Kind attn to you all

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear members and others,

Hope many of you, aware of the problem happened in Novel Discussion and the consequences in other webpages. We want to clarify regarding the same.

ஒரு தளத்தில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் உறுப்பினர்களால் விவாதிக்கப்படும் போது, உங்களுக்கு அவைகள் பிடிக்காத பட்சத்தில் அல்லது தவறான விமர்சனங்களோ, மனதைப் புண்படுத்தும் விமர்சனங்களோ இருக்கும் பட்சத்தில் அதனை தள நிர்வாகத்தினருக்கு முதலில் தெரிவிக்க வேண்டும். நிச்சயமாக பெண்மை நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்கும். அதை விட்டு விட்டு வாக்கு வாதத்தை வளர்த்ததோடு மட்டும் இன்றி தேவையற்ற வார்த்தை பிரயோகங்களும் தகுதியற்ற கமண்ட்ஸ்களையும் போட்டு இங்கிருப்பவர்களை காயப்படுத்தி உள்ளீர்கள்.


இங்கு மொத்தம் 48,380 threads 726,069 postsம், 62,695 membersம் இருக்கின்றன. ஒரு நாளிற்கு பெண்மை இணையத்திற்கு 25,000 users வந்து செல்கின்றனர். இவை அனைத்தையும் போய் ஒவ்வொன்றாக கவனித்துக் கொண்டிருக்க முடியாது. எதாவது பதிவுகள் தவறாக இருக்கும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட நபரோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களோ எங்களுக்கு ரிப்போர்ட் செய்யும் பொழுது, அத்தைகைய பதிவுகள் கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இந்த மாதிரியான கருத்துக்கள் தவிர்க்கப்பட, உரிய நபர்களுக்கு தகுந்த அறிவுரைகளும்/எச்சரிக்கையும் வழங்கப்படும். இது எங்கள் தளத்தின் விதிமுறை. நீங்கள் இங்கு பதிவு செய்வதற்கு முன் இத்தளத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டதால் மட்டுமே இங்கே பதிவுசெய்ய அனுமதிக்கப்படுகிறீர்கள்.

இது தொடர்பாக சில பேரின் முகநூல் தகவல்களையும் படிக்க நேர்ந்தது. அவர்களுக்கு எல்லாம் நாங்கள் சொல்வது, அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் முன்னேற்றத்திற்கு மட்டும் பெண்மையை பயன்படுத்தி கொள்வார்கள்; அதில் தவறில்லை. அதற்காக வேண்டுமானால் தளத்திற்கு வந்து இங்கு இருக்கும் பெண்மை எழுத்தாளர்களுக்கு இங்கே PM வழியாக, தங்கள் பதிப்பகத்தில் புத்தகம் வெளியிடச் சொல்லி கோரிக்கை மட்டும் வைப்பார்கள். மேலும், நீங்கள் இங்கிருக்கும் எழுத்தாளர்களின் email-id and contact no வாங்கித் தரச் சொல்லி கேட்பீர்கள். இங்கிருக்கும் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை உங்கள் பதிப்பகம் வாயிலாக வெளியிட, அவர்களுக்கு தங்களை பரிந்துரை பண்ணச் சொல்லி எங்களை கேட்கவும் செய்தார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்ததினால் மட்டுமே விழைந்த காழ்புணர்ச்சியின் வெளிப்பாடே இத்தகைய முகநூல் பதிவுகள். இவர்கள் எல்லாம் சொல்வதால் மட்டும் பெண்மையின் நம்பகத்தன்மைக்கு எந்த பழியும் வந்துவிடாது. தேவைப்படும் போது மட்டும் வழிவகைகள் கண்டுபிடித்து பயன்படுத்திக் கொள்ளவும், தேவை இல்லை என்று தெரிந்ததும் கசக்கித் தூக்கி எறியவும் தான் தெரியும் இவர்களுக்கு.

Offline மற்றும் வெவ்வேறு பெயரில் தளத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்துக் கொண்டும் இருப்பவர்களுக்கும் ஒரு சில விஷயங்கள் இப்போது தான் தங்கள் கவனத்திற்கு வந்தது போன்ற கண்துடைப்புகள் கண்டு ஆச்சரியமே. duplicate usernameல் இங்கு யார் இருந்தாலும், அவர்களை நாங்கள் warn செய்வோம். இது நடைமுறையில் உள்ள முறை. இந்த தளத்தை நல்ல முறையில் எடுத்துச் செல்ல நாங்கள் இதனை எப்போதும் கடைப்பிடிப்போம்.

இங்கு இருக்கும் ஒரு சில உறுப்பினர்கள் (தாய் - மகள், தாய் - மகன், அண்ணன் - தங்கை, கணவன் - மனைவி) என்று ஒரே கணினியின் மூலம், ஒரு சிலர் ஒரே usernameலும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும், இங்கு தங்களது கருத்துக்களை உபயோகமாகத்தான் பதிவுசெய்கின்றனர், பிரச்சனைகளை உருவாக்குவதற்காக அல்ல.

இந்தத் தளத்தில் எந்த நாவல்களும் பதிவு செய்ய நாங்கள் அனுமதிப்பதில்லை, அந்த நாவல்களை Host செய்ய அனுமதிக்கப்படும் இணையத்தளங்களில் தான் நீங்கள் அதை report செய்ய வேண்டும். (eg.Media fire/4shared etc) அதை விட்டுவிட்டு இங்கு வந்து சொல்வதில் எந்தப் பயனுமில்லை.

