Limitless Love in Married life is the key to it's success-எல்லையற்ற அன்பு காட்டுவதுதான்!

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1


திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப்பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இருப்பதுபோல ஆளாளுக்கு கண்டிஷன் போட்டு விடுகிறார்கள். ஆனால் விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவருக்காவது புரிந்தால்தான் வாழ்க்கை நிலைத்திருக்கும். மண வாழ்வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவது ஒன்றுதான் வழி.


01) திருமணத்திற்கு முன்பு கொஞ்சம் தனியாகப் பேசுவோம் என்னும்போதே `இவர் இப்படித்தான்’ என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள் பலர். எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு, லட்சியம், ஆசை, கோபம் அனைத்தும் இருக்கும் என்பதை மறந்து விட்டு `எனக்கு இவர் வேண்டாம்’ என்று சொல்லி விடுகிறார்கள். கேள்வி கேட்பது, கண்டிஷன் போடுவது மட்டுமல்லாமல் சந்தித்து பேசும்போதே தங்களின் முக்கிய மான எதிர்பார்ப்புகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். திருமணத்தை சுமையாக எண் ணாமல், புனித மானதாக எண்ணுங்கள். இயல்பாக வாழ்வைத் தொடங்குங்கள்.

அப்பா அம்மா சொன்னார்கள் என்பதற்காக கழுத்தை நீட்டி விட க்கூடாது. வாழப்போகும் நீங்கள் வரப்போகிறவர் குண நலன்க ளோடு சமன்பட்டு வாழ முடியு மா? என்பதை புரிந்து கொண்டு முடிவை அறிவியுங்கள்.


02) திருமணம் செய்துவிட்டால் இருவருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கைக்குரியவராய் வாழ்தல் வேண்டும். இருவருமே ஆசையில் ஒன்று கூடுவதுபோல லட்சிய பயணத்தில் மற்றவர் பாதையில் தடையாக இல்லாமல் துணையாக இருப்பது அவசியம். அதுவே மகிழ்ச்சியான வாழ்வுக்கு அஸ்திவார மாக அமையும்.


03) குறைகளை மறைத்து திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அது எப்போது வேண்டுமானாலும் பூதாகரமான பிர ச்சினையை ஏற்படுத்தும். மணமக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதி யாகவும் திருமண பந்தத்திற்கு தயாராக வேண்டும். சின்னச்சின்ன விஷயங்களை பெரிது படுத்தாமல் சிக்கல்க ளை தீர்ப்பதில் மட்டு மே திறமையை காட்ட வேண்டும். சிக்கல்கள், சிரமங்கள், சவால்கள் போன்ற வாழ் வியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டால் அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். வாழ்வு முழுவதும் வசந்தமாகும் குடும்ப வாழ்க்கை.


04) நண்பர்களின் வேடிக்கைப் பேச்சும், திருமண `ஜோக்கு ’களும் திருமணம் கஷ்டமான விஷயம் என்பது போல்தான் காட்டப்படுகிறது. ஆனால் யதார்த்தத்தில் அப்படி கிடையாது. ஜோக்கை நம்பி மனைவி தாயார் வீட்டிற்கு சென்றிருப்பது சுகமான தருணம் என்று எண்ணுவதும், பேசுவதும் கூடாது. கருத்து வேற்றுமையின் போது தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் எல்லாம் பூதாகரமாகத் தோன்றும். தடுமாற வைத்துவிடும். `இல்லறத்தில் காலம் முழுக்க இணைந்தி ருப்பேன்’ என்று உறுதி ஏற்று செயல்பட்டால் அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக வந்து விடும்.


05) மணமக்கள் இருவரும் வெவ் வேறு சூழலில் வளர்ந் தவர்கள், வாழ்ந்தவர்கள் என்பதை உணர்ந்தால் `அவர் எனக்காக மாற வேண்டும்` என்ற எண்ணம் யாருக்கும் எழாது. சில மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரும். மகிழ் ச்சி குடியேறும். திருமணம் முடிந்த தும் மனைவியின் கேரக்டரை ஆராயத் தொடங்கிவிடக்கூடாது. மாமியார்-மருமகள் பிரச் சினை தலைதூக்கும்போது நடுநிலையில் செயல் பட வேண்டியது கணவரின் பொறுப்பு. அவர் தான் இருவருக்கும் உறவுப்பாலத்தை உருவாக்க கடமைப்பட்டவர்.


06) கணவன் மனைவியின் சில அந்தரங்கங்களை எவ்வளவு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் நண்பர்கள் உள்பட யாரிடமும் வெளியிடக்கூடாது. உங்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு மட்டுமே நம்பிக்கைக்குரியவர்கள், பெரியோர் உதவியை நாட வேண்டும். பூசல்கள் மிகுந்தாலும் அயலாரை மூக்கை நுழைக்க விடக்கூடாது. தம்பதிகள் தங்கள் வளர்ச்சியை மற்றவர்களோ டு ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. விரும்பிய மாற்றங்கள், வளர்ச்சி ஏற்படாததற்கு ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சுமத்தாதீர்கள். தினமும் சிறிது நேரமாவது மனம் விட்டு பேசுங்கள்.

