Keep the Umblical Cord for 3 minutes-தொப்புள் கொடி 3 நிமிடங்கள் முக்கிய&#299

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தொப்புள் கொடி 3 நிமிடங்கள் முக்கியம்!


குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை வெட்டிவிடுவது உலகெங்கிலும் இருக்கும் வழக்கம்தான். ‘தொப்புள் கொடி வெட்டப்படும் இந்த நேரத்தை 3 நிமிடங்களுக்காவது நீட்டிப்பது நல்லது’ என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

ஸ்வீடனில் 263 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில்தான் இந்த வியப்பூட்டும் உண்மை வெளிவந்துள்ளது. பிறந்தவுடன் தொப்புள் கொடி வெட்டப்பட்ட குழந்தைகளையும், 3 நிமிடங்களுக்குப் பிறகு தொப்புள் கொடி வெட்டப்பட்ட குழந்தைகளையும் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டார்கள். தாமதமாக தொப்புள்கொடி வெட்டப்பட்ட குழந்தைகளுக்குத் தாயிடமிருந்து கூடுதலாக ரத்தப் பரிமாற்றம் நடந்திருப்பது தெரிய வந்தது.

குழந்தைகளுக்கு 4 வயதானபோது ஆய்வாளர்கள் அவர்களைக் கவனித்தார்கள். தாமதமாக தொப்புள்கொடி வெட்டப்பட்ட குழந்தைகள் போதுமான இரும்புச்சத்துடனும் நல்ல மூளைவளர்ச்சியுடனும் ஆரோக்கியமாக இருந்தார்கள். இவர்களுக்கு, நரம்பு மண்டலங்கள் சிறப்பாக செயல்படுவதையும், சமூகத்தில் பழகும் திறன் மேம்பட்டு இருப்பதையும் JAMA Pediatrics என்ற மருத்துவ இதழில் ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த ஆய்வை ஏற்றுக் கொண்ட உலக சுகாதார நிறுவனம், குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது காத்திருந்து தொப்புள் கொடியை வெட்டுமாறு பரிந்துரைத்துள்ளது.
 
Joined
Aug 26, 2015
Messages
7
Likes
5
Location
Chennai
#2
Re: தொப்புள் கொடி 3 நிமிடங்கள் முக்கியம்

very informative. can i say this to doctor? they will do like this and wait for 3 minutes?
 

Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,422
Likes
18,409
Location
Chennai
#3
Re: தொப்புள் கொடி 3 நிமிடங்கள் முக்கியம்

நிரூபிக்கப்பட்ட உண்மையா லஷ்மி???ஆச்சர்யமா இருக்கே...:)
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
Re: தொப்புள் கொடி 3 நிமிடங்கள் முக்கியம்

very informative. can i say this to doctor? they will do like this and wait for 3 minutes?
நிரூபிக்கப்பட்ட உண்மையா லஷ்மி???ஆச்சர்யமா இருக்கே...:)
இது ஒரு பிரபல தமிழ் மருத்துவ செய்திகளை வெளியிடும் இந்த வார
இதழில் வந்த லேட்டஸ்ட் நியூஸ் இது.நான் மருத்துவ செய்திகளை
போடும் போது நம்பகமான தமிழ் வார மாத பத்திரிகையின் செய்திகளையே பதிவு செய்கிறேன்.அதுவும் முக்கியமாக டாக்டர்களின் இன்டெர்வியுவை மட்டும் முடிந்த வரை பதிவு செய்கிறேன்.
 

Geethanjali16

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2015
Messages
1,722
Likes
4,980
Location
CHENNAI
#5
Re: தொப்புள் கொடி 3 நிமிடங்கள் முக்கியம்

Oh wow! super info idhu palan kodukkum endraal nichayam maruthuvamanaigalil kaiyaalvaargal.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#6
Re: Keep the Umblical Cord for 3 minutes-தொப்புள் கொடி 3 நிமிடங்கள் முக்கிய&

Very useful suggestion.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.