Interesting International News

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
பாகிஸ்தானில் பொதுத் தேர்தலுக்கான தேதிகளை பரிந்துரை செய்தது தேர்தல் ஆணையம்

1526991053056.png

பாகிஸ்தானின் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் வரும் மே 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது. மேலும் காபந்து பிரதம மந்திரிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி, எதிர்க்கட்சி தலைவர் குர்ஷீத் ஷாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். நாளை மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடங்கி உள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் தேதிகளை தேர்வு செய்துள்ளது. ஜூலை 25, 26 அல்லது 27 ஆகிய தேதிகளில் தேர்தலை நடத்தும்படி அறிவிக்குமாறு ஜனாதிபதி மம்னூன் ஹுசைனுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. #
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
இத்தாலியில் ரெயில் தடம்புரண்டு விபத்து - 2 பேர் பரிதாப பலி

1527141857085.png

இத்தாலியில் உள்ள டுரின் மாகாணத்தில் தண்டவாளத்தில் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் ரெயில் பயணம் செய்த பயணிகள் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரி டிரைவர் காயங்களுடன் உயிர் தப்பினார். ரெயிலானது உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு டுரின் நகரில் இருந்து புறப்பட்டு இவ்ரியாவிற்கு சென்று கொண்டிருந்தது. சுமார் 11.30 மணியளவில் கலுசோ நகருக்கு அருகில் செல்லும் போது இந்த விபத்து நடந்துள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
சாலையோரத்தில் வரிசயைாக நிறுத்தப்பட்டுள்ள டூ வீலர்கள், ஆர்மண்ட், டெசோஸ், சுவிட்சர்லாந்து .

1527193303390.png
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - கிம் ஜாங் அன்

1527238131387.png


வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது சந்திப்பு அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டு இருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்துவிட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிம் உடனான ஜூன் 12 சந்திப்பு வேலைக்கு ஆகாது என்றே தோன்றுகிறது என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடன் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.



இந்நிலையில், கிம் ஜாங் அன்னுடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரியா அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வடகொரிய வெளியுறவு துறை மந்திரி கிம் கை குவான் கூறுகையில், வர்டகொரிய அதிபருடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளை தீர்க்க நாங்கள் தயார் என தெரிவித்துள்ளார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
தென்கொரியா அதிபருடன் கிம் ஜாங் அன் அவசர ஆலோசனை

1527404628746.png

வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று தென்கொரியா அதிபர் மூன் ஜே-வை இன்று ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தென்கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த முறை சந்தித்து பேசிய எல்லைப்பகுதி கிராமமான பன்முன்ஜோம் என்னும் இடத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் சுமார் இரண்டு மணிநேரம் ஆலோசனை நடத்தியதாகவும், இதுதொடர்பாக விரிவான அதிகாரப்பூர்வ தகவல் நாளை அரசு தரப்பில் இருந்து வெளியாகலாம் எனவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
அயர்லாந்தில் கருக்கலைப்பு சட்டங்களை மாற்ற 66 சதவீதம் மக்கள் ஆதரவு

1527405139892.png

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. கருக்கலைப்பு குறித்து கடினமான சட்டம் நடைமுறையில் உள்ளது. கர்ப்பிணித் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய சட்டம் அனுமதிக்கிறது.

கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றம் என்பதால், உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாமல், இந்திய வம்சாவளி பல் மருத்துவர் சவிதா 2012ம் ஆண்டு உயிரிழந்தார். இது அயர்லாந்து மக்களிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

அத்துடன், கருக்கலைப்பு சட்டத்தை மறுவரையறை செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் பேரணி நடத்தினர். இதையடுத்து சட்டத்தை மாற்ற அரசு முன்வந்தது. அதன்படி கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக, மக்கள் கருத்தினை அறியும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதற்காக நாடு முழுவதும் 6,500 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை முதல் மாலை வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கருக்கலைப்புக்கு ஆதரவாக சுமார் 66 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதையடுத்து, இந்த கடுமையான கருக்கலைப்பு தடைச்சட்டத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆவேச தாக்குதல் - 35 ராணுவ வீரர்கள் பலி

1527433759263.png


சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட ரஷியா விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.

இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சண்டையில் கூட்டுப்படையினர் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து கடைசி நகரையும் கைப்பற்றினர்.



இந்நிலையில், டெய்ர் அல்-சோர் மாகாணத்தில் உள்ள மயாதின் நகரில் சிரியா மற்றும் ரஷியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 43 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 26 பேர் சிரியாவை சேர்ந்தவர்கள் எனவும், 9 பேர் ரஷியாவை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக இந்த பகுதியில் உள்ள அரசு ஆயுத கிடங்கை குறிவைத்து சில பயங்கரவாதிகள் நேற்றிரடு நடத்திய தாக்குதலில் 4 ரஷிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
சிங்கப்பூர் - கோலாலம்பூர் புல்லட் ரெயில் திட்டம் ரத்து: மலேசிய பிரதமர் அதிரடி

மலேசியா நாட்டின் அருகாமையில் இருக்கும் செல்வ செழிப்பு மிகுந்த நாடான சிங்கப்பூர், குடிநீர் உள்ளிட்ட பல அத்தியாவசிய தேவைகளுக்கு மலேசியாவை நாடி வாழ வேண்டிய நிலையில் உள்ளது.

முன்னர், மலேசியா பிரதமராக மஹாதிர் முஹம்மது பதவிவகித்தபோது, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவுகளில் சற்று பூசல் காணப்பட்டது. ஆனால், அவருக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான அரசு சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணக்கமான உறவுகளை பேணி வந்தது.

சமீபத்தில் மலேசியா பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று மஹாதிர் முஹம்மது தற்போது மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில், சுமார் 2500 கோடி அமெரிக்க டாலர் அளவிலான கடன் சுமையில் மலேசிய அரசு சிக்கியுள்ளதாக தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் நஜீப் ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களை ரத்து செய்யப் போவதாகவும் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கோலாலம்பூர் நகருடன் சிங்கப்பூரை இணைக்கும் 350 கிலோமீட்டர் தூர புல்லட் ரெயில் திட்டத்தை ரத்து செய்வதாக மஹாதிர் முஹம்மது இன்று அறிவித்துள்ளார்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சாலை வழியாக சிங்கப்பூர் சென்றடையும் பயணநேரம் 5 மணி நேரமாக உள்ளது. விமானம் மூலம் ஒருமணி நேரத்தில் சென்றடையலாம் என்பதால் சிங்கப்பூர் - கோலாலம்பூர் விமானச் சேவைகள் வெகு பரபரப்பாக இயங்கி வருகின்றன.

இதை கருத்தில் கொண்டு கடந்த 2016-ம் ஆண்டு நஜீப் ரசாக் ஆட்சிக்காலத்தில் சிங்கப்பூர் - கோலாலம்பூர் இடையே புல்லட் ரெயில் சேவை தொடங்க திட்டம் தீட்டப்பட்டது. இந்த புல்லட் ரெயில் மூலம் சிங்கப்பூர் - கோலாலம்பூர் சுமார் 350 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 90 நிமிடங்களில் சென்றடையலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வரும் 2026-ம் ஆண்டில் முடிக்கப்பட வேண்டும் என்ற முனைப்பில் 1400 கோடி அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பரிசீலனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கோலாலம்பூர் நகருடன் சிங்கப்பூரை இணைக்கும் 350 கிலோமீட்டர் தூர புல்லட் ரெயில் திட்டத்தை ரத்து செய்வதாகவும், இது இறுதி முடிவு என்றும் மஹாதிர் முஹம்மது இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி முடிவுக்கு வந்தது

1527587814647.png
மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங் நகருக்கு 8-3-2014 அன்று 227 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 12 பணியாளர் என மொத்தம் 239 பேருடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் (எம்.ஹெச்.370) இந்திய பெருங்கடலுக்குள் (தெற்கு) விழுந்தது.



