Liver Cholesterol - கல்லீரல் கொழுப்பை குறைப்பதில்...காபி, &#2980

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,489
Location
Chennai
#1
கல்லீரல் கொழுப்பை குறைப்பதில் காபி, தேனீருக்கு முக்கிய பங்கு

சிங்கப்பூர்: "நாள் ஒன்றுக்கு, நான்கு கோப்பை காபி, தேனீர் குடிப்பதால், கல்லீரலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்' என, சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


நீரிழிவு நோய், வயிற்றுப் புண் போன்ற பிரச்னைக்காக மருத்துவரிடம் சென்றால், "காபி, தேனீர் குடிப்பதை முதலில் நிறுத்துங்கள்' என்பதுதான், அவரது அறிவுரையாக, இருந்து வருகிறது.


4 கோப்பை:


இந்நிலையில், சிங்கப்பூர், "டியூக் தேசிய பல்கலை'யின், மருத்துவத் துறை ஆராய்ச்சியாளர்கள், "நாள் ஒன்றுக்கு, நான்கு கோப்பை, காபி அல்லது தேனீர் குடித்தால், கல்லீரலில் கொழுப்பு சேருவதை தடுக்கமுடியும்' என, கண்டுபிடித்துள்ளனர். அதாவது, "மதுப் பழக்கம் இல்லாதவர்களுக்கு, கல்லீரலில் உள்ள கொழுப்பை அகற்றுவதில், காபி, தேனீர், முக்கியப் பங்கு வகிக்கிறது' என, அவர்கள், தெரிவித்துள்ளனர்.


சோதனை:


உலக அளவில், நீரிழிவு மற்றும் உடற்பருமன் போன்ற பிரச்னை களால் பாதிக்கப்பட்டுள்ள, 70 சதவீத மக்களுக்கு, கல்லீரலில் கொழுப்பு சேருவது முக்கிய பிரச்னையாக இருக்கிறது. இவ்வாறு சேரும் கொழுப்பை அகற்ற, சரியான சிகிச்சைகள் இல்லை என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றால் தான் இதனைக் கட்டுப்படுத்த முடியும் என, தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வுக்காக, கொழுப்பு நிறைந்த உணவை எலிகளுக்கு கொடுத்த விஞ்ஞானிகள், பின், அதற்கு காபியையும் உட்செலுத்தினர். இது, கல்லீரலில் சேரும் தேவையற்ற கொழுப்புக் களை கரைப்பதை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.


இதுகுறித்து, இந்த ஆய்வை மேற்கொண்ட, விஞ்ஞானி, பால் யென் கூறியதாவது: காபியில் உள்ள காபின், நம் உடலில் எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய விரிவான ஆய்வு இது தான். இதன் முடிவுகள் மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. காபி, தேனீர் ஆகியவற்றை குடிப்பதால், உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என, தவறாக சொல்லப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

-dinamalar
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: கல்லீரல் கொழுப்பை குறைப்பதில்...காபி, தேன&

Wonderful. thank you Sir!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
Re: Liver Cholesterol - கல்லீரல் கொழுப்பை குறைப்பதில்...காபி, &a

நல்ல உபயோகமான பகிர்வு . காஃபி , டீ , பிரியர்களுக்கு , இதமான செய்தி
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.