Mattu Pongal - மாட்டுப் பொங்கல்

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
மாட்டுப் பொங்கல்

பொங்கலுக்கு மறுநாள்மாட்டுப் பொங்கல்
கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழா.
பாகவதத்தில் ஸ்ரீகிருஷ்ணன் ஆடு, மாடுகளை மேய்த்தான்
அதனாலும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துகிறோம்.
இந்திரனுக்கும்,வருணனுக்கும் உரிய திருநாளாக போகியைக் கொண்டாடுகிறோம்.

மழைக்கு தெய்வம்இந்திரன். நல்ல மழை வேண்டி இந்திரனையும், வருணனையும் வழிபடுகிறோம்.
அடுத்து பயிர்களின் விளைச்சலுக்கு வெப்பமும் வேண்டும் என்பதால் சூரியனை
வழிபடுகிறோம்.

காச்யபர் என்னும் ரிஷியின் மகன் ஆன சூரியன் அவருடைய இன்னொரு
மனைவியின் மகன் ஆன அருணன் உதவியோடு தன் பயணத்தைத் தினம் தொடங்குகிறான். இந்த
சூரியன் தினம் தினம் தோன்றுவதும் மறைவதும் போல் தெரிகிறதே தவிர அது உண்மையில்
தோன்றவும் இல்லை. மறையவும் இல்லை. சூர்ய சதகம் என்னும்ஸ்லோகத்தில் 18
மற்றும் 97 ஆவது ஸ்லோகத்தில் இது குறித்துக் கூறி இருப்பதாய் அறிகிறோம்.
சூரியன் உதயமோ அஸ்தமனமோ இல்லாதவன் என்றும் அவன் ஒளி
பரவினால் அந்த இடத்தில் அப்போது பகல் எனவும் ஒளி பரவாத திசை இரவு எனஅறிகிறோம்.

ஒரு கண்டத்தில் சூரியன் ஒளி வீசிப் பிரகாசிக்கும்போது
இன்னொரு கண்டத்தில் நிலவு பிரகாசிக்கிறது அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கப் படும் முன்னரே
நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.

நந்தி தேவருக்கு ஈசன் கொடுத்த சாபத்தினாலேயே மாட்டுப் பொங்கல்
விவசாயத்துக்குப் பெரும் உதவி செய்யும் கால்நடைகளை வழிபடுவதேமாட்டுப் பொங்கல் ஆகும்.

கோமாதா' என்று தாய்க்குச் சமமாகப் போற்றப்படும் பசுக்களின் சிறப்பு வார்த்தைகளில் அடங்குவதில்லை.

சாத்வீகத் தன்மைக்கு உதாரணமாகப் போற்றப்படும் பசு, மனிதர் பெறவேண்டிய செல்வங்களுள் முக்கியமான ஒன்று.

அக்காலத்தில், அதிகப் பசுக்களை வைத்திருப்பவர், பெரும் செல்வந்தராகக் கருதப்பட்டார்.

'மாடு' என்றாலே செல்வம் என்றும் பொருள்.

வேள்விகள், ஹோமங்கள் நடக்கும் முன்பாக, கோபூஜை செய்து துவங்குவது நம் சம்பிரதாயம்.

திருக்கோவில்களில், விடியலில், திருவனந்தல் தரிசனத்தின் போது, இறைவனின் திருமுன், பசுவையும் கன்றையும் அழைத்து வந்து தரிசனம் செய்வித்த பின்பே, சேவார்த்திகள் இறைவனை தரிசிக்கின்றனர்.

இறைவனே, கோமாதாவின் திருமுகத்தில் விழிப்பதாக ஐதீகம்.

கன்றோடு சேர்ந்த பசு, சுபசகுனங்களில் ஒன்று.

கோசாலை, ஆலயத்திற்கு சமமான பெருமை வாய்ந்தது. கோசாலையில் செய்யப்படும் யாகங்கள், ஹோமங்கள், ஜபங்கள் ஆகியவற்றுக்கு அபரிமிதமான பலன்கள் உண்டு.

பசுவை, யார் ஆராதிக்கிறார்களோ, அவர்கள், முப்பத்து முக்கோடி தேவர்களின் அருளையும் பெறுகிறார்கள்.

பசுவிற்கு 'அக்னிஹோத்ரி' என்றும் பெயர் உண்டு.

அக்னி ஹோத்ரம் செய்பவர்கள், அக்னியை எப்படி, சிறிதும் சோர்வின்றி ரட்சிக்க வேண்டுமோ, அப்படியே, பசுவையும் ரட்சிக்க வேண்டும்.
பசுவிற்கு ஒரு பிடி அகத்திக்கீரை தருபவன், எண்ணற்ற யாகங்களைச் செய்த புண்ணியப் பலனை அடைகிறான் என்று தர்ம சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

பசுவுக்கு தினமும் ஒரு பிடி புல் தருபவர், மரணத்திற்குப் பின் கட்டாயம் சொர்க்க வாசம் அடைகிறார்.

தாய்ப்பால் கிடைக்க இயலாத குழந்தைகளுக்கு, பசுவின் பாலே தரப்படுகின்றது.

