International Football News

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,171
Location
India
சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டி - லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரியல் மாட்ரிட்

1527404376416.png

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் கீவ் நகரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) அணியும், லிவர்பூல் (இங்கிலாந்து) அணியும் மோதின.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் அபாரமாக ஆடின. இதனால் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.



இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கரிம் பென்சிமா முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லிவர்பூல் அணியின் சாடியோ மேன் 54-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.

தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணி சிறப்பாக ஆடியது. அந்த அணியின் கரேத் பாலே 63 மற்றும் 82 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,802
Location
Germany
இண்டர்காண்டினெண்டல் கோப்பை - சுனில் செத்ரியின் ஹாட்ரிக் கோலால் இந்திய அணி அபார வெற்றி


இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் தென்னாபிரிக்கா கலந்துகொள்வதாக இருந்தது. இருப்பினும் அந்த அணி கலந்துகொள்ள முடியாத காரணத்தினால் கென்யா அணி சேர்க்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற அறிமுக ஆட்டத்தில் இந்தியா - சீன தைபே அணிகள் மோதின. போட்டி தொடங்கிய 14-வது நிமிடத்தில் இந்திய அணியின் சுனில் செத்ரி கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 34-வது நிமிடத்தில் செத்ரி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் இந்திய அணியின் உதாந்தா சிங் ஒரு கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 62-வது நிமிடத்தில் சுனில் செத்ரி தனது மூன்றாவது கோல் அடித்தார். இது அவரது ஹாட்ரிக் கோல் ஆகும். 78-வது நிமிடத்தில் புரொனாய் ஹேல்டர் கோல் அடித்தார்.



சீன தைபே அணியினர் இறுதி வரை முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் போட்டியில் கென்யா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,171
Location
India
100-வது சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாடுகிறார், இந்திய கேப்டன் சுனில் சேத்ரி

1528113992663.png

4 அணிகள் பங்கேற்றுள்ள கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் சீனதைபேயை 5-0 என்ற கோல் கணக்கில் நொறுக்கித்தள்ளிய இந்திய அணி இன்று 2-வது லீக்கில் கென்யாவை எதிர்கொள்கிறது. இது இந்திய கேப்டன் சுனில் சேத்ரிக்கு 100-வது சர்வதேச போட்டியாகும்.

33 வயதான சுனில் சேத்ரி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘100 சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. உண்மையிலேயே இதை நம்ப முடியவில்லை. இது பற்றி எனது தாயாருடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டார். இந்த மைல்கல்லை எட்டும் 2-வது இந்தியர் (முதலில் பாய்சுங் பூட்டியா) என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமை அளிக்கிறது’ என்றார்
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,171
Location
India
உலகக் கோப்பை கால்பந்து 2018: குரூப் எஃப்







ஜெர்மனி
மெக்ஸிகோ
ஸ்வீடன்
தென்கொரியா

இந்த பிரிவில் இருந்து ஜெர்மனி, மெக்ஸிகோ அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது.

முக்கிய வீரர்கள், நிலவரம்
ஜெர்மனி

கால்பந்து அணிகளில் நாகரிகமான ஆட்டத்துக்கு பெயர் பெற்றது ஜெர்மன் நாட்டு அணி. நான்கு முறை உலக சாம்பியன், மூன்று முறை ஐரோப்பிய சாம்பியன், ஒரு முறை கன்பெடரேஷன் கோப்பை சாம்பியன் என உலக அரங்கில் ஜாம்பவான் அணியாக ஜெர்மனி உள்ளது.

தற்போது 2018 உலகக் கோப்பையில் நடப்புச் சாம்பியன் அந்தஸ்தில் நேரடி தகுதி பெற்றுள்ளது.
கடந்த 2017 ஜூலையில் ரஷியாவில் நடந்த கன்பெடரேஷன் கோப்பையில் சாம்பியன் பட்டம், 10 தகுதி ஆட்டங்களிலும் வெற்றி, ஐரோப்பிய அளவில் 43 கோல்கள் அடித்து சாதனை என்ற தெம்போடு உலகக் கோப்பை போட்டியை எதிர்கொள்கிறது.

நட்சத்திர வீரர் டோனி குரூஸ்:
அணியின் புதிய கேப்டன் டோனி குரூஸ் நடுக்களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அவரது துல்லிய ஒருங்கிணைந்த ஆட்டம் மற்ற வீரர்களுக்கும் ஊக்கத்தை ஏற்படுத்துகிறது.

