Interesting International News

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
பெண் மாடல்களுக்கு தடையால் சவுதியில் நடந்த பேஷன் ஷோவில் பறந்து வந்த ஆடைகள் - வீடியோ

1528401639583.png

சவுதி அரேபியாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. தற்போது, பட்டத்து இளவரசராக முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், கார் ஓட்டுவது மற்றும் மைதானத்திற்கு சென்று விளையாட்டுக்களை பார்ப்பது போன்றவற்றுக்கு பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு பொறுப்பிலும் பல்வேறு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் பாதுகாப்பு படையிலும் பெண்கள் இணைக்கப்பட உள்ளனர். இந்நிலையில், சவுதியில் சமீபத்தில் பேஷன் ஷோ ஒன்று நடந்துள்ளது. ஆண் மாடல்கள் புதியாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

சவுதியில் பெண்கள் மாடலிங் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்று. இதனால், புதிதாக வடிவமைக்கப்பட்ட பெண்களுக்கான ஆடைகளை எப்படி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பத்தில் இருந்த பேஷன் ஷோ ஏற்பாட்டாளர்கள் வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்தனர்.

அதாவது, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ட்ரோன்களில் பெண்களுக்கான ஆடைகளை மாட்டிவிட்டு நிகழ்ச்சி நடந்த அரங்கில் பறக்க விட்டுள்ளனர். இதனை குர்திஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தற்போது இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து கிண்டலான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வீடியோவை பார்க்க..

<iframe width="560" height="315" src="
" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
பாகிஸ்தான் பொதுத் தேர்தல்: முஷாரஃப் போட்டியிட அனுமதி



பாகிஸ்தானில் இந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், அந்த நாட்டின் முன்னாள் அதிபர் முராஃப் போட்டியிட உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.

தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக, அவர் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதற்கு பெஷாவர் உயர் நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு தடை விதித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தற்போது இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

அந்தத் தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, வரும் தேர்தலில் முஷாரஃப் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கினார்.
மேலும், இந்த மாதம் 13-ஆம் தேதி முஷாரஃப் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர் கைது செய்யப்பட மாட்டார் என்று உறுதியளித்தார்.

இதுகுறித்து முஷாரஃப் தலைமையிலான அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (ஏபிஎம்எல்) கட்சி கூறுகையில், கைபர் பாக்துன்கவா மாகாணத்தில் அமைந்துள்ள சித்ரால் மாவட்டத்தில் முஷாரஃப் போட்டியிடுவார் என்று தெரிவித்தது.

இந்தத் தொகுதியில், முஷாரஃப் தகுதி நீக்க்கம் செய்யப்பட்ட கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, அவரது ஏபிஎம்எல் கட்சி ஆதரவு வேட்பாளர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தடை நீக்கத்தைத் தொடர்ந்து, கராச்சி நகரிலும் முஷாரஃப் போட்டியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, வழக்குகளைத் தவிர்க்கும் வகையில் நாட்டை விட்டு வெளியேறி வசித்து வரும் முஷாரஃப், தேர்தலுக்கு முன்னர் பாகிஸ்தான் திரும்புவார் என்று ஏபிஎம்எல் கட்சியின் பொதுச் செயலர் முகமது அம்ஜத் தெரிவித்தார். எனினும், எந்தத் தேதியில் அவர் நாடு திரும்புவார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
மதவாத அரசியல்: 7 மசூதிகளை மூட ஆஸ்திரியா முடிவு





ஆஸ்திரியாவில் மதவாத அரசியலைத் தடுக்கும் வகையில் 60 முஸ்லிம் இமாம்களுக்குத் தடை விதிக்கவும், 7 மசூதிகளை மூடவும் அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் ஹெர்மெர்ட் கிக்கில், வியன்னாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

ஆஸ்திரியாவில் மத அடிப்படைவாத அரசியலுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மதவாதத்தைத் தூண்டி வரும் 60 முஸ்லிம் இமாம்களுக்கு தடை விதிக்கப்படவிருக்கிறது. மேலும், 7 மசூதிகளை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் காரணமாக சுமார் 150 பேர் ஆஸ்திரியாவில் தங்கியிருக்கும் உரிமையை இழக்கலாம் என்றார் அவர்.

