Interesting International News

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
சீனாவில் நாய்க்கறி திருவிழா: பலியிட 10 ஆயிரம் நாய்கள் தயார்

1529350327805.png

சீனாவில் குவாங்சி மாகாணத்தில் யூலினிக் என்ற இடத்தில் நாய் இறைச்சி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வருகிற 21-ந் தேதி இத்திருவிழா நடக்கிறது.

இந்த திருவிழா சுமார் ஒரு வாரம் நடைபெறும். சீனர்களை பொறுத்தவரை நாய் இறைச்சி உடலுக்கு குளிச்சி தரும் என நம்புகின்றனர். அதற்காக கோடை காலங்களில் திருவிழாவாக நடத்தி நாய் இறைச்சியை சாப்பிடுகின்றனர்.

எனவே இந்த திருவிழாவில் பலியிட 10 ஆயிரம் நாய்கள் தயாராக உள்ளன. இதற்காக நாய்கள் பெருமளவில் திருடப்பட்டு யூலின் நகருக்கு கூண்டுகளில் அடைத்து கொண்டு வரப்பட்டுள்ளன.

திருவிழாவில் நாய்கள் வெட்டப்பட்டு அல்லது உயிருடன் தீயில் வாட்டப்பட்டு இறைச்சியாக வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகிறது. நாய்கள் மட்டுமின்றி பூனை கறியும் இங்கு விற்பனையாகிறது.

அதற்கு தடை விதிக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் சமூக வலை தளங்களில் பிரசாரம் நடத்தி வருகின்றனர். ஆனால் சீனர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாய்கறி திருவிழாவுக்கு தயாராகி வருகின்றனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
கொலம்பியாவின் அதிபராகிறார் 41 வயதே ஆன இவான் டியூக்

1529350417576.png

மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. வலதுசாரி ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் செனட் உறுப்பினர் இவான் டியூக் மற்றும் முற்போக்காளர் கட்சி சார்பில் முன்னாள் மேயர் மற்றும் கொரில்லா போராளியாக இருந்த கஸ்டாவோ பெட்ரோ போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கையில் இவான் டியூக் 54 வாக்குகளும், கஸ்டாவோ பெட்ரோ 42 சதவிகித வாக்குகள் பெற்றனர். இதன் மூலம், 41 வயதே ஆன இவான் டியூக் வெற்றி பெற்று அந்நாட்டு அதிபராக பதவியேற்க உள்ளார். இதன்மூலம் அந்நாட்டு வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் அதிபரானவர் என்ற பெயரையும் டியூக் பெற உள்ளார்.

முன்னாள் அதிபர் அல்வோரோ உரைப்-க்கு ஆலோசகராக இருந்த டியூக், அந்நாட்டு அரசு கிளர்ச்சியாளர்களுடன் செய்துகொண்ட சமரச ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத அமைப்பு இல்லை: சுவிட்சர்லாந்து கோர்ட்டு தீர்ப்பு

இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காக ‘தமிழீழம்’ என்ற தனி நாடு கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கம் போராடி வந்தது. அதன் தலைவராக பிரபாகரன் இருந்தார்.

ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே 27 ஆண்டுகள் உள்நாட்டு போர் நடைபெற்றது. கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார்.




தற்போது இந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பெலின்சோனா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சுவிட்சர்லாந்து அரசு சார்பில் விடுதலைப்புலிகள் இயக்கம் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அந்த ஆவணங்களை கோர்ட்டு நிராகரித்தது. விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் விடுதலைப்புலிகள் குற்ற செயல்களில் ஈடுபடவில்லை. அது ‘தீவிரவாத அமைப்பு இல்லை’ என கூறப்பட்டுள்ளது.

