Interesting Television News !!

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
#71
[h=1]`சண்டே கலாட்டா'வுல இருந்து ஏன் விலகினேன்னா..?’’ தேவதர்ஷினி[/h]


ஜீ தமிழின் `காமெடி கில்லாடிஸ்' நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராகக் கலக்கிவருகிறார், பிரபல காமெடி நடிகை தேவதர்ஷினி. தன் சினிமா மற்றும் சின்னத்திரை பயணம் குறித்து உற்சாகமாகப் பேசுகிறார்."நடுவர் அனுபவம் எப்படி இருக்கு?"
"சிறப்பு! பல வருஷங்களாகக் காமெடி ஜானர்ல இயங்கிட்டிருக்கேன். அதன் ஒரு பரிமாணம்தான் இந்த நடுவர் பொறுப்பு. சினிமாவில் எங்களுக்குக் கொடுக்கிற ஸ்கிரிப்டை மட்டுமே டெலிவரி பண்றோம். ஆனா, இன்றைய தலைமுறை பசங்க ரொம்பத் திறமையுடன் இருக்காங்க. சொந்தமா ஸ்கிரிப்டை ரெடி பண்ணி, அட்டகாசமான பர்ஃபார்மில் கலக்குறாங்க. ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருக்கு.''


"திறமைகளை வெளிக்காட்ட இன்றைக்கு இருக்கும் வாய்ப்புகள் பற்றி என்ன நினைக்கிறீங்க?''
"ஆக்டிங், காமெடி, மியூசிக்னு தங்களின் திறமையை வெளிக்காட்ட, நிறைய சேனல்களின் மேடைகள் கிடைக்குது. சோஷியல் மீடியாவும் பெரிய சப்போர்ட்டிவா இருக்கு. இதையெல்லாம் இன்றைய தலைமுறை சரியாகப் பயன்படுத்தினால், பெரிய அளவில் வளரலாம். முன்னாடி நான் உள்பட பல ஆர்டிஸ்டுகள் இந்த மாதிரியான வாய்ப்புகள் இல்லாமல், நிறையவே போராடி வந்தவங்க."
" 'சண்டே கலாட்டா' நிகழ்ச்சியிலிருந்து விலகினது ஏன்?"
"ஒரு மாற்றத்துக்காக மட்டுமே. என் மீடியா பயணத்தின் ஆரம்பத்திலிருந்து சன் டிவி பக்கபலமா இருக்கு. அங்கே நிறைய சீரியல்கள், நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன். அதில், 'சண்டே கலாட்டா' பெரிய மைல்கல். ஒவ்வொரு வாரமும் வெரைட்டியான கான்செப்ட்டுல காமெடி பர்ஃபார்ம் பண்ணினோம். ஆறு வருஷமா 300 எபிசோடுகள் வரை நடிச்சுட்டேன். இந்த நீண்ட பயணத்தில் சின்ன பிரேக் எடுத்து, வெரைட்டியா வொர்க் பண்ணினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. பல வாய்ப்புகள் தேடி வந்துச்சு. அப்படித்தான், 'காமெடி கில்லாடிஸ்' நடுவர் ஆனேன். சன் டிவி மற்றும் 'சண்டே கலாட்டா' நிகழ்ச்சியை மிஸ் பண்ற ஃபீலிங் இருக்கு. நம்ம குடும்ப சேனல்தானே. எப்போ வேணாலும் மறுபடியும் அங்கே வொர்க் பண்ணுவேன்.''


"முன்னணி காமெடி நடிகையாக வலம்வரும் அனுபவம் பற்றி..."
"பெருமையா இருக்குது. மனோரமா, கோவை சரளா அம்மாக்கள் வரிசையில் மற்றவர்கள் என்னை ஒப்பிடறது சரியானு தெரியலை. காமெடி நடிகையா ஃபீல்டுல நிற்கிறது ரொம்பவே கஷ்டம். 'பார்த்திபன் கனவு' படத்திலிருந்து, 'காஞ்சனா 3' வரை நிறைய பண்ணிட்டேன். சவாலான பயணம் இது. காமெடி கேரக்டர்களின் தாக்கம் வீட்டிலும் உற்சாகமா இயங்கச் செய்யுது.''


" 'காஞ்சனா 3' பட ஷூட்டிங் எப்படிப் போகுது?"
"என் ஆக்டிங் கரியர்ல பெரிய பிரேக் கொடுத்த படம், 'காஞ்சனா'. அதன் அடுத்த பாகத்தில் நடிக்கலை. இப்போ, 'காஞ்சனா 3'யில் நடிக்கிறேன். முதல் பார்ட் மாஸ்னா, இது பல மடங்கு மாஸா இருக்கும். அந்த அளவுக்கு த்ரில், காமெடி எக்கசக்கமா இருக்கு. சரளா அம்மாவும் நானும் மீண்டும் மாமியார் மருமகளா நடிக்கிறோம். ஹீரோ லாரன்ஸ், ஹீரோயின் ஓவியா. ஷூட்டிங் விறுவிறுப்பா போயிட்டிருக்கு."
"நடிகை ஓவியா செட்ல எப்படி?"
"அவங்க கலகலப்பா இருக்கிறதோடு, எங்களையும் கலகலப்பாக்குவாங்க. அவங்க ஷூட்டிங் வந்த முதல் நாளில் சூழ்ந்துக்கிட்டு, 'பிக் பாஸ்' பற்றி நிறைய விசாரிச்சோம். கூலா பதில் சொன்னாங்க. எப்போதுமே புன்னகையோடு இருக்கும் ஜாலி பர்சன்."


" 'பாகமதி' படத்தில் நடித்த அனுபவம்..."
"படத்தின் நீளம் கருதி என்னுடைய போர்ஷன் சீன்ஸ் பல கட்டாகிடுச்சு. ஆனாலும், நிறைவான ஆக்டிங் அனுபவம் கிடைச்சது. அனுஷ்காவும் நானும் 'ரெண்டு' படத்தில் நடிச்சிருக்கோம். அப்போ பார்த்த மாதிரியே, இப்பவும் இருக்காங்க. அனுஷ்காவின் போர்ஷன் இல்லாத நேரத்திலும், நான் நடிக்கிறதை பக்கத்தில் இருந்து பார்த்து ரசிப்பாங்க. அவங்க, பார்க்கத்தான் போல்டான கேரக்டர் மாதிரி தெரியறாங்க. பழகினால் ரொம்பவே ஸ்வீட் பர்சன்."


"சீரியல்களில் கவனம் செலுத்தாமல் இருக்கீங்களே. ஏன்?"
" 'மர்மதேசம்' தொடங்கி தமிழ், தெலுங்கில் 60 சீரியல்களில் நடிச்சிருப்பேன். 'அத்திப்பூக்கள்' சீரியல்தான் கடைசி. 'காஞ்சனா' படத்துக்குப் பிறகு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்துட்டதால், சீரியல்களுக்கு நேரம் ஒதுக்க முடியலை. ஃபியூச்சர்ல, 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' மாதிரி நல்ல காமெடி சீரியல்கள் அல்லது வெப் சீரியல்களில் நடிக்க ரெடி.''"ஃபேமிலி சப்போர்ட் பற்றி..."
20 வருஷத்துக்கும் மேலாக சினிமா ஃபீல்டுல இருக்கேன்" என்றவர் உடனே இடைமறித்து, "அச்சச்சோ... வருஷத்தை சொல்லிட்டேனே. உடனே சீனியர் ஆர்டிஸ்ட்னு சொல்லிடாதீங்க" எனப் பலமாகச் சிரித்துவிட்டு, "இத்தனை வருஷ சினிமாப் பயணத்துக்கு என் ஃபேமிலி சப்போர்ட்தான் முக்கிய காரணம். கணவர் சேத்தனும் என் பொண்ணும் தொடர்ந்து உற்சாகப்படுத்தறாங்க. வெரி லக்கி நான்."
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
#72
[h=1]இந்த சீரியலுக்காக எவ்வளவு எடை குறைச்சேன் தெரியுமா?!"- 'வேலுநாச்சி' சித்ரா[/h]


க்கள் டிவி-யில் அறிமுகமாகி, 'சின்ன பாப்பா பெரிய பாப்பா', 'டார்லிங் டார்லிங்', 'சரவணன் மீனாட்சி' போன்ற தொடர்களில் நடித்துக் குறுகிய காலத்தில் உயரத்தைத் தொட்டிருக்கிறார், விஜே சித்ரா. 'ஜீ டான்ஸ் லீக்' நிகழ்ச்சியின் மூலம் நடனத்திலும் வெளுத்துக்கட்டினார். கொஞ்ச நாள் அனைத்து மீடியாவிலிருந்தும் ஒதுங்கியிருந்தவர் 'கலர்ஸ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'வேலுநாச்சி' சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவரிடம் 'வேலுநாச்சி' குறித்துப் பேசினோம்.