இன்றைய பெண் பணிக்குச் செல்லும் லட்சியப் பெண்ணாகவும், அன்பான தாயாகவும், கடமை மிக்க மருமகளாகவும் பல பொறுப்புகளில் தன்னை ஈடு படுத்திக் கொள்ளும் தலை மைப் பண்புடையவளாக செயல்படு கிறாள். அதை கண வன் புரிந்து கொண்டு பக்கபலமாக இருந்தா லே குடும்பம் குதூக லமாக இரு க்கும். வேலைக்குச் செல்வதை எதிர்ப்பது, வீட்டு வேலைகளை அதிகம் சுமத்துவது, குறை கூறு வது பிரச்சினைகளை வளர்க் கும். சினிமாவில் சித்தரிக்கப்ப டும் வாழ்க்கையையும், சீரியல்களில் காட்டப்படும் குரூரங்களையும் நிஜ வாழ்க்கையில் ஒப்பிடக்கூடாது.


07) வீட்டுப்பொறுப்புகளிலும் இருவரும் பங்கேற்க வேண்டும். கணவன் வேலையில் ம னைவியும், மனைவி வேலையில் கணவனும் ஒத்தா சைகள் செய்தால் அன்யோ ன்யம் அதிகரிக்கும். அவ் வப்போது பரிசளியுங்கள். கைச் செலவுக்கு கொஞ்சம் கூடுதலாக காசு கொடுங்கள்.

08) திருமணம் என்பது `நீயா நானா’ போட்டியல்ல. கண வன்-மனைவி ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு ஒருவரின் தேவையை நிறைவு செய்ய மற்றவர் துணைபுரிய வேண்டும். இருவர் இணைவதே சேர்க்கையால் கிடைக்கும் மு ழுமையை அனுபவிக்கத்தான்.


09) உடலுறவை இயந்திரத்தன மான விஷயமாக அணுகக் கூடாது. உங்கள் பலவித எதிர்பார்ப்புகளும் உடனே நிறை வேறும் என்று எண்ணக்கூடாது. அது சார்ந்த பிரச்சினைகளுக்கு இன்டர்நெட்டிலும், தெரிந் தவர்களிடமும் ஆலோசனை கேட் பதை தவிர்த்திடுங்கள். மருத்துவரை அணுகுவது நல்ல பலன் தரும்.


10) தேவையை நிறைவேற்ற நிபந்தனை விதிக்காதீர்கள். நெருக்கம் இருக்கும் இடத்தில் உரிமை எடுத் துக்கொள்வதும் இருக்கும். எனவே கோபம் கொள்வதும், கூடிக்கொள்வதும் குடும் பத்தில் சகஜம் என்பதை மறந்து விடாதீர்கள்
 

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#2
re: Limitless Love in Married life is the key to it's success-எல்லையற்ற அன்பு காட்டுவதுதான&#30

Nallathan irukku?
 

roseagalya

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 27, 2013
Messages
4,121
Likes
9,762
Location
coimbatore
#3
re: Limitless Love in Married life is the key to it's success-எல்லையற்ற அன்பு காட்டுவதுதான&#30

u r correct.pengal ipdi dhaan feel pannuvaanga..but gens endha maadhiri yodikiraangalo..?avanga mansu ponnungal manasai vida kadupidikka mudiyadhu pola irukke..
 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#4
re: Limitless Love in Married life is the key to it's success-எல்லையற்ற அன்பு காட்டுவதுதான&#30

nice da.... :) im expecting more from u:cheer:
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5
re: Limitless Love in Married life is the key to it's success-எல்லையற்ற அன்பு காட்டுவதுதான&#30

Thank u.....
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#6
re: Limitless Love in Married life is the key to it's success-எல்லையற்ற அன்பு காட்டுவதுதான&#30

u r correct.pengal ipdi dhaan feel pannuvaanga..but gens endha maadhiri yodikiraangalo..?avanga mansu ponnungal manasai vida kadupidikka mudiyadhu pola irukke..
yaru manasaiyum ulla pugundhu paarkka mudiyaadhu......
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#7
re: Limitless Love in Married life is the key to it's success-எல்லையற்ற அன்பு காட்டுவதுதான&#30

nice da.... :) im expecting more from u:cheer:
Thank u sis.....:yo: I'll try.....:thumbsup
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#8
re: Limitless Love in Married life is the key to it's success-எல்லையற்ற அன்பு காட்டுவதுதான&#30

Wonderful and perfect sharing.
 

Lakschellam

Friends's of Penmai
Joined
Oct 8, 2011
Messages
335
Likes
411
Location
Coimbatore
#9
Re: Limitless Love in Married life is the key to it's success-எல்லையற்ற அன்பு காட்டுவதுதான&#30

Hi Jay,

Thanks jay.

Idhu ella generations kkum use agum.


Ippadiyellam eluthi, engalai yosikka vaikkarenga.

Congrats.
 

jenifapravin

Commander's of Penmai
Joined
Aug 27, 2012
Messages
1,076
Likes
1,946
Location
chennai
#10
Re: Limitless Love in Married life is the key to it's success-எல்லையற்ற அன்பு காட்டுவதுதான&#30

Thx for sharing kalai.....
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.