International cricket updates

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
டியர் ஃபெலிக்ஸ்’ - நியூஸி. சிறுவனின் வேண்டுகோளை நிறைவேற்றிய யூனிஸ் கான்!

நியூசிலாந்தைச் சேர்ந்த சிறுவன், பேட்டிங் டிப்ஸ் கேட்டு எழுதிய கடிதத்துக்கு வீடியோ மூலம் பதிலளித்துள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான்.







பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் எவர் க்ரீன் பேட்ஸ்மேன்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் யூனிஸ் கான். பாகிஸ்தான் அணிக்காக 17 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள யூனிஸ் கான், கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 10,099 ரன்கள் சேர்த்துள்ளார். அதேபோல், 265 ஒருநாள் போட்டிகளின் மூலம் 7,249 ரன்கள் சேர்த்துள்ளார்.





இந்தநிலையில், யூனிஸ் கான் ட்விட்டரில் நியூஸிலாந்தைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன் ஃபெலிக்ஸ் எழுதிய கடிதம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அந்தக் கடிதம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது என்று தெரிவித்துள்ள யூனிஸ் கான், அந்தக் கடிதம் குறித்த தகவல் தற்போதுதான் தனக்குக் கிடைத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், `` என்னுடைய பெயர் ஃபெலிக்ஸ். எனக்கு 10 வயதாகிறது. நான் நியூஸிலாந்தில் வசித்து வருகிறேன். என்னுடைய ஹீரோக்களில் நீங்கள் முக்கியமானவர் என்பதால், இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். உங்கள் பேட்டிங் டெக்னிக் பார்ப்பதற்கு மிகவும் அற்புதமானது. உங்கள் கவர் ட்ரைவ் எப்பொழுதும் முழுமையானதாகவே இருக்கிறது. இலங்கை அணிக்கெதிராக 318 ரன்கள் குவித்த உங்கள் இன்னிங்ஸ் மிகவும் சிறப்பானது. ஒரு கிரிக்கெட்டராக மாறி, மூன்றாவது வீரராகக் களமிறங்க வேண்டும் என்பதற்கான உந்துதலை அந்த இன்னிங்ஸ் எனக்கு அளித்தது.

மேலும், இங்கிலாந்து அணிக்கெதிராக இந்த ஆண்டு நீங்கள் குவித்த 218 ரன்கள், உங்களின் சிறப்பான இன்னிங்ஸ். அதேபோல், நீங்கள் மிகச்சிறந்த ஸ்லிப் ஃபீல்டர் மற்றும் நம்பகமான பேட்ஸ்மேன். உங்கள் கவர் ட்ரைவ், கட் ஷாட் குறித்து எனக்கு டிப்ஸ் கொடுக்க முடியுமா?. உங்கள் அடுத்தடுத்த போட்டிகளுக்கு எனது வாழ்த்துகள் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் ஃபெலிக்ஸ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வீடியோ மூலம் கவர் ட்ரைவ் குறித்து யூனிஸ் கான் டிப்ஸ் கொடுத்துள்ளார். மேலும், தேசிய அணிக்காக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஃபெலிக்ஸூக்கு வாழ்த்துகளையும் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.

As promised, here is the coaching tip manual on the cover drive and cut shot for the 12 year old Felix from New Zealand who wrote a letter to me. I hope you enjoy this, practice it & improve your game. All the best Felix. Hope to see you playing for your country one day
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
பந்து வீச்சில் சந்தேசம்- ஐசிசி மீது பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் சாடல்

பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ். 37 வயதான இவர் பாகிஸ்தான் அணிக்காக 50 டெஸ்ட், 200 ஒருநாள் மற்றும் 81 டி20 போட்டியில் விளையாடியுள்ளார்.

வலது கை ஆஃப்பிரேக் பந்து வீச்சாளரான இவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக மூன்று முறை குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக ஐசிசி அங்கீகாரம் பெற்ற சென்டரில் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தினார். அதன்பிறகு பந்து வீச அனுமதிக்கப்பட்டார்.

கடந்த வாரம் பரிசோதனைக்கு உட்படுத்தி நற்சான்றிதழ் பெற்றுள்ளார். ஐசிசியின் இதற்கான சரியான வழிமுறையை கொண்டு வர வேண்டும். பந்து வீச்சு ஆக்சன் பிரச்சனையில் நிலைத்தன்மையின் குறைபாடு உள்ளது என்று கூறியுள்ளார்.



இதுகுறித்து முகமது ஹபீஸ் கூறுகையில் ‘‘சந்தேகத்திற்குரிய பந்து வீச்சு என்பதை முடிவு செய்வதில் ஏராளமான தூண்டுதல் உள்ளது. மிகவும் வலுவான கிரிக்கெட் போர்டு உடன் ஏராளமான விஷயங்கள் செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட கிரிக்கெட் வாரியத்தில் உள்ள வீரர்கரளை சந்தேகத்திற்குள்ளாக்க எவரும் விரும்புவதில்லை. அவர்களுடன் எளிதாக போக்கையை கையாள்கின்றனர்.

