Laugh and be healthy - வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்ட&#3009

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1



வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும்..
.............................................................................

நீங்கள் சிரித்தால் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்.

அழுதால் நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டிருப்பீர்கள்..

நகைச்சுவை என்பது சில சமயம் கேலி செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

எதையும் கேலி செய்வதற்கு விஷயத் தெளிவு வேண்டும்.

அதை நகைச்சுவையோடு கேலி செய்வதற்கும்
புத்திசாலிதனம் வேண்டும்.

அதுவும் பிறர் மனம் புண்படாமல் கேலிசெய்ய,
பக்குவமான அறிவு வேண்டும்.

அத்துடன் சிந்தனையை தூண்டிவிட தெளிந்த மனம் வேண்டும்.

சிரிப்பு ஆக்கபூர்வமமானது.

சிரியுங்கள்,

மனம் சுத்தமாகிறது.

ஆரோக்கியமடைகிறது.

மனம் ஆரோக்கியமடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது.

அப்படி ஒரு மருந்து இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்..

சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால்,
அது மிகையல்ல.

நோய்விட்டுப் போக மனம் விட்டுச் சிரியுங்கள்.

சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டும் உள்ள,
மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு.

இன்றைய கால கட்டத்தில் நமக்கு கொஞ்சம் நகைச்சுவையும், சிரிப்பும் பஞ்சம்ஏற்பட்டு இருப்பதாகவே கூறலாம்.

சமுதாய சூழ் நிலையும், மன உளைச்சலும் இதற்கு காரணம் கூறலாம்.

நம்மில் சிலர்- பெரிய பதவியிலுள்ளவர்கள்,

‘சிரித்துப் பேசக் கூடாது’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறுக்கமாகவே இருக்கிறார்கள்.

இந்தப் போக்கு மாறவேண்டும்.

நகைச்சுவை உணர்வால் மட்டுமே பொறுமை வளர்க்க முடியும்.

நண்பர்களிடத்தில் தனித் தோற்றத்தையும், குடும்பத்தினரிடம்
அதிகம் நெருக்கத்தையும்,எந்த விதமான இடர்பாடுகளையும் எளியதாகக் கையாளவும், சிறப்பாக நமக்கு உதவி செய்கிறது.

மனிதனின் சோர்வை அகற்றுவது சிரிப்பு.

சிரிக்கும் உணர்வு இருந்தால் எத்தனை கொடிய துன்பத்தையும் துரத்தமுடியும்.

கஷ்டங்கள் யாவற்றிலிருந்தும் விடுபட, சிரிப்பு ஒன்றுதான் வழி.

உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நல்ல மனத்தோடு இருக்கிறீர்கள் என்று பொருள்.

சிரிப்பு உங்களுக்கு உடல் நலத்தைத் தருகிறது.

இந்த பரபரப்பான வாழ்க்கைச் சுழலில் மனம்விட்டு அடிக்கடி சிரிப்பது மிக அவசியமாகிறது.

ஆகவே,

எப்போதும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும்.

மனம் விட்டு சிரிங்க.,

நலம் சிறக்கும்..,
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#2
Re: Laugh and be healthy - வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்ட&a

முற்றிலும் உண்மை . பகிர்வுக்கு மிக்க நன்றி .
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
Re: Laugh and be healthy - வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்ட&a

Very interesting! thank you sir!
 

chitramumbai

Commander's of Penmai
Joined
Sep 17, 2013
Messages
2,313
Likes
12,022
Location
mumbai
#4
Re: Laugh and be healthy - வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்ட&a

thank you for sharing............
 

pet

Friends's of Penmai
Joined
Mar 28, 2012
Messages
303
Likes
360
Location
cochin
#5
Re: Laugh and be healthy - வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்ட&a

It's true.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.