Lesson for the Father from his daughter-அன்று விடுமுறை நாள்...

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,723
Location
THENI
#1
அன்று விடுமுறை நாள்...



விடுமுறை நாள் என்றாலே வீட்டில் அவ்வப்போது செல்ல சண்டைகள் நடக்கும்.

குடும்பம் என்றால் சண்டைகள் நடப்பது சகஜம் தானே.

இன்று அந்த செல்ல சண்டை நடந்தது மகளுக்கும் தாய்க்கும் நடுவே.


யாரின் தந்தை அதிக பாசக்காரர் என்ற சண்டை தான் தாய்க்கும், மகளுக்கும் நடுவே..

நான் எதைக்கேட்டாலும் வாங்கித்தருவார் என் தந்தை என்றாள் தாய்.

நான் கேட்காமலேயே அனைத்தையும் வாங்கித்தருவார் என் தந்தை என்றாள் மகள்.

என்னை தங்கத் தட்டில் தாங்கியவர் என் தந்தை என்றாள் தாய்.

என்னை தன் நெஞ்சில் போட்டு தாங்கியவர் என்றாள் மகள்.

செல்ல சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தது.

என் தந்தை தான் பாசக்காரர் என்னை அடிக்கவே மாட்டார் என்றாள் தாய்.


இல்லை இல்லை... என் தந்தை தான் பாசக்காரர் மற்றவர்கள் என்னை அதட்டக் கூ ட விடமாட்டார். என் தந்தை உங்களை அடிப்பது தெரிந்து..,,, மௌனமாக இருக்கிறாரே என் தாத்தா..அப்போ என் தந்தை தானே பாசக்காரர் என்றாள் மகள் விளையாட்டாக.


இதை கேட்டுக்கொண்டிருந்த தந்தைக்கு தூக்கிவாரிப் போட்டது.

தான் தன் மகளை நேசிப்பது போல் தானே தன் மனைவியையும் அவரின் தந்தை நேசித்திருப்பார் என்று உணர்ந்தார்.


மகளின் செல்ல சண்டை தந்தைக்கு பாடம் புகட்டியது.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,829
Location
Bangalore
#4
தகப்பன் சாமி ஆகினாளா பெண் !!
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#6
supermom superdad mathiri .. super daughter:thumbsup
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,135
Likes
14,757
Location
California
#8
This is how kids sometimes give a direct hit on our ego, without even realizing it.

They are our silent students(observing and learning what we do ) and silent teachers.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.