சர்வதேச அளவில் விளையாடும் ஒவ்வொரும் வீரர்களையும் இந்த சோதனைக்குள்ளாக்க வேண்டும் என்ற விதிமுறையை ஏன் அமல்படுத்தவில்லை என்பதுதான் என் கேள்வி. இதில் என் கஷ்டம் இருக்கிறது’’ என்றார்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
அயர்லாந்து டெஸ்ட்- முதல் இன்னி்ங்சில் பாகிஸ்தான் 310 ரன்கள் சேர்த்து டிக்ளேர்

அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் டெஸ்ட் தொடங்கியது. மழைக் காரணமாக முதல்நாள் ஆட்டம் முழுவதும் தடைபட்டது.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அசார் அலி, இமாம்-உல்-ஹக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அசார் அலி 4 ரன்னிலும், இமாம்-உல்-ஹக் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த ஹரிஸ் சோஹைல் 31 ரன்னும், ஆசாத் ஷபிக் 62 ரன்னும் எடுக்க 2-வது நாள் ஆட்டம் முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது. சதாப் கான் 52 ரன்னுடனும், ஃபஹீம் அஷ்ரப் 61 ரன்னுடனும் களத்தில் நின்றிருந்தனர்.


சதாப் கான்

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய சதாப் கான் 55 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் 83 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் அவுட்டானதும் பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்துக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜாய்ஸ் 4 ரன்னிலும், போட்டர்பீல்டு 2 ரன்னிலும், பால்பிரைனி டக்அவுட்டிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை அயர்லாந்து 6.1 ஓவரில் 5 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்துள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான வங்காள தேச அணி அறிவிப்பு

1526820743146.png

வங்காள தேச டி20 கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி இந்தியாவில் உள்ள டேராடூனில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கு வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சாகிப் அல் ஹசன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு வருடத்திற்குப்பின் பேட்ஸ்மேன் மொசாடெக் ஹொசைன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இம்ருல் கெய்ஸ், தஸ்கின் அஹமது, விக்கெட் கீப்பர் நுருல் ஹசன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.



ஜூன் 3, 4 மற்றும் 7-ந்தேதி நடக்கும் இந்த தொடருக்கான வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. சாகிப் அல் ஹசன், 2. மெஹ்முதுல்லா, 3. தமிம் இக்பால், 4. சவுமியா சர்கார், 5. லித்தோன் தாஸ், 6. முஷ்பிகுர் ரஹிம், 7. சபிர் ரஹ்மான், 8. மொசாடெக் ஹொசைன், 9. அரிபுல் ஹக்யூ. 10. மெஹிது ஹசன் மிராஸ், 11. நஸ்முல் இஸ்லாம், 12. முஸ்டாபிஜூர் ரஹ்மான், அபு ஹைடர், 13. ருபெல் ஹொசைன், 4. அபு ஜாயத்.










VIDEO : இந்தியாவில் பாஜக
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டி வில்லியர்ஸ் திடீர் ஓய்வு!






சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.

34 வயது டி வில்லியர்ஸ் தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்துள்ளார். தன்னுடைய ஓய்வு குறித்து டி வில்லியர்ஸ் கூறியதாவது:

நான் சோர்வாக உள்ளேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறேன். 114 டெஸ்ட், 228 ஒருநாள், 78 டி20 ஆட்டங்களில் பங்கேற்ற பிறகு மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க இதுவே சரியான தருணம். உண்மையில் சொல்லவேண்டுமென்றால், நான் மிகவும் சோர்ந்துவிட்டேன். இது மிகவும் கடினமான முடிவாகும். நன்கு விளையாடும்போதே ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்று எண்ணினேன். இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராகக் கிடைத்த வெற்றிகளுக்குப் பிறகு, ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என எண்ணுகிறேன்

. டைடன்ஸ் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன். டு பிளெஸ்ஸிஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்று கூறியுள்ளார்.

114 டெஸ்டுகளில் விளையாடியுள்ள டி வில்லியர்ஸ், 8765 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 22 சதங்களும் 46 அரை சதங்களும் அடங்கும். 228 ஒருநாள் ஆட்டங்களில் 9577 ரன்களும் 78 டி20 ஆட்டங்களில் 1672 ரன்களும் எடுத்துள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
உலகக் கோப்பைக்கான திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியுள்ளது- தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆன தென்ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி அளித்தது. அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் ஏபி டி வில்லியர்ஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தென்ஆப்பிரிக்கா நினைத்தது. இந்நிலையில் அவரது முடிவு அந்த அணிக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளரான ஒட்டிஸ் கிப்சன் கூறுகையில் ‘‘ஓய்வு முடிவை அறிவிக்கும் முன்பு ஏபி டி வில்லியர்ஸ் என்னிடம் பேசினார். அவரிடம் நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். அவருடன் நெருங்கிய நபருடன் மட்டுமே முடிவு குறித்து பேசியுள்ளார்.



