Low-Calorie Sweeteners - உடலுக்கு நல்லதல்ல- லோ கேலரி ஸ்வீட்னர&#3

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,667
Likes
18,545
Location
chennai
#1
உடலுக்கு நல்லதல்ல- லோ கேலரி ஸ்வீட்னர்

பனைவெல்லம், கருப்பட்டி, வெல்லம், தேன், கரும்புச்சாறு என்று நம் மூதாயர் கண்டிபிடித்த இனிப்பு பொருள் ஏனோ இன்று காதிகிராஃப்ட்ஸ் மற்றும் கூட்டறவு நிலையத்தில் மட்டுமே கிடைக்கும் ஒரு பொருளாகிபோனது. எல்லாம் இப்ப சர்க்கரை தான். சரி இந்த சர்க்கரை நம் கரும்பில் இருந்து தானே கிடைக்கிறது என்று தன்னை தானே ஆசுவாசப்டுத்திகொள்வர்களுக்குத்தான் இந்த ஆர்ட்டிக்கள்.

கரும்புச்சாறு பிழிந்தால் என்ன கலர் வரும் என எல்லோருக்கு தெரிந்தும் அது வெள்ளை சர்க்கரையாக எப்படி வருகிறது என்பது நிறைய பேருக்கு தெரியாது.

கரும்பு சாறில் இருந்து கிடைக்கும் சர்க்கரை பிரவுன் அல்லது டார்க் மஞ்சலாக தான் கிடைக்கும். அதை சுத்தபடுத்தும் பிராசஸ் தான் கொடுமையானது. ஒரு காலத்தில் கால்நடை எலும்புகள் பயன்படுத்தபட்டு பின்பு சர்க்கரை வெள்ளையாக மாறியது.

அது இன்னமும் 20% சர்க்கரை ஆலைகள் அந்த பிரசாஸிங் முறையை பின்பற்றுகிறது. மீதம் உள்ள 80% சதவிகித ஆலைகள் "சல்ஃபர் டையாக்ஸைடு" கரும்பு சாற்றை கொதிக்கவைக்கும் போது குமிழ்களாக செலுத்தி அந்த கெமிக்கள் கலரை "பிளீச்" செய்யும்.

அதன பிறகு தான் உங்களுக்கு முழுதான் வெள்ளை வெளேர் சர்க்கரை கிடைக்கிறது. அடுத்து ரீஃபைனிங் சர்க்கரை இன்னும் சில கெமிக்கல்கள் சேர்க்கபட்டு "அஃப்ஃபினேஷன்" எனும் முறையில் சுழற்சி செய்யபட்டு மேல் உள்ள துகள்கள் ரீஃபைன்ட் சர்க்கரை. மீதீ இருக்கும் துகள்கள் சிரப்புக்கு பயன்படுத்தபடுகிறது.

இன்னுமொரு முக்கிய விஷயம் சர்க்கரைக்கு பதிலாக " சுகர் மாதிரி", லோ கேலரி ஸ்வீட்னர், போன்ற செயற்க்கை சர்க்கரை தயவு செய்து உபயோகிக்க வேண்டாம். சர்க்கரை அதிகமானல் கூட பெரிய அளவுக்கு பாதிப்பு இல்லை இந்த இயற்க்கை சர்க்கரை மேட்டர் முழு கெமிக்கல் கலவை தான்.

முடிந்தால் கடையில் கிடைக்கும் பிரவுன் சுகர் அல்லது நாட்டு சர்க்கரை, தேன், பனை வெல்லம், கருப்பட்டி, அல்லது அளவான சர்க்கரை உட்கொள்ளுங்கள். தயவு செய்து சும்மா பவுடர் மாதிரி உள்ள ரீஃபைனிங் சுகர் எளிதாக கரையும் ஆனால் உடலுக்கு நல்லதல்ல. குளுகோஸ், சுக்ரோஸ், ஃப்ருட்கோஸ் அளவு முடிந்தால் பார்த்து வாங்கி பயன்படுத்தவும்

 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,667
Likes
18,545
Location
chennai
#3
Re: Low-Calorie Sweeteners - உடலுக்கு நல்லதல்ல- லோ கேலரி ஸ்வீட்ன&#

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பூட்டிகள்!