''எப்படி இருக்கிறது இத்தனை வருட சின்னத்திரை வாழ்க்கை?''
''நான் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் படிக்கும்போதே மாடலாக அறிமுகமானேன். படிப்பை முடித்ததும் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளரானேன். அங்கேதான் அவ்வளவு அழகாகத் தமிழ் பேசக் கற்றுக்கொடுத்தார்கள். இன்று என்னால் தமிழை சரளமாக, துல்லியமாகப் பேசுவதன் காரணம், மக்கள் தொலைக்காட்சியால் மட்டுமே. இப்போதெல்லாம் டி.வி நிகழ்ச்சிகளில் தூய தமிழில் பேசினாலே ஒரு மாதிரி பார்க்கிறார்கள். ஆனால், என்னுடைய தமிழ் உச்சரிப்பு தான் எனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.''


"வேலு நாச்சி அனுபவம்..?"
''மக்களுக்கு பிடிக்கிற மாதிரி கலகலன்னு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன். அதுக்கப்புறம், சன் டிவியின் 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' தொடரிலும், ஜீ தமிழ் 'டார்லிங் டார்லிங்' தொடரிலும் காமெடி ரோல் பண்ணேன். விஜய் டிவி 'சரவணன் மீனாட்சி' சீரியலில் கொஞ்சம் ரொமான்டிக்கான லவ்வர் ரோல். இப்படி என்னால முடிஞ்ச அளவுக்கு என்னுடைய திறமையை வெளிப்படுத்திட்டுதான் இருந்தேன். அப்பதான் கலர்ஸ் சேனலில் 'வேலுநாச்சி' வாய்ப்பு வந்தது. நான் வேலுநாச்சியாருடைய வீரத்தைப் பற்றி படிச்சிருக்கேன். இந்தத் தொடர் முழுக்க என்னை சுற்றித்தான் நடக்கும். வேலுநாச்சிங்கிற கதாபாத்திரம் வீரமான பொண்ணா இருக்கணும்னுதான் இந்த டைட்டிலே வெச்சிருக்காங்க. இப்படிப்பட்ட நல்ல கதைக்கு நான் பொருத்தமா இருப்பேன்னு என்னை நம்பி வந்ததுக்காகவே ஓகே சொல்லிட்டேன். இப்போ இளைஞர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு.. சித்ரா ஹாப்பி அண்ணாச்சி..!''

''இதுக்காக எப்படி உங்களைத் தயார் பண்ணிக்கிட்டீங்க..?''
''இந்த சீரியலுக்காக கடினமா ரிஸ்க் எடுத்தேன். முதல்ல என்னுடைய எடையை 8 கிலோ வரைக்கும் குறைச்சேன். அப்புறம் சிலம்பம், மரம் ஏறுவது, நாற்று நடுவது, களை அறுக்கிறதுன்னு எல்லாமே கத்துக்கிட்டேன். அரிசி சாப்பாட்டை தவிர்த்துட்டு காய்கறிகள், பழங்கள்னு சாப்பிட ஆரம்பிச்சிட்டேன். பயங்கர டயட் மெயின்டெயின் பண்ணிட்டு இருக்கேன்.''


''சிலம்பம் கத்துக்கிட்ட அனுபவம் எப்படியிருந்தது?''
''ஒரு மாசத்துக்கு மேல சிலம்பம் கத்துகிட்டு இருக்கேன். சிலம்பம் சுற்றும்போது மனசுக்குள்ள ஓர் அமைதியையும், உடம்புல ஒரு தெம்பையும் உணர முடியுது. சிலம்பம் சுற்றும்போது கல் வீசுவாங்க அதை லாகவமாக அடிக்கணும். அது ஒரு பயிற்சி. இப்போ அந்த பயிற்சியைத்தான் கற்றுக்கொள்ள ஆரம்பிச்சிருக்கேன். சிலம்பம் ஒரு கடல் மாதிரி. அதில் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கு.''

''சீரியலுக்காக நிஜமாகவே மரம் ஏறுனீங்களா..?''
''இந்த சீரியலில் வரப்போகிற காட்சிகள் அனைத்தும் உண்மையா இருக்கணும்னு சொல்லிட்டாங்க. அதனால ஒருமாசமா மரம் ஏற என்னைத் தயார்படுத்திக்கிட்டேன். முதல்ல மரம் ஏறும்போது கீழே வழுக்கிடுச்சு. கை முழுக்க சிராய்ச்சு ரத்தம் வந்தது. அதற்கப்புறம் தொடர்ந்து முயற்சி செய்து ஏறிட்டேன். அந்தத் தொடரிலேயே ஒரு காட்சியில் கை சிராய்ப்பைக் காட்டுற மாதிரி ஒரு சீன் வரும். அது உண்மையான காயம்''.


''இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறீங்களே... வீட்டுல என்ன சொல்றாங்க..?''

''ஷூட் முடிஞ்சதும் களைப்போட வீட்டுக்கு வருவேன். வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும் என் அம்மா ஏன் இப்படி ரிஸ்க் எடுக்குறன்னு கேட்டுட்டே இருப்பாங்க. இப்போ டிவியில் பார்த்துட்டு ரொம்ப அருமையா நடிச்சிருக்கேன்னு பாராட்டுறாங்க. இனிமே என்னை வெள்ளித்திரையிலேயும் நீங்க பார்க்கலாம்''
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
#73
[h=1]"அஜித் சார் உங்ககூட நடிக்கலைனாலும் பரவாயில்லை... ஒரு ரெக்வஸ்ட்!" - டிடி[/h]ன்னைக் கலாய்க்கும், வருந்தவைக்கும் கமென்ட்டுகளை அநாயாசமாக ஹேண்டில் செய்பவர், டிடி. நிகழ்ச்சித் தொகுப்பாளராக இயங்குவதில், தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி, கிட்டத்தட்ட 17 வருடங்களாக 'நம்பர் ஒன்' இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். நடிகையாகவும் சினிமா என்ட்ரி கொடுத்திருக்கும் டிடியை சந்தித்துப் பேசியபோது...
"இந்த வருடம் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடுனீங்க, சிவகார்த்திகேயனை மிஸ் பண்ணீங்களா?" "பிறந்தநாள் அன்னைக்கு காலையில இருந்து சாயங்காலம் வரை ஏகப்பட்ட பேர் வாழ்த்தினாங்க. அவங்க எல்லோருக்கும் ரிப்ளை பண்ணனும்னு முடிவெடுத்து, பதில் அனுப்பினேன். பிறந்தநாளுக்கு முந்தையநாள் சிவா எனக்குப் போன் பண்ணி, 'டிடி நாளைக்கு நமக்கு ஹேப்பி பார்த்டே'னு சொல்லி சிரிச்சார். நாங்க ரெண்டுபேரும் பல வருடம் ஒண்ணா பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கோம். ஒரேநாள், ஒரே வருடம். அவர் காலைல ஆறு மணி, நான் சாயங்காலம் ஆறு மணிக்குப் பிறந்தவங்க. ஆனா, இந்த வருடம் எங்க ரெண்டுபேருக்கும் செம்ம பிஸியா இருக்கு. எனக்குத் தெரிந்து சிவாவோட வெற்றியை, இந்த உலகத்துக்கே கிடைத்த வெற்றி மாதிரி எல்லோரும் கொண்டாடுறாங்க. அதுதான் அவருடைய பலம்."