அவர் உலகின் தலைசிறந்த வீரர். உலகக் கோப்பையில் அவரால் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியும். இது அவருக்குத் தெரியும். ஆனால் இந்த நேரத்தில் அவர் விளையாட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் நாங்கள் உலகக்கோப்பைக்கான திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். ஆனால் இதற்கான காலஅவகாசம் எங்களுக்கு உள்ளது. ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வு நாட்டிற்கும், உலக கிரிக்கெட்டிற்கும் பெரிய ஏமாற்றம்’’ என்றார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
இங்கிலாந்து - பாகிஸ்தான் மோதல்- 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லாட்சில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் பாகிஸ்தான் உள்ளது.

அந்த அணியின் வேகப்பந்து பலமாக இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. இந்த டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் தான் தொடரை சமன் செய்ய முடியும்.

தோல்வி அடைந்தால் சொந்த மண்ணில் தொடரை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும். இதனால் இங்கிலாந்து வெற்றி நெருக்கடியில் உள்ளது
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
லீட்ஸ் டெஸ்ட்- இங்கிலாந்து வேகத்தில் 174 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான்

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் அசார் அலி, இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரிலேயே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இமாம் உல் ஹக் ரன்ஏதும் எடுக்காமல் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மந்தமாக விளையாடினார்கள். 10-வது ஓவரின் முதல் பந்தில் இந்த ஜோடி பிரிந்தது. அசார் அலி 29 பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு சோஹைல் உடன் ஆசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். சோஹைல் 28 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆசாத் ஷபிக் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர்.



5-வது விக்கெட்டுக்கு உஸ்மான் சலாகுதின் உடன் கேப்டன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். பாகிஸ்தான் அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 26 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் சேர்த்திருந்தது. 68 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்த பாகிஸ்தான் மதிய உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டத்தைத் தொடங்கியது.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை தாக்கப்பிடிக்க முடியாமல் உஸ்மான் 4 ரன்னிலும், சர்பிராஸ் அஹமது 14 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 79 ரன்னுக்குள் 7-விக்கெட்டை இழந்தது. அதன்பின் வந்த வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர் (13), ஹசன் அலி (24) ரன்கள் அடிக்க பாகிஸ்தானின் ஸ்கோர் 100 ரன்னைத் தாண்டியது.



சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் 52 பந்தில் 56 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க 48.1 ஓவரிலேயே பாகிஸ்தான் 174 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
அப்ரிடி இதுபோல செய்வது இது 6-வது முறை

1528016364585.png
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஷாகித் அப்ரிடி. சிக்ஸர் அடிப்பதில் வல்லவரான இவர் பலமுறை பந்தை மைதானத்திற்கு வெளியே அனுப்பியுள்ளார். அவர் இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,716 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 5 சதங்கள், 8 அரைசதங்கள் அடங்கும். 398 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அப்ரிடி 6 சதம், 39 அரைசதம் உட்பட 8064 ரன்கள் குவித்துள்ளார். 99 டி20 போட்டிகளில் விளையாடி 4 அரைசதம் உட்பட 1916 ரன்கள் சேர்த்துள்ளார்.

தற்போது 38 வயதாகும் அப்ரிடி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2006-ம் ஆண்டு அறிவித்தார். ஆனால், அறிவித்த 2 வாரங்களில் தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். 2010-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அப்ரிடி அறிவித்தார்.

அதன்பின், கடந்த 2011-ம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அப்ரிடி அறிவித்தார். ஆனால், அறிவித்து 5 மாதங்களில் மீண்டும் சர்வதேச போட்டிகளிலும், உள்நாட்டுப் போட்டிகளிலும் விளையாடத் திரும்பி வந்தார்.



அதன்பின் 2015-ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அப்ரிடி அறிவித்தார். கடந்த 2017-ம் ஆண்டு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், 15 மாதங்களுக்குப் பின் மீண்டும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடினார்.

இந்நிலையில், கடந்த 31-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலக லெவன் - வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின் சர்வதேச போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக இறுதியாக அப்ரிடி அறிவித்துள்ளார். இந்த முறை கண்டிப்பாக மீண்டும் கிரிக்கெட் விளையாட திரும்பவர மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
லீட்ஸ் டெஸ்ட் - பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து

1528051932699.png

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 174 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி களமிறங்கியது. குக் 46 ரன்கள், ரூட் 45 ரன்கள், டோமினிக் பெஸ் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோஸ் பட்லர் 80 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

பாகிஸ்தான் அணி சார்பில் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமிர், மொகமது அப்பாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.



இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியினரின் சிறப்பான பந்து வீச்சினால் அந்த அணி விரைவில் தனது விக்கெட்டுகளை இழந்தது.

பாகிஸ்தான் அணியில் இமாம் அல் ஹக் 34 ரன்களும், உஸ்மான் சலாவுதின் 33 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றைப்படை இலக்கத்தில் அவுட்டாகினர்.

இறுதியில், பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 46 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட், டொமினிக் பெஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஜோஸ் பட்லருக்கும், தொடர் நாயகன் விருது மொகமது அப்பாசுக்கும் வழங்கப்பட்டது. இந்த டெஸ்டில் வென்றது மூலம் டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.