Magnificent relationship - உன்னதமான உறவு !!!

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#1
****** உன்னதமான உறவு *****

ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும் இனிப்பாக்க வல்லது இவ் உறவு. புதுப்புது உறவுகளை உருவாக்கக்கூடியது. இதை விடப் புனிதமான உறவும் இல்லை நெருக்கமான உறவும் இல்லை, இது ஒரு தெய்விகமான உறவு.

இன்றைய காலகட்டத்தில் நமது அறியாமையால், நமக்கு நாமே ஏற்ப்படுத்தி கொள்கின்ற பொருளாதார சிக்கல்களினால், ஆளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளால், தனது ஆதிக்கமே நடைபெற வேண்டுமென்ற தன்முனைப்பால் உண்மையான உறவுகள் பல உடைந்து போகின்றது .

ஒருவரின் பெருமையை ஒருவர் உணராத சிறுமையால் இன்று பரவலாக பல இல்லங்களில் கணவன் மனைவி உறவு தன் புனிதத்தை இழந்து புழுதியாகிவிட்டது. இந்த உறவின் வீழ்ச்சியால் தான் உருவாகிறது சமூகதின் அத்தனை வீழ்ச்சிகளும்.

உடல்களை பகிர்ந்து கொண்ட அளவிற்கு உள்ளங்களை பகிர்ந்து கொள்ளாததே இந்த வீழ்ச்சிக்கு முழுக்காரணம் .எந்த வீட்டில் ஒரு பெண்ணை அடக்கி ஆண் வெற்றி பெறுகிறானோ, அங்கே வெல்வது ஒரு மிருகம். எந்த வீட்டில் ஆணை அடக்கி பெண் ஜெயிக்கிறாலோ அங்கே ஒரு பிடரி ஜெயித்ததாகப் பொருள் .

தலை தாழ்ந்த பெண்ணும் தலை உயர்த்திய ஆணும் என்பதை விட இல்லத்தில் இருமனம் அன்பாலும் நம்பிக்கையாலும் இணைந்து இன்ப துன்பங்களை இணைந்து பகிரும் போதே வாழ்வு இருபாலருக்கும் மகிழ்வாகும்..

- திவ்யா கோபாலன்
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Very good information. thank you
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#3
Excellent & beautiful meaning
Thanx for sharing Daisy
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.