Interesting International News

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
தென் சீன கடல் பகுதியில் போர் விமானங்களை இறக்கி சீனா அடாவடி

1526732531023.png


சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்தும், ஆண்டுதோறும் சுமார் ஐந்து லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான சரக்குகள் பரிமாற்றமும் இந்தப் பகுதி வழியே நடைபெறுவதாலும், இந்த கடலில் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக சொல்லப்படுவதாலும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆனால், ‘‘தென் சீனக்கடலில் எங்களுக்கும் பங்கு இருக்கிறது’’ என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. கடந்த 2012-ம் ஆண்டில் இந்த சர்ச்சைக்குரிய கடல் பகுதிக்குட்பட்ட ஒரு தீவில் சான்ஷா என்ற மாதிரி நகரத்தை சீனா உருவாக்கியது.

இந்த நிலையில், சீனாவுக்கு எதிராக தி ஹேக் நகரில் ஐ.நா. சட்டதிட்டங்களின்படி அமைக்கப்பட்டுள்ள சர்வதேச அளவிலான மத்தியஸ்தம் செய்வதற்கான நிரந்தர தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ், 2013-ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது.

தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்புக்கு பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்தன. ஆனால், இந்த தீர்ப்பை ஏற்க முடியாது என சீனா திட்டவட்டமாக கூறிவிட்டது.

இந்நிலையில், தென் சீன கடல் பகுதியில் அதிநவீன போர் விமானங்களை நேற்று இறக்கி சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது.தென் சீனக்கடல் எல்லைக்குட்பட்ட தீவுகள் மற்றும் பவளப்பாறைகள் பகுதிகளில் H-6K ரகத்தை சேர்ந்த குண்டு வீச்சு விமானங்களின் மூலம் நடைபெற்ற இந்த போர் பயிற்சியின் மூலம் கடல் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த இலக்குகள் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
ஊழல் புகாரில் சோதனை: மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் 100 கிலோ தங்கம் பறிமுதல்

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக். சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இவரது கட்சி தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சி கூட்டணி, ஆட்சியை பிடித்தது. எனவே மகாதீர் முகமது பிரதமராக பதவி ஏற்றார்.

அதை தொடர்ந்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோலாலம்பூரில் பெவிலியோன் அடுக்குமாடி குடியிருப்பில் ரசாக்குக்கு சொந்தமான 2 வீடுகளில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது 72 பைகளில் பதுக்கி வைத்திருந்த தங்க கட்டிகள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் எடை 100 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.171 கோடி ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டது, இவைதவிர விலை உயர்ந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் 350 பெட்டிகளில் அடைக்கப்பட்டு 5 லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டது.


இவை தவிர ரசாக்கின் வீட்டில் ஒரு பாதுகாப்பு பெட்டகமும் உள்ளது. அதன் சாவி தொலைந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இருந்தாலும் அதை திறக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பெட்டகம் திறக்கப்பட்டால் மேலும் தங்கம், பணம் மற்றும் விலை உயர்ந்த ரத்தினங்கள் சிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
நஜிப் ரசாக் தலைக்கு மேல் இரண்டாவது கத்தி - மாடல் அழகி கொலை வழக்கில் சிக்குகிறார்

1526839760095.png

மலேசியாவில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த பேரிசன் நேஷனல் கூட்டணி (பி.என்.) தோல்வியைத் தழுவியது.

எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நஜிப் ரசாக், பிரதமர் பதவியை இழந்தார். மேலும், 92 வயது மகாதீர் முகமது பிரதமர் ஆனார். அதைத் தொடர்ந்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் ரசாக் மீது எழுந்த குற்றச்சாட்டு சூடு பிடிக்கத்தொடங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

அவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர். அங்கு இருந்து பண கட்டுகள், நகைகள் வைத்து நிரப்பப்பட்ட ஏராளமான கைப்பைகள் சிக்கின.

இந்த நிலையில் அவர் வரும் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி ஊழல் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது. அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவாரா? என்பது தெரியவரும்.

