Make-up and Dressing tips for Brides

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#1
' திருமண வீட்டிற்கு சென்றால் அனைவருடைய கண்களும் மணமகளின் அழகையே மொய்க்கும். மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வது என்பது மிக முக்கியமானது.
அழகாகவும், மிடுக்காகவும் தோன்ற எளிமையான உடற்பயிற்சிகளை செய்து வரவேண்டும். நடப்பது கூட சிறந்த உடற்பயிற்சிதான். தினமும், காலை மாலை அரைமணிநேரம் நடந்து செல்லுங்கள். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், உடல் எடையையும் குறைக்கிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும் போது அதிகம் களைப்பு ஏற்படாது.
உடற்பயிற்சி செய்த பின் அதிகமாக பசி ஏற்படும். அதற்காக நிறைய சாப்பிட்டு விடாதீர்கள். தினமும் அளவுடன் சாப்பிடுங்கள். தினமும் 2 பழங்களாவது சாப்பிடுங்கள். பப்பாளி பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிடலாம். அதன் மீது மிளகுப் பொடி தூவினால் பசி அடங்குவதுடன் சருமமும் பளபளப்பாக மாறும்.
முகத்திற்கு தரமான ப்ளீச்சிங், ப்ரூட் பேஷியல் செய்துகொள்ளலாம். கை, கால்களுக்கு மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்து வந்தால் திருமண சமயத்தில் அழகு கூடும்.
திருமணத்திற்கு ஒருமாதத்திற்கு முன்பு கோல்டன் பேஷியல், தலைமுடி பராமரிப்பு ஆகியவற்றை செய்யலாம். முகப்பரு உள்ளவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்பே அழகுக் கலை நிபுணரிடம் சென்று சரிசெய்துகொள்ளுங்கள்.
தலைமுடியை உறுதியாக சுத்தமாக வைக்க சூடான எண்ணையை தேய்த்து மசாஜ் செய்துகொள்ளுங்கள். நல்ல தூக்கம் அவசியம். தினமும் 8 மணிநேரம் தூங்குங்கள். தூக்கமும் அழகைக் கூட்டும்.
கண்ணுக்கு கீழ் கருவளையங்கள் தோன்றினால், முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அந்த இடத்தில் தேய்த்து, உலர்ந்ததும் கஞ்சி தண்ணீ*ர் கொண்டு கழுவி விடுங்கள்.
இரவில் தூங்குவதற்கு முன்பு, டீ டிகாஷனில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக்கொள்ளுங்கள். கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
நலங்கு மாவுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து கை, கால்களில் தடவினால் கரும்புள்ளிகள் மறையும்.
திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் கை, கால்களில் மருதாணி போட்டுக்கொள்ளலாம். ராஜஸ்தானி மெகந்தி, கறுப்பு மெகந்தி, அராபிக் மெகந்தி என்று பலவகையான டிசைன்கள் உள்ளன.
மூன்று நாட்களுக்கு முன்பே புருவத்தை ட்ரிம் செய்துகொள்ளுங்கள்.


மாலையில் நடைபெறும் ரிசப்ஷனுக்கு சற்று அதிகமாகவும், காலையில் மிதமாகவும் மேப் அப் போட்டுக்கொள்ளுங்கள். திருமண நாளன்று அதிகமாக வியர்த்துக் கொட்டும். அதனால், கிரீம் பேஸ் மேக் அப்பை விட, பவுடர் மேக் அப் போடுவது நல்லது. மேக் அப் போடுவதற்கு முன் ஐஸ்கட்டிகளைக் கொண்டு முகத்திற்கு ஒத்தடம் கொடுங்கள்.
அவரவர் நிறத்திற்கேற்ப பவுண்டேஷன், பவுடர், லிப்ஸ்டிக் போட வேண்டும்.
கண்களைச் சுற்றி ஐ-லைனர் வரையும் போது கலைநயத்துடன் வரைய வேண்டும். நிறத்திற்கேற்ப 'ஐ-ஷேடோ'வைத் தேர்ந்தெடுங்கள்.
மேக்அப் போடும்போது கழுத்து, கைகள் வரை ஒரே சீராக போடப்பட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும்.
