Interesting International News

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
மக்களின் நிலை

சுனாமி காரணமாக மக்கள் உணவு, தண்ணீர், எரிபொருள் இல்லாமல் தவிக்கின்றனர்.

1538529599666.png
தேவாலய இடிபாடுகளிலிருந்து 34 இந்தோனீசிய மாணவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக பிபிசியிடம் பேசிய இந்தோனீசிய செஞ்சிலுவை சங்கத்தினர் தெரிவித்தனர்.

இத்தனை பலிகள் ஏன்?

இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் மாலை 6.03க்கு 7.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின் சுனாமியும் ஏற்பட்டது என அமெரிக்க கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாலு தீவில் திருவிழா ஒன்றுக்கு தயார் செய்து கொண்டிருந்த மக்கள் 3 மீட்டர் உயரத்துக்கு வந்த அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

மக்கள் பயத்தில் அங்கும் இங்குமாக ஓடுவதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.

உயிர்பிழைத்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?

"நிலநடுக்கம் ஏற்பட்ட போது நாங்கள் அனைவரும் பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தோம் இங்குள்ள மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. உணவு, குடிநீர் மற்றும் சுத்தமான நீர் தேவைப்படுகிறது; அடுத்த வேளை சாப்பிடுவதற்கும் எங்களுக்கு உணவில்லை" என நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 39 வயது அன்சர் பாச்மிட் தெரிவித்தார்.

1538529681567.png எங்களை பாதுகாத்துக் கொள்ள எங்களுக்கு போதிய நேரம் இல்லை நான் சுவர்களின் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டேன்..எனது மனைவியும், குழந்தையும் உதவிகேட்டு அழுது கொண்டிருந்தனர் அவர்களுக்கு என்வாயிற்று என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்." என நிலநடுக்கத்தில் சிக்கிய நபர் ஒருவர் செய்தி முகமை ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
'நிலநடுக்கம்; சுனாமி; எரிமலை வெடிப்பு' - பேரிடர்களால் அவதிப்படும் இந்தோனேசியா மக்கள்

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் தற்போது அங்கு எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் கடந்த மாதம் 29-ம் தேதி 7.5 என்ற ரிக்டர் அளவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுலவேசி தீவின் வடமேற்கு கடற்கரைப் பகுதியை சுனாமி தாக்கியது. 20 அடி உயரத்துக்கு எழும்பிய சுனாமி அலைகள் பலு நகரத்தில் பல்வேறு உயிர்களைப் பலிகொண்டது. சுனாமி மற்றும் நிலநடுக்கத்தினால் சுலவேசி தீவில் இதுவரை 1,340 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து முகாம்களிலும் சாலைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





இந்த நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்ட அதே சுலவேசி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள சொபுடான் (Soputan) என்ற எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து 6,000 மீட்டர் உயரத்துக்குத் தொடர்ந்து புகை வெளிவந்துகொண்டிருக்கிறது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் விளைவாகவே எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக எரிமலை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எரிமலையிலிருந்து வெளியேறும் புகையினால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், எரிமலைக்கு அருகில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களை அப்புறப்படுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தொடர் இயற்கை பேரிடர்களால் இந்தோனேசியா மக்கள் பீதியடைந்துள்ளனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
இலங்கையில் ஒரே இடத்தில் 150 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

1538697535114.png

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு சிங்கள ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் லட்சக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த போரின் போது சிங்கள ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டுகிறது. மேலும் போரின் போது மாயமானவர்களின் நிலை என்ன என்பது குறித்து இலங்கை அரசு பதில் அளிக்கவேண்டுமென அந்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது.



இந்த நிலையில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மன்னார் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் கட்டுமான பணிகளுக்காக குழி தோண்டியபோது பிணக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு மேலும் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய மாவட்டம் முழுவதும் குழி தோண்டும் பணிகள் தொடங்கியது.

இந்த பணி நேற்று 79-வது நாளாக நீடித்தது. அப்போது அங்கு உள்ள ஒரு இடத்தில் குழி தோண்டியபோது அதில் 150 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 14 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது ஆகும். ஒரே குழியில் 150 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
ஊழல் வழக்கில் தென்கொரியா முன்னாள் அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை

லீ மியுங்-பேக் உட்பட தென்கொரியாவின் முக்கியமான முன்னாள் தலைவர்கள் நான்கு பேர் இதுவரை ஊழல் குற்றச்சாட்டில் தண்டனைப் பெற்றிருக்கின்றனர்.


