Kethara Gowri Virat! - கேதார கௌரி விரதம்!

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,098
Likes
76,890
Location
Hosur
#1
கேதார கௌரி விரதம்

விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதம் கேதார கெளரி விரதம். திருக்கைலாய மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளை. விநாயகனும் முருகனும்கூட இருந்தனர். முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும் கூடியிருந்தனர். நாரதர் இசை மீட்டினார். நந்தி மத்தளம் கொட்ட, ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஆகியோரின் நடனம் அமர்க்களமாக நடந்தேறியது.

அப்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் விகடக்கூத்து ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்தார். பிறகு உமாதேவியை விட்டுவிட்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கினர். கோபமுற்ற உமாதேவி தன்னை பிருங்கி முனிவரின் உடலிலிருந்த சக்தியை எடுத்துக் கொண்டார். அதனால் சபையிலே சோர்ந்து வீழ்ந்தார் அம்முனிவர். சிவபெருமான் பிருங்கி முனிவரிடம் தடியொன்றைக் கொடுத்து அதனை ஊன்றுகோலாகக் கொண்டு நடக்க வழி செய்தார். மீண்டும் உமாதேவிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனே சிவபெருமானிடம் கோபித்துக்கொண்டு பூவுலகுக்கு வந்து, ஒரு வில்வ மரத்தடியில் வீற்றிருந்தார். தேவியின் வருகையால் அந்த வனமே புதுப்பொலிவு பெற்றது. அங்கு வசித்த கௌதம முனிவர் இத்திடீர் மாற்றம் ஏன் அறிய முனைந்தார். உமாதேவியைக் கண்டவுடன் விஷயமங்களைத் தெரிந்து கொண்டார்.

புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமி தொடங்கி ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரையுள்ள கேதரேசுரர் விரத மகிமை பற்றி விளக்கினார். உமை அம்மையும் விரதம் மேற்கொண்டு அர்த்தநாரீஸ்வரர் வடிவமானார்.

ஆண்-பெண் சமத்துவம் அறியப்படாத காலத்தில் உமாதேவி பெண்ணுக்கு சம உரிமை கேட்டு வாதாடி அவ்வுரிமையை பெற்றுத்தந்திருக்கிறார். ஆணின் உடலின் பாதியும், பெண்ணின் உடலின் பாதியும் அறுவைசிகிச்சை வாயிலாகப் பொருத்தலாம் என்ற நவீன விஞ்ஞான விந்தையும் இந்நிகழ்வு காட்டுகிறது.

விரதம் அனுஷ்டிக்கும் முறை:

அவரவர்கள் சௌகரியப்படி 21 நாட்களோ, 9 நாட்களோ, 5 நாட்களோ, 3 நாட்களோ அல்லது ஐப்பசி அமாவாசையான தீபாவளியன்று கேதாரகௌரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபடவேண்டும். ஆண்களும் இவ்விரத்தை அனுஷ்டிக்கலாம். முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் “பாரணம்’ பண்ணி விரதத்தை முடித்தல் வேண்டும்.

தீபாவளி அன்று நோன்பிருப்பவர்கள் நாள் முழுவதும் உபவாசமிருந்து ஓம் நமசிவாய மந்திரம் ஜபித்து, அர்த்தநாரீஸ்வரராய், சிவசக்தி சொரூபனாய் முக்கண் முதல்வனை, முப்புரம் எரித்தானை, முத்தலை சூலம் ஏந்தினானை மனதில் தியானம் செய்து மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும். பூஜைக்காக முதலில் மஞ்சள் பிள்ளையாரை செய்வித்து சந்தனம், குங்குமம், புஷ்பம், அருகு சார்த்தி விநாயகரை பதினாறு நாமம் சொல்லி அர்ச்சனை செய்து, பின்னர் தூப தீபம் காட்டி தாம்பூலம் நைவேத்தியம் செய்து தீபாரதணையான பிறகு, ஸ்ரீ கேதாரீஸ்வரரை ஆவாகனஞ் செய்ய வேண்டும். அதாவது அம்மியையுங் குழவியையும் அலங்கரித்து, அம்மியின் மேல் குழவியை நிறுத்தி, குங்குமம், சந்தனம் முதலிய பரிமள திரவியங்கள் அணிவித்து பருத்திமாலையிட்டு, புஷ்பஞ்சார்த்தி அதனெதிரில் கலசம் நிறுத்தி, அதற்கும் பருத்திமாலை புஷ்பஞ்சார்த்தி பூஜை செய்பவர். கேதாரீஸ்வரரை மனதில் தியானம் செய்து, காசி, கங்கா தீர்த்தமாட்டியது போலும், பட்டுப் பீதாம்பரம் ஆபரணங்களினால் அலங்கரித்தது போலும் மனதில் சங்கல்பம் செய்து கொண்டு, வில்வம், தும்பை, கொன்றை மலர்களினால் கேதாரீஸ்வரரை அர்ச்சனை செய்து, முனை முறியாத விரலி மஞ்சள், வெற்றிலை, கொட்டைப்பாக்கு, அரளிப்பூ, அரளி மொட்டு, இலை, வாழைப்பழம், அதிரசம், வகைக்கு நாளைக்கு ஒன்றாக 21 சமர்ப்பணம் செய்து , எலுமிச்சம் பழம் இரண்டு, நோன்புக்கயிறு ( 21 இழை, 21 முடிச்சுடன்) சார்த்தி, தேங்காய் இரண்டு (ஒன்று குல தெய்வத்திற்கு), கருகுமணி, காதோலை, சீப்பு, கண்ணாடி சமர்ப்பித்து, பிரசாதமாக 21 அதிரசம், சர்க்கரைப் பொங்கல், பாயசம், புளியோதரை முதலியன நைவேத்தியமாக சமர்ப்பித்து, தேங்காய் உடைத்து புஷ்ப அக்ஷதை கையில் கொண்டு மூன்று முறை ஸ்ரீ கேதாரீஸ்வரரை வலம் வந்து வணங்கி புஷ்ப அக்ஷதையை சுவாமியின் பாதங்களில் சமர்ப்பித்து, தூப தீபம் காட்டி, நைவேத்தியம், தாம்பூலம் சமர்ப்பித்து, கற்பூர தீபாரதனை காண்பித்து நோன்புக்கயிறை கையில் கட்டிக்கொள்ள வேண்டும். பூஜையின் போது அந்தணரைக் கொண்டு கேதார கௌரி விரதக்கதை பாராயணம் செய்யக் கேட்பது நல்லது.

விரத பலன்:

கல்வியறிவு, பதவி பட்டம், பரிசு, பதக்கம் என பல வளமும் சேரும். வெற்றிகள் தொடரும். குழந்தை பாக்யம் உண்டாகும். மனை, வீடு, வாகனம் வந்து சேரும். கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழ்வர்.

சக்தியெனும் உமையாள் நமக்குக் காட்டிய வழியில் கேதார கெளரி விரதம் இருந்து வளமான வாழ்வு பெறுவோமாக!

Moderator's Note: This Article has been published in Penmai eMagazine October 2014. You Can download & Read the magazinesHERE.

 

Attachments

Last edited:

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,375
Location
Chennai
#4
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,375
Location
Chennai
#5
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.