Jipmer launches obesity surgery programme - உடல் எடை குறைப்பதற்கான அறுவை சிக&#3007

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
#1
உடல் எடை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை: ஜிப்மரில் துவக்கம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உடல் எடையை (உடல் பருமன்) குறைப்பதற்கான அறுவை சிகிச்சை சேவையை இருக்குனர் டாக்டர் எஸ்.சி.பாரிஜா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

உடல் பருமன் என்பது சாதாரண அழகை மட்டும் குறைக்கும் பிரச்னை இல்லை.

மனிதனை தாக்கும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மலட்டுத்தன்மை, மாதவிடாய் பிரச்னை, இதய நோய், மன அழுத்தம், பலவிதமான புற்றுநோய்களுக்கு காரமணமாக அமைந்துள்ளது.

உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டால் உடல் எடையை குறைக்க முடியாதவர்களுக்கு இந்த வகை அறுவைசிகிச்சை உதவிகரமாக உள்ளது. இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் பிஜூ பொட்டாகட் வரவேற்றார். டாக்டர் கலையரன் அறுவை சிகிச்சை பற்றி விவரித்தார்.

அறுவை சிகிச்சை சேவையை தொடங்கி டாக்டர் பாரிஜா பேசியது:
இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் முதல்முறையாக ஜிப்மரில்தான் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. 100 கிலோவுக்கும் மேலாக உடல் எடை உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் இரைப்பையின் அளவு 90 சதவீதம் வரை குறைக்கப்படுகிறது. லேப்ராஸ்கோபி முறையில் இந்த அறுவை சிகிச்சை செய்வதால் வலி பெருமளவு குறையும்.

அறுவை சிகிச்சை முடிந்த 2 நாளில் நோயாளிகள் வீட்டிற்கு செல்லலாம். தனியார் மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சை செய்ய குறைந்தபட்சம் ரூ.2.50 லட்சம் முதல் ரூ.3.50 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஜிப்மர் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கு ரூ.65 ஆயிரம் மட்டும் வசூலிக்கப்படுகிறது.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த சிகிச்சை மேற்கெண்டால் நோயும் குணமாகும் வாய்ப்புள்ளது என்றார்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: உடல் எடை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை: ஜ&a

wonderful information! thank you!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.