தென்கொரியாவின் முன்னாள் அதிபர் லீ மியுங்-பேக் (Lee Myung-bak) மீது வைக்கப்பட்ட ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையொட்டி அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 11.5 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. லீ மியுங்-பேக் உட்பட தென்கொரியாவின் முக்கியமான முன்னாள் தலைவர்கள் நான்கு பேர் இதுவரை ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றிருக்கின்றனர். 2008 முதல் 2013 வரை அதிபராக ஆட்சியில் இருந்தபோது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்ததாகவும் மேலும் ஊழல், மோசடி செயல்பாடுகளில் ஈடுபட்டதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், தனது தம்பி நிறுவனமான DAS மூலம் சாம்சாங் போன்ற எலெக்ட்ரானிக் நிறுவனங்களிடமும் தனது சொந்த உளவுத்துறையிடமும் சட்டவிரோதமாக பணத்தைப் பெற்றுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


``அதிபரின் இத்தகைய செயல்பாடுகள் நேர்மையையும் ஒற்றுமையையும் குலைக்கக்கூடியவை. எனவே, இதுபோன்ற செயல்பாடுகள் கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும்" என நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. முன்னதாக 20 வருடங்கள் சிறைத்தண்டனை அளிக்க வேண்டும் என எதிர்த்தரப்பில் இருந்து வாதம் முன்வைக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட லீ அப்போதிருந்தே பல்வேறு புறக்கணிப்புகளைச் செய்து வந்துள்ளார். இறுதியாக நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும்விதமாக நேற்று நடைபெற்ற விசாரணையில் லீ பங்கேற்கவில்லை. இந்தத் தீர்ப்பையும் குற்றச்சாட்டையும் லீ தீவிரமாக எதிர்க்கிறார். இந்த வழக்கே அரசியல் உள்நோக்கம் உடையது எனவும் கூறியுள்ளார். லீ மியுங்-பேக்குக்கு தற்போது 76 வயதாகிறது. லீ யின் ஆட்சிக்காலத்துக்குப் பின்பு அதிபராகப் பொறுப்பேற்ற பார்க் கீன்-ஹை (Park Geun-hye) மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
9 கோடி ரூபாய் மதிப்பிலான வன விலங்குகளின் பாகங்களை எரித்த மியான்மர் அதிகாரிகள்



மியான்மர் நாட்டில் கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றிய பல்வேறு வன விலங்குகளின் பாகங்களை தீ வைத்து அழித்திருக்கிறார்கள் அதிகாரிகள். வன விலங்குகளைக் கொன்று அதன் பாகங்களை திருடுவது பல்வேறு உலக நாடுகளில் சட்டவிரோதமான செயலாகப் பார்க்கப்படுகிறது. அதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனையை அரசு கொடுத்தாலும் கூட கள்ளச்சந்தையில் கொடிகட்டிப் பறக்கிறது இந்த வியாபாரம். இதுபோன்று கடத்தலில் ஈடுபடுபவர்கள் சிக்கிக்கொண்டால் அவர்களிடமிருந்து வன விலங்குகளின் பாகங்களை அரசு கைப்பற்றி விடும்.





இப்படிக் கைப்பற்றப்படும் பொருள்களை அரசும் விற்பனை செய்யவோ அப்படியே வைத்திருக்கவும் முடியாது. அப்படி வைத்திருந்தால் மீண்டும் கடத்தல்காரர்கள் அதைத் திருடுவதற்கு முயற்சி செய்வார்கள். எனவே, கடத்தல் பொருள்கள் அனைத்தையும் ஓரிடத்தில் குவித்து தீ வைத்து அழித்து விடுவது வழக்கம். இப்படி நேற்றுமுன்தினம் மியான்மரில் எரிக்கப்பட்ட பொருள்களில் 277 யானைத் தந்தங்கள், 1,544 மான் கொம்புகள், 45.5 கிலோ எறும்புத்தின்னி தோல் மற்றும் 180 புலிகளின் எலும்புகள் ஆகியவை இதில் அடக்கம். இவற்றின் மதிப்பு 1.3 மில்லியன் டாலர்கள். இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
அமெரிக்காவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 20 பேர் பலி

1538933955849.png

நியூயார்க் நகரின் புறநகர் பகுதியான ஸ்கோஹரீ எனும் இடத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த 20 பேர் பரிதாபமாக உடல்நசுங்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமண கோஷ்டியினர் சென்ற சிறப்பு வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்த தகவல்களை தற்போது வெளியிட முடியாது என்றும் நியூயார்க் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான பிரஸ்மீட் ஒன்றுக்கு அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் தான் முழு விவரங்களும் தெரியப்படுத்தப்படும்.


