Know the Process of Digestion-ஜீரணமண்டலத்தின் செயல்பாடு

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஜீரணமண்டலத்தின் செயல்பாடு




உணவை வரவேற்று, ஜீரணித்து, சத்துக்களாக மாற்றி, இரத்தத்தில் சேர்ப்பித்தல்சத்துக்களை எடுத்த பின் உண்டாகும் சக்கை, ஜீரணமாகாத பொருட்கள் இவற்றை வெளியேற்றுதல்.

ஜீரணத்திற்கு சம்மந்தமில்லாத வேலைகளையும் ஜீரண மண்டல அவயங்கள் செய்கின்றன. இரத்தம் உறைய தேவையான காரணிகள் மற்றும் ஹார்மோன்கள் உற்பத்தி, ரத்தத்திலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றல் மற்றும் மருந்துகளை ரசாயன ரீதியாக மாற்றுதல் இவைகளும் ஜீரணமண்டல செயல்பாடுகள்.

சமையலுக்கு வெறும் உபகரணங்களும், பாத்திரங்கள் இருந்தால் போதாது. பல சரக்குகளும் வேண்டும். அதே போல் உணவு ஜீரணமாக சில வேதிப்பொருட்கள் தேவை. இவை ஜீரணமண்டலத்திற்கு, பல அவயங்களால் தயாரித்து கொடுக்கப்படுகின்றன.

சாதாரணமாக மனிதனின் இரைப்பை ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு கேஸ்டிரிக் ஜுஸை சுரக்கும்.

இந்த ஜீரண சாற்றை அகட்டு நீர், இரைப்பை நீர் என்றும் சொல்லுவார்கள்

ஜீரண மண்டலம் - அதிசய விவரங்கள்

· உணவு வாயில் மெல்லும் நேரம் 5-30 வினாடி
· உணவு முழுங்க 10 வினாடி
· குடலில் (வயிற்றில்) உணவை 'சுழற்ற' - 3-4 மணி நேரம்.
· குடலில் பயணிக்க உணவுக்கு 3 மணிநேரம் தேவை
· உணவு காய்ந்து 18 மணி- 2 நாட்கள் பெருங்குடலில் தங்கும்

சுரக்கும் பொருட்கள்

ஹைட்ரோ குளோரிக் அமிலம்:-
இயல்பாக வீரியமுள்ள அமிலம் இது. ஜீரண சாற்றில் முக்கியமான பொருள் இந்த அமிலம் அதிகமாகி வயிற்றின் சுவர்களை தாக்குவதால் ஏற்படும் கோளாறுகள் பல வயிற்றை காக்கும் "கவசங்களாலும்", வயிற்றின் சுவர்கள் பிரத்யேக செல்களால் அமைக்கப்பட்டிருப்பதாலும், அமிலத்தின் அரிப்புத்தன்மையை, வயிறு ஒரளாவது தடுக்கும். உணவுக்குழாயின் சுவர்களில் உள்ள செல்கள் சாதாரணமானவை. எனவே வயிற்றின் அமிலம் மேலேறினால், உணவுகுழாய் பாதிக்கப்படும். ஹைட்ரோகுளோரிக் அமிலம், தனது அமிலத்தன்மையால், புரதத்தை மாற்ற பெப்சின் என்ஜைமுக்கு உதவுகிறது. தவிர பாக்டீரியாக்களை அழித்து தொற்று நோய்கள் வராமல் தடுக்கும். வயிறு சுரக்கும் கேஸ்ட்ரின் ஹார்மோன் (Gastrin) மற்றும் ஹிஸ்டாமைன் (Histamine), இவைகள் அமிலசுரப்பை தூண்டும்.

பெப்சின்:-

இது ஒரு என்ஜைம். வயிறு சுரப்பிகள் சுரக்கும் 'பெப்சினோஜென்' (Pepsinogen) என்ற வேதிப்பொருள், ஹைட்ரோகுளோரிக் அமிலத்தால் பெப்சினாக மாற்றப்படுகிறது. ஒரு தடவை பெப்சின் உருவானால் போதும். அதுவே பெப்சினோஜென்னை பெப்சினாக மாற்றிக் கொள்ள ஆரம்பித்துவிடும். பெப்சின் உணவின் புரதங்களை, ஜீரணிக்கத்தக்க அமினோ அமிலங்களாக மாற்றும். அமினோ அமிலங்கள் தான் எல்லா வகை புரதங்களிலும் உள்ள அடிப்படை வேதிப்பொருள் இவற்றில் பல வகை அமிலங்கள் உள்ளன. சிலவற்றை உடல் உருவாக்கும். சிலவற்றை உணவுப் பொருட்களிலிருந்து கிரகித்துக் கொள்ளும்.

முதல் நிலையில், புரத ஜீரணத்திற்காக, உணவுப்புரதம் என்ஜைம்களால் 'பெப்டோன்'களாக மாற்றப்படும். இவை பெரிய துகள்களான புரதம். பிறகு 3 அல்லது அதற்கு மேற்பட்ட அணுமூலக்கூறுகள் உள்ள புரதம், பெப்டைட் என்றும் பாலிபெப்டைட் என்றும் கூறப்படும். தவிர பெப்டிடேஸ் என்ற பெப்சின் என்ஜைம் பிரிவுகளும் உணவு புரதத்தை பிரிக்க உதவும். இந்த பெப்சின் என்ஜைம் பிரிவுகள் 'என்டோபெப்டிடேஸ்' எனப்படும். தவிர ட்ரைப்ஸின் போன்ற என்ஜைம்களும் புரதத்தை பிரிக்கின்றன. பெப்சினும் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் சேர்ந்து ஜீரணத்திற்கு உதவுவது மட்டுமல்ல, உணவோடு வரும் கிருமிகளையும் கொல்லும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.