Medical Notes - மருத்துவ குறிப்புகள்

gowrymohan

Registered User
Blogger
கர்ப்பக் கால கவனிப்பு..!

*கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே...!

*கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

*கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

*வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

*பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

*கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல... உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

*கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

*கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

*பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

*தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

*பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.- ரிலாக்ஸ் ப்ளீஸ்
 

gowrymohan

Registered User
Blogger
கூந்தல் நீளமாகவும், அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர:-

* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

* கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

* ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

* காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

* நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

Thanks: ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.


- ரிலாக்ஸ் ப்ளீஸ்
 

gowrymohan

Registered User
Blogger
பெண்களுக்கு கால்சியம் சத்து அவசியம்

30 வயதைத் தொட்டவர்கள் வைட்டமின் டி- கால்சியம் செறிந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய் முற்றுபெறும் நிலையில் உள்ள பெண்கள் கால்சியம், அதிகம் உள்ள சிக்கன், மட்டன், இறால், முட்டை, மீன் போன்ற உணவுகளை சேர்க்க வேண்டும்.

மெனோபசுக்குப் பின்னர் சோயாபீன்ஸ் சேர்த்துக கொண்டால் அதிக கால்சியம் உடலுக்கு கிடைக்கும். பெண்களை பொருத்தவரை மாதவிலக்கு காலத்தில் அதிக ரத்தம் வெளியேறுவதால் மூட்டுப் பிரச்சனைகள் வரலாம். எலும்பின் வளர்ச்சி உறுதிப்பாட்டுக்கு சிறுவயது முதலே கால்சியம் சக்தி நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் சிறு வயது முதலே காய்கறிகளையும், பழ வகைகளையும் அதிகளவில் சேர்த்துக் கொண்டால் தான் 30 வயதை தொடும் போது ஏற்படும் பல விதமான பிரச்சனைகளை சமாளிக்க முடியும். சிறிய வயதில் நாம் சேர்த்துக்கொள்ளும் உணவுகள் தான் வயதாகும் போது உடலுக்கு சக்தியை கொடுக்கும்.

பசுப்பாலும் பால் சார்ந்த உணவுகளும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் முக்கிய காரணியாகும். தினமும் ஒரு பழம் சாப்பிடுவது அவசியம். கீரை வகைகள், பேரீச்சை, பால் மற்றும் பால் பொருட்கள், உலர் பழங்கள், கொட்டை வகைகள், மீன் சாப்பிடுவதன் மூலம் மூட்டு பிரச்சனைகளை தடுக்க முடியும்.

 

gowrymohan

Registered User
Blogger
மூட்டு வலியைப் போக்க ஒரு அருமருந்துதான் இந்த முடக்கத்தான் கீரை..


மூட்டு வலிக்கு முக்கிய காரணமே மூட்டுத் தேய்மானம்தான். இது வயதாக வயதாக அனைவருக்கும் உண்டாகும் நோய்தான்.. இதிலிருந்து தப்புவது என்பது பெரும்பாலானோருக்கு முடியாத ஒன்று.

இளவயதிலேயே மூட்டுவலியா? அப்படியென்றால் நிச்சயம் நீங்கள் குண்டாக இருப்பீர்கள். அளவுக்கதிமாக வயதுக்கு மீறிய எடையுடன் இருப்பீர்கள். அல்லது காலுக்கு அழுத்தம் கொடுத்து செய்யக்கூடிய வேலைப் பார்ப்பவராக இருப்பீர்கள்..

நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்றுகொண்டு வேலை செய்பராக இருக்கக்கூடும். அதிக எடையை சுமக்கக்கூடிய வேலை செய்பவராக இருக்ககூடும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

குறிப்பிட்ட வயதுக்கு மேல் எலும்பு தேய்மானத்தால் பெரும்பாலானவர்களுக்கு இந்த மூட்டுவலி வந்துவிடுகிறது.