இந்நிலையில், மலேசியா நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மங்கோலியா நாட்டு மாடல் அழகி கொலை வழக்கில் முன்னாள் பிரதமர் நசிப் ரசாக்கை தொடர்புப்படுத்தி, மறு விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மங்கோலியா நாட்டை சேர்ந்தவர் அல்டன்ட்டுயா ஷாரிபு. பிரபல மாடல் அழகி. இரு குழந்தைகளுக்கு தாயான இவருக்கும் முன்னாள் பிரதமர் நசிப் ரசாக்கின் நண்பரும் அரசியல் ஆலோசகருமான அப்துல் ரசாக் பகின்டா என்பவருக்கும் இடையே காதல் இருந்ததாக முன்னர் தகவல் வெளியாகின.

இந்நிலையில், 18-10-2006 அன்று மலேசியாவில் அல்டன்ட்டுயா ஷாரிபு(28) கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அப்போது நஜிப் ரசாக் பாதுகாப்புத்துறை மந்திரியாகவும், துணை பிரதமராகவும் பதவி வகித்து வந்தார்.

கடந்த 2002-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் இருந்து மலேசியாவுக்கு இரு நீர்மூழ்கி கப்பல்களை வாங்கிய பேரத்தில் நடைபெற்ற ஊழலில் அப்துல் ரசாக் பகின்டாவுக்கும், அல்டன்ட்டுயா ஷாரிபுவுக்கும் பங்கிருந்ததாகவும், இந்த விவகாரம் வெளியே கசியாமல் இருப்பதற்காக அல்டன்ட்டுயா கொல்லப்பட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின.

இந்த கொலை தொடர்பாக அப்துல் ரசாக் பகின்டா மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால், கொலை செய்ய தூண்டியதான வழக்கில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இவ்வழக்கில் கைதாகி, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இரு போலீசாரில் ஒருவர் மரண தண்டனைக்கு எதிரான அப்பீல் வழக்கில் ஜாமினில் வெளியே வந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். இவர்கள் இருவருமே நஜிப் ரசாக்கின் பாதுகாப்பு படையில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


கொலை வழக்கில் கைதான போலீசார்

மலேசியாவில் இருந்து தப்பியோடி ஆஸ்திரியா நாட்டுக்கு சென்ற போலீஸ்காரர் சிருல் அசார் உமர் என்பவர் அந்நாட்டு குடியுரிமைத்துறை அதிகாரிகளிடம் கடந்த 2015-ம் ஆண்டு பிடிபட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மலேசிய அரசு தனக்கு பொது மன்னிப்பு அளித்தால் அல்டன்ட்டுயா ஷாரிபுவை கொல்லுமாறு தனக்கு கட்டளை பிறப்பித்த பெரும்புள்ளி யார்? என்பதை வெளிப்படையாக அறிவிக்கவும், கோர்ட்டில் வந்து வாக்குமூலம் அளிக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என சமீபத்தில் சிருல் அசார் உமர் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது மலேசியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பல்வேறு நாட்டு தலைவர்களும் புதிய பிரதமரும் மலேசியா நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவருமான மஹதிர் முகம்மதுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில், நேற்று அவருக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்து வாழ்த்து கடிதம் அனுப்பிய மங்கோலியா நாட்டு அதிபர்
பட்டுல்கா கல்ட்மா, இரு குழந்தைகளுக்கு தாயான தங்கள் நாட்டுப் பெண்ணும் மாடல் அழகியுமான அல்டன்ட்டுயா ஷாரிபு மலேசியாவில் கொல்லப்பட்ட விவகாரத்தை உங்களது கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம் இதற்கான நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் மங்கோலியா நாட்டு அரசு இணையதளத்திலும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மலேசியா மன்னரின் பொது மன்னிப்பின்படி சிறையில் இருந்து விடுதலையான அன்வர் இப்ராகிம், அல்டன்ட்டுயா ஷாரிபு கொலை வழக்கில் முன்னர் முறையான, நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை. எனவே, தற்போது நஜிப் ரசாக் மற்றும் அவரது நண்பர் அப்துல் ரசாக் பகின்டா ஆகியோரையும் இணைத்து மறுவிசாரணையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரியா நாட்டில் சிறைபட்டிருக்கும் சிருல் அசார் உமருக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு, அவரை மலேசியாவுக்கு அழைத்து வந்தால் மங்கோலியா மாடல் அழகி கொலை தொடர்பான மறுவிசாரணை சூடு பிடிக்கலாம். அப்போது, குற்றம்சாட்டப்படுபவர்கள் பட்டியலில் அப்துல் ரசாக் பகின்டா, நஜிப் ரசாக் ஆகியோரும் இணைக்கப்படலாம் என மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதனால், ஏற்கனவே ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்நோக்கி காத்திருக்கும் மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மங்கோலியா நாட்டு மாடல் அழகி கொலை வழக்கிலும் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
தடை நீக்கம் அமலுக்கு வராத நிலையில் கார் ஓட்டியதாக 7 பெண் வக்கீல்கள் சவூதியில் கைது

