Ladies finger - வெண்டைக்காய்

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
உலகளவில், வெண்டைக்காய் உற்பத்தியில் இந்தியா, 73.25 சதவீதம், நைஜீரியா, 12.10 சதவீதம், சூடான், 3.24 சதவீதம் என மொத்தம், 90 சதவீதம் பங்களிக்கின்றன.
கடந்த 2010-11ல் இந்தியாவின் சாகுபடி பரப்பு, 3.96 லட்சம் எக்டரிலிருந்து, 4.98 லட்சம் எக்டராகவும், உற்பத்தி, 40.70 லட்சம் டன்னிலிருந்து, 57.84 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
வெண்டைக்காய் உற்பத்தியில், ஆந்திர மாநிலம், 11.84 லட்சம் டன்களுடன் முதலிடமும், மேற்கு வங்கத்தில், 8.62 லட்சம் டன்களுடன் இரண்டாமிடமும், பீகார் மாநிலத்தில், 7.88 லட்சம் டன்களுடன் மூன்றாமிடத்திலும் உள்ளது.
மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் வெண்டைக்காய் உற்பத்தி குறைவாகவே உள்ளது. வெண்டைக்கான தரம் மற்றும் ஏற்றுமதிக்கு வரைமுறை ஏதும் இல்லாத நிலையே உள்ளது. ஆனால், நடைமுறையில், 3.5 அங்குலம் நீளமுள்ள பச்சை நிறமுடைய இளம் காய் ஏற்றுமதிக்கு உகந்ததாக கருதப்படுகிறது.

மிழகத்தில், சேலம் மாவட்டத்தில் தலைவாசல், மகுடஞ்சாவடி, கொங்கனாபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும், கோவை மாவட்டத்தில் காரமடை, பெரிய நாயக்கன் பாளையம் மற்றும் தொண்டாமுத்தூர் வட்டாரத்திலும், தேனி மாவட்டத்தில், ஆண்டிப்பட்டி வட்டாரத்திலும், திருச்சி மாவட்டத்தில், வையம்பட்டி வட்டாரத்திலும் அதிகளவு பயிரிடப்படுகிறது.

nandri;''dinamalar'
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.