மேலும், விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டோரை வழக்குகளில் இருந்து விடுவித்தும் சுவிட்சர்லாந்து கோர்ட்டு உத்தரவிட்டது
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
இந்தோனேசியா: படகு விபத்து: 60 பேர் மாயம்



இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள தோபா ஏரியில், சுமார் 80 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படகிலிருந்த 60-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகினர். திங்கள்கிழமை மாலை நேரிட்ட இந்த விபத்தில் பலியான ஒருவரது உடல் மீட்கப்பட்டது. மேலும், 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். எஞ்சியவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,766
Likes
3,187
Location
India
தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் மறைவு

1529732380980.png

தென் கொரியாவில் 1971-ம் ஆண்டு முதல் 1975-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் கிம் ஜாங் பில் (வயது 92). அதிகார பகிர்வு திட்டத்தின் கீழ் கடந்த 1998ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரையிலும் பிரதமராக இருந்துள்ளார். பிரதமராக இருந்தபோது, நாட்டின் உளவு பிரிவை உருவாக்கி அதற்கு தலைமையேற்றார்.



1961ல் ராணுவ தளபதி பார்க் தலைமையில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி கவிழ்ந்த போது, இந்த புரட்சியில் கிம் ஜாங் பில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்நிலையில், 2004-ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வந்த கிம் ஜாங் பில், முதுமை சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக, வீட்டில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவரது உடல்நிலை மோசமானதையடுத்து சியோல் நகரில் உள்ள சூன்சன்ஹியாங் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். இத்தகவலை மருத்துவமனை உறுதி செய்துள்ளது
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
US to send caskets to NKorea to return war remains

South Korean media say the US military plans to send 215 caskets to North Korea through a border village so that the North could begin the process of returning the remains of US soldiers who have been missing since the 1950-53 Korean War.


South Korea's Yonhap news agency cited an
unnamed source as saying that about 30 US military vehicles carrying the caskets were expected to cross into the North on Saturday afternoon.





North Korea agreed to send home US war remains during a June 12 meeting between North Korean leader Kim Jong-un and President Donald Trump.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,766
Likes
3,187
Location
India
அமெரிக்க எல்லையில் அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட 500 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் 31-ம் தேதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 1940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜூன் மாதம் 20-ம் தேதி நிலவரப்படி, அவர்களுடன் வந்த 2053 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

டொனால்ட் டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை மனிதநேயமற்ற செயல் என உலகளாவிய அளவில் எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கர்களில் பலரும் இதற்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

வெகுகுறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலினியா டிரம்ப், முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் மனைவி லாரா புஷ் உள்ளிட்டோரும் மனித உரிமை அமைப்புகள் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷன் தலைவர் ஸைட் ராட் அல் ஹுசைன் டிரம்ப்பின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளார். இதைதொடர்ந்து, குழந்தைகளை அகதிகளிடம் இருந்து பிரிக்கும் உத்தரவை டிரம்ப் ரத்து செய்தார்.

இந்நிலையில், எல்லைப்பகுதிகளில் அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட 522 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். குடியேற்றம் தொடர்பான காரணங்களன்றி, வேறுசில விவகாரங்களால் பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போர்ட் இஸபெல் குடியுரிமைத்துறை அலுவலகத்தில் பிரிக்கப்பட்ட குழந்தைகள் தொலைபேசி மூலம் பெற்றோருடன் தொடர்புகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கென தனியாக அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உள்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,766
Likes
3,187
Location
India
பாகிஸ்தானில் சுயேச்சை வேட்பாளருக்கு ரூ.40 ஆயிரம் கோடி சொத்து


பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் முஷாபர்கார் என்.ஏ.-182 தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முகமது உசேன் என்கிற முன்னா ஷேக் போட்டியிடுகிறார்.

இவர் தனது வேட்பு மனுவில் சொத்து மதிப்பு ரூ.40 ஆயிரத்து 300 கோடி என குறிப்பிட்டுள்ளார். அதில் 300 ஏக்கர் நிலம், மற்றும் தோட்டங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 வீடுகள் மற்றும் இதற்கான வீட்டு உபயோக பொருட்கள் இருப்பதாகவும், இவற்றுக்கு இதுவரை வரி செலுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இவரைப்போன்று எந்த ஒரு அரசியல்வாதியும் தனது சொத்து விவரத்தை வெளிப்படையாக கூறியதில்லை.


