Kitchen Tips - என் சமையலறையில்!

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
இரண்டு வாழைப்பழங்களோடு சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

அதில் ஒன்றரை டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

பிறகு, சிறிது ஏலக்காய்ப் பொடி, ஏதேனும் எசென்ஸ் சேர்க்கவும்.
சுவையான, புதிதான, சத்தான பாயசம் தயார்!
===================================================


நறுக்கிய ஆப்பிள் மீந்துவிட்டதா?

சிறிதளவு உப்பு கலந்த நீரில் போட்டு வையுங்கள்.

நிறம் மாறாமலும் கெடாமலும் இருக்கும்.

=======================================

வாழைப்பழங்களை சீப்பு சீப்பாகத்தான் வாங்க வேண்டும். அதை எதன் மீதும் வைக்கக்கூடாது.
ஒரு கயிற்றில் கட்டி தொங்கவிட்டு உபயோகித்தால் விரைவில் பழுக்காமல் இருக்கும்
==============================================

தர்பூசணியின் தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.
அதில் மிளகுத்தூள் அல்லது மிளகாய் தூள் தூவி, எண்ணெயில் வதக்கிப் பொரியல் செய்யவும். வித்தியாசமான சுவையுடனும் மணத்துடனும் இருக்கும்!
======================================

பாயசம் செய்யும்போது, சிலர் திராட்சைப்பழம் சேர்ப்பார்கள்.
அதற்கு பதில் பேரீச்சம் பழம் நறுக்கிச் சேர்த்தால் வித்தியாசமான சுவை தரும்,
சத்தானதும் கூட!
==================================
ஆரஞ்சுப் பழத்தில் நான்கைந்து கிராம்பு களைக் குத்தி, அதை கிச்சன் அலமாரியில் கட்டித் தொங்கவிட்டு விட்டால், சமையலறை மணம் வீசும்.
பூச்சிகள் எட்டிப் பார்க்காது!
===============================

ஆரஞ்சுப்பழத் தோலை பொடியாக்கி, ரசத்துடன் சேர்த்தால் மணமும் சுவையும் கூடும்.
======================================

. அல்சர் பிரச்னை உள்ளவர்களுக்கு திராட்சை அற்புத மருந்து.
திராட்சையை சாறாக்கி, 50 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை பருகவும்.
சீக்கிரம் குணமாகும்
-------------------------------------------------------------------.

முலாம்பழம் குளிர்ச்சி தருவது.


அதை அப்படியே அல்லது ஜூஸாக செய்து சாப்பிடலாம்.

அது மலச்சிக்கலைத் தடுக்கும்...

சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் கடுகடுப்பு, எரிச்சலையும்

போக்கும்.
==========================================

உள்ளங்கை அளவு உலர்ந்த திராட்சையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.

மறுநாள் அந்த திராட்சையைக் கைகளால் பிசைந்து, சாறு எடுத்து வடிகட்டவும்.
வடிகட்டியதில் சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால்

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாது.
===========================================


கர்ப்பிணிகள் தினமும் இரவு சாப்பாட்டுக்குப் பிறகு உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு வந்தால் பால் நன்கு சுரக்கும்
=====================================.

தக்காளிப்பழத்தில் கால்சியம் சத்து அதிகம்.

கர்ப்பிணிகள் தினமும் உணவில் தக்காளி சேர்த்துக் கொண்டால் பிறக்கும் குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சி நன்றாக இருக்கும்.

பற்களும் உறுதியாக இருக்கும்
=================================.

வில்வப் பழத்தோடு தேனும் சர்க்கரையும் சேர்த்து 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் தோல் நோய்கள் நெருங்காது.
===================================

தர்பூசணிப் பழத்தின் வெள்ளைப் பகுதியைத் தூக்கி எறிய வேண்டாம்.

அதை சீவி, அரிசியுடன் சேர்த்து அரைத்து தோசை வார்க்கலாம்.
உளுந்து தேவையில்லை.
தோசை பிரமாதமாக இருக்கும்.

courtesy;dinakaran
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: என் சமையலறையில்!

Nice tips. thank you Sir!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.