"கெளதம் மேனன் படத்துல எப்படி இணைந்தீங்க?" "இந்த வருடம் எனக்கு இரட்டிப்பு சந்தோசம். ஒண்ணு 'உலவிரவு', இன்னொன்னு 'துருவநட்சத்திரம்'. 'உலவிரவு' பத்தி கெளதம் மேனன் சார் என்கிட்ட சொன்னப்பவே, 'நீங்க நல்லா யோசிச்சுத்தான் சொல்றீங்களா... கண்டிப்பா நான்தான் நடிக்கணுமா'னு கேட்டேன். அதுவும் ரொமான்டிக் பாட்டுனு சொன்னதும், ரொம்பப் பயந்துட்டேன். நாம அதுல நடிச்சு கெளதம் சாரோட படங்கள்ல வர்ற ரொமான்ஸ் சீன்களின் அழகியலைக் கெடுத்துடக்கூடாதுனு தோணுச்சு. எனக்கு ஐந்து பிடித்த படங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டா, அதுல மூணு படங்கள் கெளதம் சாரோட படங்களாகத்தான் இருக்கும். அப்படி இருக்கிற ஒருத்தர், எனக்கு நடிப்பு கத்துக்கொடுத்திருக்காங்கனு நினைக்கும்போது, ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு."
"தனுஷ் இயக்கத்துல முதன்முதலா நடித்த அனுபவம் மற்றும் அவரை இயக்குநரா பார்த்த தருணம் எப்படி இருந்துச்சு?" "தனுஷ் சாரை இயக்குநரா பார்க்கும்போது, அவருடை உழைப்பு என்னை அசந்துபோக வெச்சுச்சு. ஷூட்டிங் ஸ்பாட்ல மனுசன் பேய் மாதிரி உழைக்கிறார். ஓவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமா அலசி ஆராய்ந்து பார்ப்பார். நடிச்சு முடிந்ததும், 'நாம நடிச்சது சூப்பரா இருக்கு'னு நினைப்போம். ஆனா அவர், 'இந்த இடத்துல தவறு இருக்கு'னு நோட் பண்ணி ரீ-டேக் போவார். அப்படி ஒரு சூப்பர் பவர் தனுஷ் சாருக்கு இருக்கு. முதல்ல ஒரு வேலையில இறங்குறதுக்கு முன்னாடி, அந்த வேலையைப் பத்தி நமக்கு ஓரளவுக்காவது தெரிஞ்சிருக்கணும். சினிமா வாய்ப்புகள் வந்தப்போ, பலபேர்கிட்ட எனக்கு நடிப்பு தெரியாதுனு சொல்லி ஒதுங்கிட்டேன். ஆனா, தனுஷ் சார் மட்டும்தான், 'நீதான் இந்த ரோல்ல நடிக்கணும்'னு பிடிவாதமா இருந்தார். சாதாரண களிமண்ணா இருந்த என்னை அழகான பானையா மாத்துனது அவர்தான். அவர் மெனக்கெடுறதைப் பார்த்துட்டு, நானும் பொறுப்பா மாறிட்டேன். எப்படியாவது நல்ல அவுட்-புட் கொடுத்துடணும்ங்கிறதுல தெளிவா இருந்தேன். 'உலவிரவு' ஷூட்டிங்கு முன்னாடி, பாட்டுக்கான காஸ்டியூம்ஸ் ரெடி பண்ணிட்டு இருந்தப்போ, தனுஷ் சாரைப் பார்த்தேன். அவரோட ஆசிர்வாதத்தோடதான் ஷூட்டிங்குப் போனேன்."

"எப்போதாவது இந்தப் படத்துல நடிக்கிறதுக்கான வாய்ப்பை இழந்துட்டோமேனு வருத்தப்பட்டிருக்கீங்களா?" "ஒருதடவை அஜித் சாரோட படத்துல நடிக்கிறதுக்கான வாய்ப்பு வந்துச்சு. ஆனா, ஒருசில பெர்ஷனல் காரணங்களால என்னால நடிக்க முடியலை. இப்போவும் தல படத்துல நடிக்க முடியலையேங்கிற வருத்தம் நிச்சயமா இருக்கு. அவரை இதுவரை நான் நேர்லகூட பார்த்தது இல்லை. இனி அவர் படத்துல நடிக்க வாய்ப்பு கிடைக்கலைனாலும் பரவாயில்ல, அவரை ஒருதடவையாவது நேர்ல பார்த்துடணும்னு ரொம்ப ஆசை."
"கால்ல அடிபட்டு, அதுல இருந்து மீண்டு வந்த காலகட்டம் உங்களுக்கு எப்படியான உணர்வைக் கொடுத்துச்சு?" "3 வருடத்துக்கு முன்னாடி அடிபட்டதுக்கு, தப்பான சர்ஜரி பண்ணிட்டாங்க. இப்போ 4 மாசத்துக்கு முன்னாடி சரியா சர்ஜரி பண்ணினதுக்கு அப்புறம், ஐ ஆம் ஓகே. இப்போ என்னால நடக்க முடியுது, டான்ஸ் ஆட முடியுது. முன்னாடி வீல் சேர்ல இருந்தபோதுகூட, நான் கவலைப்பட்டது கிடையாது. அப்பவும் 'காஃபீ வித் டிடி', 'அச்சம் தவிர்' போன்ற நிகழ்ச்சிகளுக்குப் போயிட்டுதான் இருந்தேன். வேலைக்கு ஒருநாள்கூட லேட்டா போனது கிடையாது. நானா இந்த விஷயத்தை சொல்லலைனா, யாருக்குமே அடிபட்டது தெரிந்திருக்காது. என்னைச் சுத்தி பாசிட்டிவ் வெளிச்சம் எப்போதும் இருக்கணும்னு நினைப்பேன். வாழ்க்கையில இதெல்லாம் ஒரு பாடம். அவ்ளோதான்."

"பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில், டிடி இடத்தை நிரப்ப யாருமே இல்லைனு பேசுறாங்க. இதைக் கேட்கும்போது எப்படி இருக்கு?" "இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒருத்தவங்களுக்கு இன்னொருத்தவங்க மாற்றுப் பொருளா கட்டாயம் இருக்கமுடியாது. கண்டிப்பா என்னைவிட பெட்டரா ஹோஸ்ட் பண்ற நிறைய பேர் லைன்ல இருக்காங்க. பெப்சி உமா, உமா பத்மநாபன், ஜேம்ஸ் வசந்தன், என்னோட அக்கா... இவங்க எல்லாம் பண்ணதைவிடவா நான் நல்லா ஹோஸ்ட் பண்றேன்? நான் ஸ்கூல் படிக்கும்போதே நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஆரம்பிச்சதுனால, எல்லார் மனசுலேயும் நல்லாப் பதிஞ்சுட்டேன். இப்போ என்கூட நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குறவங்களே, என்னைவிட பெட்டரா பண்றாங்க. ஸோ, நம்ம கவனமா இருக்க வேண்டிய நேரம் வந்தாச்சு."
"உங்களுக்கான காஸ்டியூம் செலெக்ஷன் பத்திச் சொல்லுங்க?" "என்னோட காஸ்டியூம்ஸ் அழகா இருக்கிறதுக்குக் காரணம், என் அக்காதான். தவிர, நிறைய காஸ்டியூம் டிசைனர்கள் என்னுடைய நிகழ்ச்சிக்காக வேலை பார்க்குறாங்க. இப்போ புதுசா ஒரு காஸ்டியூம் டிசைனர் என்கிட்ட வந்து வாய்ப்பு கேட்டாலும், அவங்ககூட உட்கார்ந்து பேசுவேன். அவங்க ஐடியா எனக்குப் புடிச்சிருந்ததுனா, கட்டாயம் காஸ்டியூகளை பண்ணச்சொல்வேன். நான் ஒருபோதும் விலை அதிகமா இருக்கிற காஸ்டியூம்களை வாங்கியது கிடையாது. கடையில இருக்கிறவங்க என்னைப் பார்த்ததும், 10,000 ருபாய் புடவையை எடுத்துக் காட்டுவாங்க. அது எல்லாத்துக்கும் 'நோ' சொல்லிடுவேன். 4,000 ரூபாய்க்குமேல டிரெஸ் எடுக்குறது கிடையாது. ஏன்னா, என்னுடைய நிகழ்ச்சிகளைப் பார்த்து யாராவது அதேமாதிரியான காஸ்டியூம்ஸ் வேணும்னு கடையில போய்க் கேட்டா, வாங்குற அளவுக்கு விலை குறைவா இருக்கணும். இந்தமாதிரி மக்களோட மக்களா இருக்கிறதுதான் எனக்குப் பிடிக்கும்."

