life

Joined
Oct 2, 2014
Messages
3
Likes
5
Location
chennai
#1
தோல்வி


வாழ்க்கையில் தோல்விகளை சந்தித்து பழகி விட்டது.
எனக்கு இந்த ஜென்மத்தில் கடவுள் கொடுத்த பரிசாக அவன் வந்தான்
பழக்கம் சுமார் 11 வருடங்கள்
என் கஷ்டம் துக்கம் சோகம் சந்தோசம் எல்லாம் அவன் தான்
என்னை மறந்து என் கஷ்டம் மறந்து அவனுடன் வாழ்ந்தேன் மனதில்
வீட்டில் மூத்தவர்களுக்கு திருமணம் முடிந்து எனக்கு வரன் பார்க்க ஆரம்பிக்கும்
சொன்னேன் அவனைப்பற்றி , ஆரம்பித்தது சண்டை சந்தேகம்
இந்த 11 வருடமும் எனக்காகவும் என் சந்தோஷம் மட்டுமே முக்கியம் என்று
வாழ்ந்த அவனை விட்டு என் குடும்பத்துக்காக வேறு ஒருவனை மணக்க
என் மனம் இடம் தர வில்லை
வேறு ஜாதியில் மணம் முடித்தால் குடும்ப கெளரவம் கெட்டு விடும்
உனக்கு அடுத்து இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையாது
சொந்தம் மதிக்காது, மூத்தோர் வாழ்க்கையில் பிரச்சனை வரும்
இதெல்லாம் எனக்கு என் வீட்டில் செய்த மூளை சலவை
ஆனாலும் அவனை மறக்க முடியவில்லை
என் வீட்டை விட்டும் போக முடியவில்லை
நான் என்ன செய்வது வேறு திருமணம் செய்தால்
கண்டிப்பாக என்னால் சந்தோசமாக வாழ முடியாது
ஜாதி ஒன்றையே பார்த்தால் போதுமா
பெண்மையில் இருக்கும் மூத்த சகோதரிகள் எனக்கு சொல்லுங்கள் உங்கள் கருத்தை
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#2
வணக்கம் தோழி . . .

உங்கள் வாழ்க்கை பிரச்சனைக்கு ஜாதி மட்டும் தான் காரணமா . . ?!?!?

நீங்க உங்கள் பெற்றோர் + காதலர் பெற்றோர் சேர்ந்து பேசும் படியா ஏதும் பண்ணலையா ?

இருவீட்டார் பெற்றோர் ரும் மணம் விட்டு பேச வாய்ப்பளியுங்கள் . . .

உங்கள் காதலை புரிய வைக்க முயற்சி செய்யுங்கள் .. .

பெற்றோர் சம்மதத்துடன் மணம் நடப்பதே சிறந்தது. . . .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#3
கல்பனா ,

பெண்மைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

நீங்கள் காதலிப்பவரையே மணக்க வேண்டுமானால் ,எப்போது உங்கள் இருவர் வீட்டிலும் எதிர்ப்பு இருக்கிறதோ , அப்போது செய்ய வேண்டியது என்னவென்றால் ,

எந்த வித எதிர்ப்பு வந்தாலும் , சமாளிக்கும் திறன் இருவருக்கும் இருக்கும் பட்சத்தில் .....இதில் கவனத்தில் கொள்ள வேண்டியவை உள்ளன ......உங்கள் முடிவுக்கு நீங்களே பொறுப்பு ....நாளை வாழ்வில் எந்தக் கஷ்டம் வந்தாலும் ,(பொருளாதாரம் , மனப்பிணக்கு, குழந்தை பிறப்பு , வளர்ப்பு இத்யாதிகள் ), நீங்கள் இருவர் மட்டுமே எதிர் கொள்ள வேண்டும் . யாரும் துணைக்கு வர மாட்டார்கள் என்ற ரீதியிலேயே (ஒருவேளை யாரவது நண்பர்கள் உதவலாம் ) யோசித்து முடிவு எடுக்க வேண்டும் .

இதற்க்கெல்லாம் நீங்கள் இருவரும் மனமொத்து வாழ விரும்பினால் , அனைவரையும் எதிர்த்து , கல்யாணம் செய்து கொண்டு , நல்லா வாழலாம் . மனத்திண்மை முக்கியம் .

ஆனால் , இவ்வாறு சரிபடாது என்ற பட்சத்தில் , உறவுகள் முக்கியம் , அவர்களது உதவி முக்கியம் ,என்று எண்ணும் பட்சத்தில் , பெற்றோர் பார்க்கும் மாபிள்ளையை மணப்பதே சிறந்தது .

இன்றைய உலகில் , காதல் என்பது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது . அதில் வெற்றி பெறுபவை , மிகவும் சொற்பமே . அதிலும் , வாழ்நாள் முழுதும் வெற்றியோடு சிறந்த மணவாழ்க்கை வாழும் காதல் மணம் புரிந்தோர் சொற்பமாக இருக்கின்றனர்.

மற்றவர் எல்லாரும் , காதல் வாழ்க்கை என்று ஒன்று இருந்தாலும் , சமையசந்தர்ப்பங்காளால் தம்பதிகளாக முடியாமல் , வேறொருவரைத் திருமணம் செய்து , அதில் உண்மையாக இருந்து , சாதித்து , நல்ல ஒரு திருமண வாழ்க்கை வாழ்வோர் தான் இன்று அதிகம் .

அவர்கள் எல்லாரும் தங்கள் மனதை மாற்றிக்கொண்டுதான் வாழ்கிறார்கள் .

நீங்களும் அதுபோல கண்டிப்பாக வாழ முடியும் , பெற்றோர் சொல்பவரைத் திருமணம் முடிக்க நேர்ந்தாலும் .

கதைகளிலும் , சினிமா க்களிலும் வருவது போல , காதல் என்பது ஒரு முறை தான் என்பது எல்லாம் நிஜம் அல்ல . கணவராக வருபவரையும் , முழு மனதோடு காதலிக்கலாம் . கண்டிப்பாக முடியும் .

விரைந்து முடிவெடுங்கள் .

உங்கள் திருமண வாழ்க்கைக்கு என் ஆசிகள் .

 
Joined
Dec 19, 2014
Messages
9
Likes
6
Location
Africa
#5
Vanakkam Kalpana,

It is really a complicated issue faced by many girls as they need both love as well as the parents/families welfare and every girl will be in a dilemma whether to sacrifice her love or to hurt the parents and family.

The best solution is getting married to your loved one with your parents concurrence as already your elder siblings have got married so only now your marriage is pending as per your message so it is better to wait as Love is waiting.

Surely one day your parents will understand your love and understand that their daughter's life is more important than the community they are living.

Do not ever compromise on your love and marry someone who is shown by your parents as it is your life and you have to live it. But try your level best not to hurt your parents feelings also.

All the best

Cheers
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.