ஆளும் கூட்டணியைச் சேர்ந்த மக்கள் கட்சியின் தலைவர் செபாஸ்டின் கர்ஸ் கூறுகையில், ஆஸ்திரியாவில் மத அடிப்படைவாதத்துக்கோ, இஸ்லாமிய மத அரசியலுக்கோ துளியும் இடமில்லை; ஆஸ்திரியாவின் கலாசாரத்தோடு ஒட்டாமல் அதற்கெதிரான தனி சமூக அமைப்பு ஏற்படுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.

ஆஸ்திரிய அரசின் இந்த முடிவுக்கு துருக்கி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,726
Likes
3,187
Location
India
வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்க ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரஷியா

உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்தது. மேலும், ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையிலும் முழுமையான வெற்றி பெற்றதாகவும் அந்நாடு தெரிவித்திருந்தது.

இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிராக கடும் பொருளாதார தடைகள் அடங்கிய தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றியது.

வடகொரியாவின் நிலக்கரி, லெட் (கனிமப்பொருள்) மற்றும் கடல் உணவுகள் ஏற்றுமதி என வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை உள்ளடக்கிய தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தாக்கல் செய்து, ரஷியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றியது.

இதைத்தொடர்ந்து, தென்கொரியாவின் முயற்சியினால் அமெரிக்கா மற்றும் வடகொரியா தலைவர்களின் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிங்கப்பூரில் இரு தினங்களுக்கு முன்னர், அந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பும் நடந்து முடிந்தது.

கிம் ஜாங் அன் உடனான சந்திப்பின் போது, நான் பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஆனால், அணு ஆயுதங்களை முற்றிலுமாக வடகொரியா அழித்த பின்னரே தடை நீக்கம் பற்றி முடிவு செய்யப்படும். எனவே, தற்போதைக்கு இந்த தடைகள் தொடரும் என டிரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து ஐ.நா.சபைக்கான ரஷ்ய தூதர் வாசிலி நெபென்சியா பேசுகையில், “எதிரும் புதிருமாக இருந்த இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி. வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட முடிவு செய்துள்ளது. இதை ஊக்கப்படுத்தும் விதமாக அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகளை நீக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்கும் விவகாரத்தில் ரஷியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்” என தெரிவித்துள்ளார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு ரஷ்ய தூதர் வாசிலி நெபென்சியா தலைமை தாங்க உள்ளார். இந்த கூட்டத்தில் சிங்கப்பூர் சந்திப்பின்போது ஏற்பட்ட ஒப்பந்தம் மற்றும் வட கொரியா மீதான பொருளாதார தடை நீக்கம் தொடர்பாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
தோ்தலில் போட்டியிட முஷாரஃபுக்கு மீண்டும் தடை






இதையடுத்து, இந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தோ்தலில் பங்கேற்பதன் மூலம் மீண்டும் அரசியல் வாழ்வைத் தொடங்க முஷாரஃபுக்குக் கிடைத்த வாய்ப்பு கைநழுவிப் போனதாகக் கூறப்படுகிறது.

தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக, முஷாரஃப் வாழ்நாள் முழுவதும் தோ்தலில் போட்டியிடுவதற்கு பெஷாவா் உயா் நீதிமன்றறம் கடந்த 2013-ஆம் ஆண்டு தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், அந்தத் தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றறம், வரும் பொதுத் தோ்தலில் முஷாரஃப் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை கடந்த வாரம் வழங்கியது.

மேலும், இது தொடா்பான விசாரணைக்காக நீதிமன்றறத்தில் முஷாரஃப் புதன்கிழமை ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவா் கைது செய்யப்பட மாட்டார் என்று உறுதியளித்திருந்தார்.
அதையடுத்து, முஷாரஃப் தலைமையிலான அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (ஏபிஎம்எல்) கட்சி கூறுகையில், கைபா் பாக்துன்கவா மாகாணத்தில் அமைந்துள்ள சித்ரால் மாவட்டத்தில் முஷாரஃப் போட்டியிடுவார் என்று தெரிவித்தது.