இதுகுறித்து அவர் கூறும்போது, “தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகள் தங்களது சொத்து மதிப்பை பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும். அதன்படி நான் எனது உண்மையான சொத்து விவரத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறேன்.

அதுபோன்று பாகிஸ்தானில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,766
Likes
3,187
Location
India
உலகின் மிக அழகற்ற நாய் பட்டத்தை வென்ற இங்கிலீஷ் புல்டாக்

1529907359541.png

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெடலுமா நகரில் ஆண்டுதோறும் அழகற்ற நாய்களுக்கான போட்டி நடைபெறும். இப்போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வித்தியாசமான நாய்கள் பங்குபெறும். அருவருப்பான தோற்றம் கொண்ட நாய்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவும். அதில் மிகவும் அசிங்கமான நாயை நடுவர்கள் தேர்வு செய்து வெற்றி பெற்றதாக அறிவிப்பர்.

இந்நிலையில். இந்தாண்டு நடைபெற்ற உலக அழகற்ற நாய்களுக்கான போட்டியில் அமெரிக்காவின் மிசோரியைச் சேர்ந்த நாய் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது. இங்கிலீஷ் புல்டாக் வகையைச் சேர்ந்த இந்த நாய் பார்ப்பதற்கு மிகவும் அருவருப்பான தோற்றத்தை கொண்டுள்ளது. சீசா சீசா என்ற பெயர் கொண்ட நாயின் நாக்கை பார்ப்பதற்கு மிகவும் அழகற்றதாக உள்ளது.

சென்ற ஆண்டு மார்தா என்ற நாய் வெற்றி பெற்றது. இந்த ஆண்டு வெற்றி பெற்ற சீசா சீசாவிற்கு வெற்றி கோப்பையுடன் ஆயிரத்து ஐநூறு டாலர் பரிசுத் தொகையும், அத்துடன் நியூயார்க்கில் நடைபெறும் என்.பி.சி. டுடே ஷோ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும் அளிக்கப்படும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
துருக்கி அதிபர் தேர்தல்: எர்டோகன் மீண்டும் வெற்றி





வெற்றிச் செய்தியறிந்ததும், தலைநகர் அங்காராவிலுள்ள ஏகேபி கட்சி தலைமையக மேல்தளத்திலிருந்து ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் எர்டோகன்.

துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் ரிஸெப் தயீப் எர்டோகன் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.

முதல் கட்டமாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் அவருக்கு 52.5 வாக்குகள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுவதையடுத்து, இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு அவசியமில்லாமலேயே அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பிரதமராகவும், அதிபராகவும் துருக்கியை கடந்த 15 ஆண்டுகளுக்கு ஆண்ட எர்டோகன், மேலும் 5 ஆண்டுகளுக்கு அந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை வகிப்பார்.
துருக்கியில் ஒருவர் இரு முறை மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என்ற விதிமுறை இருந்தாலும், அண்மையில் இயற்றப்பட்ட புதிய அரசமைப்புச் சட்டத்தின்படி அவருக்கு இதுதான் முதல் தேர்தல் என்பதால் அடுத்த தேர்தலிலும் போட்டியிட்டு, வரும் 2028-ஆம் ஆண்டுவரை அவரால் அதிபர் பதவியை வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கி நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில், அதிபர் எர்டோகனுக்கு குடியரசு மக்கள் கட்சி வேட்பாளரான முஹரம் இன்ஸ் பலத்த போட்டியைத் தருவார் என்று சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