பஞ்சகவ்யம் எனப் போற்றப்படும், பசுஞ்சாணம், பால், தயிர், நெய், கோமியம் ஆகியவை தெளித்தே, யாகசாலைகள் சுத்தம் செய்யப்படுகின்றன.

பசுவின் சாணமும், கோமியமும், சிறந்த கிருமி நாசினிகள். கிருச்ச விரதம் முதலான விரதங்கள் எடுக்கும் முன்பாக, பஞ்சகவ்யம் கட்டாயம் அருந்த வேண்டும்.பசுஞ்சாணத்தில் ஸ்ரீலக்ஷ்மியும், கோமியத்தில் கங்கையும் வாசம் செய்வதாக ஐதீகம்.

ஆகவே, அக்காலத்தில், விடியலில், சாணம் கரைத்த நீரைத் தெளித்து வீடு வாசலை மெழுகித் தூய்மை செய்தார்கள்.

சாணம் கிருமிநாசினியாதலால், பூச்சிகள் வீட்டினுள் சேராமல் தடுக்கும்.

பசுஞ்சாணத்தால் தட்டிய வரட்டிகளையே, ஹோமங்களில் உபயோகிப்பது வழக்கம்.
மிக நுண்ணிய மந்திர ஒலிகளை ஈர்த்துக்கொள்ளும் தன்மையுடையது பசுவரட்டி.


. மாடுகளைக் காலை வேளையில் மேய்ச்சலுக்கு இட்டுச்
செல்வார்கள், மாலையானதும் அவை வீடு திரும்பும் நேரம் விளக்கு வைக்கும்
நேரமாய் இருக்கும். அப்போது எழும்பும் தூசியை கோ தூளிகா மண்டலம் எனப்படும்.
இது உடலில் படுவதால் நன்மை பயக்கும் என்று நம் முன்னோர்களின் நம்பிக்கை.
கிராமத்துத் திண்ணைகளில் குழந்தைகளோடு இந்தக் காற்றுப் படுவதற்காக மக்கள்
அமர்ந்து காத்திருப்பார்களாம்.
 

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#2
பசுஞ்சாணத்தினால் தோட்டம் அல்லது மாட்டுத் தொழுவத்தில் தரைப்பகுதியில் தண்ணீர்
கசியா வண்ணம் பூமியுடன் ஒட்டிய வண்னம் தெப்பம் அமைப்பர் ;

இதில் நவதானியங்கள், மஞ்சள், பூக்கள், இவற்றைப்
போட்டு நீர் நிரப்புவர்;. தெப்பத்தின் பக்கங்களை திருநீறு, குங்குமம்
அல்லது சந்தனம், குங்குமத்தால் அலங்கரிப்பர் . பின் பொங்கல்
படைத்து வழிபட்டு, மாடுகளுக்கும் குளிப்பாட்டி அலங்கரித்து, அவற்றுக்கும்
தூபம், தீபம் காட்டி அவற்றோடு இந்தத் தெப்பத்தை மும்முறை வலம் வருவார்கள்.
அப்போது கிளம்பும் கோ தூளிகா மிகவும் சிறப்பானது
முடிவில் கால்நடைகளின் கால்களை தெப்பத்தின் மீது வைத்து
தெப்பநீர் மதில் தாண்டி வெளிப்படச் செய்வார்கள்.
பொங்கல் முடிந்த மறுநாள் கணுப்பண்டிகையாகவும் கொண்டாடுவார்கள்.

முதல்நாள்
பொங்கல் பானையில் கட்டிய மஞ்சளோடு சேர்த்து மிச்சம் பசும் மஞ்சளையும்
அம்மியில் அரைத்துச் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும்
கொடுப்பார்கள்.
அந்த மஞ்சள் கொத்தில் இருந்து ஒரு துண்டு மஞ்சளை எடுத்து
வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கொடுத்து நெற்றியில் மஞ்சளைக் கீறிவிடச்
சொல்வார்கள்.

மஞ்சள் கீறுகையில் சொல்லும் ஆசீர்வாத வாழ்த்துப் பாடல்

தாயோடும் தந்தையோடும் சீரோடும் சிறப்போடும்

பேரோடும் புகழோடும் பெருமையோடும் கீர்த்தியோடும்

தொங்கத் தொங்கத் தாலி கட்டித் தொட்டிலும் பிள்ளையுமாக
மாமியான் மாமனார் மெச்ச நாத்தியும் மதனியும் போற்றப்
பிறந்தகத்தோர் பெருமை விளங்கப் பெற்ற பிள்ளைகள் ஆயுள் ஓங்க
உற்றார் உறவினரோடு புத்தாடை புதுமலர் சூடி
புது மாப்பிள்ளை மருமகளோடு புதுப் புது சந்தோஷம் பெருகி
ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி என்றென்றும் வாழணும்
எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கணும்!
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
திரு கேசவன் அவர்களுக்கு மிக்க நன்றி மாட்டுப்பொங்கலின் மகாத்மியத்தை விளக்கமாக எடுத்து கூறியது மட்டுமில்லாமல் ஆநிரை மேய்த்த அந்த கண்ணன் எம்பெருமானின் புகழ் பாடியும் மாடுகளின் சிறந்த ஒரு மேலான தன்மை பற்றியும் விளக்கமாக கூறியிருந்தமைக்கும் நாங்கள் தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.