Little grany stories - Patti Sonna Kathaigal

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#1
என்னதான் கம்ப்யூட்டர் , இன்டர்நெட் என்று உலகம் முன்னேறி இருந்தாலும் பாட்டிமார்கள் சொன்ன சின்ன சின்ன கதைகள் கேட்பதில் உள்ள ஆர்வம் இன்னும் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது. அப்படி கதை கேட்கும் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கான பகுதி இது. விருப்பம் உள்ளவர்கள் பங்கு கொள்ளலாம்.

இது குழந்தைகளுக்கான கதை என்பதால் அதற்கு தகுந்தார் போல எளிமையாக சொல்லப்படுகிறது.

அம்மை அப்பனே உலகம்
ஒரு நாள் நாரத முனிவர் ஒரு சக்தி வாய்ந்த மாம்பழத்தை கைலாயத்திற்கு கொண்டு வந்தார். அங்கே விளையாடிக் கொண்டிருந்த விநாயகரிடமும், முருகரிடமும் யார் முதலில் உலகத்தை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே இந்த பழம் என்று பந்தயம் வைத்தார். உடனே முருகன் தன மயில் வாகனத்தில் ஏறி உலகை சுற்றி வருவதாக கிளம்பி விட்டார். ஆனால் விநாயகரோ மிக மெதுவாக செல்லகூடிய தன மூஷிக வாகனத்தில் ஏறி தன் தந்தையான சிவா பெருமானையும் தாயான பார்வதி தேவியையும் ஒரே ஒரு முறை சுற்றி வந்து அந்த மாம்பழத்தை முதலில் பெற்றுக் கொண்டார். பெற்ற தந்தையும், தாயுமே முதல் உலகம் என்பதை அறிந்து வைத்திருந்த விநாயகரை தேவர்களும், முனிவர்களும் வெகுவாக பாராட்டினார்கள். குட்டி பசங்களா..இந்த கதைல இருந்து என்ன தெரிஞ்சுகிட்டீங்க..உங்க அம்மாகிட்ட சொல்லுங்க பாக்கலாம்..
vinayakar mango.jpg


விநாயகருக்கு உடைந்த தந்தம் ஏன் ?

விநாயகருக்கு ஒரு தந்தம் மட்டுமே இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் இந்த மகாபாரத கதையையும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். ஒரு முறை வியாச முனிவர் தாம் முழு மகாபாரதக் கதையை கூறப் போகதாகவும் அதை விநாயகர் தான் தம் கைப்பட எழுதித் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். விநாயகரும் ஒரு நிபந்தனையோடு இதை ஒத்துக் கொண்டார். வியாசர் தங்கு தடையில்லாமல் நிறுத்தாமல் கதை கூற வேண்டும் என்பதே. உடனே வியாசரும் தான் சொல்வதை ஒரு வார்த்தை விடாமல் நன்கு புரிந்து கொண்டு இடையில் நிறுத்தாமல் விநாயகர் எழுத வேண்டும் என்று பதில் நிபந்தனை விதித்தார். இருவரும் விரைவாக அவரவர் வேலையை துவக்கினர்..வியாசர் சொல்ல சொல்ல விநாயகர் எழுதிக் கொண்டு இருந்தபோது திடீரென்று எழுத்தாணி உடைந்துவிட்டது. நிறுத்தாமல் எழுத வேண்டுமே. உடனே விநாயகர் தன் ஒரு பக்க தந்தத்தை உடைத்து அதையே எழுத்தாணியாக மாற்றி எழுதிவிட்டார். நம் அன்பு தெய்வம் விநாயகர் உடைந்த தந்தத்தோடு இருப்பதற்கு இது தான் காரணம் குட்டீஸ்.
broken horn.jpg
 
Last edited:

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#2
ஏன் ஆஞ்சநேயருக்கு வெண்ணையும், வடை மாலையும் பிடிக்கும்.?

இலங்கை யுத்தம் ஜெயித்த பின் ஸ்ரீ ராமரும் சீதா தேவியும் அயோத்யா நாட்டை ஆள்வோராக பதவி ஏற்றனர். அந்த சமயம் எல்லா வகையிலும் தமக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் பல பரிசுகள் வழங்கினர். ஆனால் ஆஞ்சநேயர் மட்டும் தனக்கு எந்த பரிசும் தேவையில்லை என்றும் கடைசி வரை ராமரோடும், சீதையோடும் இருந்தாலே போதும் என்று கூறிவிட்டார். இதைக் கேட்டு மிகவும் சந்தோஷப்பட்ட சீதை ஆஞ்சநேயருக்காக ஒரு வடை மாலை தயாரித்து ஆசை தீர சாப்பிடு என்று அன்போடு கொடுத்தார். அதிலிருந்து ஆஞ்சநேயருக்கு வடைமாலை மிகவும் பிரியமான பொருளாகிவிட்டது.
ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வந்த போது அந்த மலையிலிருந்த பல சருகுகள் அவர் உடம்பை குத்தின..பல பூச்சிகள் அவரை கடித்தன..அவர் உடம்பிற்கு ஏற்பட்ட அவதியை நீக்க வெண்ணை பூசி பிறகு அவரை குளிக்க வைத்தனர்.சந்தனம் பூசுவதும் இதற்காகத்தான்.அதன் பிறகே அவர் உடல் குளிர்ச்சி அடைந்தது. ஹனுமனுக்கும் வெண்ணைக்கும் உள்ள சம்பந்தம் தெரிஞ்சுகிட்டீங்களா குட்டி பசங்களா...
vadamalai.jpg


