Kitchen tips

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
8,042
Likes
9,439
Location
puducherry
#1
*தோசைக்கு ஊற வைக்கும் போது ஒரு கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து கொள்ளுங்கள். இதை மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.*ஒரு டம்ளர் ரவைக்கு ஒரு கைப்பிடி அளவு குழைய வைத்து வெந்த பாசிப்பருப்பை கலந்து கேசரி செய்தால் ஸ்வீட் ரவா பொங்கல் போல வித்தியாசமான கேசரி கிடைக்கும்.
*எந்த வகையான கிரேவி, மசாலா போன்றவை செய்யும் போதும் ஒரு கைப்பிடி வேர்க்கடலையை தோல் நீக்கி நைசாக அரைத்து சேர்த்தால், கிரேவி சுவையாக இருக்கும்.
*புளிப்பு மோர் அதிகம் மீந்து விட்டால் சுவாமி பித்தளை விளக்குகளை அதில் ஊறப்போட்டு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து விடுங்கள். விளக்குகளில் உள்ள களிம்புகள் நீங்கி பளிச்சென்று இருக்கும். பிறகு சீயக்காய் பொடியால் தேய்த்து சுத்தம் செய்யவும்.
*வெந்து குழைந்துவிட்ட உருளை கிழங்கை ப்ரீசரில் வைத்து, ஒரு மணி நேரத்தில் எடுத்து கத்தியால் கட் செய்து ரோஸ்ட் செய்யவும்.
* சமோசாவுக்கு மாவு பிசையும்போது மைதாமாவை சலித்து ஒரு மெல்லிய துணியில் கட்டி, இட்லி தட்டின் மேல் வைத்து ஐந்து நிமிடங்கள் வரை ஆவி பிடித்து, பிறகு உப்பு, சீரகம் டால்டா போட்டு பிசைந்து செய்தால் மொறு மொறுப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.


நட்ஸும் நல்லதுப்பா!
"நட்ஸ்' என்றாலே கொழுப்பு பொருள். நம் உடம்புக்கு இது நல்லதா?
"நான்-வெஜ் பிரியர்களுக்கு அவர்களின் உணவில் இருந்தே தேவையான கொழுப்பு சத்து கிடைத்துவிடுவதால், அவர்கள் நட்ஸ் சாப்பிட்டே ஆக வேண்டிய அவசியமில்லை.
ஆனால், "வெஜ்-பிரியர்'கள் நட்ஸ் சாப்பிடுவது அவசியமானதே என்கின்றனர் டயட்டீஷியன் நபர்கள்.
பாதாம்: இதில் இருப்பது நல்ல கொழுப்பு அதனால் சிறியவர்களிலிருந்து, பெரியவர்கள் வரை தினமும் நான்கு பாதாம் வரை (தோலுடன்) தாராளமாக சாப்பிடலாம்.
இது கொழுப்புச்சத்து இருப்பவர்களுக்கும் பொருந்தும். "டயட்டில் இருப்பவர்கள் வறுத்த, பொரித்த உணவு பொருட்களை சுத்தமாக நிறுத்திவிட்டு, தினமும் எட்டு பாதாம் சாப்பிட்டால் ஒன்றரை மாதத்தில் 2 கிலோ வரை உடல் எடை குறைக்க முடியும்.
அதேபோல பெண்களுக்கு ஏற்படும் பிரத்யேக வலியையும் பாதாம் குறைக்கும்.
வால்நட்டிலும் நல்ல கொழுப்பு இருப்பதால் தினமும் 2 சாப்பிடலாம்.
அதேபோல, வாரத்திற்கு 20 கிராம் வேர்க்கடலை சாப்பிடலாம். கவனம்... பிஸ்தாவும், முந்திரியும் கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யும். ஆலிவிதை, பூசணி, விதை, வெள்ளரி விதை போன்றவைகளில் நல்ல கொழுப்பு இருப்பதால் இதையும் சாப்பிடலாம்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,303
Likes
83,909
Location
Bangalore
#4
பகிர்வுகளுக்கு நன்றி .....அட ....என்ன இது கேசவன் ......நீங்களும் kitchen டிப்ஸ் குடுக்க ஆரம்பிச்சுட்டீங்க !!!!!
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,052
Location
mysore
#6
பகிர்வுகளுக்கு நன்றி .....அட ....என்ன இது கேசவன் ......நீங்களும் kitchen டிப்ஸ் குடுக்க ஆரம்பிச்சுட்டீங்க !!!!!
Dear Jayanthy, Nalabagham endru nalla samaiyalai patri koorumbodhu en solgiraargal theriyuma? Nala Maharaja sirantha samayal kalaignar. adhanaal nalla samaiyalai patri paaraattum bodhu nalabagam endru kooruvaargal. Bengalorril kooda nalla hotel peyar "Hotel Nalabagh"endru ulladhu. Enave aangal samayal kurippu koduppathil endha aachariyamum illai. Indraiya thinam perumbaalaana maberum chefs ellaam aangalaagave iruppadhai kooda neengal kavanikkalaam. enave Thiru Keshavan Sir samayal tips koduppathil endha vidha viyappum illai. Indha karuththai thaangal marukka maatteergal endru ninaikkiren. thank you
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.