Kezhvaragu - கேழ்வரகு

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
8,059
Likes
9,472
Location
puducherry
#1
தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்.

அதிக எடை இருப்பவர்கள் எடையை குறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம்.
இது உடல் எடையை குறைக்கும்.

கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக, செய்து சாப்பிடலாம் .
கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக்கூடாது.

இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்டிரால் குறையும்.


இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது.

இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து உள்ளன. கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம். குடலுக்கு வலிமை அளிக்கும். உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.

கேழ்வரகு குடலுக்கு வலிமை அளிக்கும்.

நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம்.

கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.

தகவல் - தினகரன்
 

sumitra

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
26,510
Likes
35,502
Location
mysore
#5
Very useful information about Ragi koozh. thank you !
 

sumitra

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
26,510
Likes
35,502
Location
mysore
#6
While not universally popular, ragi abounds in iron and calcium which helps to build haemoglobin and strengthen bones.Some people won't like to drink ragi koozh. For them I would like to suggest to make roties from ragi flour. The recipe with ragi flour for making "Ragi roti" is as follows:

Note: Spring onions, carrots and green chilli paste add crunch and flavour to these ragi roties.

Ingredients:
1/2 cup ragi flour
1 1/2 tablespoon finely chopped spring onion whites
1 1/2 tablespoon finely chopped spring onion greens
1/4 cup grated carrot
1 1/2 tablespoon fresh curds
1/2 teaspoon green chili paste
salt to taste
1/4 teaspoon oil for kneading
ragi flour for rolling
oil for cooking

Method:
Combine all the ingridients in a deep bowl, add little (but enough) water to knead into a soft smooth dough. Keep aside for 15 minutes.

Knead again with oil till smooth and divide into four equal portions.

Roll out each portion into a circle of 5" diameter like chapathi using little ragi flour for rolling

Heat a non stick tawa and cook each roti using little oil till roti turns golden brown in colour in both sides.

Serve immediately.
 
Last edited:

durgasakthi

Guru's of Penmai
Joined
Jun 29, 2012
Messages
6,098
Likes
16,343
Location
chidambaram
#8
கேழ்வரகு வெல்ல தோசை

என்னென்ன தேவை?

கேழ்வரகு - 200 மில்லி
அரிசிமாவு-50மில்லி
வெல்லம்-200மில்லி தூள் செய்தது
ஏலக்காய் பொடி-2 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல்- 1 கிண்ணம்


எப்படி செய்வது?

வெல்லத்தை 1 கிண்ணம் தண்ணீரில் போட்டு நன்றாக கரைத்து மண் இல்லாமல் வடிக்கவும். வெல்லக் கரைசலில் கேழ்வரகு மாவு , தேங்காய் துருவல், ஏலப்பொடி இவற்றைப் போட்டு நன்றாகக் கட்டியில்லாமல் கரைக்கவும். தேவையானால் மீண்டும். தண்ணீர் விட்டு கரைக்கலாம். மாவு பதம் ரொம்ப கெட்டியாக இருக்கக்கூடாது. அதே சமயத்தில் நீர்க்கவும் இருக்ககூடாது. தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் தடவி துடைத்து மாவை குழிக்கரண்டியால் மேலிருந்து விட வேண்டும், அப்போது தான் ஒரே அளவாக பரவலாக மாவு கல்லில் விழும்.

இதற்கு நெய்யும், எண்ணெய்யும் கலந்து தோசை வார்த்தால் வாசனையாக இருக்கும். இதை மிக எளிதான முறையில் செய்யலாம். இது உடல் ஆரோக்கியத்தற்கும் நல்லது. வெல்லம் கேழ்வரகு சேர்ப்பதனால் இரும்புச்சத்து கிடைக்கிறது. இதே மாவை வெல்லம் போட்டு கெட்டியாக கிளறி அடையாக தட்டலாம். இந்த கேழ்வரகு அடை ரொம்ப ருசியாக இருக்கும். இதற்கு நெய் தொட்டு குழந்தைகளுக்கு தரலாம். இனிப்பு(வெல்லம்) அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு போட்டுக்கொள்ளலாம்.

-dinakaran.
 

durgasakthi

Guru's of Penmai
Joined
Jun 29, 2012
Messages
6,098
Likes
16,343
Location
chidambaram
#9
எனர்ஜி கஞ்சி

என்னென்ன தேவை?

முளை கட்டிய கறுப்பு கொண்டைக் கடலை, வெள்ளை கோதுமை, ராகி - தலா 2 டேபிள்ஸ்பூன், பாதாம் பருப்பு - 4, ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை, சுத்தமான பனங்கற்கண்டு தூள் - 2 டீஸ்பூன், பால் - 1 கப்.

எப்படிச் செய்வது?

முளை கட்டிய கடலை, கோதுமை, ராகி (கேழ்வரகு), பாதாம் ஆகியவற்றை ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்சியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர், பால் கொதிக்கவிட்டு அரைத்த விழுதை சேர்த்து கஞ்சியாக காய்ச்சவும். இத்துடன் சுத்தமான பனங்கற்கண்டு தூள் சேர்க்கவும். அது நன்றாக கரைந்து கஞ்சி பதத்துக்கு வந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறவும் அல்லது எனர்ஜி மில்க்காகவும் சாப்பிடலாம்.

குறிப்பு: கஞ்சியாக சாப்பிடப் பிடிக்காதவர்கள் அரைத்த விழுதை வடித்து (ஒரு மெல்லிய துணியில்) பாலுடன் கற்கண்டு சேர்த்து எனர்ஜி மில்க்காக கொடுக்கலாம். இது, பள்ளிக்குப் போகும் குழந்தைகளுக்கு புரதச்சத்து தரும்.
 

sumitra

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
26,510
Likes
35,502
Location
mysore
#10
எனர்ஜி கஞ்சி

என்னென்ன தேவை?

முளை கட்டிய கறுப்பு கொண்டைக் கடலை, வெள்ளை கோதுமை, ராகி - தலா 2 டேபிள்ஸ்பூன், பாதாம் பருப்பு - 4, ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை, சுத்தமான பனங்கற்கண்டு தூள் - 2 டீஸ்பூன், பால் - 1 கப்.

எப்படிச் செய்வது?

முளை கட்டிய கடலை, கோதுமை, ராகி (கேழ்வரகு), பாதாம் ஆகியவற்றை ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்சியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர், பால் கொதிக்கவிட்டு அரைத்த விழுதை சேர்த்து கஞ்சியாக காய்ச்சவும். இத்துடன் சுத்தமான பனங்கற்கண்டு தூள் சேர்க்கவும். அது நன்றாக கரைந்து கஞ்சி பதத்துக்கு வந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறவும் அல்லது எனர்ஜி மில்க்காகவும் சாப்பிடலாம்.

குறிப்பு: கஞ்சியாக சாப்பிடப் பிடிக்காதவர்கள் அரைத்த விழுதை வடித்து (ஒரு மெல்லிய துணியில்) பாலுடன் கற்கண்டு சேர்த்து எனர்ஜி மில்க்காக கொடுக்கலாம். இது, பள்ளிக்குப் போகும் குழந்தைகளுக்கு புரதச்சத்து தரும்.
Hi durgasakthi, wonderful and very useful எனர்ஜி கஞ்சி recipe you have shared. thank you!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.