கன்னத்திற்கு போடப்படும் 'ரூஜ்' தனியாக சிவப்பாக தெரியாமல் முகத்தோடு ஒன்றிப் போக வேண்டும். இதைச் சரியாக செய்தால் பள்ளமாக உள்ள கன்னங்களைக் கூட சரிசெய்திட முடியும்.
மெரூன் அல்லது பிரவுன் நிறத்தில் பொட்டு வைத்தால் போட்டோவில் பளிச் சென்று தெரிவீர்கள். மேலும் அழகூட்ட...பொட்டைச் சுற்றி கற்களால் டிசைன்கள் செய்து கொள்ளுங்கள்.
மேக் அப் செய்யும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து விட வேண்டும். நல்ல தரமான மேக் அப் பொருட்களையே பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், திருமண நேரத்தில் தோலில் அலர்ஜி ஏற்படும்.


மணப்பெண்ணின் அழகுக்கு மெருகூட்டுவது சிகையலங்காரம். முன்புறம் முகத்தின் மேற்புறம் சிகையலங்காரம் செய்வதற்கு 'ப்ரண்ட் செட்' என்று பெயர். இதற்கு பொருந்தும் அளவில் தான் பின்புறம் தலையை அலங்கரிக்க வேண்டும். பின்னல் போட்டு ஜடை அலங்காரம் செய்து, பின்னலில் பூ வைப்பதற்கு பதில் ஜரிகை, முத்து, கற்களால் செய்யப்பட்ட மோடி பைப்கள், பைப்பின்னல், ஐந்துகால் பின்னல், மேலே கொண்டை கீழே பின்னல் போடுவது என்று பல வகைகள் உள்ளன.
கொண்டை போடும்போது மணப்பெண்ணின் உயரம், பருமன், கழுத்தின் உயரம் போன்றவற்றைக் கணக்கிட வேண்டும். குட்டையான பெண்களுக்கு சற்று தூக்கியவாறு கொண்டையும், நீளமான கழுத்துள்ளவர்களுக்கு கழுத்தை மறைக்கும் அளவில் கொண்டையை இறக்கியும் போட வேண்டும். முகம் நீளமாக உள்ளவர்களுக்கு காதுகளை மறைக்கும் விதத்தில் சிறிது முடியை எடுத்து சுருட்டி விடலாம். அகலமான முகத்தை உடையவர்கள் முடியைத் தூக்கிக் கட்ட வேண்டும். நடுவகிடு எடுத்து அதில் நெற்றிச்சுட்டியை அணியலாம். அல்லது காதின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு முடியை வாரி எடுத்துச் சென்று பின்குத்தி விட்டு, பின்னால் அழகாக கொண்டை போடலாம்.
திருமணப் புடவை வாங்கும்போது, அவை குறைந்தது 2 ஆண்டுகளாவது அணிய வேண்டியிருப்பதால், தரமான புடவையாக பார்த்து வாங்குங்கள். அவை நீங்கள் அணியும் நகைகளுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். உதாரணமாக, அரக்கு நிற ஜரிகை பார்டர் போட்ட பட்டுப்புடவை கறுப்பாக சற்று குண்டான பெண்களுக்கு பொருத்தமாக இருக்காது. சிவந்த மேனியுடைய பெண்களுக்கு மிளகாய் பழ சிவப்பில் மெல்லிய ஜரிகை பார்டர் போட்ட பட்டுப்புடவை எடுப்பாக இருக்கும்.
போட்டோவில் பளிச்சென்று தெரியக்கூடிய வகையில் உடைகளைத் தேர்வு செய்யுங்கள். வாடாமல்லி, மயில் கழுத்து நிறம், தேன் நிறம் போன்ற வண்ணங்கள் ரிசப்ஷனுக்கு ஏற்றவை. பட்டு சேலைக்கு 'ரா' சில்க், பருத்தி வகையில் உள்ள சோளிகள் அணியலாம். மார்டனை விரும்புபவர்கள் தங்களுக்கு பொருத்தமான காக்ரா சோளி அணியலாம்
 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#2
மாலை ரிசப்ஷனுக்கும், காலை முகூர்த்தத்திற்கும் என்னென்ன நகைகள் தேர்வு செய்து, எப்படி அணியலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
நிச்சயதார்த்த அலங்காரத்தை, திருமண அலங்காரத்துக்கு ஒரு ஒத்திகையாக (trial dressing) எடுத்துக் கொள்ளலாம். நிச்சயதார்த்த போட்டோ ஆல்பத்தையும், வீடியோவையும் பார்த்தாலே, நீங்கள் அணிந்திருக்கும் நகைகள் உங்களுக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதை நன்கு உணரலாம். உதாரணமாக பெரிய ஜிமிக்கி உங்களுக்கு சற்று பொருந்தாமல் இருக்கலாம் அல்லது நெத்தி சுட்டியின் அகலமான பதக்கம் உங்கள் முக அமைப்புக்கு சரியில்லாமல் இருக்கலாம். இவற்றை மனதில் கொண்டு, இது போன்ற சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து கொண்டால் திருமணத்தின்போது பர்ஃபெக்ட் மணமகளாக காட்சியளிப்பீர்கள்.
