Interesting International News

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,084
Likes
20,708
Location
Germany
‘அமெரிக்காவுக்கு மரணம்’ ஈரான் பாராளுமன்றத்தில் அமெரிக்க கொடியை கிழித்து எம்.பி.க்கள் கோஷம்

1526101630979.png


மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.

ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.

செறிவூட்டப்பட்ட யூரேனியம் குறைந்த அளவில் மட்டுமே இருக்க வேண்டும், அதுவும் மருத்துவம் உள்ளிட்ட ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது அந்த ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய அம்சமாகும். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தை தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வந்த அதிபர் டிரம்ப், நேற்று திடீரென ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என அறிவித்தார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட அமெரிக்க பாசம் கொண்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதேவேளையில் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் ரஷியா, சிரியா உள்ளிட்ட சில நாடுகள் டிரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகியவை அறிவித்துள்ளன.

இந்நிலையில், ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ள நிலையில், ஈரான் மீது பொருளாதார தடைகள் விழ வாய்ப்பு உள்ளதால் ஈரான் அரசு கொதித்துள்ளது. பாராளுமன்றத்தில் கூடிய பல எம்.பி.க்கள் அமெரிக்க கொடியை கிழித்து எறிந்து, அந்நாட்டுக்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

‘அமெரிக்காவே உனக்கு மரணம் வருகிறது’ என எம்.பி.க்கள் கோஷம் எழுப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
16,382
Likes
3,099
Location
India
பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற அமெரிக்க தூதரக அதிகாரிக்கு தடை

1526199746529.png

கார் விபத்தில் இளைஞர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய அமெரிக்க தூதரக அதிகாரி ஜோசப் ஹால் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் புணிபுரிபவர் ராணுவ இணைப்பு அதிகாரி காலினல் ஜோசப் இமானுவேல் ஹால். இவர் கடந்த ஏப்ரல் 7ம் தேதி இஸ்லாமாபாத்தின் வடக்கு பகுதியில், சிக்னல் விதிகளை மதிக்காமல் கார் ஒட்டி சென்றார். இந்த விபத்தில் அடீக் பெய்க் என்ற இளைஞர் உயிரிழந்தார். காரை ஓட்டிச் சென்ற ஜோசப் குடிபோதையில் இருந்தார் என புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா அதற்கு மறுப்பு தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, அவரை கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் அரசு சேர்த்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு பல்வேறு பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்தது. தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 40 கி.மீ தொலைவுக்கு மேல் பயணம் செய்ய வேண்டுமானால் முன் அனுமதி பெற வேண்டும் என புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், ஜோசப் ஹால் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. சர்வதேச விதிமுறைகளின் படி அவர் மீதான விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியுடன் நடத்தப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
16,382
Likes
3,099
Location
India
இந்தோனேஷிய தேவாலயங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
1526199828160.png


உலகில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு இந்தோனேஷியா. இந்நாட்டில் மற்ற மதத்தினரும் குறைந்த அளவில் வசித்து வருகின்றனர். சமீப வருடங்களில் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பிற மதத்தினர் மீது சகிப்பின்மை காரணங்களால் தொடர் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

இங்குள்ள இரண்டாவது மிக பெரிய நகரம் சுரபயா. இந்நகரில் கிறிஸ்தவர்கள் வழிபடும் தேவாலயங்கள் அமைந்துள்ளன.
இந்த நிலையில், இந்நகரில் 3 தேவாலயங்கள் மீது தொடர்ச்சியாக 10 நிமிட இடைவேளையில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் முதல் தாக்குதல் காலை 7.30 மணியளவில் நடந்தது.

அவற்றில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் ஒன்றும் அடங்கும். இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகினர் என முதற்கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்து உள்ளது. 35 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர். இதற்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
16,382
Likes
3,099
Location
India
பாரீசில் கத்தியால் குத்தியவன் உள்பட 2 பேர் பலி; 4 பேர் காயம்

1526200368482.png

பிரான்ஸ் நாட்டின் மத்திய பாரீஸ் நகரில் ஓபரா ஹவுஸ் அருகே பார்கள், விடுதிகள் மற்றும் தியேட்டர்கள் ஆகியவை நிறைந்த பகுதி உள்ளது. வார விடுமுறை தினத்தினை ஒட்டி நள்ளிரவில் இங்கு வாடிக்கையாளர்கள் வருகை அதிகளவில் இருக்கும்.