மருத்துவரைப் பார்த்து, வைத்தியங்கள் செய்து கொண்டு வந்தால் அன்றைக்கு அல்லது ஓரிரு நாட்கள் வலி குறைந்ததுபோல இருக்கும். மருத்துவர்கள் இவர்களுக்கு கொடுப்பது வலி நிவாரணிகளைத்தான். இந்த வலி நிவாரணி மாத்திரைகள் என்ன செய்யும் தெரியுமா? வலியை மறத்துப்போகச் செய்யும். அதாவது வலி உணர்வை மட்டுமே போக்கும்..மாத்திரைகள் அனைத்தும் வலியைக் கட்டுப்படுத்தக்கூடியவை மட்டுமே.. அப்போதைக்கு குறைப்பது போலிருக்கும். ஆனால் அவை நிரந்தரமல்ல.. தொடர்ந்து மூட்டுவலியைக் கட்டுக்குள் கொண்டு வர தினமும் இந்த வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு வரும் பக்கவிளைவுகள் ஆபத்தை ஏற்படுத்தலாம். இரத்தத்தில் மாத்திரையின் சாரம் குறையும்போது மீண்டும் பல்லவிதான்.. மூட்டுவலி.. மூட்டுவலி.. மேலும் மூட்டுவலி..

சிலருக்கு வலியைத் தாங்கக்கூடிய சக்தி இருக்கும். ஒரு சிலருக்கு உயிர்போகிற வலி இருக்கும்.. மூட்டுவலியால் இவர்கள் அவதிப்படும்போது காண சகிக்காது...

இதற்கு காரணம் மூட்டுகளில் தங்கும் கொழுப்பு, புரதம், கொழுப்பு, பாஸ்பரஸ் போன்ற படிகங்கள்தான்.

இத்தகைய துன்பம் தரும் மூட்டு வலியை நீக்க அருமையான இயற்கை முறை, இயற்கை மூலிகை உள்ளது.

முடக்கத்தான் கீரை:

பெயரே முடக்கத்தான் கீரை..அதாவது மூட்டுவலிகளை, உடல் வலிகளை முடக்கம் செய்துவிடும் குணம் உள்ளதால் இதற்கு முடக்கத்தான் கீரை என பெயரிட்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன்.

கிராம்ப்புறங்களில் இக்கீரை அதிகமாக காணப்படும். வயல்வெளிகள், ஏரிக்கரைகள், கிணற்றடியில் என நீர்வளம் மிக்க எங்கும் இது காணப்படும்.

பயன்படுத்தும் முறை:

முடக்கத்தான் கீரையில் அனைத்துப் பகுதிகளையும் பயன்படுத்தலாம். முடக்கத்தான் கீரை, முடக்கத்தான் தண்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளுங்கள். இதை ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்துக்கொண்டு, இதனுடன் தேவையான இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சிறிய வெங்காயம் இவற்றை ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெய் விட்டு வதக்கவும். வதங்கிய பிறகு அதில் இரண்டு குவளை நீர் விட்டு நன்றாக வேக வையுங்கள். நன்றாக கீரை வெந்த பிறகு கீரையின் சத்துகள் அனைத்தும் நீரில் இறங்கியிருக்கும். இப்போது அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். வடிகட்டிய சாறை சிறிது சிறிதாக பருகலாம்.

முதலில் சாறை கொஞ்சமாக எடுத்து பயன்படுத்தவேண்டும். ஒரு சிலருக்கு சேராமல் பேதியாகும். ஆனால் பேதியால் உடலுக்கு எந்த விட கெடுதியும் ஏற்படாது. இரண்டொரு நாளில் முடக்கத்தான் சாறு உங்கள் உடலுக்கு ஒத்துப்போய்விடும். பிறகு தினம்தோறும் இவ்வாறு சாறெடுத்து பருகலாம்.

வயதானர்களுக்கு மட்டுமல்ல.. அனைத்து வயதினருடைய மூட்டுவலிகளை முடக்கத்தான் கீரை போக்கிவிடும். மூட்டு வலிகள் மட்டுமல்ல.. உடல், முதுகு தண்டுவடம், கை, கால் வலிகள் போன்ற அனைத்துவலிகளை முடக்கத்தான் போக்கிவிடும்.

பயன்படுத்திப் பார்த்துவிட்டு நீங்களே சொல்வீங்க...

"முடக்கத்தான் கீரை 'மூட்டு வலி'யை முடக்கத்தான்" என்று.


- TechThangam.
 
Hi gowry mam very useful information about during pregnancy problem and also useful information about mutakathan keerai i should try it for my husband leg pain thanks for sharing
 
அவரைக்காய் பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்பே தேரையர் குணபாடத்தில் கூறப்பட்டுள்ளது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.

* அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.

* அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும்.

* நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.

* பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும்.

* அவரைப்பிஞ்சினை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.

* அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

* காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.

* சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.

* மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும்

* முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

* சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.

முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.
 
[h=1]வயிற்று புண்ணை குணப்படுத்தும் முளைக்கீரை[/h]


கீரையை தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். முளைக்கீரை அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்த கீரை. இக்கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் கே, வைட்டமின் சி, போலேட் மற்றும் ரிபோப்லாவின் ஆகியவற்றை கொண்டுள்ளது.. நீர்சத்து அதிகமுள்ள முளைக்கீரை வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

உடலுக்கு பலம் கூட்டும் சக்தியை கொண்டது. சிறுவர்களுக்கு இந்தக்கீரையை தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி அடைவார்கள். முளைக்கீரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், மங்கனீசு போன்ற கணிமங்களை கொண்டுள்ளது முளைக்கீரை. கோதுமை, அரிசி, ஓட்ஸ், ஆகியவற்றில் கொண்டுள்ள புரதத்தை விட 30% அதிகபுரதத்தை கொண்டுள்ளது. இதயநோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்களுக்கு முளைக்கீரை உதவுகிறது.
 

gowrymohan

Registered User
Blogger
உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அந்த அளவில் நீரிழிவு மக்கள் மத்தியில் பரவிக் கொண்டே வருகிறது. இதற்கு உணவில் அதிகப்படியான சர்க்கரையை சேர்த்துக் கொள்வது ஒரு முக்கிய காரணமாகும். மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை. அதிலும் ஆரோக்கியம் என்று நினைக்கும் காய்கறிகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த காய்கறிகளே உயிருக்கு ஆப்பு வைத்துவிடும். ஏனெனில் சில காய்கறிகளில் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் அதிகம் இருக்கும். இத்தகைய காய்கறிகள் இனிப்பாக இருக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும் அனைத்து காய்கறிகளையுமே நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்பதில்லை. உதாரணமாக, பூசணிக்காய் இனிப்பாக தான் இருக்கும். ஆனால் இதனை நீரிழிவு நோயாளிகள் பயப்படாமல் சாப்பிடலாம். மேலும் சில காய்கறிகளில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய உணவுகளை நீரிழிவு நோயாளிகள் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. சரி, இப்போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாத சில காய்கறிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, நீரிழிவு இருந்தால், அவற்றை உணவில் சேர்ப்பதை தவிர்த்துவிடுங்கள்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் மாவுப்பொருள் அதிகம் நிறைந்திருப்பதால், இந்த உணவுப் பொருளை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

சேனைக்கிழங்கு
பொதுவாக கிழங்குகள் அனைத்திலுமே மாவுப்பொருளானது அதிகம் இருக்கும். அதிலும் சேனைக்கிழங்குகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சொல்ல முடியாத அளவில் அதிகரிக்கும். எனவே இந்த கிழங்கை உணவில் சேர்க்கக்கூடாது.

பீன்ஸ்
பீன்ஸ் இனிப்பாக இல்லாவிட்டாலும், இதில் ஸ்டார்ச் மிகவும் அதிகம் உள்ளது. அதற்காக பீன்ஸ்களை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென்பதில்லை. ஆனால் அவற்றை நீரில் வேக வைத்து, அதுவும் அளவாக சாப்பிட வேண்டும்.

பீட்ரூட்
பீட்ரூட் ஒரு வேர் காய்கறி என்பதால், இது மண்ணில் உள்ள அனைத்து இனிப்புக்களையும் உறிஞ்சி, மிகவும் இனிப்பான சுவையில் உள்ளது. அதற்காக இதனை அறவே தவிர்க்க வேண்டுமென்பதில்லை. ஏனெனில் இதில் மற்ற நன்மைகளும் அடங்கியிருப்பதால், இதனை 2-3 வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டாலே போதும்.

ஸ்குவாஷ் (Squash)
ஸ்குவாஷ் ஒரு இனிப்புச் சுவையுடைய குளிர்கால காய்கறி. இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் அதிகம் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள், இநத் காய்கறியில் எவ்வளவு தான் நன்மைகள் இருந்தாலும், அறவே தவிர்க்க வேண்டும்.

