட்டிருந்தன. அதில் முக்கிய நிபந்தனை, புஷ்ரா மனேகாவின் உறவினர்கள் யாரும் இம்ரான் கான் வீட்டில் அதிக நாட்களுக்கு தங்கி இருக்க கூடாது என்பதாகும்.

இதைமீறிய வகையில் புஷ்ரா மனேகாவின் முதல் கணவர் மூலமாக பிறந்த மகன் கவார் ஃபரின் என்பவர் இம்ரான் வீட்டில் தனது தாயாருடன் தொடர்ந்து இருந்துள்ளார்.

இதுதொடர்பாக, இம்ரான் கானுக்கும் புஷ்ரா மனேகாவுக்கும் இடையே எழுந்த பிரச்சனையில் புஷ்ரா மனேகா இம்ரானை பிரிந்து, அவரது தாய்வீட்டுக்கு சென்று விட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக இம்ரான் கான் வீட்டில் இருந்து முன்னர் வெளியேற்றப்பட்ட நாய்கள் தற்போது அவரது மாளிகைக்குள் உலா வருவதாகவும் அந்த செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
எல்லைகளைக் கடந்து வந்து சந்தித்துக் கொண்ட கொரிய அதிபர்கள்: வரலாற்று நிகழ்வானது

|




1953ம் ஆண்டு கொரிய நாடுகளுக்கு இடையே போர் மூண்ட பிறகு வரலாற்றில் முதல் முறையாக வட கொரிய - தென் கொரிய நாட்டு அதிபர்கள் இருவரும் எல்லையைக் கடந்து வந்து சந்தித்துக் கொண்ட வரலாற்று நிகழ்வு இன்று நடந்துள்ளது.

பல நாள் இழுபறிக்கும், பல கட்ட முன்னேற்பாடுகளுக்கும் பிறகு வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் இடையே இரு நாடுகளுக்கும் இடையில் அமைந்துள்ள பான்முன்ஜோம் சமாதான கிராமத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றது.

வடகொரியா - தென் கொரியா நாடுகளைப் பிரிக்கும் எல்லைக் கோட்டுப் பகுதியில் வந்திறங்கிய வடகொரிய அதிபர் கிம்மை, தென்கொரிய அதிபர் மூன் வரவேற்று கைகுலுக்கினார்.

அப்போது, தென்கொரிய அதிகாரிகளை கிம்மிற்கு மூன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த உலக வரலாற்றில் மிகச் சிறப்பு வாய்ந்த சந்திப்பாக அமைந்த இந்த நிகழ்வை பதிவு செய்ய ஏராளமான செய்தியாளர்கள் அப்பகுதியில் குழுமி இருந்தனர்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.