"கமலை ஒரு நிகழ்ச்சியில பார்த்த நீங்க, முத்தம் வேணும்னு கேட்டு வாங்கிக்கிட்டீங்க. அந்த அளவுக்கு உங்களுக்குப் பிடித்த கமலின் தற்போதைய செயல்பாடுகளைப் பத்தி என்ன நினைக்குறீங்க?"
நாம என்ன விரும்புறோம் என்பதைவிட அவருக்கு சினிமா வேணுமா, அரசியல் வேணுமா என்பதுதான் முக்கியம். அவருடைய அரசியல் பிரவேசம் சினிமாத் துறைக்கு ஒரு இழப்பாக இருந்தாலும், மக்களுக்கு நல்லது பண்ற வேலையிலதான் ஈடுபடப்போறார்னு நினைக்கும்போது சந்தோஷமாதான் இருக்கு."
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
#74
[h=1]"விஜய் அப்பவே அப்படித்தான். அவர் இன்னும் மாறலை!" - 'ராஜாவின் பார்வையிலே' இந்திரஜா[/h]


"நான் தமிழ்ப் பொண்ணு. என்னைக்குமே தமிழையும் தமிழர்களையும் மறக்கமாட்டேன். ரசிகர்களும் என்னை மறக்கக் கூடாதுனு நினைக்கிறேன்" என்கிறார் நடிகை இந்திரஜா. 'ராஜாவின் பார்வையிலே' மற்றும் 'எங்கள் அண்ணா' படங்களில் நடித்தவர். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர்."முதல் சினிமா வாய்ப்பு எப்படி கிடைச்சது?"
''குடும்பத்தில் யாரும் சினிமாவில் இல்லை. எதேர்ச்சையா வந்த வாய்ப்புதான். அப்படி 'உழைப்பாளி' படத்தில் நடிகை ஶ்ரீவித்யாவின் குழந்தைப் பருவ ரோலில் நடிச்சேன். ஒன்பதாவது படிக்கும்போது 'எமலீலா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினா அறிமுகமானேன். ஒரு வருஷத்திலயே 10 தெலுங்கு படங்களில் நடிச்சுட்டேன். அதில், பெரும்பாலும் ஹிட். அங்கே பீக்ல இருந்த சமயம், 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் ஹீரோயினா அறிமுகமானேன். ஆனால், அடுத்த ஏழு வருஷம் தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையலை. அதுக்காக வருத்தப்படவும் இல்லை. ஏன்னா, தெலுங்கில் மனசுக்கு நிறைவான படங்கள் அமைஞ்சது. நிறையப் புகழும் விருதுகளும் கிடைச்சது. கிட்டத்தட்ட 60 படங்களில் ஹீரோயினா நடிச்சிருக்கேன். இப்பவும் தெலுங்கு இண்டஸ்ட்ரியில் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்குது."


"விஜய்யுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்துச்சு?"
" 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் விஜய்க்கு ஜோடி. அவர் ரொம்ப அமைதியான டைப். ஆனால், நடிப்புன்னு வந்துட்டால், தூள் கிளப்பிடுவார். தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பார். பல வருஷங்கள் கழிச்சு, விமான நிலையத்தில் ஒரு முறை அவரைப் பார்த்தேன். சின்னச் சிரிப்பை வெளிப்படுத்திக்கிட்டோம். பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலை."'
"ஏழு வருஷத்துக்குப் பிறகு 'எங்கள் அண்ணா' படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்த அனுபவம் பற்றி..."
"2000-ம் வருஷத்துக்குப் பிறகு மலையாள சினிமாவில் என்ட்ரி ஆனேன். முதல் படத்திலேயே மம்முட்டி ஜோடி. தொடர்ந்து மோகன்லால், சுரேஷ் கோபி உள்ளிட்ட டாப் ஹீரோகளோடு நடிச்சேன். மலையாளத்தில் ஹிட்டான 'க்ரோனிக் பேச்சுலர்' படத்தில் ஹீரோ மம்முட்டிக்கு எதிரான ரோலில் நான் நடிச்சேன். அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்தான் 'எங்கள் அண்ணா'. அதிலும், நெகட்டிவான பவானி ரோலில் நானே நடிச்சேன். பல வருஷத்துக்குப் பிறகு தமிழில் நடிச்சதில் ரொம்ப சந்தோஷம். ஆனால், அதுக்கு அப்புறமும் தமிழில் வாய்ப்பு கிடைக்கலை."


"தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்கலையேனு கொஞ்சமும் ஆதங்கம் இல்லையா?"
"நான் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவளா இருந்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால், பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை. தமிழில் எழுதவும் படிக்கவும் தெரியும். இருந்தும் மற்ற மொழிகளில் கிடைச்ச அங்கீகாரம், தாய் மொழியான தமிழில் கிடைக்கலையேன்னு ஆதங்கம் இருக்கு. கன்னடத்திலும் அஞ்சு படங்களில் நடிச்சிருக்கேன். இப்பவும் தமிழ் சினிமாவில் நடிக்க தயார். போன வருஷம் நான் நடிச்ச தெலுங்கு படங்கள் சூப்பர் ஹிட். இப்போ, 'ஹேப்பி வெடிங்' என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறேன்.''

"சீரியல் ஆக்டிங் அனுபவம் எப்படி இருந்துச்சு?"

"சன் டிவி 'பாசம்', என் முதல் சீரியல். அந்த சீரியல் நல்லா போயிட்டிருந்த சமயத்தில் சில எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட்டு, சீரியலே ட்ராப் அவுட் ஆகிடுச்சு. தொடர்ந்து, 'ஆண் பாவம்', 'பைரவி', 'வள்ளி' உள்ளிட்ட சீரியல்களில் நடிச்சேன். சினிமாவுக்கு இணையான ரோல் கிடைச்சா சீரியலில் நடிப்பேன்."

உங்க குடும்ப வாழ்க்கைப் பற்றி..."