ஒவ்வொரு பிரிவினருக்கும் திருமண சடங்கு, சம்பிரதாயங்கள் மாறுபடும் காரணத்தால் முதலில் மணப்பெண் அவர்களது கலாச்சார முறைப்படி என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு, எந்த நிகழ்ச்சிக்கு எந்த புடவை மற்றும் நகை அணியலாம் என்று ஒரு தனி லிஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரே சமயத்தில் மாமன் சீர், பெண் அழைப்பு என்று இரண்டு மூன்று சடங்குகள் இருந்தால், மணப்பெண் 2 அல்லது 3 புடவைகளை மாற்றி மாற்றி அணிய வேண்டியிருக்கும். அந்தச் சமயம், ஒவ்வொரு முறையும் நாம் நகைகளையும், அலங்காரங்களையும் புடவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியாது. அதனால் நாம் தேர்வு செய்யும் நகைகள் பொதுவாக அனைத்துப் புடவைகளுக்கும் பொருந்துமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக, நீல நிறப் புடவைக்கு மேட்சாக நாம் நீல நிறத்தில் நகைகள் மற்றும் மலர்கள் அணிந்துக் கொண்டால், பிறகு உடுத்தப்போகும் "மெரூன்" நிறப் புடவைக்கும், "லேவண்டர்" நிறப் புடவைக்கும் அது சற்றும் பொருந்தாதது. எனவே கோல்டன் நிற நெக்லஸில் மெரூன் நிற கற்கள் மற்றும் பீட்ஸ்கள் பொருந்திய நகைகள் அல்லது வெள்ளைக் கல் நகைகளை அணியலாம்.
அதுவே ரிசப்ஷன் என்று பார்த்தால், மாப்பிள்ளை அருகில் ஜம்மென்று நீங்கள் நிற்க, அட்டகாசமாய் ட்ரெஸ்ஸிங் செய்து கொள்ளலாம். ஏனெனில் பெரும்பாலும் வரவேற்பின்போது, அலுங்காமல் குலுங்காமல் நின்றுக் கொண்டு முகத்தில் புன்னகையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதால், சற்று ஹெவியான புடவையும் நகைகளும் அணிந்துக் கொள்ளலாம்.
மாலை நேரம் என்பதால், வெள்ளைக்கல் நகைகள், பிரகாசமாக இருக்கும் என்று நீங்கள் விரும்பினால் அமெரிக்கன் டைமண்ட் பதித்த வெள்ளி, கோல்டு ஃபார்மிங் நகைகளில் பிரைடல் செட்டுகளைத் தேர்வு செய்யலாம். தங்க வைர நகைகளில் ஆரம், நெக்லெஸ், கம்மல்கள் எல்லாம் செட்டாக சிலரிடம் இருந்தாலும்கூட ஒட்டியாணம், வங்கி, ஜடைசெட் போன்றவை இல்லாமல் இருக்கலாம். அதனால் பெண் அலங்காரத்தைப் பொறுத்தவரை செட்டாகக் கிடைக்கும் ஒரு கிராம் பிரைடல் நகைகளுக்குத்தான் மவுசு அதிகம்.