இந்த நிலையில், குறிப்பிட்ட தேதியில் முஷாரஃப் நீதிமன்றறத்தில் ஆஜராகவில்லை. ரமலான் பண்டிகையாக இருப்பதாலும், சூழல் சரியாக இல்லாததாலும் நீதிமன்றத்தில் ஆஜராக கூடுதல் அவகாசம் தருமாறு அவரது வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தைக் கோரினா்.

எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சாகிப் நிஸார், ராணுவ வீரரான முஷாரஃப், ஒரு கோழையைப் போல் நீதிமன்றறம் வர அஞ்சுவதாக கண்டனம் தெரிவித்தார்.

மேலும், வியாழக்கிழமை (ஜூன் 14) மதியம் 2 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று முஷாரஃபுக்கு அவா் கெடு விதித்தார்.

எனினும், குறிப்பிட்ட நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக முஷாரஃப் தவறியதால், தோ்தலில் வேட்பமனு தாக்கல் செய்வதற்காக அவருக்கு கடந்த வாரம் அளிக்கப்பட்டிருந்த அனுமதியை, நீதிபதி ரத்து செய்தார்.

பாகிஸ்தானில் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள முஷாரஃப், மருத்துவ சிகிச்சைக்காக சிறப்பு அனுமதி பெற்று கடந்த 2016-ஆம் ஆண்டு துபை சென்றார். எனினும், சிகிச்சைக்குப் பிறகு அவா் இதுவரை நாடு திரும்பவில்லை.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,432
Likes
553
Location
chennai
நவாஸ் ஷெரீப் மனைவிக்கு மாரடைப்பு - பாகிஸ்தான் மக்கள் பிரார்த்திக்குமாறு மகள் வேண்டுகோள்

1529061115576.png

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் ஷெரீப்(68). புற்றுநோயின் தீவிரத்தால் பாதிக்கப்பட்ட குல்சூம் பல மாதங்களாக லண்டன் நகரில் உள்ள வீட்டில் தங்கியவாறு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது கணவர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் ஷெரீப் உள்ளிட்டோர் பாகிஸ்தானில் இருந்து அவ்வப்போது லண்டன் சென்று அவரை பார்த்துவிட்டு வருவதுண்டு.



அவ்வகையில், நேற்று வாஸ் ஷெரீப், மகள் மரியம் ஷெரீப் ஆகியோர் குல்சூமை பார்ப்பதற்காக விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்று சேருவதற்குள் நேற்று பின்னிரவில் கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட குல்சூம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) அனுமதிக்கப்பட்டுள்ள குல்சூம் சுயநினைவை இழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

தனது தாயார் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்குமாறு நவாஸ் ஷெரீப் மகள் மரியம் ஷெரீப், மகன் ஹுசைன் நவாஸ் மற்றும் பாகிஸ்தான் பிரதமரும் நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷாபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் சார்பில் பாகிஸ்தான் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனையின் பலம் மிகவும் வல்லமையானது என்பதால் ரம்ஜான் நோன்பை நிறைவு செய்துள்ள பாகிஸ்தான் மக்கள் அனைவரும் குல்சூம் ஷெரீப் குணமடைய பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என ஷாபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,432
Likes
553
Location
chennai
"6 மாதத்திற்குள் 3 கோடி பேர் பலி... பயோவார் அபாயமா?!" - பில்கேட்ஸ்