1526840477983.png

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல சட்ட விதிகள் உள்ளன. அவர்கள் கார் ஓட்ட தடை, தங்களது வாழ்க்கை முடிவுகளை தந்தை, கணவர், சகோதரர், மகன் ஆகியோரின் ஆலோசனைப்படிதான் எடுக்க வேண்டும் என்பது போன்ற பல கட்டுபாடுகள் இருக்கிறது.

சவுதி அரேபிய பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார்.
இதற்கிடையே சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட இருந்த தடையை நீக்கி இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டார்.

பெண்கள் கார் ஓட்ட அனுமதி வருகிற ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், சட்டம் அமலுக்கு வராத நிலையில் கார் ஓட்டியதற்காக மாதர் நல ஆர்வலர்களான 7 பெண் வக்கீல்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு குழு தெரிவித்து உள்ளது.

கடந்த 15-ந்தேதி முதல் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவர்களில் இமன் அல் நப்ஜன், லுரெயின் அல் ஹத்நுல், அசிசா அல்-யூசப் ஆகியோர் முக்கியமானவர்கள்.

இதில் இமன்-அல்- நப்ஜன், லுரெயின் அல்-ஹத் நுல் ஆகியோர் ஏற்கனவே சவுதி அரேபியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு காரை ஓட்டியதாக கைது செய்யப்பட்டு 75 நாட்கள் சிறையில் இருந்தவர்கள்.

இவர்கள் 7 பேரும் வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், நாட்டு பாதுகாப்புக்கு குந்தகம்
விளைவிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், ஒற்றுமையை பிளவுபடுத்த முயற்சி செய்ததாகவும் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

பெண்கள் கார் ஓட்ட தடையை நீக்க கோரி போராடியவர்கள் அந்த தடை நீக்கப்படுவதற்கு முன்பே தேசதுரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் பெண்கள் தங்கள் சொந்த நிறுவனங்களை நடத்த ஆண்களின் அனுமதியை நாட வேண்டிய சட்டத்தையும் பட்டத்து
இளவரசர் சல்மான் அகற்றினார் என்று குறிப்பிடத்தக்கது
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
டமாஸ்கஸ் நகரின் கடைசி பதுங்குமிடத்தில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெளியேற்றம்

1526840980670.png

சிரியா நாட்டின் கிழக்கே ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்துகின்றது.

யூப்ரட்டஸ் ஆற்றுப்பகுதியில் டெய்ர்-அல்-ஸோர் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரமான அல்-மயாடின் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து அரசுப் படைகள் கடந்த ஆண்டு மீட்டன. இங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அல்-ஓமர் பெட்ரோல் வயலை அமரிக்க படைகள் துணையுடன் சிரியா ராணுவம் கைப்பற்றியது.