ஹனுமனுக்கு சிரஞ்சீவி என்று பெயர் வந்தது ஏன்?

சூரியனை ஒரு பழம் என்று நினைத்து அதை பிடிக்கச் சென்ற ஹனுமனை இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் அடித்து விடுகிறார். ஹனுமான் மயக்கம் அடைந்து தரையில் விழுகிறார். அதைப் பார்த்து கோபம் கொண்ட வாயு பகவன் மயக்கமான ஹனுமனை தூக்கிக் கொண்டு பாதாள லோகத்துக்கு சென்று விடுகிறார். வாயு இல்லாவிட்டால் ஜீவ ராசிகள் எப்படி மூச்சு விட முடியும் ? உலகமே ஸ்தம்பித்து போகிறது . எல்லா உயிர்களும் செத்து மடிகின்றன. அனைவரும் பிரம்மா தேவனிடம் சென்று முறையிடுகின்றனர். அவரும் பாதாள லோகம் வந்து வாயு பகவானை சமாதானம் செய்கிறார். அப்போது எந்த ஆயுதங்களாலும் ஹனுமனை காயப் படுத்தமுடியாது..ஹனுமனுக்கு அழிவு என்பதே இல்லை..என்றென்றும் சிரஞ்சீவியாக இருப்பார் என்று பிரம்மா வரம் தருகிறார். அதன் பிறகு வாயு பகவான் சமாதானம் ஆகி ஹனுமானையும் அழைத்துக் கொண்டு பாதாள லோகத்திலிருந்து வெளியே வருகிறார். எல்லா ஜீவ ராசிகளும் மூச்சு விட தொடங்குகின்றன. என்றென்றும் அழிவில்லாமல் வாழ வேண்டுமானால் நம் சிரஞ்சீவி ஹனுமனை வணங்குங்கள் குழந்தைகளே..
hanuman sun.jpg
 
Last edited:

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#3
ஆதிசேஷன்

காஷ்யப முனிவருக்கும் அவர் மனைவி காத்ருவுக்கும் ஆயிரம் பாம்புகள் பிள்ளைகளாகப் பிறந்தன. அதில் மூத்த பிள்ளை பாம்பு ஆதிசேஷன் ஆவார். ஆதிசேஷனை தவிர மற்ற அனைத்து பிள்ளை பாம்புகளும் தீய புத்தி கொண்டவையாக இருந்தன. இதை எல்லாம் சகிக்க முடியாத ஆதிசேஷன் தன் குடும்பத்தை விட்டு வெளியேறி பல காடு மலைகளில் எல்லாம் தவம் செய்தார். ஒரு நாள் பிரம்மா அவர் முன் வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். என்றுமே கெட்ட எண்ணங்கள் , கெட்ட சிந்தனைகள் எனக்கு வராமல் இருக்க வேண்டும் என்று ஆதிசேஷன் கேட்டார். அதற்கு பிரம்மா 'நீ பாதாள லோகத்திற்கு சென்று நிலையற்ற இந்த உலகத்தை தாங்கி நிறுத்து' என்று கேட்டுக் கொண்டார். அதன்படி ஆதிசேஷனும் பாதாள லோகம் சென்றுவிட்டார். ஒவ்வொரு அவதாரத்தின் போதும் ஆதிசேஷன் பாதாள லோகம் விட்டு வெளியே வந்ததாக நம்பப்படுகிறது. நாராயணன் ராமனாக வந்தபோது இவர் லக்ஷ்மனனாக வந்தார். அவர் கிருஷ்ணராக வந்தபோது இவர் பலராமனாக வந்தார். உலகமே ஒரு முடிவுக்கு வந்தாலும் ஆதிசேஷனுக்கு மட்டும் அழிவில்லை என்று சொல்லப்படுகிறது. கடலுக்கு அடியில் ஆதிசேஷனை படுக்கை ஆக்கி நாராயணன் துயில் கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது. எது எப்படி இருந்தால் என்ன ...ஆதிசேஷனை போல நாமும் நல்ல சிந்தனைகளோடு இருப்போம் . ஓகே குட்டீஸ்.
adisesha.jpg
 