அதுவே வைர நகைகளின் பொலிவில் லேட்டஸ்ட் மாடல் நகைகள் அணிய நினைத்தால், இருக்கவே இருக்கிறது ஜெர்கான் கற்கள் பதித்து, பிளாட்டினம் கோட்டிங் செய்யப்பட்ட நகைகள். நாம் முன்பே குறிப்பிட்டிருந்த ஜோதிகாவின் திருமண செட் போன்ற கலெக்ஷன்ஸ்தான் இன்றும் பிரபலமாக இருக்கிறது. ஒரே ஒரு பெரிய நெக்லெஸ்சும், காதணிகளும், நெத்திச் சுட்டியும் மட்டும் அணிந்தாலே ரிசப்ஷன் டிரஸ்ஸிங் களைக்கட்டிவிடும். எந்த நகைகள் அணிந்தாலும், முக்கியமாக கழுத்தில் உள்ள பூமாலை சன்னமாகவும், நகைகளை மறைத்துக் கொள்ளாமல், சற்று அகண்டு இருக்குமாறும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
காலை சுப முகூர்த்ததிற்கு என்ன நகைகள் என்று பார்க்கலாமா? முகூர்த்தம் என்றாலே பாரம்பரிய பட்டுப் புடவைதான் உடுத்துவோம் என்ற காரணத்தால், மாடர்ன் மற்றும் ஃபேன்ஸி நகைகளைத் தவிர்த்து கலாச்சார நகைகளை அணிய வேண்டும். சுமாராக 80% பெண்கள் அணிவது கெம்புக் கல் பதித்த "டெம்பிள் ஜூவல்லரிதான். இது கவரிங் மற்றும் வெள்ளியிலும் கிடைக்கிறது. இதில் காலங்காலமாய் வரும் அதே பட்டை சுட்டி, ஒற்றை சுட்டி, குடை ஜிமிக்கி, அட்டிகை, மயில் ஆரம் அல்லது மாங்காய் ஆரம் போன்றவற்றைப் போட்டுப் போட்டு அலுத்துவிட்டிருக்கலாம். என்னிடமே பலர் இதே கருத்தைச் சொல்வதால், தற்போது அசல் தங்கத்தில் வரும் "செட்டி நாட்டு ஆண்டிக்" நகைகள் போன்று ஒரு கிராம் தங்கத்தில் விதவிதமாக டிசைனிங் செய்து கொண்டிருக்கிறேன். இந்த மாதிரி நகைகள் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரிஜினல் கெம்புக் கற்கள் பதிக்கப்பட்ட "கெஜல் ஆரங்கள், பதக்கங்கள், காப்புகள், ஜடை வில்லைகள், கெம்பு ஒட்டியாணம், மற்றும் வங்கிகள் என ஒரு செட்டாக அணியலாம். "கெம்புக்கல்" நகைகளை விரும்பாதவர்கள் நஹாஸ் வேலைப்பாட்டில் செய்யப்பட்ட பிளையின் செட்டுகளையும் அணியலாம். எந்த நகைகளைத் தேர்வு செய்தாலும், உச்சி முதல் பாதம் வரை ஒரே செட்டாக இருந்தால் பார்க்க சீராக, அழகாக இருக்குமல்லவா?...
திருமணங்களில் இன்று மிகவும் பிரபலமாக இருக்கும் "ட்ரெண்ட்" "தீம்-கலரிங்"தான். அதாவது மணமகளின் புடவைக்கு மேட்சாக மணவறையின் "பேக்-ட்ராப்", மாப்பிள்ளையின் சர்ட், லைட்டிங்ஸ், மாலைகள் போன்ற எல்லாவற்றையும் அமைப்பதுதான் இது! இத்தனையும் மேட்சாக இருக்கும்போது, நகைகளை மட்டும் விட்டுவிடுவோமா என்ன?!
குந்தன் நகை-செட் என்று பார்த்தால் வெள்ளை நிற குந்தன் கற்களுடன் வண்ண பீட்ஸ்கள் சேர்த்து சோக்கர், ஆரம், இயர்செட், சுட்டி, ஒட்டியாணம், வங்கி, விரல்களில் அணியும் ஃபிங்கர்செட், ஹிப் செயின், கொலுசுகள், மெட்டி, கடா வளையல், ஜடை செட், குஞ்சம் அத்தனையும் புடவையின் நிறத்துக்குப் பொருத்தமாகத் தேர்வு செய்ய வேண்டும். புடவையில் கற்கள் மற்றும் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருந்தால் இந்த வகை நகைகள் பொருத்தமாக இருக்கும். மணப்பெண்ணின் தோற்றத்துக்குப் பொருந்துமேயானால், அகலமான, "ஜோதா அக்பர்" நெக்லெஸ்களையும் கூட அணியலாம்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.