IUI & ICSI treatments helps to Concieve a Child

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#1
கர்ப்பம் அடைவதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க வழிகள்:


பெண்களுக்கு மாதாமாதம் சினைமுட்டை ஒரு சுழற்சி முறையில் வெளியேறும். இதைத்தான் நாம் பீரியட்ஸ் என்கிறோம். ஆனால் சிலருக்கு இது சரியானபடி ஏற்படாது. இதற்கு முக்கியக் காரணம் நம்முடைய ஹார்மோன்களின் செயல்பாடுதான்.



இதை மருந்துகள் மூலம் சரி செய்துவிடலாம். இந்த மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது சினைமுட்டையை சரியான வளர்ச்சியடையச் செய்யும். இதற்குப் பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையின் பெயர் Clomiphene Citrate. ஆனால் இந்த மாத்திரையைச் சாப்பிட்டு வருவதால் மட்டும் சினைமுட்டை நன்கு வளர்ச்சியடைகிறது என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியாது.

அதை உறுதிப்படுத்த Follicular Scan என்கிற ஒரு பரிசோதனையைத் தொடர்ந்து செய்து, அதன் மூலம் முட்டையின் வளர்ச்சியைக் கண்காணிப்போம். இந்த மாத்திரையைத் தவிர்த்து ஊசி மூலமும் இந்தப் பிரச்னையை நாம் கையாளலாம். இதற்கென்று Gonadotrophins என்கிற இன்ஜெக்சன் இருக்கிறது. தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தும் சினை முட்டை வளர்ச்சியடைவதில் பிரச்சனை இருந்தால் இந்த இன்ஜெக்சனை நாங்கள் கொடுப்போம்.

மாத்திரைகளைச் சாப்பிட்டு வரும்போதே சில மருத்துவர்கள் இந்த ஊசியும் போட்டு விடுவதுண்டு. இது அவரவர் ட்ரீட்மெண்டுக்கு ஏற்ப மாறுபடும். இதில் தவறொன்றும் இல்லை. இப்படி தொடர்ந்து ட்ரீட்மெண்ட் செய்து வந்தும் பலன் இல்லையென்றால் Follicle Stimulating Harmone என்கிற ஹார்மோனை அதிகரிக்க மாத்திரைகளை நாங்கள் கொடுப்பதுண்டு.

இந்த FSH ஹார்மோன் மற்றும் Gonodotrophins ஆகியவற்றை மனித யூரினில் இருந்துதான் தயார் செய்கிறார்கள். இயற்கையான விஷயத்திலிருந்து, அதிக சிரமத்துடன் இதைத் தயாரிப்பதால் இந்த மருந்துகள் சற்றே காஸ்ட்லிதான். இதற்கு மாற்றாக செயற்கை மருந்துகளையும் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மார்புப் புற்றுநோய் கண்டவர்களுக்குப் பொதுவாக ட்ரீட்மெண்ட் கொடுக்கும்போது Letrozole என்கிற ஒரு மருந்தை நாங்கள் கொடுப்பதுண்டு. இப்படி Letrozole கொடுக்கப்பட்ட சில பேஷண்டுகளைத் தற்செயலாகக் கண்காணித்தபோது ஒரு விஷயத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த மருந்து சினைப்பையின் மீது செயல்பட்டு, சினைமுட்டையின் வளர்ச்சியைத் தூண்டுவது அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பிறகு இந்த Letrozole மருந்தையும் இந்த ட்ரீட்மெண்டுக்குப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இந்த மருந்தைப் பயன்படுத்தி வரும் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு சில குறைபாடுகள் ஏற்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. இதைக் கேள்விபட்டு நிறைய பெண்கள் அதன்பிறகு Letrozole மருந்தைப் பயன்படுத்தவே பயந்தார்கள்.

ஆனால் இந்த பயம் அவசியமில்லாதது. இதற்கும், பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய குறைபாடுகளுக்கும் தொடர்பில்லை. மேலும் இந்த மருந்தை அவசியப்பட்டால் மட்டுமே, அதுவும் ஒரு சிலருக்கு மட்டுமே மருத்துவர்கள் கொடுப்பார்கள். அதனால் இதில் பயப்பட ஒன்றுமில்லை. சினைமுட்டை சரியானபடி வளர்ச்சியடையத்தான் மேற்கூறிய சில மருந்துகளை நாங்கள் பரிந்துரைப்போம்.

இதில் நீங்கள் எந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தாலும், அதைப் பயன்படுத்தும்போதே கட்டாயம் Follicle Scan_ஐ செய்து முட்டை சரியானபடி வளர்ச்சியடைகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். வளர்ச்சி சரியாக இருந்தால், பிறகு அது வெளியேற ஒரு ஊசி போடுவோம். பொதுவாக இந்த ஊசி போட்ட முப்பத்தாறு மணி நேரத்தில், சினைமுட்டை கட்டாயம் சினைப்பையிலிருந்து வெளியேறும்.

இந்தச் சமயத்தில் தம்பதியரை தயாராக இருக்கச் சொல்லி, கட்டாயம் உடலுறவு வைத்துக் கொள்ள அறிவுறுத்துவோம். இதிலும் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் IUI என்கிற ஒரு முறையைக் கையாள்வோம்.