"கால்ரா, கால்ரா" என கவுண்டமணி சொல்லச் சொல்ல செந்தில் வேகமாகச் சைக்கிள் அழுத்தும் நகைச்சுவைக் காட்சி நியாபகம் இருக்கிறதா? அதில் கவுண்டமணியின் காலில் ரத்தம் வருவதற்குக் கூட காலராதான் காரணம் எனச் செந்தில் சொல்ல ஊரே காலராவிற்கு பயந்து காலி செய்து ஓடும். உண்மையில் அப்படி காலராவிற்குப் பயந்து ஊரையே காலி செய்துவிட்டுப் போன கிராமங்களின் கதைகளை நமது தாத்தா, பாட்டிகள் சொல்லக் கேட்டிருப்போம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுக்க வரலாற்றில் தொற்றுநோய்களும் மர்மக் காய்ச்சல்களும் மனித இனத்தை நிறையவே துரத்தியிருக்கிறது. அவற்றுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முன்னே ஏகப்பட்ட மக்கள் அந்நோய்களுக்குப் பலியாகினர். போலியோ, சின்னம்மை இன்னும் பல நோய்களை முற்றிலும் அழிக்க ஐம்பது, அறுபது வருடங்கள் ஆகின. இன்னும் பல மர்ம காய்ச்சல்களுக்கு மருந்துகளைக் கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் போராடிக் கொண்டுதானிருக்கின்றன. வரலாற்று அனுபவங்களின்படி இப்போதும் புதிய நோய்கள் உருவாகி உலகம் முழுவதும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இதைத்தான் உலகின் மிக முக்கிய தொழிலதிபரான பில்கேட்ஸும் சொல்லியிருக்கிறார். அடுத்த நூற்றாண்டுக்குள் தொற்றுநோய்கள் மனித இனத்தை எளிதாகப் பாதிக்கும் என்கிறார் பில்கேட்ஸ்.


கடந்த ஏப்ரல் மாதம் மாசசூசெட்ஸ் மெடிக்கல் சொசைட்டி மற்றும் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் ( Massachusetts Medical Society and the New England Journal of Medicine ) நடத்திய தொற்றுநோய்கள் குறித்த கருத்தரங்கில் வருங்காலத்தில் மனித இனத்திற்குச் சவாலாக அமையக் கூடிய தொற்றுநோய்கள், மர்ம காய்ச்சல்கள் குறித்துப் பேசியுள்ளார். போலியோ, மலேரியா போன்ற நோய்களில் இருந்து அடுத்த தலைமுறையைக் காப்பாற்றிவிட்டோம். ஆனால் தொற்றுநோய்களுக்கு எதிரான முன்தயாரிப்பில் நாம் பின்தங்கியே இருக்கிறோம் எனத் தொற்றுநோய்கள் குறித்து சொல்கிறார் பில்கேட்ஸ். புதிய புதிய நோய்க்கிருமிகள் தினமும் உலகில் தோன்றிக்கொண்டுதானிருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் பயங்கரமான நோய்களாக மனிதர்களுக்குப் பரிச்சியமாவதில்லை. இப்போதிருக்கும் சூழலில் தனிமனிதர்களோ அல்லது சிறு சிறு குழுக்களோ நோய்களை ஆயுதமாக்க முடியும். பில்கேட்ஸின் கருத்துப்படி சிறு சிறு நகரங்களில் இருப்பவர்கள் கூட உலகையே அச்சுறுத்தக்கூடிய நோய்களை உருவாக்கிப் பரப்ப முடியும். உலகத்தின் எல்லைகள் எல்லாம் சுருங்கிவரும் வேளையில் எல்லோரும் கண்டங்கள் தாண்டிப் பயணிப்பது சாதரணமாகிவிட்டது. இந்நிலையில் இதுபோன்ற சாத்தியக்கூறுகளை மிகக் கவனமாக கையாள வேண்டும்.







1918 ஆம் ஆண்டில் மர்மக் காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் ஐந்து கோடி மக்கள் பலியாகினர். அதேபோன்று வருங்காலத்திலும் பெயர் தெரியாத மர்மக் காய்ச்சலால் உலகம் முழுவதும் மூன்று கோடி மக்கள் ஆறு மாதத்திற்குள் பலியாவார்கள் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை மேற்கோள் காட்டி "மூன்று கோடி மக்களைக் கொல்லும் சக்திக்கு எதிராக உலக நாடுகள் மக்களைப் பாதுகாக்கும் அவசர நிலையினை உணர வேண்டும். ஒருவேளை உயிரியல்ரீதியான அச்சுறுத்தல்களைப் புரிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறுகிறார் பில்கேட்ஸ். சின்னம்மைத் தொற்று அதிகமாக இருந்த நேரத்தில் இராணுவப்படைகள் நோயைக் கட்டுப்படுத்த போராடின. அதுபோன்ற தொற்றுநோய்களுக்கு எதிரான போரை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்கிறார் பில்கேட்ஸ். அதேநேரத்தில் முந்தைய நிலைமையைவிட இப்போது கொஞ்சம் சிறப்பான முன்னேற்பாடுகளுடன்தான் இருக்கிறோம். மர்மக் காய்ச்சல்களை உடனடியாக கண்டறிவதில் தாமதம் ஏற்படும்போதுதான் மக்களைக் காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் ஏற்படும் மர்மக் காய்ச்சல்களை எதிர்க்கும் விதமாகத் தடுப்பு ஊசியினைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளது பில்கேட்ஸின் அறக்கட்டளையான பி மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ( Bill and Melinda Gates Foundation). இந்த முயற்சிக்காக 1,20,00 டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய்கள் மற்றும் பல்வேறு நோய்களைப் பற்றி பில்கேட்ஸ் பேசியிருப்பது குறீப்படத்தக்கது.


