Kambu Rotti for Weight Loss - கம்பு ரொட்டி

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#1
கம்பு ரொட்டி

தேவையானவை:

கம்பு மாவு-1 கப், வெங்காயம்-1, தக்காளி- 1, பச்சை மிளகாய்-4, கொத்தமல்லி சிறிதளவு, மஞ்சள் தூள்-1 சிட்டிகை, எண்ணெய், உப்பு தேவையான அளவு.

செய்முறை:

கம்பு மாவில் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து வைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, ரொட்டிகளாக சுடவும். பிறகு ரொட்டிகளை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி, அதில் மஞ்சள்த்தூள், உப்பு சேர்த்து சிறிது வதக்கவும். இக்கலவை நன்றாக வதங்கியதும், அதில் நறுக்கிவைத்த ரொட்டி துண்டுகளை போட்டு
நன்றாக கிளறவும். பிறகு இதில், நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.

கம்பு மிகவும் ஆரோகியமானது. இதை காலை நேர உணவாக எடுத்துக்கொள்ளலாம். அதிக நேரம் பசி தாங்கும் உணவு இது.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.