இந்த நிலையில், கத்தியுடன் வந்த நபரொருவர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதில், ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டு கொன்றனர். அந்த நபர் எதற்காக இதனை செய்துள்ளார் என தெரியவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.

கடந்த 3 வருடங்களில் நடந்த தொடர் தாக்குதல்களில் 245 பேர் மரணம் அடைந்து உள்ளனர் என ஜிகாதி போராளிகள் தெரிவித்துள்ளனர்.
 
Joined
Jul 5, 2011
Messages
104,084
Likes
20,708
Location
Germany
பாரிசில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவரின் நண்பர் கைது

பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஒபரா ஹவுஸ் அருகே மர்ம நபர் ஒருவர் கண்ணில் எதிர்ப்பட்ட நபர்களை கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டான். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடம் சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர்.

இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.இந்நிலையில், பாரிசில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவரின் நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பாரிசில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவன் செசன்யா நாட்டை சேர்ந்தவன் என்பதும், கம்சாத் (29) என்ற வாலிபர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக கம்சாத்தின் நண்பரை கைது செய்துள்ளோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
1,802
Likes
494
Location
chennai
ரோமானியாவில், அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது. புசாரெஸ்ட் நகரத்தில் நடந்த போராட்டத்தின் காட்சி.

1526300274746.png
 
Joined
Aug 9, 2012
Messages
16,382
Likes
3,099
Location
India
காசா எல்லையில் இஸ்ரேல் கொடூரத் தாக்குதல் - உலக நாடுகள் கண்டனம்!

பாலஸ்தீனர்களுக்கு எதிராகக் காசா எல்லைப் பகுதியில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தினர். இதில், 59 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.உலக நாடுகளின் எதிர்ப்பை மீறிக் கடந்த ஆண்டு ஜெருசலம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அங்கீகரித்தார். மேலும், நேற்று முன்தினம் ஜெருசலேமில் அமெரிக்கத் தூதரகம் திறக்கப்பட்டது. முன்னதாக, ஜெருசலமை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் சொந்தம் கொண்டாடியது. இதனால், இரு நாடுகளும் நீண்டகாலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.


இந்த நிலையில், இஸ்ரேல் தனிநாடாக உருவாக்கப்பட்டபோது பாலஸ்தீனர்கள் இடம்பெயர்ந்தார்கள். இதனை `நக்பா' என்று அழைக்கப்படுவதுண்டு. இந்த நிகழ்வின் 70-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், பாலஸ்தீனர்கள் காசா எல்லைப் பகுதியில் பெருமளவில் திரண்டு வந்தனர். அப்போது இஸ்ரேலுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களைக் கட்டுப்படுத்த, இஸ்ரேல் படையினரும் எதிர்த் தாக்குதல் நடத்தினர். கலவரத்தைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்தத் தாக்குதலில், 59 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 2 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டில் இரு தரப்புக்கும் இடையே போர் மூண்டது. அதன்பிறகு, நடந்த மிகப்பெரிய மோதல் இதுவாகும். இதற்கு, உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக காசா பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
16,382
Likes
3,099
Location
India
கியூபாவில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் - 104 பேரின் கதி என்ன?

1526668147684.png

கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 104 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த விமான புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
Joined
Jul 5, 2011
Messages
104,084
Likes
20,708
Location
Germany
வெனிசுலா சிறைக்குள் பயங்கர மோதல்:11 பேர் கொலை

1526699453065.png

வெனிசுலா நாட்டின் லாரா மாநிலத்தில் பெனிக்ஸ் சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறைச்சாலையில் நேற்று கைதிகளுக்குள் கலவரம் ஏற்பட்டுள்ளது. கைதிகள் ஒருவருக்கொருவர் கொடுரமாக தாக்கியுள்ளனர். கலவரத்தை தடுக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த கலவரத்தில் 9 கைதிகள், 2 காவலர்கள் என 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை கரகஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் பலர் காயமடைந்தனர்.
 
Joined
Jul 5, 2011
Messages
104,084
Likes
20,708
Location
Germany
டெக்சாஸ் பள்ளியில் துப்பாக்கி சூடு - 9 மாணவர்கள் உட்பட 10 பேர் பலி

1526700260553.png

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சாண்டா பே பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் நேற்று சில மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்.

இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் 9 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் அந்த பள்ளியில் பயின்றுவரும் மாணவர் எனவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், டெக்சாசில் இருந்து கிடைக்கும் தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.