Last edited:

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#4
ஆறுமுகன் ஆனது எப்படி ?
பல வரங்களை பெற்ற தாரகாசுரன் எல்லாரையும் அழித்து அட்டகாசம் செய்ய ஆரம்பித்தான். எல்லோரும் சென்று சிவ பிரானிடம் முறையிட்டு தங்களை காப்பாற்றும்படி அழுதனர். சிவ பெருமான் தன் ஒரு முகத்தை ஆறு முகமாக மாற்றி ஒவ்வொரு நெற்றிக் கண்ணிலிருந்தும் தீப்பொறி வரும்படி செய்தார். ஆறு தீப்பிழம்பும் ஆறு குழந்தைகளாக மாறின. பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் கையில் எடுத்து ஒன்றாக அணைத்தாள். ஆறு முகமும் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரே குழந்தை ஆனது. அந்தக் குழந்தைதான் முருகன் என்னும் ஆறுமுகன். பிறகு ஆறுமுகன் தாரகாசுரனை எதிர்த்து போர் செய்து அவனைக் கொன்று அனைவரையும் காப்பாற்றினார். வீரத்திற்கு அடையாளமாக முருகக் கடவுள் என்று சொல்வது அதனால்தான்.
 
Last edited:

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#5
கஜேந்திர மோட்ஷம்

ஒரு நாள் கஜேந்திரன் என்னும் யானை ஒரு குளத்திற்கு தண்ணீர் குடிக்க சென்றது. அங்கே திடீரென்று ஒரு முதலை யானையின் காலை பலமாகக் கவ்விக் கொண்டது. யானை வலி தாங்க முடியாமல் பிளிறியது. தன உயிரை காப்பாற்றிக் கொள்ள பலவாறு போராடியது . என்ன செய்தும் யானையால் முதலையிடம் இருந்து தப்பிக்கவே முடியவில்லை. கடைசியில் கடவுளே கதி என்று அந்த குளத்தில் இருந்த ஒரு தாமரையை தன் தும்பிக்கையில் எடுத்து நாராயணா காப்பாற்று என்று அழைத்தது. உடனே அந்த நாராயணரும் தன சக்கரத்தை ஏவி அந்த முதலையின் வாயில் இருந்து கஜேந்திரனை காப்பாற்றினார். உண்மையான பக்தியோடு கடவுளை நினைத்தால் எல்லா விதமான ஆபத்தில் இருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளலாம். ஓகே குட்டீஸ்..இந்த கதைல இருந்து நீங்க என்ன தெரிஞ்சுகிடீங்கன்னு உங்க அம்மாவுக்கு சொல்லுங்க பாக்கலாம்.
 
Last edited:

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#6
ஆயுர்வேதம் கொடுத்த தன்வந்தரி

ஆயுர்வேதம் பற்றி கேள்விப் பட்டு இருக்கீங்களா குழந்தைகளே..துர்வாச முனிவரின் சாபத்தால் எல்லா கடவுளும், தேவர்களும் சக்தி குறைந்து போயினர். அதனால் ராட்சஷர்களின் அட்டகாசம் அதிகமானது. என்ன செய்வது என்று தெரியாமல் எல்லா தேவர்களும் நாராயணனிடம் ஆலோசனை செய்தார்கள். பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து பருகினால் மட்டுமே கடவுள்களுக்கு பழைய சக்தி கிடைக்கும் என்று நாராயணன் சொல்கிறார். மந்தாறு மலையை மத்தாக்கி, வாசுகி என்னும் பாம்பை கயிறாக கொண்டு பாற்கடலை கடைகிறார்கள். முதலில் ஆலகால விஷம், பிறகு காமதேனு, லக்ஷ்மி தேவி , கற்பக விருட்ஷம் என்று வரிசையாக வர கடைசியில் தன்வந்தரி பகவான் ஒரு கையில் அமிர்த கலசம் மறு கையில் ஆயுர்வேத சுவடி எடுத்துக் கொண்டு வருகிறார். தேவர்கள் எல்லாம் அந்த அமிர்தத்தை குடித்து பழைய சக்தி பெற்று ராட்சஷர்களை ஜெயிக்கிறார்கள்.