உலகில் பல்வேறு மக்களைப் பாதித்த வைரஸ்கள் பரவுவதற்கு முன்பே பில்கேட்ஸ் அதுகுறித்த எச்சரிக்கைகளைக் கொடுத்திருக்கிறார். முக்கியமாக எபோலா வைரஸ் ( Ebola Virus) உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தும் முன்னரே பில்கேட்ஸ் இதுபற்றி பயத்தைத் தெரிவித்திருந்தார். தற்போது இந்தியாவின் அச்சுறுத்தலாக இருக்கும் நிபா ( Nipah) வைரஸ் குறித்தும் பில்கேட்ஸ் முன்பே பேசியிருக்கிறார். உலகம் முழுவதும் நிறைய மருத்துவ அறக்கட்டளைகளின் மூலம் இதனை தெரிந்துகொள்வதாகக் கூறும் பில்கேட்ஸ் போன்ற பெரும் முதலாளிகள்தான் இந்த நோய்களையே பரப்புகின்றனர் என்றும் குற்றச்சாட்டுகள் எழும்புகின்றன. ஆனாலும் தற்போதிருக்கும்நிலையில் நமக்கேத் தெரியாமல் நம் மீது பயோ வார் ( Bio War) நடத்தப்படலாம். அப்படி எதுவும் நிகழ்ந்தால் கூட நமக்குத் தெரியாது..
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
6 வாரத்தில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட 2000 குழந்தைகள்! பதறும் அமெரிக்க எல்லை

கடந்த 16 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 1,800 குடும்பங்கள் அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் பிரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதைவிட மேலும் அதிர்ச்சி தரும் செய்தியாக கடந்த 6 வாரங்களில் மட்டும் 2000 குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ள செய்தி புலம் பெயர் அமெரிக்கர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


பல நூறு வருடங்களுக்கு முன்பு ஒரு இடத்தில் குடியேறிய சமூகத்தை அந்த இடத்தில் இருந்து விரட்டுவது என்பது சில இடங்களில் சட்டப்பூர்வமாக நடக்கும் விஷயமாக உள்ளது. இதற்கு சமீபத்திய சாட்சி அமெரிக்க எல்லையில் நடக்கும் நிகழ்வுகள் தான். கிட்டத்தட்ட 2000 குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடமிருந்து அமெரிக்க எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படையினர் பிரித்துள்ளனர். அதற்கு காரணமாக இவர்கள் கூறுவது 'இந்த மக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு நுழைந்தவர்கள். அதனால் தான் இவர்களை வெளியேற சொல்கிறோம்' என்கிறார்கள்.







ட்ரம்பின் முற்றிலும் சகிப்புத்தன்மையில்லாத கொள்கைதான் இந்த வெளியேற்றங்களுக்கு வழிவகை செய்கிறது என்று புலம்பெயர் சமூகத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இவர்களது குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்பதுதான் ட்ரம்ப் அரசாங்கத்தின் நிலைப்பாடு.


