Low Calorie (Negative calorie) foods-நெகடிவ் உணவு

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#1
நெகடிவ் உணவு


உணவில் என்ன நெகடிவ், பாசிடிவ் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். நெகடிவ் உணவு என்றால் நெகடிவ் கலோரிகளை தரும் உணவுகள். அதாவது நீங்கள் ஒரு உணவுப்பொருளை மென்று, ஜீரணித்து, வளர்சிதை மாற்றத்தால் உட்கிரகித்து, மிகுந்த பகுதியை கழிவாக வெளியேற்ற செலவாகும் கலோரிகளை விட, நீங்கள் உண்ட அந்தப்பொருள் குறைவான கலோரிகளை உடையதாக இருந்தால் அது நெகடிவ் உணவு!

உதாரணம் செலரி. இதில் உள்ளது நீரும், ஜீரணிக்க முடியாத செல்லூலோஸ், கலோரிகளற்ற விட்டமின்களும், தாதுப்பொருட்களும் தான். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை இந்தப்பட்டியலில் சேர்க்கலாம். அஸ்பாரகஸ், லெட்டூஸ், புரோக்கலி, முட்டைக்கோஸ், கேரட், காலிஃப்ளவர், ஆப்பிள் முதலியன நெகடிவ் உணவுகளாக சொல்லலாம்.

நெகடிவ் உணவுகள் உடல் எடையை குறைக்க உதவுகின்றன. ஆனால் வெறும் நெகடிவ் உணவுகளை உண்டு, எடையை குறைக்க முயற்சிப்பது ஆபத்தானது. ஒரு நாளைக்கு இதர உணவுகளுடன், அதிக அளவில் காய்கறிகளும், பழங்களையும் நிறைந்த பரிமாறல்கள் போதுமானது. பொதுவாக நெகடிவ் உணவுகள் உடலுக்கு நல்லவை. ஆனால் அவையே உணவாகாது.

கலோரி என்றால் என்ன?
கலோரி என்பது சக்தியை அளவிடும் அலகாகும். ஒரு கிராம் நீரை ஒரு டிகிரி சென்டிகிரேட் உயர்த்துவதற்கு தேவையான சக்திதான் கலோரி. அதிக எடை உள்ளவர்களுக்கு தேவையான கலோரிகள் - அவர்களது எடையின் ஒரு கிலோவுக்கு 20 கலோரி வீதம் தேவை. அதாவது உங்கள் எடை 80 கிலோ இருந்தால், தினசரி கலோரியின் தேவை - 80 ஜ் 20 = 1600 நார்மல் எடை உள்ளவர்கள், அவர்களின் எடையின், கிலோவுக்கு 30 கலோரி தேவை. குறைவான எடை உள்ளவர்களுக்கு அதிக கலோரிகள் தேவை. அவர்களது எடையின் ஒரு கிலோவுக்கு 40 கலோரிகள் தேவை. இந்த அளவுகள் வயதிற்கேட்ப மாறுபடும்.

நெகடிவ் கலோரி உணவுகளால் உடல் அதிகம் கலோரிகளை செலவிட நேருகிறது. இதனால் உடலின் கொழுப்பு கரையும் வாய்ப்புகள் அதிகம்.
உதாரணமாக ஒரு இனிப்பு 400 கலோரிகள் என வைத்துக் கொள்வோம். அதை ஜீரணிக்க 250 கலோரி செலவான பின் மீதி 150 கலோரி உடலில் கொழுப்பாக சேர்ந்து கொள்கிறது. ஆனால் ஒரு துண்டு செலரியை உட்கொண்டால் 5 கலோரி கிடைக்கும். அதை ஜீரணிக்க அதிக கலோரிகள் செலவாகும். இதனால் உடல் எடை குறையும்.

எல்லா உணவுகளிலும் கார்போஹைடிரேட் அல்லது புரதம், கொழுப்பு, தாதுப்பொருட்கள், விட்டமின்கள் உள்ளன. நெகடிவ் கலோரி உணவுகளில் உள்ள விட்டமின்கள், தாதுப்பொருட்கள் சில என்ஜைம்களை உருவாக்குகின்றன. இவை இந்த உணவுகளை மட்டுமல்ல, உடலில் உள்ள கலோரிகளையும் சிதைத்து ஜீரணமாக உபயோகப்படுத்துகின்றன.

பொதுவாக, அநேகமான காய்கறிகள், பழங்கள் நெகடிவ் கலோரி வகையைச் சேர்ந்தவையே. (காய்கறிகள் - காரட், பீன்சு, முட்டைக்கோசு(cabbage), பூக்கோசு (cauliflower), வெள்ளரிக்காய், கீரைவகைகள், தண்ணீர்விட்டான் கிழங்கு(asparagus), பீட்ரூட் முதலியன. பழங்கள் - ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி முதலியன).

வாரத்தில் ஒரு நாள் வெறும் பழங்கள் காய்கறிகளை மட்டும் சாப்பிடுவது அல்லது இரவில் பழங்கள் மட்டும் சாப்பிடுவது என்று பழக்கமாக்கிக் கொண்டால், கணிசமாக எடை குறைவதைக் காணலாம். அது மட்டுமன்று. இத்தகைய உணவுகள் உங்கள் செரிமான உறுப்புக்களை சுத்தம் செய்கின்றன. உங்கள் சருமத்தைப் பாதுகாக்கின்றன. மொத்தத்தில் உங்கள் உடல் எடை குறையவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் நெகடிவ் கலோரி உணவுகள் உதவுகின்றன.
 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#2
நெகட்டிவ் கலோரி


”நெகடிவ் கலோரி (Negative Calorie)” என்ற வார்த்தைகளை இண்டர்நெட்டில் அடிக்கடி கடந்து வந்திருப்போம். நெகட்டிவ் கலோரி என்றால் என்ன, நிஜமாகவே அப்படி ஒன்று உள்ளதா? ஒரு உணவைச் செறிக்க வைக்க நம் உடல் செலவழிக்கும் கலோரிகளை விட, அந்த உணவைச் சாப்பிடுவதால் நமக்குக் கிடைக்கும் கலோரிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அந்த உணவுப்பொருள் “Negative Calorie Food” என்று அழைக்கப்படுகிறது.

ப்ரோகலி, முட்டைகோஸ், லெட்யூஸ், ஆப்பிள் போன்ற உணவுகள் இந்த வகையில் வருவதாகச் சொல்லப்பட்டாலும், இதற்கு எந்தவித அறிவியல் ஆதாரங்களும் இல்லை. அதேபோல், நெகட்டிவ் கலோரி டயட் ப்ரோகிராம்களும் பெருமளவில் வெற்றிபெறுவதில்லை. ஓரளவு மட்டுமே எடை குறைய வாய்ப்பிருக்கிறது.

”Negative Calorie Drink” என்று சொல்லி விற்கப்படும் குளிர்பானங்கள் எதுவுமே அப்படிப்பட்டவை கிடையாது. குளிர்ச்சியான நீர் மட்டுமே இந்த நெகடிவ் கலோரி வகையில் வரும். ஏனென்றால், தண்ணீரில் கலோரி எதுவும் கிடையாது. ஆனால், குளிந்த நீரை நம் உடல் வெப்பநிலைக்குக் கொண்டுவருவதற்கு கொஞ்சம் கலோரிகள் செலவு செய்யப்படுகின்றன
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.