சாமிக்கே ஒழுங்கா சாப்பிட்டாத்தானே சக்தி கிடைக்குது..அப்ப உங்களுக்கு சக்தி, strength எல்லாம் வேணும்னா என்ன பண்ணனும் குட்டீஸ் ?
danvantri.jpg
 
Last edited:

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#7
ஹலோ சுகந்தி

சும்மா கலக்கறீங்க எனக்கு இதில ஆஞ்சநேயர் கதை இப்ப உங்க கதை படிச்சு தான் தெரியும்


இன்னும் நெறைய சொல்லுங்க கேக்கறோம்
 

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#8
பிரம்மாவும் , சரஸ்வதியும்..
பிரம்மா சுயம்புவாக விஷ்ணுவின் நாபிக் கமலத்திலிருந்து உருவானவர். அவரை யாரும் படைக்கவில்லை. இந்த அண்டசராசரத்தை உருவாக்குவதற்காக சுயம்புவாக கிளம்பியவர். ஆனால் எப்படி இந்த அண்டசராசரத்தை உருவாக்குவது என்பதில் அவருக்கு ஏகப்பட்ட குழப்பம் இருந்தது. அவரால் முடிந்தபடி சில ஜீவராசிகளை உருவாக்கினார். ஆனால் எல்லாமே பெரிய குழப்பமாக மாறிவிட்டது. என்ன செய்வது என்று புரியாமல் தவித்தபோது ஒரு அசரீரி கேட்டது. wisdom [ஞானம்] என்ற சக்தி இருந்தால் மட்டுமே எல்லாவற்றையும் உருவாக்க முடியும் என்று குரல் கேட்டது. உடனே தனது நாவில் இருந்து ஞானதேவதையை உருவாக்கினார். அந்த ஞான தெய்வம் தான் சரஸ்வதி . வெண்பட்டில் வீணையோடு வெளி வந்த சரஸ்வதி சொல்ல சொல்ல அதன்படி பிரம்மா அண்டசராசரங்களை படைத்தார் என்று பழங்காலக் கதைகள் மூலம் அறிகிறோம். ஞானத்தின் உதவியோடு படைத்ததால் எந்த குழப்பமும் இல்லாமல் அண்டசராசரம் [universe ] படைக்கப்பட்டது.
சாமிக்கே ஞானம் இருந்தால் தானே ஜெயிக்க முடிகிறது. அப்ப நீங்களும் சரஸ்வதிய நல்லா கும்பிட்டு உங்க அறிவ சிறப்பா வளத்துக்கணும். அப்ப தான் வாழ்க்கைல ஜெயிக்க முடியும். பிரம்மாவோட நான்கு தலைகளும் நான்கு வேதங்கள். நான்கு வேதங்கள் ரிக், யஜுர், சாம , அதர்வண வேதங்கள் . இப்போதைக்கு இது போதும் குட்டீஸ்.
brahma.jpg saraswati.jpg
 

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#9
பிரம்மாவுக்கு கோவில்கள் இல்லாதது ஏன் ?

ஒரு முறை பிரம்மாவுக்கும் , விஷ்ணுவுக்கும் பயங்கரமான வாக்குவாதம் ஏற்பட்டது. எல்லா உயிர்களையும் படைப்பதால் நானே உயர்ந்தவன் என்று பிரம்மா சொன்னார். படைத்தால் மட்டும் போதுமா..கடைசி வரை எல்லாவற்றையும் காப்பாற்ற வேண்டாமா என்று விஷ்ணு கேட்டார். காக்கும் கடவுள் நான்தான் ..நானே உயர்ந்தவன் என்று விஷ்ணு சொன்னார். அப்போது திடீரென்று ஒரு தீப்பிழம்பு தோன்றியது. அதற்கு ஆரம்பமும் தெரியவில்லை. எங்கே முடிகிறது என்றும் தெரியவில்லை. உடனே பிரம்மா அன்னபட்சி மீது ஏறி ஆரம்பம் எங்கே என்று பார்த்துவிட்டு வருகிறேன் என்று கிளம்பினார். விஷ்ணு காட்டுப் பன்றியாக மாறி பூமியைக் குடைந்து கொண்டு தீ பிழம்பின் முடிவைத் தேடித் போனார். கொஞ்ச நேரம் கழித்து விஷ்ணு திரும்பி வந்து தன்னால் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை என்று ஒத்துக்கொண்டார். பிரம்மாவோ அந்த நெருப்பு ஆரம்பித்த இடத்தை பார்த்ததாக பொய் சொல்லிவிட்டார். அந்த நெருப்பு பிழம்பு சிவபெருமானாக மாறியது. பொய் சொன்ன பிரம்மாவுக்கு எங்கேயும் கோவில்கள் கிடையாது என்று சிவன் சபித்துவிட்டார். சிவன் கோவில்கள் உண்டு. விஷ்ணு கோவில்கள் உண்டு. பிரம்மாவுக்கு கோவில்கள் கிடையாது என்பது பழைய ஐதீகம்.

அதுனால யார் உயர்ந்தவன்கர போட்டியெல்லாம் வேண்டாம் பசங்களா...நம்மைவிட உயர்ந்தவன் எங்கயாவது நிச்சயமா இருப்பாங்க..சரியா..
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.