Main Foods to avoid during pregnancy

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#1
ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் முக்கியமான காலம் கர்ப்ப காலம் ஆகும். ஒரு பெண், கர்ப்பமாக இருக்கும் போது ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். அதே போல, சில உணவு வகைகளை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது அதிமுக்கியம் ஆகும். இங்கே கர்ப்பிணிகள் முக்கியமாக தவிர்க்க வேண்டிய சில உணவு வகைகள்


food-during-pregnancy.jpg
 

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#2
காபி:
Coffee-in-pregnancy-010.jpg

தினமும் காபி அருந்துவதை அறவே தவிர்க்க வேண்டும். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் எடுத்துக் கொள்ளப்படும் அதிகமான காப்ஃபைன் கொண்ட காபியினால் கருச் சிதைவோ அல்லது கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே கர்ப்பிணிகள் காபி குடிப்பதை தவிர்ப்பது மிகவும் அவசியம் ஆகும்.
 

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#3
முழுமையாக சமைக்கப்படாத அசைவ உணவுகள்.
Perfect-Soft-Boiled-Egg-4.jpg


அசைவ உணவு வகைகளான கோழி, மீன், கறி மற்றும் முட்டை போன்ற உணவுகளை கர்ப்ப காலத்தில் உட்கொள்ளும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரியாய் முழுமையாக சமைக்கப் படாத இத்தகைய உணவுகளை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.

அரைகுறையாக முழுமையாக சமைக்காத கடல் உணவுகள் மற்றும் அசைவ உணவுகளைச் சாப்பிடுவதால் தாயின் உடலில் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சரியாக வேகாத முட்டைகளும், கறியும் குழந்தை பெறப் போகும் பெண்ணுக்கு வாதம் தொடர்பான நோய்களை உண்டாக்கும்.

இத்தகைய உணவுகளைப் பேறு காலத்தின் போது சாப்பிடும் போது, நோய் தொற்றினால், தொப்புள் கொடி வழியாக குழந்தையையும் பாதிக்கும். இதன் காரணமாக கருவில் இருக்கும் குழந்தைக்கு மன ரீதியான பாதிப்புகள் அல்லது குறைப்பிரசவம் ஆகும் வாய்ப்புகளும் ஏற்படும். எனவே முழுமையாக சமைக்கப்படாத அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.

இந்த உணவுகளின் வாயிலாக நோயினாலோ அல்லது தொற்றினாலோ பாதிக்கப்பட்டு, தொப்புள் கொடி வழியாக குழந்தையையும் பாதிக்கும்' என்கிறார் தீப்ஷிக்கா. இதன் காரணமாக குறைப் பிரசவம் ஆகவோ அல்லது குழந்தைக்கு மன ரீதியான பாதிப்புகளோ ஏற்படவும் செய்யும். மேலும், கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத 10 உணவுகளைப் பற்றித தெரிந்து கொள்வதும் அவசியமாகும்.
 

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#4
பாலாடைக்கட்டி அல்லது பால்

Yellow-Cheese-colors-34605317-1000-804.jpg


கர்ப்ப காலங்களில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும்.கர்ப்ப காலத்தில் உடலுக்கு தேவைப்படும் கால்சியத்தை பெற பால் குடிப்பது நலமே.

எனினும், முறையாக கிருமி நீக்கம் செய்யப்படாத பால் மற்றும் பாலாடைக்கட்டி இவற்றை எடுத்துக் கொள்ளக்கூடாது. சரியாக சுத்திகரீக்கப்படாத பாலில் உள்ள கிருமிகள் தொப்புள் கொடி வழியாக கருவில் இருக்கும் குழந்தையை பாதிப்படையச் செய்கிறது. மேலும் கருச்சிதைவு ஏற்படவும் இது வழிவைக்கும்.

எனவே கடைகளில் பாலாடைக்கட்டி மற்றும் பால் பாக்கெட்டுகள் வாங்கும் போது லேபிள்களை சரிபார்த்து வாங்குங்கள். இப்பொழுது இவற்றில் எல்லாம் 'பேறு காலத்தில் சாப்பிடலாம்' 'கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது' போன்றவையும் குறிப்பிடப்பட்டும் உள்ளது. எனவே இவற்றை சரிபார்த்து வாங்குங்கள்.
 

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#5
கிரீன் டீ:
Green-Tea-During-Pregnancy.jpg


கிரீன் டீ - குடிப்பதால், நமது உடலின் இயக்கம் அதிகரிக்கிறது. இதனால் நாம் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். ஆனால், கர்ப்பிணிகளுக்கு கிரீன் டீ நல்லதல்ல. கிரீன் டீ குடிப்பதால், உடலின் அதிகப்படியான இயக்கத்தால் தேவையான அளவு ஓய்வு எடுக்கமுடியாமல் படபடப்பாக இருப்பது போல் ஏற்படும். மேலும் கிரீன் டீயிலும் சிறிது காப்ஃபைன் கலந்து உள்ளதால், உடலில் காப்ஃபைன் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கிரீன் டீ அதிகமாக எடுத்துக் கொள்வதால், அது உடலில் போலிக் அமிலம் சேருவதை தடை செய்யும். அதனால், கர்ப்பிணிகளும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் தேவையான அளவு போலிக் அமிலம் கிடைக்காமல் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
 

PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,391
Likes
28,894
Location
London
#6
Thanks for valuable tips Aparna ............
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#7
Really useful information you have provided Aparna, thanks.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.