பச்சை பட்டாணி
பச்சை பட்டாணியில் ஸ்டார்ச் அதிகம் நிறைந்திருப்பதால், இந்த உணவுப் பொருளையும் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

தக்காளி
தக்காளி சேர்க்காத உணவுகளை பார்க்கவே முடியாது. இருப்பினும் இது இனிப்புச் சுவையுடையதால், இதனை பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் உணவுகளிலும் தக்காளியை அளவாக பயன்படுத்த வேண்டும்.

சோளம்
சோளத்தில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஸ்வீட் கார்ன். இதன் பெயரிலேயே, இது மிகவும் இனிப்பானது என்பது தெளிவாக தெரிவதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இதில் எண்ணற்ற அளவில் ஸ்டார்ச் நிறைந்துள்ளது.

வாழை வகைகள்
இந்தியாவில் வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவற்றை அதிகம் சமைத்து சாப்பிடுவோம். ஆனால் இந்த உணவுப் பொருட்களிலும் ஸ்டார்ச் அதிகம் நிறைந்துள்ளது. குறிப்பாக வாழைப்பழத்தில் இனிப்புச் சுவை அதிகம் உள்ளது. எனவே இந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரைவள்ளி கிழங்கு
உருளைக்கிழங்குடன் ஒப்பிடுகையில் சர்க்கரைவள்ளி கிழங்கில் ஸ்டார்ச் குறைவாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இத்தகைய கிழங்கை அறவே தவிர்க்க வேண்டும்.- Tamilcnn.
 

gowrymohan

Registered User
Blogger
இளநரையை போக்க பக்க விளைவு அற்ற சில தீர்வுகள் உங்களுக்காகபெரும்பாலானோர் சிறு வயதிலிருந்தே நரை முடி பிரச்சனைக்கு ஆளாகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரையின் காரணமாக நரை முடி வந்தால் ஒன்றும் செய்வதற்கு இல்லை. ஆனால் சிலருக்கு மயிர்கால்களில் உள்ள முடிக்கு நிறமளிக்கும் மெலனினை உற்பத்தி செய்யும் மெலனோ சைட்டுகள் போதிய மெலனினை உற்பத்தி செய்யாமல் இருக்கும். இவ்வாறு மெலனின் அளவு குறைந்தால், கூந்தலும் நரைக்க ஆரம்பிக்கும். பொதுவாக இத்தகைய நரைமுடியானது 30 வயதிற்கு மேல் தான் ஏற்படும். ஆனால் தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், சிறு வயதிலேயே முடி நரைக்க தொடங்கிவிடுகிறது. இருப்பினும் இத்தகைய நரைமுடிக்கு நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன.

உடனே எந்த கடையில் கிடைக்கும் என்று யோசிக்க வேண்டாம். அவை அனைத்துமே வீட்டிலேயே எளிதில் கிடைக்கக்கூடியவை தான். மேலும் இந்த வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதால், முடிக்கு எந்த ஒரு பக்கவிளைவும் வராமல் இருப்பதோடு, முடி நன்கு அடர்த்தியாக, நீளமாக மற்றும் ஆரோக்கியமாக வளரும். இப்போது நரைமுடியை தடுக்கக்கூடிய இயற்கை சிகிச்சை முறைகள் என்னவென்று கொடுத்துள்ளோம்.

குறிப்பாக இத்தகைய சிகிச்சைகள் ஆண், பெண் என இருபாலாருக்கும் பொதுவானவையே. சரி, அதைப் பார்ப்போமா!!!


ஹென்னா ஹேர் பேக்: ஹென்னா மற்றும் நெல்லிக்காய் ஹேர் பேக்கை முடிக்கு போட்டால், நரைமுடி பிரச்சனையை நிச்சயம் தவிர்க்க முடியும். அதற்கு ஹென்னா பொடியில், 3 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து பேஸ்ட் செய்து, கூந்தல் முழுவதும் தடவி ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளித்தால் முடியின் நிறம் மாறுவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.


ப்ளாக் டீ: நரைமுடியைப் போக்குவதற்கு ப்ளாக் டீ பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, 2 டீஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் அதனை குளிர வைத்து, முடியில் தடவி ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்காமல், முடியை நீரில் அலச வேண்டும்.


