Kozhukkattai Recipes - கொழுக்கட்டை வகை உணவுகள்

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,418
Likes
84,274
Location
Bangalore
#1
Hi Friends,

As Vinayagar Chathurthi is on board, let us help others with this topic of Kozhukkattai Recipes as the Recipe of the month for September 2018.

These are Healthy dishes too. It can not only be prepared with the regular Rice, but also with Millets, jaggery etc.

All the members are requested to share as many varieties of Kozhukkattai recipes and help others.

You can also give lots of tips for the perfect outcome of these recipes.

One small request:

Please avoid Copy- Pasting the recipes from any other sources.


தோழிகளே

விநாயகர் சதுர்த்தி நெருங்குவதால் இந்த செப்டம்பர் 2018 மாதத்திற்கான தலைப்பாக கொழுக்கட்டை வகை உணவுகள் என்று வைத்துக் கொள்வோம் .

இவைகள் மிகவும் சத்தான உணவு வகையும் கூட. பச்சரிசி மாவில் மட்டுமல்லாது , புழுங்கலரிசி , சிறுதானிய வகைகள் , வெல்லம் இவையெல்லாம் சேர்த்தும் தயாரிக்கலாம் .

உங்களுக்குத் தெரிந்த அனைத்து வகை கொழுக்கட்டை ரெஸிபிக்களையும் இங்கே தெரிவித்து மற்ற அனைவருக்கும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் .

கூடவே எந்தவகை டிப்ஸ் இது சம்பந்தமாக இருந்தாலும் அவற்றையும் கொடுத்து., தெரியாத பலருக்கும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் ..

வேறொருவர் கொடுத்த தலைப்பிலேயே மற்ற பலரும் கூட ரெஸிபிக்களை.த் தரலாம் .

ஒரே ஒரு விண்ணப்பம் :
.
இங்கே பகிரப்படும் ரெஸிபிக்களை மற்ற தளங்களில் இருந்தோ , செய்தித்தாள்களில் இருந்தோ copy- paste செய்யாமல் , நீங்களே உங்கள் தயாரிப்பு முறையை தரவும் .
 

Strawberry

Commander's of Penmai
Joined
May 27, 2016
Messages
1,362
Likes
1,567
Location
srilanka
#3
பிடி கொழுக்கட்டை

தேவையானவை :

 • அரிசி மாவு – 250கி (1கப்
 • வெல்லம் – 250 கி (1 கப்)
 • தேங்காய் – 1/2 கப் (நறுக்கியது)
 • எள் – 2 ஸ்பூன்
 • நெய் – 2 ஸ்பூன்
 • ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்
 • தண்ணீர் – 1 கப்
செய்முறை :

 • முதலில் தேங்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் துருவிக் கொள்ளவும்.
 • தேங்காய் துண்டுகளை ஒரு கடாயில் சிறிதளவு நெய்யை ஊற்றி லேசாக வதக்கிக் கொள்ளவும்.
 • நெய்யில் வறுத்த தேங்காயை கொழுக்கட்டையுடன் சாப்பிடும் போது ருசியாக இருக்கும்.
 • பிறகு வெல்லத்தை (ஒரு கப் வெல்லம் = ஒரு கப் தண்ணீர்) ஒரு கடாயில் போட்டு அளந்து வைத்திருக்கும் தண்ணீரை ஊற்றி வெல்லப் பாகு காய்ச்ச வேண்டும்.
 • பின்பு பாகுவை வடிகட்டியால் இறுத்துக் கொள்ளவும். எள்ளையும் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
 • ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதன் பிறகு வறுத்த எள் & ஏலக்காய் தூள் போட்டு, அதனுடன் வதக்கிய தேங்காயையும் சேர்த்து நன்கு கிளறவும்.
 • பிறகு சூடான வெல்ல பாவை கொஞ்சம் கொஞ்சமாக அரிசி மாவுடன் ஊற்றி நன்கு கிளறவும். மாவு கையில் ஓட்டாதவாறு நன்கு பிசையவும்.
 • மாவை சிறு உருண்டையாக உருட்டி அதனை கொழுக்கட்டை வடிவிற்கு கைகளிலேயே பிடித்துக் கொள்ளவும்.
 • அனைத்து மாவையும் கொழுக்கட்டைகளாக பிடித்துக் கொள்ளவும். பிறகு கொழுக்கட்டை களை இட்லி தட்டில் ஒன்றன் பின் ஒன்றாக வைத்து இட்லி கொப்பரை ரைஸ் குக்கரில் வைத்து அவிக்கவும்.
 • கொழுக்கட்டை வேக அதிக நேரம் தேவைப்படும், அதனால் தண்ணீர் அதிகம் ஊற்றி வேக விடவும்.
 • பிறகு ஒரு குச்சி கத்தியால் கொழுக்கட்டையை குத்திப் பார்க்கும் போது மாவு ஓட்டாமல் இருந்தால் கொழுக்கட்டை தயாராகி விட்டது.
 • இப்பொழுது கொழுக்கட்டையை இட்லி தட்டில் இருந்து எடுத்து விடலாம்.
 • ருசியான, சூடான பிடி கொழுக்கட்டை ரெடி.
உங்கள் தோழி
ஐஷு
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,438
Likes
26,136
Location
Sri Lanka
#5
கொழுக்கட்டை

அரிசி மா - 1 கப்
அவித்த கோதுமை மா - 1 கப்
தேவையான அளவு உப்பு

வறுத்து நெரித்து கோது நீக்கிய பயத்தம் பருப்பு - 1கப்
தேங்காய் துருவல் - 2 கப்
துருவிய வெல்லம் - 1 கப்
ஏலக்காய் பொடி - தேவையான அளவு

ஒரு பாத்திரத்தில் அளவான நீரில் பயத்தம் பருப்பை சேர்த்து வேக வைத்து இறக்கி, அதனுடன் தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து ஒரு கரண்டியால் கிளறி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மா, அவித்த கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். நன்கு கொதித்தநீரை வேறொரு பாத்திரத்தில் ஊற்றி 1 நிமிடம் ஆற வைத்து அதை மா கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி உருண்டைகளாக பிடிக்கும் பதம் வரும்வரை அகப்பை காம்பால் கிளறவும்.

மாக்கலவையை உருண்டைகளாக உருட்டி பின் ஒவ்வொன்றையும் வட்ட வடிவமாக தட்டி நடுவே பயத்தம் கலவையை வைத்து இரண்டாக மடித்து நுனியை சேர்த்து மடித்து கொழுக்கட்டை பிடிக்கவும்.

இவற்றை இட்டலிச் சட்டியில் வேக வைத்து இறக்கவும்.


நன்றி ஜயந்தி :).
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,418
Likes
84,274
Location
Bangalore
#7
Thanks @Strawberry for your mouthwatering Pidikozhukkattai recipe. please do share whichever else you know.


Thanks @gowrymohan akka for your different kodhumai & payatham paruppu kozhukkattai recipe. இதை இப்போதுதான் கேள்விப்படுறேன் .please do share whichever else you know.
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,438
Likes
26,136
Location
Sri Lanka
#8
Thanks @gowrymohan akka for your different kodhumai & payatham paruppu kozhukkattai recipe. இதை இப்போதுதான் கேள்விப்படுறேன் .please do share whichever else you know.
Welcome and Thank you Jayanthy. நிச்சயமா share பண்றேன்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.