Kabadi (கபடி) updates

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
#31
[h=2]புரோகபடி லீக்: இறுதிப்போட்டிக்கு நுழைவது யார்? குஜராத்-பெங்கால் இன்று பலப்பரீட்சை[/h]
5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் ‘பிளேஆப்’ சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின.

எலிமினேட்டர் ஆட்டங்களில் புனே அணி 40-38 என்ற புள்ளிக் கணக்கில் உ.பி. யோதாவையும், நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் 69-30 என்ற கணக்கில் அரியானா ஸ்டீலர்சையும் வீழ்த்தின. உ.பி., அரியானா அணிகள் வெளியேற்றப்பட்டன.

மும்பையில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் விளையாடும்.

இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடும் என்பதால் இறுதிப் போட்டிக்கு நுழைவது யார்? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. குஜராத் அணி ‘ஏ’ பிரிவில் 15 வெற்றி, 4 தோல்வி, 3 டையுடன் 87 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது.

அந்த அணி ரெய்டு மற்றும் டேக்கிளில் சமபலத்தில் உள்ளது. பெங்கால் வாரியர்ஸ் 11 வெற்றி, 5 தோல்வி, 6 டையுடன் 77 புள்ளிகள் பெற்று ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்தது.

இரு அணிகளும் மோதிய ‘லீக்’ ஆட்டம் 26-26 என்ற புள்ளிக் கணக்கில் சமநிலையில் முடிந்து இருந்தது.

இரவு 9 மணிக்கு நடைபெறும் ‘எலிமினேட்டர் 3’ ஆட்டத்தில் பாட்னாபை ரேட்ஸ்-புனேரி பல் தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்துக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.

பாட்னா அணி அரியானாவுக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. இதனால் அதே உத்வேகத்துடன் ஆடுவார்கள். ‘லீக்’ ஆட்டத்தில் புனே அணி 47-42 என்ற கணக்கில் பாட்னாவை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
#32
[h=2]புரோ கபடி: குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை 55-38 என வீழ்த்தி பாட்னா பைரட்ஸ் சாம்பியன்[/h]
12 அணிகள் இடையிலான 5-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் கடந்த ஜூலை 28-ந்தேதி தொடங்கியது. பல்வேறு நகரங்களில் நடந்த இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பாட்னா பைரட்ஸ், புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ், உத்தரபிரதேச யோத்தா ஆகிய 6 அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய வரவான தமிழ் தலைவாஸ் உள்பட 6 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.

3 மாத காலம் நடைபெற்ற இந்த கபடி கொண்டாட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- பாட்னா பைரட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பலம் வாய்ந்த பாட்னா அணிக்கு குஜராத் அணி ஈடுகொடுத்து விளையாடியது. இதனால் தொடக்கத்தில் குஜராத் அணி முன்னிலைப் பெற்றது. ஒரு கட்டத்தில் பீகார் 6-14 என பின்தங்கியிருந்தது. பின்னர் பாட்னா அதிரடியாக விளையாடியது. இதனால் முதல் பாதி நேரத்தில் பீகார் அணி 21-18 முன்னிலைப் பெற்றது.

2-வது பாதி நேரத்திலும் பீகார் அணி கையே ஓங்கியது. இறுதியில் பாட்னா அணி 55- 38 என மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
#33
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்

1523953838226.png

6-வது புரோ கபடி லீக் தொடர் அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளராக கேரளாவை சேர்ந்த பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் யு மும்பா அணியின் பயிற்சியாளராக இருந்தவர் ஆவார். கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரன் டெக்னிக்கல் டைரக்டராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தமிழ் தலைவாஸ் அணிக்கு இளம் வீரர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
#34
கபடி மாஸ்டர்ஸ் - லீக் போட்டியில் கென்யாவை வீழ்த்தியது இந்தியா

1529830973732.png

இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் நேற்று தொடங்கியது. அறிமுக ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - கென்யா அணிகள் மோதின.

தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய வீரர்களை பிடிக்க முடியாமல் கென்யா வீரர்கள் திணறினர். அதேசமயம் இந்திய வீரர்கள் கென்யா வீரர்களை அவுட் ஆக்கி புள்ளிகளை தட்டிச்சென்றனர். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்திய அணி 27-9 என முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 21 புள்ளிகளும், பாகிஸ்தான் 10 புள்ளிகளும் எடுத்தது. இறுதியில் இந்தியா 48-19 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈரான் 54-24 என அர்ஜெண்டினாவை வீழ்த்தியது. இந்தியா தனது அடுத்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 25-ம் தேதி எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டிகள் ஜூன் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.