எனினும், அந்த எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கும் வகையில், 52.5 சதவீத வாக்குகளைப் பெற்று அதிபர் தேர்தலில் எர்டோகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2014-ஆம் ஆண்டு அவர் பெற்ற 51.8 சதவீத வாக்குகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முஹரம் இன்ஸுக்கு 30.7 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. மூன்றாவது இடத்தில் இருக்கும் குர்து ஆதரவுக் கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 8.4 சதவீத வாக்குகள் கிடைத்தன. குர்து தீவிரவாதிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சித் தலைவர் சலேஹாட்டின் டெமிர்தாஸுக்கு இத்தனை அதிக சதவீத வாக்குகள் கிடைத்தது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி: அதிபர் தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், எர்டோகன் தலைமையிலான நீதி மற்றும் முன்னேற்றக் கட்சி (ஏகேபி) அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 600 இடங்களில் 293 இடங்களை அந்தக் கட்சி கைப்பற்றியுள்ளதால், எர்டோகனுக்கு நாடாளுமன்றத்தில் அதிக பலம் கிடைத்துள்ளது.

இந்தத் தேர்தலிலும், குர்து ஆதரவு ஜனநாயக் கட்சி 10 சதவீத வாக்குகளைப் பெற்று 67 இடங்களைக் கைப்பற்றி சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை, குர்துகள் பெரும்பான்மையாக வகிக்கும் தியார்பக்கீர் பகுதியில் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு: ஏற்கெனவே, இந்தத் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று கூறி வந்த குடியரசு மக்கள் கட்சியினர், அரசு ஊடகங்களை முறைகேடாகப் பயன்படுத்தி எர்டோகன் வெற்றி பெற்றதாக குற்றம் சாட்டியது.


சரித்திர நாயகனா? சர்வாதிகாரியா?
ஒரு சாதாரண பொருளாதார மாணவராகவும், கால்பந்து வீரராகவும் இருந்த ரிùஸப் தயீப் எர்டோகன், தற்போது துருக்கியின் அசைக்க முடியாத இரும்புத் தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த அவர், 1994-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு இஸ்தான்புல் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருந்தாலும், அரசில் மதச்சார்பை வலியுறுத்தும் பாடலை பாடியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவர், 4 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். அத்துடன், எந்த அரசுப் பொறுப்பையும் அவர் ஏற்பதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வெளிப்படையான இஸ்லாமிய ஆதரவு பிரசாரத்தைக் கைவிட்ட எர்டோகன், மிதமான சமயசார்புக் கொள்கைகளையுடைய நீதி மற்றும் முன்னேற்றக் கட்சியை (ஏகேபி) அப்துல்லா குலுடன் சேர்ந்து 2001-ஆம் ஆண்டு தொடங்கினார்.

அவரது கொள்கைகள் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போகவே, 2002-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அவரது ஏகேபி கட்சி மாபெரும் வெற்றியடைந்தது; அப்துல்லா குல் பிரதமரானார்.
எனினும், அரசுப் பொறுப்புகளை ஏற்க எர்டோகனுக்கு விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடையை அப்துல்லா குல் 2003-இல் நீக்கிய உடனேயே, பிரதமர் பதவி எர்டோகன் கைக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று பிரதமர் ஆன எர்டோகன், 2014-ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியை வகித்தார்.

அதனைத் தொடர்ந்து, 2014-ஆம் ஆண்டிலிருந்து அதிபராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.
அவரது 15 ஆண்டு ஆட்சிக் காலத்தில், எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் ஆகியவற்றுக்கு எதிராக அவர் அடக்குமுறையை கையாள்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. உலகின் மற்ற எல்லா நாடுகளையும் விட, எர்டோகன் தலைமையிலான துருக்கியில்தான் அதிக செய்தியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பின், எதிர்ப்பாளர்களின் குரல்களை நசுக்கும் செயலில் எர்டோகன் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எர்டோகனின் ஆட்சிக் காலம், துருக்கியின் ஜனநாயகத்துக்கு முடிவுக் காலம் எனவும், அவரது ஆட்சி சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எனினும், உறுதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும், மக்களின் ஆதரவுடனே எர்டோகன் ஆட்சி புரிவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

எர்டோகனின் தொடர் தேர்தல் வெற்றியை சுட்டிக் காட்டும் அவர்கள், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதைப் போல், தேர்தல்களில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்று திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.