பயிற்சியாளர் ஜோசிம் லோ:
கடந்த 2006 உலகக் கோப்பையில் ஏற்பட்ட மோசமான தோல்வி அனுபவத்துக்கு பின் ஜோசிம் லோ பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அவரது தொடர் தீவிர பயிற்சியால் 2014-இல் ஜெர்மனி தனது 4-வது பட்டத்தை வென்றது. வரும் உலகக் கோப்பையிலும் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணியாக கருதப்படுகிறது.

மெக்ஸிகோ
ஒவ்வொரு முறை உலகக் கோப்பை போட்டியிலும் மெக்ஸிகோ அணி தவறாமல் தகுதி பெற்று வருகிறது. கடந்த 6 உலகக் கோப்பையிலும் இடம் பெற்ற அந்த அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றிலேயே வெளியேறுவதை வழக்கமாக கொண்டுள்ளது. 1970, 1986 என இரு முறை மட்டுமே காலிறுதி வரை மெக்ஸிகோ முன்னேறியது. அதே போல் நடப்பாண்டு போட்டியிலும் காலிறுதிக்கு தகுதி பெற்றாலே பெரிய வெற்றியாகும்.

தகுதிப் போட்டியில் கோஸ்டா ரிகா, பனாமா நாடுகளைக் காட்டிலும் முதலில் தேர்வானது மெக்ஸிகோ. அதன் பரம வைரியான அமெரிக்கா தகுதி பெறவில்லை.

நட்சத்திர வீரர் ஜேவியர் ஹெர்னான்டெஸ்:
தாக்குதல் ஆட்டத்திலும், முன்களத்திலும் சிறந்து விளங்கும் இவர் ஏனைய வீரர்கள் ஜீசஸ் கரோனா, லாசான்úஸா போன்றவர்களோடு எதிரணிக்கு அச்சுறுத்துலை ஏற்படுத்துவார்.

பயிற்சியாளர் ஜுவான் கார்லோஸ் சோரியோ:
திட்டமிடல், விரைவான தாக்குதல் ஆட்ட முறையை பின்பற்றும் ஜுவான் கார்லோஸ் பயிற்சியில் மெக்ஸிகோ அணி மேம்பட்டுள்ளது. ஆனால் சுயக்கட்டுப்பாடு இல்லாமல் கார்லோஸ் தவித்து வருகிறார்.

ஸ்வீடன்
தற்போதைய உலகக் கோப்பைக்கு இத்தாலியை தகுதி பெறாமல் செய்த பெருமை ஸ்வீடனையே சாரும். தகுதிப் போட்டியில் ஸ்வீடன் வென்றதின் மூலம் இத்தாலி முதன்முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. அந்த அணியின் முக்கிய வீரராக இருந்த லட்டன் இப்ராஹிமோவிக் ஓய்வு பெற்றாலும், அவரது செல்வாக்கு தொடர்ந்து அணியில் படர்ந்துள்ளது. அவர் இல்லாத நிலையில் ஸ்வீடன் அணி தற்போது சிறந்த கட்டமைப்புடன் ஒருங்கிணைப்பாக ஆடி வருகிறது.

நட்சத்திர வீரர் எமில் போர்ஸ்பெர்க்:
இப்ராஹிமோவிக் இல்லாத குறையை போர்ஸ்பெர்க் தீர்த்து வைத்துள்ளார். ஸ்வீடன் தாக்குதல் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

பயிற்சியாளர் ஜேன் ஆண்டர்சன்:
கடந்த 2016 யூரோ போட்டிக்கு பின் அணியின் பயிற்சியாளரான ஆண்டர்சன் தனது தீவிர பயிற்சியால் பெரிய அணிகளுக்கு சவால் தரக்கூடிய வகையில் அணியை உருவாக்கி உள்ளார்.

தென்கொரியா
ஆசியக் கண்டத்தின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக விளங்கும் தென்கொரியா 1986-ஆம் ஆண்டு முதல் அனைத்து உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்று வருகிறது. 2002 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறிய தென்கொரியா, கடந்த 2014 இல் முதல் சுற்றோடு வெளியேறியது.

ஆசிய தகுதிச் சுற்று ஆட்டங்களில் தட்டுத் தடுமாறி வென்று தென்கொரியா தற்போதைய 2018 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில் விளையாடி வரும் சன் ஹியுங் மின், கீ சங் யிங், லீ சங் யோங் ஆகியோரின் அனுபவம் இந்த முறை உதவும் என எதிர்பார்க்கலாம்.