"கணவர் முகமது அப்சர், பிரபல சின்னத்திரை நடிகர். 'சொந்தம்' சீரியலில் நடிச்சபோது அவரின் ஆக்டிங் பிடிச்சுப் பாராட்டினேன். அப்போ ஆரம்பிச்ச நட்பு, காதலாகி 2006-ம் வருஷம் எங்களுக்குத் திருமணம் நடந்துச்சு. ரெண்டு பேருமே ஆக்டிங் ஃபீல்டில் இருக்கிறதால், ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்க முடியுது. எங்க பொண்ணு சாரா, நாலாவது படிக்கிறாள். நான் நடிச்சுகிட்டிருக்கும் சமயத்தில், கணவர் கால்ஷீட் எதுவும் கொடுக்காமல் குழந்தையைக் கவனிச்சுக்கும் பொறுப்பை ஏற்பார். அதேமாதிரி, அவர் நடிக்கும் சமயத்தில் நான் குழந்தையைப் பார்த்துப்பேன். எங்க குழந்தை எந்தக் காரணத்தாலும் தனிமையை உணரக்கூடாது என்பதில் நாங்க உறுதியா இருக்கோம்.''
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
#75
[h=1]`எனக்குக் கல்யாணம் முடிஞ்சிடுச்சு... ஸாரி யாரையும் இன்வைட் பண்ணலை!’’ - `சரவணன் மீனாட்சி' ப்ரியா[/h]


சத்தமில்லாமல் கல்யாணத்தை முடித்திருக்கிறார், `சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்த ப்ரியா. `ஜோடி' ப்ரியா என்றால், இன்னும் பரிச்சயம். ரியல் ஜோடி கிடைத்ததற்கு, வாழ்த்துச் சொல்லிப் பேசினோம்.
``எங்களுக்கு நடந்தது அரேஞ்சுடு மேரேஜ். வீட்டுல ஜாதகம் பார்த்து எல்லாப் பொருத்தமும் அமைஞ்சு, ரெண்டு தரப்புலயும் எல்லா விஷயங்களும் பிடிச்சுப் போய் நடந்தது. சுந்தர் பிறந்தது தமிழ்நாடு. வளர்ந்தது மும்பை. கொஞ்ச நாள் லண்டன்ல வேலை பார்த்துட்டு மறுபடியும் தமிழ்நாட்டுக்கே வந்துட்டார். சென்னையில பிரபல கார் கம்பெனியில் வேலை பார்க்கிறார்’’ என்கிறார் ப்ரியா.
'பெற்றோர் பார்த்து வைத்த திருமணம்னாலும், இருவரின் முதல் சந்திப்பு `செம' எதிர்பார்ப்பா இருந்திருக்குமே' என்றோம்.
``அதை ஏன் கேக்கறீங்க. ஒரே ரகளையாப் போச்சு. ரெண்டு பேரும் முதன்முறையா என்கேஜ்மென்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு ஹோட்டல்ல சந்திச்சோம். நான் கொஞ்சம் படபடன்னு பேசற டைப். ஆனா, வீட்டுல, அவரைப் பார்த்ததும், லொடலொடன்னு பேசாதேன்னு சொல்லி விட்டாங்க. `வெட்கப் படற பொண்ணுங்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கும்'னு எக்ஸ்ட்ராவா என்னென்னவோ போட்டு விட்டாங்க.

`வெட்கமா, அப்படீன்னா'னு கேக்கற எனக்கு ரொம்பவே கஷ்டமாப் போச்சு. அவரைச் சந்திச்ச அந்த நொடி, எவ்வளவோ ட்ரை பண்றேன்; வெட்கம் வந்தே தொலைய மாட்டேங்குது. அவரே என் நிலையைப் புரிஞ்சுகிட்டு, ஃ’பீல் ஃப்ரீ'ன்னு என்னை கம்ஃபர்ட் ஸோனுக்குக் கொண்டு வந்தார். பிறகு ரொம்ப நேரம் பேசிக் கலைஞ்சோம். அன்னைக்கு ராத்திரி எனக்குத் தூக்கமே வரலை. `நான் வெட்கப்பட்டு அவர் ரசிக்க முடியாமப் போச்சேனு கவலையா இருந்துச்சு. அடுத்த சில நாள்கள்ல அதாவது என்கேஜ்மென்டுக்குப் பிறகு `லவ்வர்ஸ் டே' வந்தது.

அந்த நாள் எனக்குப் பெரிசா எதுவும் தோணலை. ஆனா, விடிஞ்சும் விடியாததுமா அன்னைக்கு முதல் ஆளா மொபைல்ல கூப்பிட்டுட்டார். `என்ன காலையிலயே கூப்பிடுறீங்க'னு கேட்டதுக்கு, `நான் லவ் பண்ணத் தொடங்கிட்டேன். உங்க மனசுக்குள்ள இன்னும் நான் வரலையா'ங்கிறார். எனக்கே கொஞ்சம் கஷ்டமாப் போயிடுச்சு.

அதைச் சரி செய்ய அன்னைக்குச் சந்திச்சோம். அவர் எனக்கு பெர்ஃப்யூம், நான் அவருக்கு ஷர்ட்னு கிஃப்ட் ஷேர் பண்ணி, எங்களோட முதல் காதலர் தினத்தை செலிப்ரேட் பண்ணினோம்’’ என்றவரிடம், `திருமணத்தை ஏன் சிம்பிளாக நடத்தினீர்கள்' எனக் கேட்டால், `இந்த மாதிரியான விஷயங்களை ஃபெர்சனலா நினைக்கிறேன். அதனால எதுக்கு எல்லார்கிட்டயும் சொல்லணும்? ஜெனிஃபர் உள்ளிட்ட நெருக்கமான ஃப்ரெண்ட்ஸ் பத்துப் பேரை மட்டும் கூப்பிட்டிருந்தேன். ஆனா, சடங்குகள் எதுவும் மிஸ் ஆகாதபடி அந்த மூணு நாளும் கொண்டாட்டமாவே இருந்திச்சு’’ என்கிறார்.

மணமுடித்த வேகத்தில் தாய்லாந்திலுள்ள `க்ராபி' தீவுகளுக்குச் சென்று ஒரு வாரம் தேனிலவையும் கொண்டாடி வந்துவிட்டது இந்த ஜோடி.. ``தாய்லாந்து லொகேஷன் சுந்தரோட சாய்ஸ். காலையிலேயும் ஈவ்னிங்லேயும் அந்த பீச்சை மனசுக்குப் பிடிச்சவரோட சேர்ந்து ரசிச்ச எக்ஸ்பீரியன்ஸ் லைஃப்லாங் மறக்காது’’ என்கிறார்.


அடுத்த சில மாதங்களுக்கு டிவிக்கு பிரேக் விடலாமென நினைத்து, கணவரிடம் அனுமதி கேட்ட ப்ரியாவுக்குச் சுந்தரிடமிருந்து கிடைத்த பதில். `உன் விருப்பம். அதேநேரம், சீரியலோ, ரியாலிட்டி ஷோவோ உன்னோட லைவ் பெர்ஃபார்மன்ஸ் பார்க்க நான் ஆவலா இருக்கேன். ரொம்ப வெயிட் பண்ண வைக்காதே' என்பதுதானாம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
#76
ஸ்டாலின், பாத்திமாபாபு தொடர்பாக பல்லாண்டுகளாகப் புகைந்து கொண்டிருந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!


|
திமுக செயல்தலைவர் ஸ்டாலின், இளமையில் அப்போது தூர்தர்ஷனில் பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளராக விளங்கிய பாத்திமா பாபுவை கடத்திச் சென்று மிரட்டினார் என்பதாக ஒரு வதந்தி பல்லாண்டுகளாக தமிழர்களான நம்மிடையே புழங்கி வந்தது. அந்த வதந்திகளுக்கு இதுவரையிலும் பெரிதாக ரியாக்ட் செய்யாமல் இருந்தவரான பாத்திமா பாபு கடந்த சில தினங்களுக்கு முன்பு அவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

‘என் வாழ்வில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. ஸ்டாலின் என்னைக் கடத்தியதாகச் சொல்லப்படும் அந்தக் காலகட்டத்தில் இது குறித்து நான் அப்போதைய குமுதம் இதழின் பத்திரிகையாளரான பால்யூவிற்கு விளக்கம் கொடுத்திருந்தேன். ஆனால், ஏனோ நான் சொன்ன விளக்கம் எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்த சமயத்தில் ஒருமுறை நான் சித்திரப்பாவை எனும் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தேன்

. தூர்தர்ஷன் வழக்கப்படி சீரியல் முடியும் வரை எனக்கு செய்தி வாசிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அந்த இடைவெளியில் என்னைச் செய்தி வாசிப்பாளராகக் காண முடியாத காரணத்தால் இப்படி ஒரு வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். சித்திரப்பாவை தொடர் 13 வாரங்களில் முடிந்ததும் நான் மீண்டும் செய்தி வாசிப்பாளராகத் தொடர்ந்தேன்.