கறிவேப்பிலை: அனைவருக்குமே கறிவேப்பிலை நரைமுடியைப் போக்கவல்லது என்பது நன்கு தெரியும். இருப்பினும் சிலர் நம்பிக்கையின்றி, அதனை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். எனவே நரைமுடி போகவேண்டுமெனில், கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.


தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்க விட்டு, குளிர வைத்து, அதனை தினமும் கூந்தலுக்கு தடவி வந்தால், முடியானது கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

முளைக்கீரை சாறு: கருமையை இழந்த முடிக்கு, மீண்டும் கருமையை கொடுப்பதற்கு முளைக்கீரை சாற்றினை முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து, நீரில் அலச வேண்டும். இதனால் முடி நன்கு வளர்வதோடு, கருமையோடும், பட்டுப் போன்றும், மென்மையாகவும் வளரும்.


நெல்லிக்காய்: நெல்லிக்காய் முடியை கருமையாக்குவதில் மிகவும் சிறந்த ஒரு பொருள். எனவே நெல்லிக்காய் சாற்றில், சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து முடிக்கு தடவி ஊற வைத்து குளித்து வந்தால், கூந்தலானது இழந்த கருமையை மீண்டும் பெறும்.
-Tamilcnn.
 
Last edited:

gowrymohan

Registered User
Blogger
HEART ATTACKS AND WATER !

How many folks do you know who say they don't want to drink anything before going to bed because they'll have to get up during the night.
Heart Attack and Water - I never knew all of this ! Interesting.......
Something else I didn't know ... I asked my Doctor why people need to urinate so much at night time. Answer from my Cardiac Doctor - Gravity holds water in the lower part of your body when you are upright (legs swell). When you lie down and the lower body (legs and etc) seeks level with the kidneys, it is then that the kidneys remove the water because it is easier.

This then ties in with the last statement!
I knew you need your minimum water to help flush the toxins out of your body, but this was news to me. Correct time to drink water...
Very Important. From A Cardiac Specialist!

Drinking water at a certain time maximizes its effectiveness on the body
2 glasses of water after waking up - helps activate internal organs
1 glass of water 30 minutes before a meal - helps digestion
1 glass of water before taking a bath - helps lower blood pressure
1 glass of water before going to bed - avoids stroke or heart attack

I can also add to this... My Physician told me that water at bed time will also help prevent night time leg cramps. Your leg muscles are seeking hydration when they cramp and wake you up with a Charlie Horse.

Mayo Clinic Aspirin Dr. Virend Somers, is a Cardiologist from the Mayo Clinic, who is lead author of the report in the July 29, 2008 issue of the Journal of the American College of Cardiology.

Most heart attacks occur in the day, generally between 6 A.M. and noon. Having one during the night, when the heart should be most at rest, means that something unusual happened. Somers and his colleagues have been working for a decade to show that sleep apnea is to blame.

1. If you take an aspirin or a baby aspirin once a day, take it at night.
The reason: Aspirin has a 24-hour "half-life"; therefore, if most heart attacks happen in the wee hours of the morning, the Aspirin would be strongest in your system.

2. FYI, Aspirin lasts a really long time in your medicine chest, for years, (when it gets old, it smells like vinegar).

Something that we can do to help ourselves - nice to know. Bayer is making crystal aspirin to dissolve instantly on the tongue.
They work much faster than the tablets.
Why keep Aspirin by your bedside? It's about Heart Attacks.
There are other symptoms of a heart attack, besides the pain on the left arm. One must also be aware of an intense pain on the chin, as well as nausea and lots of sweating; however, these symptoms may also occur less frequently.

Note: There may be NO pain in the chest during a heart attack.
The majority of people (about 60%) who had a heart attack during their sleep did not wake up. However, if it occurs, the chest pain may wake you up from your deep sleep.
If that happens, immediately dissolve two aspirins in your mouth and swallow them with a bit of water.
Afterwards: Phone a neighbor or a family member who lives very close by.- Say "heart attack!" - Say that you have taken 2 Aspirins.
Take a seat on a chair or sofa near the front door, and wait for their arrival and ...DO NOT LIE DOWN!

- Mohandass Samuel
 

gowrymohan

Registered User
Blogger
உடற்பருமனைக் குறைக்கும் கரும்புச் சாறு!

பருமனான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள் உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது.

இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது.

இரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

கரும்பு சாறு பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரியவரும்.

பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல் உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது.


- Mohandass Samuel