Regarding advertisement,
விளம்பரங்கள் இல்லாத தளம் எது என்று சொல்லுங்கள் பார்ப்போம். நீங்கள் வழக்கமாக use பண்ற facebookல், google searchல் விளம்பரங்கள் இருக்கத்தானே செய்கிறது. ஒரு website run பண்ண ஒருமாதத்திற்கு ஆகும் maintenance charge & other expenses இவற்றை எல்லாம் பாலன்ஸ் செய்ய எந்த ஒரு தளத்திலும் விளம்பரங்கள் அவசியமானவையே. ஒரு நிறுவனத்தைப் பற்றியோ அல்லது நிர்வாகம் பற்றியோ, வழிநடத்துனர்கள் பற்றியோ பொதுவில் விமர்சிக்கும் முன் உங்கள் கருத்தை பரிசீலனை செய்வது மிகவும் முக்கியம்.

உங்களை இங்கு எழுத யார் அழைத்தார்கள் என்று சொல்லவில்லை (may be உங்கள் facebook friend list
இருப்பவர்களாயிருக்கலாம்), ஊனமானவர்களை அழ வைத்துள்ளீர்கள் என்று கற்பனை கதை கூறி sympathy create செய்யாதீர்கள். பெண்மை நிர்வாகம் எந்த ஒரு memberயும் காயப்படுத்தியது இல்லை. ஒவ்வொரு பிரச்சினையின் போதும் / எங்களைப் பற்றிய விமர்சனத்தின் போது மட்டுமே நாங்கள் எங்கள் தரப்பு நியாங்களை தான் எடுத்துச் சொல்கிறோம்.

பெண்களை ஒருமையில் அழைத்து கீழ்த்தரமாக முகநூல் மற்றும் இதர தளங்களில் எங்கள் இணையத்தைப் பற்றியும் இங்கே இருக்கும் சக உறுப்பினர்கள் பற்றியும் பேசியது Information Technology Amendment Act(66A) / Section 294,Section 509 IPC என்ற சட்டத்தின்படி தவறாகும்.

நீங்கள் போட்ட statusஐ நீங்களே தகுதியில்லாத status என்று கருதி facebookல் இருந்து நீக்கப்படும்போது நாங்கள் எங்களது Websiteன் தரத்திற்காக தகுதியற்ற பதிவுகளை நீக்குவது எங்கள் கடமையே (உங்கள் பாஷையில் வெட்டிவிடுவது).

உங்களது சர்ச்சைக்குரிய பதிவுகளை நீங்களே நீக்கிவிட்டாலும் எங்களிடம் தேவையான ஆதாரங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளது. மறுபடியும் எங்கள் தளத்தின் பெயரைப் பயன்படுத்தியோ அல்லது எங்களைப் பற்றியோ, இங்கு இருக்கும் நல்லுறுப்பினர்கள் பற்றியோ, வேறுதளங்களில் அவதூறாக பேசுவதோ, அல்லது இங்கிருக்கும் நல்லுறுபினர்களை பயமுறுத்தும் விதமாக Private Message செய்வது தொடர்ந்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது மேற்சொன்ன சட்டப்படி எங்களது வழக்கறிஞர் மூலம் வழக்கு தொடர்வோம்.

நாங்கள் இப்பொழுதும் இங்கே இந்தப் பதிவை யாரையும் காயப்படுத்தும் / புண்படுத்தும் நோக்கத்துடன் எதுவும் சொல்லவில்லை. எங்களைப் பற்றிய தேவையற்ற அவதூறு பேசியவர்களுக்காக மட்டுமே இந்தப் பதிவு. இது போன்ற செயல்களுக்கு முற்றுபுள்ளி வைக்கவே இத்தகைய பதிவு அவசியமாகிப் போனது.

தளத்தின் தரம் கருதி ஏற்கனவே ஒரு சிலரின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இது போன்ற பிரச்சினைகளோ அல்லது பதிவுகளோ தவிர்க்கப்படவேண்டியது முக்கியமானது. பெண்மை உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

பெண்மை உறுப்பினர்களுக்கு: உங்களுக்கு தேவையில்லாத நபர்களிடம் இருந்து Private Message வந்தால் அதனை எங்களுக்கு (Administrators, Super moderators) forward செய்யவும்.

Read more: http://www.penmai.com/forums/stories-novels/54964-novel-discussion-2-a-270.html#ixzz2cV6vRYq6
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Dear Ilavarasi, I don't understand the background of this message. But it is really shows your stubborn position and stand to maintain the dignity of Penmai website. Thank you for all your efforts to maintain the sanctity of this wonderful website.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,525
Likes
140,716
Location
Madras @ சென்னை
#3
ஓகே இளவரசியாரே.
ஹாய் நண்பர்களே,
நமது தலைவி சொன்னால் போல,
நீங்கள் பிறரிடம் ஜாக்கிரதையாக பேசுங்கள்.
தேவை இல்லாத வார்த்தைகள் பேச வேண்டாம்.
நன்றி பற்பல.
director-smiley-emoticon.gif
 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#4
Thank you friends, though you don't know the problems you had still supported us, shows your faith on us. Once again, thanks for the trust “whatever we do is to maintain the nobility & pride of Penmai.com”. We never and ever get back from this.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#5
Thank you friends, though you don't know the problems you had still supported us, shows your faith on us. Once again, thanks for the trust “whatever we do is to maintain the nobility & pride of Penmai.com”. We never and ever get back from this.
Dear Ilavarasi and penmai team members, We once again assure you that we support all your efforts to maintain the dignity & pride of Penmai.com!!
Have a nice day! thank you
 

ramyagovind

Citizen's of Penmai
Joined
Jan 3, 2012
Messages
846
Likes
3,397
Location
chennai
#6
Dear Ilavarasi madam,

My hearty thanks for taking this effort to maintain our dignity of our penmai site.Its a very good strong warning to those who are abiding our penmai rules.hatss of to you mam:thumbsup:thumbsup

Thanks!

Regards,
Ramya
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.