நட்சத்திர வீரர் சன் ஹியுங் மின்:
பிரீமியர் லீக் வரலாற்றிலேயே அதிக கோலடித்த ஆசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தென்கொரிய அணியின் தூணாக விளங்கி வருகிறார்.

பயிற்சியாளர் ஷின் டே யோங்:
தகுதிச் சுற்றில் கத்தார் மற்றும் சீனாவுடன் மோதிய ஆட்டங்களில் தென்கொரியா தோல்வியை சந்தித்த போது, 23 வயதுக்குட்பட்டோர் அணியின் பயிற்சியாளராக இருந்த ஷின் டே யோங் நியமிக்கப்பட்டார். அதன் பின் அணி ஒரளவுக்கு நிலைத்து ஆடி வருகிறது. இவர் ஏற்கெனவே ஆஸி. அணிக்கும் பயிற்சி அளித்துள்ளார்.

1990: சாம்பியன் மேற்கு ஜெர்மனி

14-ஆவது உலகக் கோப்பை போட்டிகள் இத்தாலியில் நடைபெற்றன. மொத்தம் 12 நகரங்களில் நடந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்றன. இது தான் மேற்கு ஜெர்மனி சார்பில் ஒரு அணியாக பங்கேற்ற கடைசி போட்டியாகும். இப்போட்டியில் தான் அதிகபட்சமாக 16 சிகப்பு அட்டைகள் காண்பிக்கப்பட்டன. வெற்றி பெறும் அணிக்கு 3 புள்ளிகள் வழங்கப்பட்டன. தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிக மக்களால் பார்க்கப்பட்ட போட்டி என்ற பெயரைப் பெற்றது. ஆப்பிரிக்க நாடான கேமரூன் காலிறுதிக்கு முன்னேறி அதிர்ச்சியை உண்டாக்கியது.

அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்கள் ஆர்ஜென்டீனா, இங்கிலாந்து, இத்தாலி, மேற்கு ஜெர்மனி தகுதி பெற்றன. முதல் ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா 4-3 என இத்தாலியையும், இரண்டாவது ஆட்டத்தில் மேற்கு ஜெர்மனி 4-3 என இங்கிலாந்தையும் வீழ்த்தின.

இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவை 1-0 என வீழ்த்தி மேற்கு ஜெர்மனி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,171
Location
India
தமிழில் மொழியாக்கம் செய்ய சோனி திட்டம்
உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டிகளை தமிழ் மொழியாக்கத்துடன் காண சோனி பிக்சர்ஸ் ஏற்பாடு செய்துள்ளது.

இப்போட்டிகள் சோனி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு கால்பந்து ரசிகர்கள் பயன்பெறும் வகையில் தமிழ் மொழியாக்கத்துடன் போட்டிகளை சோனி ஒளிபரப்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கேப்டன் சுனில் சேத்ரி, பிரபல கால்பந்து வீரர்கள் லூயிஸ் கார்சியா, லூயிஸ் சாஹா, டேவிட் ஜேம்ஸ் ஆகியோரும் வர்ணனையாளர்கள் செயல்படுவர்.

உலக கோப்பை பந்து
உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டிகளில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட உள்ள டெல்ஸ்டார் 18 ரக பந்துகள். இப்பந்துகளில் துல்லியமான ஒளிபரப்புக்காக சிப்களும் பொருத்தப்பட்டுளளன.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,171
Location
India
ஆஸ்திரியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பிரேசில் அபார வெற்றி

1528694788097.png

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி, தனது முதலாவது லீக்கில் சுவிட்சர்லாந்தை 17-ந்தேதி சந்திக்கிறது.

இதையொட்டி பிரேசில் அணி தனது கடைசி பயிற்சி ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரியாவுடன் வியன்னா நகரில் மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் வசமே பந்து அதிகமாக (65 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தது. பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் கேப்ரியல் ஜீசஸ் 36-வது நிமிடத்திலும், நெய்மார் 63-வது நிமிடத்திலும், பிலிப் காட்டினோ 69-வது நிமிடத்திலும் கோல் போட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினர். இறுதியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை எளிதில் வீழ்த்தியது. நெய்மார், பிரேசில் அணிக்காக அடித்த 55-வது கோல் இதுவாகும். இதன் மூலம் அதிக கோல் அடித்த பிரேசில் வீரர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் ரொமாரியோவை சமன் செய்தார். பிரேசில் அணி கடைசியாக ஆடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி உலக கோப்பை போட்டிக்குள் நுழையும் பிரேசிலுக்கு புத்துணர்ச்சியையும், கூடுதல் நம்பிக்கையையும் அளித்துள்ளது.

மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, துனிசியாவை எதிர்கொண்டது. முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி, முதல் பாதியில் இலக்கை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்கவில்லை. எப்படியோ 84-வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் லகோ அஸ்பாஸ் அடித்தகோலின் உதவியுடன் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,171
Location
India
மெஸ்சி சாதனையை சமன் செய்த சுனில் சேத்ரி

1528694899412.png

கண்டங்களுக்கிடையேயான கால்பந்து கோப்பை போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா, நியூசிலந்து, கென்யா, சீனா தைபே ஆகிய அணிகள் மோதின. தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா - கென்யா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.

இந்த போட்டியில் இந்தியா 2--0 என்ற கோல்கணக்கில் வென்று காண்டினெண்டல் கால்பந்து கோப்பையை வென்றது.
கேப்டன் சுனில் சேத்ரி 2 கோல்களை அடித்து இந்திய வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த 2 கோல்களுடன் சேர்ந்து சுனில் சேத்ரி கால்பந்து போட்டிகளில் மொத்தம் 64 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம் அர்ஜெண்டினாவுக்காக ஆடிய மெஸ்சியின் 64 கோல்கள் என்ற மைல்கல்லை சமன் செய்துள்ளார்.

போர்ச்சுக்கலை சேர்ந்த ரொனால்டோ 81 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,171
Location
India
உலக கோப்பை கால்பந்து முடிவுகளை கணிக்க இருக்கும் பூனை

1528866364532.png

உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை நேரில் காண்பதில் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆவல் இருக்கிறதோ?, அதுபோல் உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே வெளியாகும் கணிப்புகளை அறிவதிலும் அதிக ஆர்வம் இருப்பது உண்டு. இந்த ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் ‘பால்’ என்ற ஆக்டோபஸ் கடல் வாழ் உயிரினம் கதாநாயகனாக விளங்கியது. ஜெர்மனியில் உள்ள கடல் வாழ் அருங்காட்சியத்தில் இருந்த அந்த ஆக்டோபஸ் போட்டியின் முடிவுகளை ஆட்டத்துக்கு முன்கூட்டியே துல்லியமாக கணித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தண்ணீர் தொட்டிக்குள் இரண்டு சிறிய ஜாடியில் உணவுகளை போட்டு அவற்றின் மீது அன்றைய போட்டியில் மோதும் அணிகளின் கொடி வைக்கப்பட்டு இருக்கும். நீந்தி வரும் ஆக்டோபஸ் எந்த ஜாடியில் உள்ள உணவை உட்கொள்கிறதோ?, அதன் மீதுள்ள கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கணிக்கப்படும். அதுபோல் ஜெர்மனி அணி மோதிய அனைத்து ஆட்டங்களையும் துல்லியமாக கணித்த ஆக்டோபஸ், ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்று அது சுட்டிக்காட்டிய ஆருடமும் அப்படியே பலித்தது.

இந்த உலக கோப்பை போட்டியை நடத்தும் ரஷியா, ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறது.


செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் உள்ள இந்த பூனைக்கு அனா கசட்கினா என்பவர் பயிற்சி அளித்து வருகிறார். இரண்டு கிண்ணத்தில் உணவு பொருட்கள் வைக்கப்பட்டு, அதில் போட்டியில் மோதும் அணிகளின் கொடி இடம் பெற்று இருக்கும். ‘அசிலிஷ்’ பூனை எந்த கிண்ணத்தில் உள்ள உணவை உட்கொள்கிறதோ? அந்த கிண்ணத்தில் வைக்கப்பட்டு இருக்கும் கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கருதப்படும். அகிலிஷ் பூனையின் கணிப்பு எப்படி இருக்க போகிறது என்று போட்டி போகப் போக தான் தெரியும் எனலாம்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,171
Location
India
இன்று தொடங்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியை டூடுலாக கொண்டாடும் கூகுள்

1528967474442.png

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.

இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று தொடங்குகிறது. இது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.


அதனை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதே போல் ஒடிசா மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக மணற்சிற்பம் ஒன்றை வடித்துள்ளார். இது பார்வையாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,802
Location
Germany
ரஷியாவில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் கோலாகல கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது

1529018037343.png

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.

இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ரஷியா - சவுதி அரேபியா பலப்பரீட்சை நடத்துகின்றன.



முன்னதாக இரவு 8 மணிக்கு கோலாகலமான தொடக்க விழாவுடன் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் இசை விருந்து அளித்தார். அப்போது பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அதன்பின் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் நடைபெற்றது.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.