சிரியாவின் மிகப்பெரிய அல்-ஓமர் பெட்ரோல் வயலை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளது ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான உச்சகட்டப் போரின் முக்கிய திருப்புமுனையாக கருதப்பட்டது.


இந்நிலையில், தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கடைசி பதுங்குமிடத்தில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் இன்று வெளியேற்றப்பட்டதாக இங்குள்ள மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மேற்கு சிரியாவில் துருக்கி, ஈராக், ஜோர்டான் நாடுகளை ஒட்டியுள்ள எல்லைப்பகுதிகளில் முகாமிட்டிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்ட நிலையில், பாலஸ்தீனம் நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள யார்மோர்க் அகதிகள் முகாம் பகுதியில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளும் அவர்களின் குடும்பத்தாரும் ஒரு பேருந்து மூலம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், அவர்கள் சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள பாடியா நகரை நோக்கி சென்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
ஈராக்கில் கூட்டணி அரசு? - வெற்றிபெற்ற மதகுரு மக்தாதா பிரதமர் அபாடியுடன் சந்திப்பு

1526841257428.png


ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இந்த நிலையில் திடீரென ஐ.எஸ். பயங்கரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர்.

தினமும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். எனவே அமெரிக்க கூட்டுப் படையின் உதவியுடன் கடந்த டிசம்பரில் அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர்.

அதைதொடர்ந்து ஈராக்கில் கடந்த 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. அதில் மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணி போட்டியிட்டது. அவரை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணியும், பதே கட்சி கூட்டணியும் மோதின.

இந்த தேர்தலில் 44.5 சதவீதம் வாக்குகள் பதிவாகின. ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. அதில் மதகுரு மக்தாதா தலைமையிலான கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இவருக்கு அடுத்தபடியாக பதே கட்சி 47 இடங்கள் வந்துள்ளது.

இந்த தேர்தலில் பிரதமர் அபாடி தலைமையிலான நசார் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இக்கட்சி 42 இடங்கள் பிடித்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

தேர்தலில் வெற்றி பெற்றாலும் மதகுரு மக்தாதா சதார் பிரதமராக முடியாது. ஏனெனில் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. இவர் ஷியா பிரிவு பயங்கரவாத இயக்கத்தின் தலைவராக இருந்தார். இதனால் இவர் அமெரிக்காவின் நீண்டகால எதிரி ஆவார். மக்தாதா பிரதமராக முடியாவிட்டாலும் புதிய அரசு அமைவதில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதிக இடங்களில் வெற்றிபெற்ற மதகுரு மக்தாதா அல்-சத்ர் பிரதமர் ஹைதர் அல் அபாடியை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஹைதர் அல் அபாடி தலைமையில் புதிதாக கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

இதர கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி மக்களுக்கு தேவையான பாதுக்காப்பு, வளம் மற்றும் சிறந்த நல்லரசை கொடுக்கும் ஆட்சியாக இந்த கூட்டணி அரசு அமையும் என இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹைதர் அல் அபாடி குறிப்பிட்டார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டின் மிரட்டல்களை கையாண்டதிலும், ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்கியதிலும் அபாடி தலைமையிலான அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டதால் அவரது தலைமையிலான புதிய கூட்டணி அரசுக்கு எதிர்ப்பு இருக்காது என தெரிகிறது.

எனினும், தேர்தல் முடிவுகள் வெளியான 90 நாட்களுக்குள் புதிய அரசு அமைந்தாக வேண்டும் என்னும் நிலையில் இதர கூட்டணி கட்சிகளின் ஆதரவையும் பெற்று போதுமான பெரும்பான்மையுடன் புதிய அரசு அமைக்க சற்று தாமதம் ஆகலாம் என ஈராக் ஊடகங்கள் கருதுகின்றன
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
14 பாதிரியார்களுக்கு கர்டினல் பட்டம் - போப் பிரான்சிஸ்