உணவியல் நிபுணர் ஜோதி

நீங்கள் எந்த உணவு முறையைப் பின்பற்றினாலும் எடையைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு ஒரு பொன்னான விஷயம் இருக்கிறது. அது- "சர்க்கரையைத் தவிருங்கள்".

எடை அதிகரிப்பு, அது தொடர்பான பிரச்சினைகளுக்கு முதல் முக்கியமான காரணம் சர்க்கரைதான். ஆனால் உங்கள் உணவில் சர்க்கரையை ஒதுக்கும் முடிவை உள்ளுணர்வோடும் உறுதியோடும் எடுக்க வேண்டும். சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்ற நிலை வந்தபோதுதான் "சுகர் ப்ரீ" அல்லது செயற்கை இனிப்பூட்டிகள் அங்கே பிரபலமாக இடம் பிடித்தன.

செயற்கை இனிப்பூட்டிகள் என்றால் என்ன? எல்லோரும் அவற்றைப் பயன்படுத்தலாமா?
இதுபற்றி உணவியல் நிபுணரான ஜோதி கூறுகையில், "செயற்கை இனிப்பூட்டிகள் என்பவை வேதிப்பொருட்களாகவோ அல்லது இயற்கையான கூட்டுப் பொருளாகவோ இருக்கலாம். அவை அதிக கலோரிகள் இன்றி சர்க்கரையின் இனிப்பை வழங்கும். இந்த மாற்று இனிப்பூட்டிகள் சர்க்கரையை விட இனிப்பானவை. எனவே சிறிதளவு செயற்கை இனிப்பூட்டி, அதே அளவு சர்க்கரையை விடக் கூடுதல் இனிப்புத் தரும்".

சர்க்கரை நோயாளிகள் மட்டும் செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்த வேண்டும்.

"நல்ல ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்குக் கூடுமானவரை இந்தச் செயற்கை இனிப்பூட்டிகளை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது. காரணம் அவை பெரும்பாலும் "சாக்கரீன்", "அஸ்பார்டேம்" ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுவதால் நீண்டகால அடிப்படையில் உடம்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்".
"கர்ப்பிணிப் பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள், இளம் பருவ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எந்தவகையான செயற்கை இனிப்பூட்டிகளையும் பயன்படுத்தக் கூடாது".

மேற்கண்டவர்கள் தவிர மற்றவர்கள் செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு சிறு பாக்கெட்டுகளுக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

"மேலும், உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் "சுகர் ப்ரீ", "யோகர்ட்" போன்ற செயற்கை இனிப்பூட்டிகள் கொண்ட உணவுகளும் கூட பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். காரணம் அவற்றிலும் உள்ள மற்ற கார்போஹைட்ரேட்கள், புரதங்கள் உங்கள் ரத்த சர்க்கரை அளவைப் பாதிக்கக் கூடும்".

மாற்று இனிப்புகள் அடங்கிய உணவுப் பொருட்களும் கலோரிகளைக் கொண்டிருக்கக் கூடும். இனிப்பு வகைகளில் சர்க்கரையை நீக்குவதால் மட்டும் அவை குறைந்த கலோரி கொண்டவை ஆகிவிடாது.

அந்த உணவுப்பொருட்களில் உள்ள கொழுப்புகளும் கார்போஹைட்ரேட்களும் உங்களுக்குத் தேவையானதை விட கூடுதல் கலோரிகளை அளிக்கக்கூடும்.

கடைசியாக, பழங்கள், காய்கறிகள், முழுத் தானியங்கள் போலில்லாமல், "சுகர் ப்ரீ" குளிர்பானங்கள், மிட்டாய்கள், இனிப்பு வகைகள் மிகச் சில சத்துகளையே அளிக்கக் கூடும் என்று கூறுகிறார்.


 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#4
Re: Low-Calorie Sweeteners - உடலுக்கு நல்லதல்ல- லோ கேலரி ஸ்வீட்ன&#2992

Really very important information! thank you @chan.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#5
Re: Low-Calorie Sweeteners - உடலுக்கு நல்லதல்ல- லோ கேலரி ஸ்வீட்ன&#2992

Important Information.Thank U @chan
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.