International Football News

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,265
Likes
3,173
Location
India
உலகக்கோப்பை கால்பந்து- மெக்சிகோவில் வீரர்கள் மாஸ்க் தயாரிக்கும் பணி மும்முரம்

1525444186144.png

2018 உலகக்கோப்பை ரஷியாவில் அடுத்த மாதம் தொடங்குகிறது. இத்தொடர் ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் உள்பட 32 அணிகள் அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

தென்அமெரிக்காவில் கால்பந்து போட்டி பிரபலம். அர்ஜென்டினா, பிரேசில், சிலி, மெக்சிகோ நாட்டில் கால்பந்துதான் முக்கியமான விளையாட்டு. மெக்சிகோவில் இருந்து ரஷியாவிற்கு ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண நேரில் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான வீரர்களின் மாஸ்க்-ஐ அணிந்து கொண்டு போட்டியை ரசிப்பது வழக்கம். இதை பயன்படுத்தி ரசிகர்களுக்கு விற்பனை செய்ய மெக்சிகோ தொழிற்சாலை மெஸ்சி, நெய்மர் போன்றவர்களின் மாஸ்க்-ஐ தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.



இவர்களுடன் கால்பந்து ஜாம்பவான் பீலே, மாரடோனா, ஷிடேன், சுவாரஸ், இப்ராஹிமோவிச், பிராங்க் ரிபெரி, ஹெர்ணான்டஸ் லோசானோ, ஜார்ஜ் காம்போஸ் போன்றோரும் மாஸ்க்கையும் தயாரித்து வருகிறது.

ஒவ்வொரு மாஸ்க்கையும் தலா 13 டாலருக்கு விற்று வருகிறது. மெஸ்சி, ரொனால்டோ ஆகியோரின் மாஸ்க் இதுவரை 1000-க்கும் மேல் தயாரித்துள்ளது. இது உடனடியாக விற்றுத் தீர்ந்ததாக அந்த தொழிற்சாலை கூறியுள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,265
Likes
3,173
Location
India
பாரிஸ் திரும்பினார் நெய்மர்- உலகக்கோப்பையில் விளையாடுவார் என ரசிகர்கள் நம்பிக்கை

1525444590914.png

பிரேசில் அணியின் கேப்டனும் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரும் ஆன நெய்மர் பாரிஸ் கால்பந்து லீக்-1ல் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வந்தார். அப்போது பிப்ரவரி மாதம் 25-ந்தேதி நடைபெற்ற போட்டியின்போது, அவரது கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது. இதற்காக மார்ச் 3-ந்தேதி அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அறுவை சிகிச்சைக்குப்பின் ஓய்வு எடுத்து வந்த நெய்மர், மீண்டும் உடற்தகுதி பெறுவதற்கான பயிற்சிகளை செய்து வந்தார். உலகக்கோப்பை குறுகிய நாளே இருந்ததால், நெய்மர் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்தது.

இதற்கிடையே அவருடைய டாக்டர், நெய்மர் சிறப்பான வழியில் குணமடைந்து வருகிறார் என்று தெரிவித்தார். இந்நிலையில் நெய்மர் பிரேசிலில் இருந்து பாரிஸிற்கு வந்ததாக கூறப்படுகிறது. உலகக்கோப்பைக்கு இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில் நெய்மர் காயம் குணமடைந்து பாரிஸிற்கு சென்றதால், உலகக்கோப்பையில் விளையாடுவார் என்று பிரேசில் ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
ஆசியக் கோப்பை கால்பந்து

|



ஐக்கிய அரபு நாடுகளில் வரும் 2019-ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஏஎப்சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் யுஏஇ, தாய்லாந்து, பஹ்ரைன் அணிகள் அடங்கிய பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

ஆசியக் கோப்பை அணிகளுக்கான அதிகாரபூர்வ குலுக்கல் துபாயில் வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. இதில் இந்தியா சார்பில் கேப்டன் சுனில் சேத்ரி, பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டைன் ஆகியோரும் பங்கேற்றனர். ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த 24 தலைசிறந்த அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குலுக்கல் நடந்தது.

இதில் இந்தியா, யுஏஇ, தாய்லாந்து, பஹ்ரைன் நாடுகள் ஒரு பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மற்ற அணிகளை சந்தித்து ஆடும். குழுவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். துபாய், அபுதாபி, ஷார்ஜா, அல் அனின் உள்ளிட்ட 4 நகரங்களில் 2019 ஜனவரி 5-ஆம் தேதி முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.