இதையடுத்து, அந்த விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. ஆஸ்திரேலியக் கடற்படை கப்பல் ‘ஓஷன் ஷீல்ட்’ மற்றும் எச்.எம்.எஸ் ‘எக்கோ’ என்ற இரண்டு கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுதவிர மேலும் பல தனியார் நிறுவனங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

ஆனால், 1046 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில் எந்த பலனும் கிடைக்காத நிலையில் தேடும் பணியை நிறுத்தி கொள்வதாக மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலிய அரசுகள் கடந்த ஆண்டு அறிவித்தன.

இதற்கிடையில், அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் ‘கண்டுபிடித்தால் பணம் - இல்லாவிட்டால் சேவை இலவசம்’ என்னும் ஒப்பந்த அடிப்படையில் இந்திய பெருங்கடல் பகுதியில் மாயமான அந்த விமானத்தை தேட முன்வந்து விருப்பம் தெரிவித்தது. இந்த பணிக்காக ‘ஓசியன் இன்பினிட்டி’ என்னும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அதிநவீன கப்பல் தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு மலேசிய போக்குவரத்து துறை மந்திரி லியோவ் டியாங் கடந்த 6-1-2018 அன்று அனுமதி அளித்தார்.



ஆஸ்திரேலிய கடல் எல்லைக்கு உட்பட்ட ஆழ்கடல் பகுதியில் 8 நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்தி சுமார் 80 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இரவு-பகலாக தேடும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், இதுவரை எந்த நல்ல செய்தியும் கிடைக்கவில்லை.

இந்த தேடுதல் வேட்டையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என மலேசிய அரசு கெடு விதித்திருந்தது. அந்த கெடுக்காலம் முடிவடைந்ததாலும், தற்போது கடல் பகுதியில் தேடுதல் பணிக்கேற்ற பருவநிலை இல்லாததாலும் நான்காண்டுகளுக்கு முன்னர் மாயமான மலேசிய விமானத்தை தேடும் ஓசியன் இன்பினிட்டி நிறுவனத்தின் பணிகள் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தை பற்றிய மிகச்சிறிய தடயம் கிடைத்திருந்தாலும் ‘ஓசியன் இன்பினிட்டி’ நிறுவனத்துக்கு 7 கோடி அமெரிக்க டாலர்கள் கிடைத்திருக்கும். ஆனால், இந்த தேடுதல் வேட்டை தோல்வியில் முடிந்ததால் அந்நிறுவனம் வெறுங்கையுடன் திரும்ப நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
நியூசிலாந்து: 1,50,000 பசுக்களை அழிக்க முடிவு
1527588586460.png


‘மைக்ரோபிளாஸ்மா போவிஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்று நோயைத் தடுக்கும் விதமாக 1,50,000 பசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

உலகிலேயே அதிக அளவில் பால் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நியூசிலாந்து முதலாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் பசுக்களில் நிமோனியா உள்ளிட்ட நோய்களை உருவாக்கும் ‘மைக்ரோபிளாஸ்மா போவிஸ்’ எனப்படும் பாக்டீரியா கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டது.

இந்த பாக்டீரியாவில் உணவு பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இருந்த போதிலும் நியூசிலாந்தின் முக்கிய பொருளாதார தொழிலான பால்வளம் மற்றும் கால்நடை உற்பத்தியை இது பாதிக்கும். இதனால் பாக்டீரியா தொற்று கண்டறியப்பட்ட பண்ணைகளில் உள்ள பசுக்கள் மற்றும் ஆரோக்கியமாக உள்ள சில பசுக்களையும் அழிக்க நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

இந்த ஒட்டுமொத்த அழிப்பு நடவடிக்கை குறித்து அந்நாட்டுபிரதமர் கூறுகையில், ‘நியூசிலாந்து பொருளாதாரத்தின் பால்வளம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாகும். இந்த ஒட்டு மொத்த பசு ஒழிப்பை யாரும் விரும்புவதில்லை, இது மிகவும் கடினமான முடிவு, ஆனால் இதனை செய்யாவிட்டால் நியூசிலாந்து நாட்டின் கால்நடை வளம் அழிந்து விடும். உடனடியாக நடவடிக்கை எடுக்கா விட்டால், நாட்டில் உள்ள 20000 பால் பண்ணைகள் மற்றும் மாட்டிறைச்சி நிலையங்களை காக்க முடியாமல் போய்விடும்’ என்று பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.