1526842679030.png

இத்தாலி, ஸ்பெய்ன், போர்ச்சுக்கல், போலந்து, ஈராக், பாகிஸ்தான், ஜப்பான், மடகாஸ்கர், பெரு, மெக்சிகோ மற்றும் பொலிவியா போன்ற கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக உள்ள 11 நாடுகளில் ஏழைகளுக்கு சேவை செய்து வந்த 14 பாதிரியார்களை கர்டினல்களாக பதவி உயர்வு அளிக்கப்போவதாக போப் பிரான்சிஸ் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக வரும் ஜூன் மாதம் 29-ம் தேதி வாடிகன் தேவாலயத்தின் தலைமை குழுவுடன் ஆலோசனை நடத்த போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போப் மரணித்தால் அல்லது ஒய்வை அறிவித்தால், புதிய போப்பை தேர்வு செய்யும் உயர் அமைப்பில் இதுவரை 120 பேர் மட்டுமே கர்டினல்களாக இருந்தனர். இந்த எண்ணிக்கை போப் பிரான்சிஸ் பதவிக்காலத்தில் 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 125 கர்டினல்களில் பாதிக்கும் பெரும்பாலானவர்களை கடந்த 2013 பதவியேற்ற போப் பிரான்ஸிசால் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர்.

ஈராக் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களின் மீது சமீப காலமாக அதிகளவில் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த இரண்டு நாடுகளிலும் இருந்து கர்டினல்களை போப் தேர்வு செய்ய உள்ளதன் மூலம் அந்த நாடுகளில் உள்ள உள்ளூர் தேவாலயங்களுக்கான தனது ஆதரவை போப் பிரான்சிஸ் உறுதிபடுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
Mother says slain daughter rejected Texas shooter

One of the victims of a deadly shooting at a high school in Texas is reported to have rejected the teenage shooter's advances.

10 people were killed and 13 injured in Friday's shooting at the high school in Santa Fe, near Houston. The suspect is a 17-year-old male student.

Multiple US media quoted the mother of one of the slain victims as saying that her daughter turned down months of advances from the suspect.

She said the suspect became more aggressive and that the daughter embarrassed him in class the week before the shooting.

The woman expressed the view that her daughter was targeted by the suspect. Investigators say the shooter spared people he liked.

Police say they are investigating whether the rejections were in any way related to the suspect's motives.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
இலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி

இலங்கையில் உள்ள தென் பகுதியில் கடந்த ஒரு மாதமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

குறிப்பாக 1 வயதில் இருந்து 7 வயது வரை உள்ள குழந்தைகளை இந்த காய்ச்சல் தாக்குகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 15 குழந்தைகள் பலியாகி உள்ளன.

தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பரவி உள்ளது. பள்ளிக்கூடங்கள் செல்லும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது, என்ன காய்ச்சல் என்று தெரியவில்லை. ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கொழும்பு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நோய் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் நேற்று முதல் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 25-ந் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளனர்.

மாத்தழை, முலடியானா, அகுரைச, தங்காலை, வலையமுள்ள, காலி ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆரம்ப பள்ளிக்கூடங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கராபிட்டி ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
சவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்

1526990433788.png


சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் எ330 ஜெட் விமானம் 151 பயணிகளுடன் சவுதியின் புனித நகரான மெக்காவில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவை நோக்கி பறந்து சென்றது. நடுவானில் விமான என்ஜினில் உள்ள ஹைட்ராலிக் சிஸ்டம் திடீர் என செயலிழந்தது.

இதனால், அருகில் இருந்த நகரான ஜெட்டாவில் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானிகள் முடிவு செய்தனர்.

ஜெட்டா விமான நிலைய ஓடுதளத்தில் விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் முன் பகுதி தரையில் மோதி சேதம் அடைந்தது. இதில், விமானத்தில் இருந்த 52 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் விமானத்தில் இருந்த அவசரகால கதவு வழியே வெளியேற்றப்பட்டனர்.

ஒரு பெண் பயணிக்கு மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சவுதி விமானபோக்குவரத்து விசாரணை ஆணையம் இந்த விபத்து குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.