திருமண கோஷ்டியினரின் வாகனம் மலைப்பகுதியில் இருந்து கீழே வேகமாக இறங்கி வந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் வாகனத்தில் பயணித்தோர் மட்டுமின்றி, அப்பகுதியில் நடந்து சென்றோரும் கூட இதில் பலியாகி இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.


விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
இந்தோனேசியா சுனாமி, நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2000-ஐ நெருங்குகிறது

1538968049958.png

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிவுநிலைக்கு தள்ளப்பட்டது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமானது.

சுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்பு பணியில் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மேலும் பலர் மாயமாகி போயுள்ளனர். அதே நேரத்தில் உள்ளே சிக்கி தவிப்பவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1944 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக, மீட்புப்படை அதிகாரிகள் கூறுகையில், சுமார் 62,359 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது வரை 2,549 பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், பல அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள் என பல கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என தெரிவித்துள்ளனர். #
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்

1539138129291.png

வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நிலையில் அதிகாலை 03.57 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதனால் பீதி அடைந்த மக்கள் தூக்க கலக்கத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

எனினும் நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
பப்புவா நியூகினியாவில் பயங்கர நிலநடுக்கம்

மோர்ஸ்பை : பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. பிரிட்டனின் கிம்பே தீவில் கிழக்கே 125 கி.மீ/ தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக ராட்ச அலைகள் ஏற்பட்டதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவில் 6.0

இந்தோனேஷியாவின் ஜாவா, மற்றம் பாலி தீவுகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதாகவும் கூறப்படுகிறது.




 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
பயங்கர சூறாவளி காற்றுடன் அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்- 13 பேர் பலி

1539308287233.png

அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் புயல் மையம் கொண்டு இருந்தது. அந்த புயலுக்கு ‘மைக்கேல்’ என்று பெயர் சூட்டி இருந்தனர்.

அது, புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு அமெரிக்காவை புயல் தாக்கியது.

முதலில் புளோரிடா மாகாணத்தை தாக்கிய புயல் பின்னர் அலபாமா, ஜார்ஜியா மாகாணங்களையும் தாக்கியது. மணிக்கு 200-ல் இருந்து 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது.

அத்துடன் பலத்த மழையும் பெய்தது. சூறாவளியால் கடலிலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. வழக்கத்தை விட 12 அடி உயரத்துக்கு ராட்ச அலைகள் எழுந்து வந்தன. இதனால் பல இடங்களில் நிலப்பரப்புக்குள் தண்ணீர் புகுந்தது.

மழைநீர் மற்றும் கடல் நீரால் புளோரிடா நகரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள்.

லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மரத்தினால் கட்டப்பட்ட வீடுகள் அதிகமாக உள்ளன. சூறை காற்றினால் இவை கடுமையாக சேதம் அடைந்துள்ளன. பல வீடுகளை சூறாவளி காற்று முற்றிலும் இழுத்து சென்று விட்டது.

கடலில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகள் கொந்தளிப்பில் சிக்கி கரைக்கு இழுத்து வரப்பட்டன. அவற்றில் பல படகுகள் உடைந்து சேதம் அடைந்து ஆங்காங்கே கடலில் மிதக்கின்றன.

புயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு கூறி உள்ளது.

மின்சாரம் இல்லாததால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தவித்து வருகிறார்கள். புயல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழை மற்றும் புயலில் சிக்கி 13 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவை தாக்கியதில் இதுதான் அதிசக்தி வாய்ந்த புயல் என்று நிபுணர்கள் கூறினார்கள்.

தொடர்ந்து புயல் நிலப்பரப்புக்குள் பயணித்து வருகிறது. இதனால் இன்றும் பல பகுதிகளில் இதன் தாக்கத்தால் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்து உள்ளனர்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.