இதுகுறித்து கேப்டன் சேத்ரி கூறியதாவது: ஏஎப்சி கோப்பை போட்டியில் பங்கேற்பது இந்திய அணிக்கு சிறந்த அனுபவத்தை தரும். ஆசியாவின் சிறந்த வீரர்கள், பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடுபவர்களோடு நாமும் விளையாடலாம். 8 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஆசியக் கோப்பை போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது சிறப்பானது என்றார் சேத்ரி.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அட்டவணை வெளியீடு- ஏ பிரிவில் இந்தியா

1525551745826.png

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இதற்கான தகுதிச் சுற்றின் முடிவில் 24 அணிகள் போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்தியாவுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தாய்லாந்து, பஹ்ரைன் அணிகளும் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ளன.

ஆசிய கோப்பை தொடர் ஜனவரி 5-ந்தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரவு எமிரேட்ஸ் பஹ்ரைனை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 1-ந்தேதி இறுதிப் போட்டி நடக்கிறது. இந்தியா 6-ந்தேதி தாய்லாந்தையும், 10-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியையும், 14-ந்தேதி பஹ்ரைனையும் எதிர்கொள்கிறது.



‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, சிரியா, பாலஸ்தீனம், ஜோர்டான் அணிகள் இடம்பிடித்துள்ளன. ‘சி’ பிரிவில் தென் கொரியா, சீனா, கிர்கிஸ்தான், பிலிப்பைன்ஸ் அணிகளும், ‘டி’ பிரிவில் ஈரான், ஈராக், வியட்நாம், ஏமன் அணிகளும், ‘ஈ’ பிரிவில் சவுதி அரேபியா, கத்தார், லெபனான், வடகொரியா அணிகளும், ‘எஃப்’ பிரிவில் ஜப்பான், உஸ்பெகிஸ்தான், ஓமன், துர்க்மெனிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.

லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும். அதனுடன் 3-வது மற்றும் 4-வது இடத்தைபிடிக்கும் முதல் நான்கு அணிகளும் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,265
Likes
3,173
Location
India
ஓரே போட்டியில் சாதனைப் படைத்த மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ

1525699412276.png


எல் கிளாசிகோ என்று அழைக்கப்படும் எஃப்சி பார்சிலோனா- ரியல் மாட்ரிட் இடையிலான ஆட்டம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் இரண்டு அணிகளும் தலா 2-2 கோல்கள் அடித்ததால் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

பார்சிலோனா அணிக்காக மெஸ்சி ஒரு கோலும், ரியல் மாட்ரிட் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோலும் அடித்தனர். இதன்மூலம் இவருவரும் சாதனைப் படைத்துள்ளனர்.

எல் கிளாசிகோ போட்டியில் பார்சிலோனாவிற்கு சொந்தமான கேம்ப் நவு மைதானத்தில் 7 கொல்கள் அடித்து, இந்த மைதானத்தில் அதிக கோல் அடித்த வீரர்கள் என்ற சாதனையைப் மெஸ்சி படைத்துள்ளார். இதற்கு முன் பகோ ஜென்டோ 6 கோல் அடித்ததுதான் சாதனையை இருந்தது.



எல் கிளாசிகோ போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்காக 18 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை அல்ஃப்ரெடோ டி ஸ்டெபானோ படைத்திருந்தார். இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த சாதனையை சமன் செய்துள்ளார்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,351
Likes
550
Location
chennai
பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் வெற்றி கொண்டாட்டத்திற்கு தடைபோட்டது ரென்னெஸ்

1526222872611.png

பிரான்ஸில் நடைபெற்று வரும் லீக் 1 கால்பந்து தொடரில் ஏற்கனவே பாரிஸ் செயின்ட்-ஜெரமைன் அணி அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. இந்நிலையில் கடைசி லீக் ஆட்டத்திற்கு முந்தைய ஆட்டம் பிஎஸ்ஜிக்கு சொந்தமான பார்க் டெஸ் பிரின்செஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிஎஸ்ஜி ரென்னெஸ் அணியை எதிர்கொண்டது.

சொந்த மைதானத்தில் ரென்னெஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதை ரசிகர்கள் மத்தியில் பிரமாண்டமாக கொண்டாடவும், அதன்பின் மிகப்பெரிய பார்ட்டியில் கலந்து கொள்ளவும் முடிவு செய்தது. ஆனால் பிஎஸ்ஜி அதிர்ச்சிகரமாக 0-2 எனத் தோல்வியை சந்தித்தது. இதனால் சொந்த ரசிகர்கள் முன் வெற்றியை கொண்டாட முடியாமல் கவலையோடு வெளியேறினார்கள்.



பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அடுத்த போட்டியில் எஸ்எம் கேயன் அணியை எதிர்கொள்கிறது. தற்போது பிஎஸ்ஜி 37 போட்டிகள் முடிவில் 92 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மொனாகோ 77 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,265
Likes
3,173
Location
India
உலக கோப்பை கால்பந்து போட்டியில் சரியாக விளையாட முடியுமா? - நெய்மர் கவலை

1526540449126.png

பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் நெய்மர். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் விளையாடியபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை அடுத்து காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காத நெய்மர், ஜூன் மாதம் தொடங்க உள்ள உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறார்.

இந்நிலையில், நெய்மர் தனது கால் காயம் மற்றும் உலகக் கோப்பை எதிர்பார்ப்பு குறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தனது காயம் மிக கடுமையானது என்றும், மூன்று மாதங்களாக விளையாடாமல் உலகக் கோப்பையில் விளையாடுவது மிகப்பெரிய சவால் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயம் இருந்தபோதிலும், மருத்துவர்களின் அறிவுரைகளுக்குப் பிறகு தற்போது மன அமைதி கொண்டுள்ளதாகவும், அவ்வப்போது பயிற்சியிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,265
Likes
3,173
Location
India
மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி எப்ஏ கோப்பையை கைப்பற்றியது செல்சி அணி

1526821174216.png

2018-19ம் சீசன் யுயெஃபா யுரோப்பா கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவே உலகிலேயே மிகப் பழமையான கால்பந்து சங்க போட்டியாகும். இந்த தகுதிச்சுற்று போட்டிகளின் ஒரு பகுதியான எப்.ஏ. கோப்பையின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள செல்சி அணி, மான்செஸ்டர் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. இப்போட்டி தொடங்கிய 22-வது நிமிடத்தில் செல்சி அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை செல்சி அணி சரியாக பயன்படுத்தி கொண்டது.



பெனால்டி வாய்ப்பில் செல்சி அணி வீரர் ஈடன் ஹசார்ட் கோல் அடித்தார். அதன்பின் இறுதி நிமிட ஆட்டம் வரை இரு அணியினரும் மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற செல்சி அணி கோப்பையை கைப்பற்றியது. செல்சி அணி எப்.ஏ.கோப்பையை வெல்வது இது 8-வது முறையாகும்
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,351
Likes
550
Location
chennai
இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனாக ஹாரி கேன் நியமனம்

1527073232160.png


உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி கேன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் அற்புதமான கேப்டன்ஷிப் திறமை இருக்கிறது என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் சவுத் கேட் கூறியுள்ளார்.

ஏற்கனவே உலக கோப்பை தகுதி சுற்றில் அணியை வழிநடத்திய அனுபவம் பெற்றுள்ள 24 வயதான ஹாரி கூறுகையில், ‘உலக கோப்பை அணிக்கு கேப்டனாக இருப்பது மிகப்பெரிய கவுரவமாகும். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்’ என்றார். ஹாரி கேன் இதுவரை 23 ஆட்டங்களில் விளையாடி 12 கோல்கள் அடித்துள்ளார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,265
Likes
3,173
Location
India
ஒரே நேரத்தில் 2 பெண்களை மணக்கும் ரொனால்டினோ

1527239358134.png

பிரேசிலை சேர்ந்த முன்னாள் கால்பந்து ஜாம் பவான் ரொனால்டினோ.

2002-ம் ஆண்டு பிரேசில் அணி உலககோப்பையை வெல்ல இவரது ஆட்டம் முக்கியமாக இருந்தது.

38 வயதான ரொனால் டினோ ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். உலக கால்பந்து வீரர் விருதை பெற்ற அவர் பிரிசிலா, பெட்ரிஸ் சவுசா ஆகிய இரண்டு பெண்களை காதலித்து வந்தார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த 2 பெண்களும் ரொனால்டினோவுடன் ஒன்றாக வசித்து வந்தனர். தற்போது அவர்களை அவர் திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளார்.

ரொனால்டினா இந்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் மணக்கிறார். ஆகஸ்ட் மாதம் சான் டோமானிகாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த திருமணம் நடக்கிறது.

ரொனாடில்னோ ஒரே நேரத்தில் 2 பெண்ணை திருமணம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 2 பெண்களும் 2015-ம் ஆண்டு முதல் ரொனால்டினோவை காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.