Listen to the talks of our Body Parts-உள்ளுருப்புகள் பேசுவதைக் கேளுங்க

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
புன்சிரிப்புடன் வாழ்க்கை நடத்தி வந்த 50 வயது நபருக்கு நான் (பல்) கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிடமாகி விட்டேன். எல்லா பல்லும் போய் விட்டது. செயற்கை பல் கட்டாததால், அவரால் திட உணவைச் சுவைக்க முடியவில்லை. ஏமாந்து விட்டார்.
என்னைப் போல் (பல்) ஏமாந்த மற்ற உறுப்புகள் குறித்த கதையையும் ஏமாந்தவர்களின் கதையையும் கேளுங்க...

உணவுக் குழாய்: உணவை பல் அரைத்து அனுப்பியவுடன், அதை இரைப்பைக்குத் தள்ளிவிடுவது நான் (உணவுக் குழாய்) தான். என் முக்கியத்துவத்தை பலர் உணராமல் புகையை ஊதித் தள்ளி, அதிகமாக காரத்தைச் சாப்பிட்டு மெல்லிய சளிப்படலம் சூழ்ந்து என்னைத் தாக்கி அவர்கள் (மனிதர்கள்) ஏமாந்து விடுகின்றனர்.
இரைப்பை: பல், உணவுக் குழாய் மூலம் வந்த உணவை எனக்குள் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைக் கொண்டு கூழாக்கி ஜீரணத்துக்கு எளிதானதாக மாற்றுகிறேன். ஆராக்கியமற்ற கண்ட உணவைச் சாப்பிட்டு எச் பைலோரி என்ற பாக்டீரியா கிருமி பாதிப்பை ஏற்படுத்தி அவர்கள் (மனிதர்கள்) ஏமாந்து விடுகின்றனர்.

சிறுகுடல்: இரைப்பையிலிருந்து வரும் கூழான உணவை எனக்குள் (சிறுகுடல்) உள்ள குடல் உறிஞ்சிகள் மூலம் தன்மயமாக்கி, ரத்தத்தில் கலந்து ஜீரணத்தை முழுமை அடையச் செய்து சாப்பிட்ட நிறைவை அளிக்கிறேன். எல்லாம் ஒழுங்காக இருக்கும் வரை இதெல்லாம் சரி....ஆனால், காச நோய்-ஒவ்வாமை மூலம் என்னை (சிறுகுடலை) தாக்கக்கூடிய குரோன்ஸ் நோய்.... என் (சிறுகுடல்) இயக்கத்துக்கு முடக்கம் ஏற்படுத்தி அவர்கள் (மனிதர்கள்) ஏமாந்து விடுகின்றனர்.

பெருங்குடல்: உரிய அளவு குடிநீர் குடிக்காமல், உடற்பயிற்சி செய்யாமல் என்னை (பெருங்குடல்) மாசுபடுத்தி மலச்சிக்கல் வரவழைத்துக் கொண்டு அவர்கள் (மனிதர்கள்) ஏமாந்து விடுகின்றனர்.

கல்லீரல்: உடல் ஆரோக்கியத்துக்காக ஜீரணத்துக்கு பித்த நீர் சுரத்தல், புரதச் சத்து (ஆல்புமின்) உற்பத்தி செய்தல், மாவுச் சத்தை சேமித்து வைத்தல், ரத்தக் கசிவைத் தடுக்கும் வேதிப் பொருளை (புரோத்ராம்பின்) உற்பத்தி செய்தல் போன்ற 100-க்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்கிறேன். மது, உடல் பருமன், ஹெபடைடிஸ் வைரஸ் தாக்குதல் போன்றவை மூலம் அறியாமை காரணமாக என்னை (கல்லீரல்) தாக்கி அவர்கள் (மனிதர்கள்) ஏமாந்து விடுகின்றனர்.

கணையம்: நான் (கணையம்)தான் இன்சுலின் சுரந்து உங்களுக்கு சர்க்கரை நோய் வராமல் பார்த்துக் கொள்கிறேன். நான் சுரக்கும் லைபேஸ் என்ற நொதிப் பொருள் காரணமாகவே உங்களுடைய கொழுப்புச் சத்து ஜீரணமாகிறது. இவ்வளவு மதிப்பு மிக்க என்னை (கணையம்) மது அருந்தி, புகை பிடித்து புற்று நோய் வரவழைத்து அவர்கள் (மனிதர்கள்) ஏமாந்து விடுகின்றனர்.
மனிதர்களே...இதுவரை ஏமாந்தது போதும். எங்களது அருமையை உணருங்கள். உங்கள் பெருமைக்கு நாங்கள் வழி வகுக்கிறோம். அறியாமையிலோ அல்லது அலட்சியத்தாலோ எங்களைப் புண்படுத்தி சுவர் இல்லாத சித்திரங்கள் ஆகி விட வேண்டாம்
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#2
Re: Listen to the talks of our Body Parts-உள்ளுருப்புகள் பேசுவதைக் கேளுங்&#2

ரொம்ப நல்ல விளக்கம் . இன்னும் அனைத்து பாகங்களும் பேசுவதுபோல இருந்தால் அதையும் பகிருங்கள் சுந்தரம் .
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.