திருமணத்திற்கு முன்பே என் கணவரான பாபு தான் என்னை தூர்தர்ஷன் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வதும், வீட்டுக்கு திரும்ப அழைத்துச் செல்வதுமாக இருந்தார்.
அப்படியிருக்கையில் இப்படி ஒரு வதந்தி எப்படி பரவியது, பரப்பப்பட்டது என்று எனக்குப் புரியவில்லை. நான் அப்போதும், இப்போதும் என்னை இவ்விஷயமாக விசாரிக்கும் எனது நண்பர்களுக்கு மேலே சொன்ன காரணத்தைத் தான் விளக்கமாக அளித்து வருகிறேன். அதை நம்புவதும், நம்பாததும் அவரவர் பாடு. ஆனால், இதன் காரணமாக ஒரு கட்சியின் செயல்தலைவராகப் பட்டவரின் கேரக்டரைக் கொலை செய்வது தவறு. நான் விளக்கம் அளித்த பிறகும் சிலர் அதே வதந்தியை உண்மை போலக் கூறி அவரது நற்பெயருக்குக் களங்க விளைவிப்பார்களானால் அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.’
என்னைப் பற்றி நான் சொல்வது தான் உண்மை, அதைத் தான் நீங்கள் நம்ப வேண்டும். அதை விட்டு விட்டு வெளியில் பலரும் கதை கட்டுவதைப் போல மசாலா தடவிய கற்பனைப் பொய்யைத்தான் நம்புவீர்கள் என்றால், அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அது உங்கள் இஷ்டம்’ இதற்கு மேல் இதைப் பற்றி கேள்வி வந்தால் நாம் பதில் சொல்வதாக இல்லை.
- என்று விளக்கம் அளித்திருக்கிறார் பாத்திமா பாபு.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
#77
'யாரடி நீ மோகினி' சீரியலில் இருந்து வெளியேறினார் சஞ்சீவ்! என்ன காரணம்?

ஜீ தமிழ் சேனலின் பிரைம் டைம் சீரியல்களில் இன்றைய தேதியில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது, 'யாரடி நீ மோகினி'. சஞ்சீவ் ஹீரோவாக நடிக்க, வில்லிகளாக பாத்திமா பாபு, சைத்ரா ரெட்டி இருவரும் நடிக்கிறார்கள். இதில் சைத்ரா ரெட்டியின் பெர்ஃபாமன்ஸ் காரணமாகவே தொடர் நம்பர் ஒன் இடத்திலிருப்பதாக அவரது ரசிகர்கள் சிலாகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலை நாள் தவறாமல் பார்த்து வருகிறவர்களுக்கு இன்று (8/5/18) ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

அது... இதுநாள் வரை முத்தரசனாக நடித்துவந்த சஞ்சீவ் தொடரிலிருந்து வெளியேற, புது முத்தரசனாக என்ட்ரி கொடுக்கவிருக்கிறார், ஶ்ரீ. ஆம், இந்தத் தொடரின் ஹீரோ மாறுகிறார்.


250 எபிசோடுகளைக் கடந்து டாப் கியரில் போய்க்கொண்டிருக்கும் தொடரிலிருந்து ஹீரோ ஏன் வெளியேறுகிறார்? தொடரின் யூனிட் தரப்பில் விசாரித்தோம்.


"பொதுவாகவே சீரியல்கள்ல ஹீரோக்கள் சும்மா ஒப்புக்காகத்தான். ஒண்ணு ஹீரோயின் டாமினேட் பண்ணுவாங்க. அல்லது வில்லி டாமினேட் பண்ணுவாங்க. இந்தத் தொடருக்கு சஞ்சீவைக் கமிட் செய்தபோது, 'அந்த மாதிரி டம்மி ஹீரோவா என்னால பண்ண முடியாது; கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தா மட்டும் கூப்பிடுங்க'னு சொல்லியிருக்கார். 'இல்ல... இந்தத் தொடர்ல ஹீரோ, ஹீரோயின், வில்லி எல்லோருக்குமே சமமான முக்கியத்துவம் இருக்கு. ஏன்னா, இது வித்தியாசமான சீரியல்'னு சொல்லி நடிக்க சம்மதிக்க வெச்சிருக்காங்க. முதல் 100 எபிசோடுகள் பிரச்னை இல்லாம போச்சு. பிறகு கொஞ்சம் கொஞ்சமா பிரச்னை ஸ்டார்ட் ஆச்சு. முத்தரசன், ஹீரோயின் வெண்ணிலா ரெண்டு பேரோட கேரக்டர்களைவிட, வில்லி சைத்ரா கேரக்டருக்கு முக்கியத்துவம் தரப்பட்டதா சஞ்சீவ் நம்பத் தொடங்கினார். அதாவது, இவங்க ரெண்டுபேரும் இல்லாமகூட ஒரு எபிசோடு வரலாம், ஆனா சைத்ரா வராத எபிசோடே இருக்காதுங்கிற பேச்சு எழவே, அது சஞ்சீவை எரிச்சல் அடைய வைத்ததா சொல்றாங்க. இதைப்பத்தி புரொடியூசர், சேனல் தரப்புக்கும் சஞ்சீவ் சொன்னதா சொல்றாங்க. அவங்ககிட்ட இருந்து என்ன பதில் வந்ததுனு தெரியலை. இப்போ திடீர்னு சஞ்சீவ் வெளியேறிட்டார்" என்கிறார்கள்.


புதிய ஹீரோவாக வந்திருக்கும் ஶ்ரீயிடம் பேசினோம்.

''இதே சேனல்ல ஏற்கெனவே 'தலையணைப் பூக்கள்', 'தேவதையைக் கண்டேன்'னு ரெண்டு சீரியல்கள்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன். 'தலையணைப் பூக்கள்'ல என் கேரக்டர் எனக்கு ரொம்பவே பிடிச்சது. இப்போ திடீர்னு 'யாரடி நீ மோகினி'க்கு கூப்பிட்டிருக்காங்க. மூணு சீரியல்னு வர்றப்போ கால்ஷீட் பிரச்னை வரும்கிறதால, 'தலையணைப் பூக்கள்' தொடர்ல இருந்து விலகிட்டேன். முத்தரசன் கேரக்டர் சஞ்சீவ் நடிச்ச வரைக்கும் வேற மாதிரி இருந்திருக்கும். அந்த ஃபீல் மாறாம நேயர்கள் என்னை ஏத்துக்கணும். அதுக்கு என்னால முடிஞ்சதைப் பண்ண ரெடி ஆகிட்டேன்.


மத்தபடி, சஞ்சீவ் ஏன் வெளியேறினார்னு எனக்குத் தெரியாது. ஆனா, அவனும் நானும் முதல் வகுப்புல இருந்து ஒரே ஸ்கூல்ல ஒண்ணா படிச்சவங்க. அவங்க அம்மாவும் என்னோட அம்மாவுமேகூட ஸ்கூல் மேட்ஸ். அதேபோல ஒரே சீரியல்ல, ஆனா அவனோட சேர்ந்து நடிக்கற வாய்ப்பு அமையாம, அவனோட இடத்துக்கு நான் வர்ற மாதிரி அமைஞ்சிருக்கு. இதை எப்படி எடுத்துக்கிறதுன்னே எனக்குத் தெரியலை. ஆனா, இன்னைக்கும் ரெண்டுபேரும் நண்பர்கள். அதை இந்த நேரத்துல நான் பதிவு பண்ண விரும்புறேன்" என்கிறார், ஶ்ரீ.


சீரியலின் இயக்குநர் ப்ரியனோ, 'சில சினிமா வாய்ப்புகளால தொடர்ந்து சீரியலுக்குத் தேதி கொடுக்க முடியாத நிலையில இருக்கேன்'னு எங்ககிட்டச் சொன்னார். சஞ்சீவ் சீரியல்ல இருந்து வெளியேற வேறு ஏதும் காரணம் இருக்கான்னு எனக்குத் தெரியலை' என்கிறார்.