குழந்தைகளுக்கு உயர்தர வசதிகள் செய்து கொடுக்கப்படும், கல்வி மற்றும் ஆரோக்கியம் சிறந்த முறையில் ஏற்படுத்தித் தரப்படும் என்று கூறியுள்ளனர். நீதிமன்றமோ இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான குடியேற்றங்களுக்கு சில சமரசங்கள் செய்வதற்கான வழிவகைகளை குடும்பங்களின் நலன் கருதி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ட்ரம்ப் அரசு இதற்கு ஒரு சட்டமசோதாவையும் நிறைவேற்றியுள்ளது. இந்த இரண்டு விஷயங்களையும் கவனித்து முடிவெடுக்கப்படும். ஆனால் அந்த முடிவு சமரசமானதாக இருக்காது என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.


பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளை பிரிப்பது என்பது கடினமான விஷயம் தான். ஆனால் அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தாங்கள் செய்த குற்றங்களுக்காக ஜெயிலில் அடைக்கப்படுவார்கள். அதுமாதிரியான நேரத்தில் அவர்களிடமிருந்து பிரியும் குழந்தைகள் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. அதனால் தான் அவர்களை பிரித்து கண்காணிப்பில் சிறப்பாக வளர்க்கிறோம் என்றும், பால் குடி மறவா குழந்தைகளை நாங்கள் பிரிப்பதில்லை என்றும் நியாயம் பேசுகிறது அமெரிக்கா.





காங்கோ குடியரசைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் ஏழு வயது மகள் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு அரசின் மேற்பார்வையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். அந்தக் குழந்தையின் தாய் இவர்தான் என்பதற்கான ஆவணங்களை, அரசு கேட்கிறது. அந்த ஆவணங்கள் பிரிக்கப்பட்ட யாருடைய கைகளிலும் இல்லை என்பதுதான் சிக்கல். மரபணுச் சோதனை செய்து உறவை நிரூபித்துக்காட்ட முடியுமென்றாலும் அதற்கு மாதக் கணக்கில் காலம் எடுத்துக்கொள்கிறது அரசு. இதெல்லாம் "குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அல்ல இந்த நடவடிக்கைகள், அமெரிக்க எல்லைக்குள் மற்ற நாட்டவர்கள் நுழைவதைத் தடுப்பதற்காகவே'' என்று இதற்கு எதிராக போராடும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

25 பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் சுவரில் தான் ஜெயில்கள் அமையப்போவதாகவும். அங்கு இவர்கள் அடைக்கப்படுவார்கள் என்று பெற்றோர்களை கைது செய்கிறது அமெரிக்கா. சுவர் எழுப்பி இருநாடுகளை பிரிப்பது, பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளைப் பிரிப்பது என அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து அமெரிக்க புலம்பெயர்ந்தவர்கள் கண்டித்து வந்தாலும் சட்டங்களை அரசு வலுவாக்கிக் கொண்டே போகிறது. உலக நாடுகளின் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் ஐ.நா இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது? வழக்கம் போல அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படத்தான் போகிறது என்று புலம்பெயர்ந்தவர்கள் கூறுகிறார்கள். ஐ.நா தலையிட்டு சொல்லுவதை அமெரிக்கா விரும்புமா என்பது தான் இங்கு நிலவும் இக்கட்டான சூழல்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,726
Likes
3,187
Location
India
இறுதிசடங்கின் போது தாயின் சவப்பெட்டி விழுந்து நசுக்கியதில் மகன் மரணம்

இந்தோனேசியாவில் சுலாவேசி தீவை சேர்ந்தவர் சமேன் கோண்டுரா (40). இவரது தாயார் மரணம் அடைந்துவிட்டார். எனவே அவரது இறுதிசடங்கு வடக்கு டோரஜா மாவட்டத்தில் பரின்டிங் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்தது.

அவரது உடலை சவப் பெட்டியில் வைத்து அதை மூங்கில் ஏணியில் தூக்கி சென்றனர். அப்போது அப்பெட்டி தவறி கீழே விழுந்தது.

அப்போது முன்புறம் சென்று கொண்டிருந்த சமேன் கோண்டோரா மீது சவப்பெட்டி விழுந்து நசுக்கியது. அதனால் படுகாயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.


அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தும் தனது தாயின் இறுதிசடங்கு முடியும் முன்பே அவர் பரிதாபமாக இறந்தார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.