Leftover Rice - பழைய சாதம்

ramyas

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 12, 2012
Messages
16,126
Likes
43,849
Location
Chennai
#1
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில:

1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.
2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.
3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.
6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

**
பழைய சாதத்தை எப்படி செய்வது:
பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.
ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும்.
மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.)

மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!

Moderator Note:

This Article has been published in
Penmai eMagazine Feb 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,805
Likes
140,748
Location
Madras @ சென்னை
#3
Goodonyaa...
:thumbsup
 

ramyas

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 12, 2012
Messages
16,126
Likes
43,849
Location
Chennai
#4
thanks yamuna and bro:thumbsup:thumbsup
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#5
"நமது தோட்டத்து பச்சிலைக்கு விரியம் மட்டு".
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#6
[FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, ]Our villagers love this food. Elite people make fun of this.Our ancestors enjoyed. [/FONT]
[FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, ]Now an American said . Indian may try [/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, ]at-least[/FONT]
[FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, ]Thanks for sharing this.[/FONT]
 

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,399
Location
puducherry
#7
[FONT=Arial, Helvetica, ]கொஞ்சம் சைனஸ் நோய் உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது ஏன் என்றால் பழைய சாதம் உடலுக்கு அதிகமான குளிர்ச்சி தரும் .

நீரும் சோறும் உண்டால் நினைவாற்றல் கூடும் ;


பெண்கள் பேறு காலத்திற்குப்பின் மழை ,குளிர் என எந்த காலமானாலும் எந்த அளவு சோறும் நீரும் உண்கிறார்களோ அந்த அளவு அவர்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு பால் சுரக்கும் ;
குடலில் அமிலத்தன்மை உள்ளவர்கள் இதை தவிர்க்கவும்

[/FONT]பழைய சாதம் (கர்ப்பிணி பெண்களுக்கு)

பழைய சாதம் - இரண்டு குழிக்கரண்டி
மோர் - மூன்று டம்ளர்
வெங்காயம் - இரண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - தேவைக்க

[h=2]சாதத்தை இரவே தண்ணீரில் ஊற வைக்கவும்.காலையில் தண்ணீரை பிழிந்து விட்டு அதை கைகளால் நல்ல பிசைந்து அதில் மோர், உப்பு வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி போட்டு அத்துடன், நார்த்தங்காய் ஊறுகாய், புதினா துவையல் சேர்த்து சாப்பிடவும்.ஆகா தேவாமிர்தம்[/h]
எதுவுமே சாப்பிட பிடிக்கவில்லையா இதை குடிங்க ஒரு சத்தான ஆகாரம்.
பழைய சாதமும் புதினா துவையலும்.
வாவ் சூப்பர்
நிலத்தை உழும் விவசாயி ஒரு கோப்பை பழைய சாதமும், ஒரு கோப்பை கேழ்வரகு கஞ்சியும் குடித்து விட்டு தான் வேலைக்கு செல்கிறான்.
அப்ப அதில் எவ்வளவு தெம்பு இருக்கும்
ஒரு நிலம் முழுதும் உழுது விட்டு வீடு திரும்புகிறான்
 

ramyas

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 12, 2012
Messages
16,126
Likes
43,849
Location
Chennai
#8
thanks sir, datch
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#9
Dear Ramya, you have explained the health benefits of pazhaiya saadham. thank you very much
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#10
கொஞ்சம் சைனஸ் நோய் உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது ஏன் என்றால் பழைய சாதம் உடலுக்கு அதிகமான குளிர்ச்சி தரும் .

நீரும் சோறும் உண்டால் நினைவாற்றல் கூடும் ;


பெண்கள் பேறு காலத்திற்குப்பின் மழை ,குளிர் என எந்த காலமானாலும் எந்த அளவு சோறும் நீரும் உண்கிறார்களோ அந்த அளவு அவர்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு பால் சுரக்கும் ;
குடலில் அமிலத்தன்மை உள்ளவர்கள் இதை தவிர்க்கவும்

பழைய சாதம் (கர்ப்பிணி பெண்களுக்கு)

பழைய சாதம் - இரண்டு குழிக்கரண்டி
மோர் - மூன்று டம்ளர்
வெங்காயம் - இரண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - தேவைக்க

சாதத்தை இரவே தண்ணீரில் ஊற வைக்கவும்.காலையில் தண்ணீரை பிழிந்து விட்டு அதை கைகளால் நல்ல பிசைந்து அதில் மோர், உப்பு வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி போட்டு அத்துடன், நார்த்தங்காய் ஊறுகாய், புதினா துவையல் சேர்த்து சாப்பிடவும்.ஆகா தேவாமிர்தம்


எதுவுமே சாப்பிட பிடிக்கவில்லையா இதை குடிங்க ஒரு சத்தான ஆகாரம்.
பழைய சாதமும் புதினா துவையலும்.
வாவ் சூப்பர்
நிலத்தை உழும் விவசாயி ஒரு கோப்பை பழைய சாதமும், ஒரு கோப்பை கேழ்வரகு கஞ்சியும் குடித்து விட்டு தான் வேலைக்கு செல்கிறான்.
அப்ப அதில் எவ்வளவு தெம்பு இருக்கும்
ஒரு நிலம் முழுதும் உழுது விட்டு வீடு திரும்புகிறான்
Thank you Sri Keshavan Sir for your valuable information on the Pazhaiya soru.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.