சஞ்சீவைத் தொடர்பு கொள்ள முயன்றோம். தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கிறது அவரது மொபைல்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
#78
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விடியோ: சின்னத்திரை நடிகை மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு


சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விடியோவில் கருத்துக் கூறிய சின்னத்திரை நடிகை மீது 4 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் போராட்டமானது செவ்வாயன்று நூறாவது நாளை எட்டியது. செவ்வாய் காலையில் இருந்தே தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்த போராட்டக்காரர்கள் பெருமளவில் குவிந்தனர்.

தடைகளை மீறி ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டதால், காவலதுறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் செவ்வாயன்று 11 பேரம், இன்று ஒருவரும் என மொத்தம் 12 பேர் மரணமடைந்தனர். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பிரபல தனியார் சேனலில் தொலைக்காட்சித் நெடுந்தொடரில் நடித்து வரும் நடிகை நிலானி வீடியோ ஒன்றை செவ்வாயன்று வெளியிட்டுள்ளார். இந்த விடியோவில் அவர் தான் தொலைக்காட்சித் தொடரில் நடித்து வரும் போலீஸ் வேடத்திலேயே பேசியுள்ளார்.

அதிலும் தூத்துக்குடி சம்பவத்தைப் பற்றிப் பேசும் போலீஸ் உடை அணிந்திருப்பது கூசுகிறது என்றெல்லாம் விடியோவில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து ரிஷி என்பவர் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீஸார் சின்னத்திரை நடிகை நிலானி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

419 (ஆள் மாறாட்டம் செய்து அல்லது வேறொரு நபராக நடித்து ஏமாற்றுவது), 153(வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது), 500 (அவதூறு உண்டாக்கும் வகையில் பேசுதல், பதிவிடுதல்), தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66d (ஆள்மாறாட்டம் மூலம் அல்லது வேறொரு நபராக நடித்து ஏமாற்றி அதை வலைதளங்களில் பரப்புவது) ஆகிய பிரிவுகளின் கீழ் நிலானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
#79
"இப்போ கேமராதான் என் அப்பா; எதனால் தெரியுமா?!" 'நாம் இருவர் நமக்கு இருவர்' அஷ்ரிதா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில், வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் அஷ்ரிதா. மூன்று வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். மாடலிங், மூவி, சீரியல் என பிஸியாகச் சுழன்றுகொண்டிருப்பவரோடு ஒரு சந்திப்பு. அதற்கு முன், அவரைப் பற்றிய குட்டி பயோ இதோ...


பெயர்: அஷ்ரிதா ஶ்ரீதாஸ்


அப்பா: ஶ்ரீதாஸ்


அம்மா: புஷ்பா (முன்னாடி நிறைய சீரியலில் நடிச்சிருக்காங்க.)


பிடிச்ச கதாபாத்திரம்: எல்லா கதாபாத்திரமும் என் ஃபேவரைட்


ஃபேமஸ் சீரியல்: `கனா காணும் காலங்கள்' (ஒரு கல்லூரியின் கதை)


எதிர்பார்ப்பு: மெயின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு


எதிர்காலத் திட்டம்: ஹீரோயின், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்


``எங்க பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும், நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை. அப்பா புரொடக்‌ஷன் மேனேஜரா இருந்தவர். தாஸ்னு சொன்னால் எல்லோருக்கும் தெரியும். நான் பத்தாவது படிச்சுட்டிருக்கும்போது இறந்துட்டார். அவர் மூலமா, மூன்று வயதிலேயே மீடியாவில் நுழைஞ்சுட்டேன். `அப்பா அம்மா' என்கிற அந்த சீரியல்தான் என் அறிமுகம். இத்தனை வருஷமா மீடியாவில் பயணிக்கிறது எளிதான விஷயமில்லை. எனக்கு சீரியல் வாய்ப்பு தொடர்ந்து அமையலை. அந்த நேரங்களில் மாடலிங் பண்ணிட்டிருந்தேன். இப்போ, மாடலிங், சீரியல், சினிமான்னு பிஸியா இருக்கேன். நிறைய படங்களில் சில கதாபாத்திரங்களில் நடிச்சேன். இப்போ, செகண்ட் லீட் ரோல் கேரக்டர்களுக்குப் பேசிட்டிருக்கேன். சீக்கிரமே சினிமாவில் என் திறமையைப் பார்க்கலாம்'' என்கிற அஷ்ரிதா, `நாம் இருவர் நமக்கு இருவர்' பக்கம் சொல்கிறார்.

pc: www.instagram.com/asritha_sreedas


``அந்த சீரியலின் இயக்குநர், சின்ன வயசிலிருந்தே என்னைப் பார்த்துட்டிருக்கார். என் திறமை அவருக்கு நல்லாத் தெரியும். நான் குழந்தை நட்சத்திரமா இருந்தப்போ, என்னைத் தூக்கிட்டு `பாப்பா' எனப் பாசம் பொழிந்த டைரக்டர்ஸ் பலரும் இப்பவும் என்னைக் குழந்தையா நடத்தறாங்க. என் அப்பா இப்போ இல்லைன்னாலும், அவர் எனக்கு வழிகாட்டிக் கொடுத்த மீடியா பயணத்தை என் இறுதி மூச்சு வரை தொடரணும். அதுதான் என் ஆசை. அப்பா இறந்ததுக்கு அப்புறம் கேமராதான் என் அப்பா. எப்பவும் சீன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி கண்ணை மூடி, அப்பாவை நினைச்சுப்பேன். முதல் சீரியலில் `நாகேஷ்' தாத்தாவோடு நடிச்சேன். அவர் எவ்வளவு பெரிய லெஜண்ட் என அந்தக் குழந்தை வயசில் தெரியாது. அவரோடு ஜாலியா விளையாடுவேன். ஷீட்டிங் ஸ்பாட்ல என்கிட்ட நிறைய விடுகதைகள் கேட்பார். அவர் நடிகர் மட்டுமல்ல; மிகப்பெரிய ஜீனியஸ். அத்தனை அழகா கணக்குப் போடுவார். சின்ன சின்ன விஷயங்களை தெளிவா புரியவைப்பார். அவருடன் நடிச்சது என் பாக்கியம்'' எனச் சிலிர்க்கிறார் அஷ்ரிதா.இவரின் அம்மாவும் சீரியலில் நடித்தவர். ``அப்பா இறந்ததுக்கு அப்புறம் அவங்க நடிக்க விரும்பலை. இன்னும் கொஞ்ச வருஷத்துல ரீ-என்ட்ரி கொடுப்பேன்னு சொல்லியிருக்காங்க. என் அண்ணனும் அம்மாவும்தான் எனக்கு ஃபுல் சப்போர்ட். என் காஸ்டியூம்ஸ், மேக்கப் விஷயங்களை அம்மா பார்த்துப்பாங்க. ஜீ தமிழ் டிவியில் நடிக்கும்போது, தீபக் அண்ணாவும், ஶ்ரீ அண்ணாவும் எனக்கு ரொம்ப குளோஸ். `இப்படி நடி, அப்படி நடி'னு நிறைய டிப்ஸ் கொடுப்பாங்க. சீனியர் ஆர்ட்டிஸ்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்னு பார்க்க மாட்டேன். என் வளர்ச்சியை விரும்பி, ஒரு செயலை மாற்றிக்க யார் சொன்னாலும் கேட்டுப்பேன். என் ஷாட் முடிஞ்சதும், ரூமுக்குள்ளே போய் உட்கார்ந்துடமாட்டேன். மத்தவங்க எப்படி நடிக்கிறாங்க, அவங்ககிட்ட எதை கத்துக்கலாம்னு கவனிப்பேன். இது, அப்பா எனக்குச் சொல்லிக்கொடுத்த பால பாடம். டப்பிங்கிலும் எனக்கு ஆர்வம் இருக்கு. சீக்கிரமே ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் என்னைப் பார்க்கலாம். என் அப்பாவுக்கு நான் ஹீரோயின் ஆகணும்னு ஆசை. அவர் ஆசையை நிறைவேற்றுவேன்'' என நிறைவுடன் புன்னகைக்கிறார் அஷ்ரிதா.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
#80
`என் நாலு பசங்க பச்சைமிளகாய் சாப்பிடுறதைப் பார்த்து கண் கலங்கிட்டேன்!" - பிரவீனா

1528164021866.png
``உமாவாக எல்லோரின் மனசிலும் இடம்பிடிச்சிருக்கேன். தமிழ் மக்கள், தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக எனக்கு உயர்ந்த இடத்தைக் கொடுத்திருக்காங்க. நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு" எனப் புன்னகையுடன் பேசுகிறார், நடிகை பிரவீனா. சன் டிவி 'பிரியமானவள்' சீரியலின் கதை நாயகி.
`` `பிரியமானவள்' ஆக்டிங் பயணம் எப்படிப் போயிட்டிருக்கு?"


