Love your Children - உங்கள் குழந்தைகளிடம் ஐ லவ் யூ சொல்ல வ&#3015

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
உங்கள் குழந்தையை நீங்கள் அதிகம் நேசிக்கிறீர்களா? அந்த நேசம் வெறும் மனத்தளவில் மடடுமே இருக்கலாமா? உங்கள் அன்புக் குழந்தையிடம் அதை வெளிப்படுத்த வேண்டாமா? இதோ சில அட்வைஸ்...


* எல்லோரையும்விட உங்களுக்கு உங்கள் குழந்தைகள்தான் முக்கியம் என்பதைச் சொல்லி வையுங்கள்.


* உங்கள் குழந்தைகள் செய்கிற சின்னச்சின்ன நல்ல விஷயங்களைக் கூட உடனுக்குடன் பாராட்டுங்கள். மேலும் மேலும் அப்படிச் செய்ய ஊக்கப் படுத்துங்கள்.


* எல்லா விஷயங்களையும் பாசிடிவ் எண்ணத்தோடு அணுகும் முறையை உங்கள் குழந்தை களுக்குக் கற்றுக் கொடுங்கள். அழுக்குத் துணி யோடு சாப்பிட வந்தால் திட்டாமல் நல்ல துணியில நீ அம்சமா இருப்பியே என்று சொல்லித் திருத்துங்கள்.


* ஒவ்வொரு குழந்தைக்கும் எனத் தனித்தனியே நேரம் ஒதுக்குங்கள். எல்லா குழந்தைகளுமே உங்களுக்கு ஸ்பெஷல் என்று உணர்த்துங்கள்.


* உடைகள் விஷயத்தில் குழந்தைகளின் விருப்பத்திற்கே விட்டு விடுங்கள். அது அவர்களுக்குத் தாமும் மதிக்கப்படுகிறோம் என்ற சந் தோஷத்தை ஏற்படுத்தும்.


* குழந்தைகளின் நண்பர்களது பெயர்கள், ஆசிரியர்களது பெயர்கள் பற்றிக் கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அவர்கள் அன்றாடம் நடந்தவற்றைப் பற்றி உங்களிடம் பேசும் போது உங்களாலும் ஈடு கொடுத்துப் பேச முடியும்.


* தினசரி குழந்தைகளுடன் குறிப்பிட்ட நேரத்தைச் செலவிடுங்கள். நீங்கள் வேலைக்குச் செல்பவராக இருக்கலாம். அதனால் வாரத்தில் ஒரு நாளோ, இரண்டு நாட்களோ அவர்களை வெளியில் அழைத்துச் செல்வது மட்டுமே அவர்களுக்கு சந்தோஷத்தைத் தந்து விடாது. தினசரி அவர்களுடன் சிறிது நேரம் உட்கார்ந்து அவர்கள் பேச்சைக் கேட்கக் காது கொடுத் தால்கூடப் போதும்.


* குழந்தைகள் உங்களிடம் என்ன பேசினாலும் கவனியுங்கள். டி.வி பார்ப்பதோ, பேப்பர் படிப்பதோ வேண்டாம். எல்லா வேலைகளையும் நிறுத்தி விட்டு அவர்களைக் கவனியுங்கள்.


* சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுங்கள். அவர்களுக்குப் பிடிக்கிற உணவைச் செய்து கொடுக்க அலுத்துக் கொள்ளாதீர்கள். சாப்பாடு மீந்து போனால் அவற்றை அவர்கள் தான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப் படுத்தாதீர்கள்.


* உங்கள் பெற்றோரிடம் உங்களுக்குப் பிடிக்காமலிருந்த விஷயங்களை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குச் செய்யாதீர்கள்.


* உங்கள் குழந்தை ஏதேனும் தவறு செய்யும் போது நான் அப்பவே சொன்னேனா இல்லையா? என்று கடிந்து கொள்ளாமல், இப்ப தெரியுதா நான் ஏன் அப்படி சொன்னேன்னு என்று அன்பாகச் சொல்லித் திருத்தப் பாருங்கள்.


* உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் மட்டுமே புரியக் கூடிய சங்கேத வார்த்தைகளை, சைகைகளை உபயோகியுங்கள்.


* குறிப்பிட்ட விஷயங்களில் உங்கள் குழந்தை சுதந்திரமாகச் செயல் பட அனுமதியுங்கள். அளவுக்கதிகக் கட்டுப்பாடு வேண்டாம்.


* குழந்தைகளது நடந்து முடிந்த தவறுகளை மறந்து விடுங்கள். அவற்றை சுட்டிக் காட்டிப் பேசாதீர்கள்.


* உங்கள் குழந்தைகளை அடிக்கடி கட்டிப் பிடிக்கவும், அரவணைத்து முத்தமிடவும் மறக்காதீர்கள். காதலனிடமோ, கணவரிடமோ மட்டும்தான் ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என் றில்லை. உங்கள் குழந்தைகளிடமும் தினம் ஒரு முறை சொல்லி உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: உங்கள் குழந்தைகளிடம் ஐ லவ் யூ சொல்ல வேண்&a

Very good suggestions! thank you!
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#3
Re: உங்கள் குழந்தைகளிடம் ஐ லவ் யூ சொல்ல வேண்&a

Thanks for sharing.
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#4
Re: உங்கள் குழந்தைகளிடம் ஐ லவ் யூ சொல்ல வேண்&a

Very good suggestions! thank you!
Thank u sis........:rolleyes:
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5
Re: உங்கள் குழந்தைகளிடம் ஐ லவ் யூ சொல்ல வேண்&a

Thanks for sharing.
U r most welcome.........:rolleyes:
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#6
Re: உங்கள் குழந்தைகளிடம் ஐ லவ் யூ சொல்ல வேண்&a

Like panna yella thozhamaigalukkum nandri........:pray:.....:rolleyes:
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#7
Re: Love your Children - உங்கள் குழந்தைகளிடம் ஐ லவ் யூ சொல்ல வ&a

nice sharing .... tankq jaya sis
 
Joined
Sep 14, 2012
Messages
42
Likes
52
Location
chennai
#8
Re: Love your Children - உங்கள் குழந்தைகளிடம் ஐ லவ் யூ சொல்ல வ&a

Nice one :)
 

vaiji

Minister's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
2,897
Likes
7,678
Location
Muscat
#9
Re: Love your Children - உங்கள் குழந்தைகளிடம் ஐ லவ் யூ சொல்ல வ&a

Very good sharing chellam......I love you jay kutty....
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.