Intra Uterine Insemenation என்று அழைக்கப்படும் இந்த முறையில், சினைமுட்டை வெளியேறும் சமயத்தில் கணவரிடமிருந்து பெறப்பட்டு Lab இல் பதப்படுத்தப்பட்ட விந்தணுக்களை, ஒரு டியூப் மூலமாக மனைவியின் கர்ப்பப்பைக்குள் செலுத்தி கருத்தரிக்க உதவுவோம். இந்த முறையில் கருத்தரிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ளது.


netsource
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
இக்ஸி முறையில் கருத்தரிப்பு


‘‘சோதனைக்குழாய் முறையில் பல உயிரணுக்களைச் செலுத்தி கருமுட்டையுடன் இணையச் செய்வார்கள். ஆனால், இக்ஸி முறையில், விந்துப்பையில் இருந்து ஆணின் நல்ல ஒரு உயிரணுவை எடுத்து, பெண்ணின் கருமுட்டையில் துளையிட்டு அதில் ஊசி மூலம் உயிரணுவைச் செலுத்தி கரு உருவாக்கம் செய்வார்கள்.


இக்ஸி முறையில் குழந்தையின்மைக்கான சிகிச்சை அளிக்கிற போது, உயிரணுவானது நகரும் தன்மை கொண்டதா என்பது மட்டுமே பார்க்கப்படும். இக்ஸி முறையில் ஒரு குறைபாடு இருந்தது. அதாவது, ஊசி மூலம் செலுத்தப்படும் விந்து அணுக்களில் குறைபாடு இருந்தால்கூட, கண்டறிய முடியாது.

குறையுள்ள விந்து அணுவால் குழந்தையை உருவாக்க முடியாது என்பதால் சிகிச்சை அளித்தும் பயன் இருக்காது. இந்தக் குறைபாட்டைக் களைந்து நவீனத்துவம் பெற்றிருப்பதுதான், இம்ஸி சிகிச்சை. இந்த நவீனத் தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு விந்து அணுவையும் 4,000 மடங்கு உருப்பெருக்கிப் பார்க்க முடியும்.

அதனால் குறைபாடு உள்ள விந்தணுக்களை நீக்கிவிட்டு நல்ல ஆரோக்கியமான விந்து அணுக்களை மட்டும் தேர்ந்தெடுத்து, கருக்குழாயில் செலுத்த முடியும். இதனால் வெற்றி வாய்ப்பும் பல மடங்கு அதிகரித்து உள்ளது. ஆனால், அந்த உயிரணுவில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கலாம்.

குறிப்பாக ஒய் க்ரோமோசோமில் பிரச்சனைகள் இருந்தால், அது அந்தக் குழந்தைக்கும் தொடர்ந்து பாதிக்கும். உயிரணுவின் தோற்றத்தை மட்டுமே வைத்து, அதைக் கணிக்க முடியாது. ஒருவேளை அந்த குறைபாடு உடைய அணுவாக இருந்தால், மரபணுக் கோளாறுகளின் காரணமாக உருவாகிற பிரச்சனைகள் வரலாம். கருச்சிதைவு ஏற்படலாம்.

குழந்தை குறைபாடுகளுடன் பிறக்கலாம். ஆண் உயிரணுக்களில் குறைபாடுகள் இருப்பதால் உண்டாகிற மலட்டுத் தன்மை கிட்டத்தட்ட 45 சதவிகிதம். நல்ல உயிரணுக்களைக் கண்டுபிடிக்க இன்றைய நவீன மருத்துவத்தில் சில முறைகள் இருக்கின்றன.

எலெக்ட்ரோஃபோரெடிக் முறையில் தரமான, ஆரோக்கியமான உயிரணுக்களைக் கண்டு பிடித்து, பிறகு அவற்றை ஸ்பெர்ம் வாஷ் முறையில் சுத்தப்படுத்தி, வடிகட்டி, இறுதியாக அவற்றில் சிறந்த அணுக்களைக் கருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்படும்.

விதைப் பையில் விந்து அணு உருவாவதற்கு முற்பட்ட நிலையிலேயே, அதனைப் பலமானதாக மாற்றிக் கருவினை உருவாக்கும் புதிய தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. அதே போல பெண்ணின் கருவறையில் இருந்து வெளிவரும் கருமுட்டைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான், அதில் விந்து அணுக்களை செலுத்திக் கரு உருவாக்க முடியும்.

ஆனால், இப்போது கரு முட்டைகளை வெளியே எடுத்து உறை நிலையில் வைத்து முறைப்படி பாதுகாத்துப் பின்னர் கருத்தரிக்க வைக்கும் அளவுக்கு, சிகிச்சை வளர்ந்துவிட்டது. இது தவிர, வளராத கரு முட்டையைப் பெண்ணின் கருப்பையில் இருந்து எடுத்து, கணவனின் விந்து அணுவுடன் சேர்த்து வெளியில்வைத்து ஒன்றாக்கிய பிறகு, பெண்ணின் கர்ப்பப் பைக்குள் செலுத்தும் நவீன சிகிச்சைகளும் இப்போது வந்துவிட்டன.

 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.