``ரொம்ப சிறப்பா போயிட்டிருக்கு. 70 படங்களுக்கு மேலே நடிச்சுட்டேன். அதில், 50 படங்களுக்கும் மேலே ஹீரோயின். நாலு வருஷத்துக்கு முன்னாடி. ஃபேமிலிக்கு நேரம் ஒதுக்க, நடிப்புக்கு பிரேக் கொடுக்க நினைச்சேன். வந்த சினிமா வாய்ப்புகளை மறுத்தேன். அந்த நேரம்தான், இந்த சீரியல் வாய்ப்பு வந்துச்சு. உமா எல்லோரும் கொண்டாடும் ஒரு கேரக்டர். எனக்கும் அந்த கேரக்டர் ரொம்ப பிடிச்சுப்போனதால் நடிக்க சம்மதிச்சேன். ஆரம்பத்தில், தமிழ் சரியா தெரியாமல் சிரமம் இருந்துச்சு. இப்போ, நல்லா தமிழ்ப் பேசுறேன். சீரியலும் 1000 எபிசோடுகளைக் கடந்து வெற்றிகரமா ஒளிப்பரப்பாகிட்டிருக்கு."


``எல்லோருக்கும் பிடிக்கும் உமாவை, உங்களுக்கு எவ்வளவுப் பிடிக்கும்?"


(சிறிது நேர யோசனைக்குப் பிறகு பதில் வருகிறது) ``எனக்கும் ரொம்பப் பிடிக்கும். சீரியல் தொடக்கத்தில், உமாவின் மனசுல நிறைய சந்தோஷம் இருக்கும். குடும்பத்தையும் மகிழ்ச்சியுடன் பார்த்துப்பேன். கதை நகர நகர, குடும்பத்தில் எல்லோருக்கும் பிரச்னை. அதனால், குடும்பத்தில் சந்தோஷம் குறைஞ்சுடும். வசதியான நிலையிலிருந்து, ஏழ்மைக்கு வந்திடுவோம். அயர்ன் கடை ஆரம்பிச்சு, மறுபடியும் வளர்ந்து வர்றோம். இப்படி வாழ்க்கையின் ஏற்ற இறங்கங்களை ஒருசேரப் பார்த்து, எப்போதும் நேர்மையான வழியிலேயே எதிர்கொண்டு வரும் உமாவை யாருக்குத்தான் பிடிக்காது. என் நிஜ கேரக்டருடன் உமா கேரக்டர் 60 சதவிகிதம் பொருந்தும்."

``சீரியலில் வரும் உங்க நான்கு பசங்கள் பற்றி..."


``கதையில் என் மேல் உயிரையே வெச்சிருப்பாங்க. சீரியலில்தான் நான் அம்மா. நிஜத்தில், அக்கா மாதிரி. 'சேச்சி; அக்கா'னு அன்போடு கூப்பிடுவாங்க. அவங்களைப் பாராட்டும் அதேவேளையில், ஏதாச்சும் தப்பு பண்ணினாலும் உரிமையோடு கண்டிப்பேன். சமீபத்தில், `பிரியமானவள் குடும்ப விழா' நடந்துச்சு. அதில், பசங்க நால்வரும் பச்சைமிளகாய் சாப்பிடும் ஒரு கேம் ரவுண்ட் இருந்துச்சு. அதைப் பார்த்து எனக்கு ரொம்ப கஷ்டமாகி கண் கலங்கிட்டேன். அப்போ, 'அம்மாவுக்கும் பச்சைமிளகாய் கொடுக்கலாமா?'னு ஆங்கர் விளையாட்டா கேட்டார். உடனே, 'அம்மாவை கஷ்டப்படுத்த வேண்டாம். நாங்களே சாப்பிடுறோம்'னு சொன்னாங்க. அந்த அன்பில் ரொம்பவே நெகிழ்ந்துட்டேன்."

``சீரியல் டீமில் யார் அதிகம் குறும்பு பண்ணுவாங்க?"


(சிரிப்பவர்) ``அப்பாதான் (சீரியலில் இவருக்குக் கணவராக நடிக்கும் சுபலேகா சுதாகரை அப்படித்தான் அழைக்கிறார்). சீரியஸான சீனில், எல்லோரும் ஃபீல் பண்ணி நடிச்சுட்டிருப்போம். உடனே, 'நான் ஒரு காமெடி சொல்லிடறேன். சிரிச்சுட்டு அப்புறம் ஆக்டிங்கை கன்டினியூ பண்ணுங்க'னு காமெடி சொல்வார். எல்லோரும் சிரிப்போம். மறுபடியும் ஃபீல் பண்ணி நடிக்க நேரமாகும். ஷாட் இல்லாத நேரத்தில், குழந்தை மாதிரி சத்தம் போட்டு எதையாவதுப் பேசிட்டிருப்பார்; காமெடி சொல்வார். எனக்குச் சத்தம் போட்டுப் பேசினால் பிடிக்காது. ஆனால், என் காதுகிட்ட வந்து சத்தம் போடுவார். இப்படி நிறைய குறும்புகள் செய்வார். சீரியலில் அவர் என் கணவர். நிஜத்தில் நான் பெரிசா மதிக்கும் என் அண்ணன்; நண்பர், அப்பா."

``உங்க டீமில் அடிக்கடி கொண்டாட்டங்கள் நடக்கும்னு கேள்விப்பட்டோம். அது என்ன?"


``எங்க டீமில் ஆர்டிஸ்ட் டு டெக்னீஷியன்ஸ் வரை எல்லோரின் பிறந்தநாளையும் கொண்டாடுவோம். என் பிறந்தநாளைக் கொண்டாடின தருணங்கள், ஸ்வீட் மெமரீஸ். என் பிறந்த நாளான கடந்த ஏப்ரல் 11-ம் தேதி, டைரக்டர் சர்ப்ரைஸா எனக்கு பொக்கே கொடுத்தார். அப்பா கேக் ஆர்டர் பண்ணி, கட் பண்ண வெச்சார். அவர்தான், எல்லோரின் பிறந்தநாளையும் நோட் பண்ணி வெச்சிருப்பார். எல்லோருக்கும் தன் செலவில் கேக் ஸ்பான்ஸர் பண்ணுவார்."


``இனி தொடர்ந்து நடிப்பீங்களா?"

தமிழ்த் தவிர, மலையாளத்தில் ஒரு சீரியலில் ஹீரோயினா நடிக்கிறேன். செலக்டிவா சில படங்களில் நடிக்கிறேன். பிசினஸூம் பண்றேன். இதையெல்லாம்விட, ஃபேமிலிக்கு அதிக நேரம் செலவிடறேன். 'சாமி 2' படத்தின் தொடக்க காட்சிகளில் நடிச்சிருக்கேன். நல்ல கேரக்டர் மற்றும் டீம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். மாதத்தில் 10 நாள் சென்னையில் இருக்கேன். இங்கே சீரியல் டீமை தவிர, ஃப்ரெண்ட்ஸ் யாருமில்லை. ஷூட்டிங் முடிஞ்சதும் உடனே கேரளாவுக்குக் கிளம்பிடுவேன்."
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.