Medicinal Benefits of Cereals and Grains - தானியங்கள் மற்றும் பருப்புகளின்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]தானியங்கள் மற்றும் பருப்புகளின் மருத்துவப் பயன்கள்[/h]
உளுந்து – மருத்துவப் பயன்கள்

உளுந்து -Black Gram, Vigna mungo

நோயின் பாதிப்பு நீங்க
கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.
இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய
இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக
உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

பித்தத்தைக் குறைக்க
உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு
தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும். இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு
சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்களுக்கு
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: தானியங்கள் மற்றும் பருப்புகளின் மருத்&amp

கம்பு

கம்பு -millet-பச்சையும் வெண்மையும் கலந்த நிறத்திலுள்ள தினை வகையைச் சேர்ந்த ஒரு தானியம். இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடியது.
சோளம்போல கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இந்தத் தானியம் இருப்பதே இதன் தொன்மைக்குச் சான்று.

அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச் சத்து என அனைத்துச் சத்துகளுமே அதிகம் கொண்ட தானியம் கம்பு. அரிசியை விட கிட்டத்தட்ட 8 மடங்கு அதிக இரும்புச் சத்து கொண்டது.


மருத்துவ பயன்கள்

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.

கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கும் எடை குறைக்க விரும்புவர்களுக்கும் மிக ஏற்றது.

இதயத்தை வலுவாக்கும்.
சிறுநீரைப் பெருக்கும்.
நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
இரத்தத்தை சுத்தமாக்கும்.
உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.
நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.
தாதுவை விருத்தி செய்யும்.
இளநரையைப் போக்கும்.

கம்பை நன்கு வறுத்து, பொடித்து, சலித்து அத்துடன் நாட்டுச்சர்க்கரை தேவையான அளவு சேர்த்து வளரும் குழந்தைகளுக்கு கொடுக்க தேறாத குழந்தைகள் சத்துப்பிடித்து நன்கு தேறி வளருவார்கள். சதைப்பற்றும் அதிகரிக்கும்.
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

கதிர் அறுக்கப்பட்ட கம்பு செடி, தனியாக வெட்டி எடுக்கப்பட்டு, குடிசைகளுக்கு கூரை வேய பயன்படுகிறது. கம்பு செடிகள் வேயப்பட்ட கூரை, குளிர்ச்சியை தரக்கூடியது.

அறுவடைக்கு பின், கம்பு செடிகள், நிலத்துடன் சேர்த்து உழவு செய்யப்படுகின்றன. இதனால், நிலத்திற்கு தழைச்சத்து கிடைக்கிறது. எளிதில் மக்கும் தன்மை கொண்டது, கம்பு செடி என்பதால், ஆறடி நீள செடிகளும், விரைவில், நிலத்திற்கு உரமாக மாறி விடுகின்றன. 

Attachments

Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
Re: தானியங்கள் மற்றும் பருப்புகளின் மருத்&amp

காடைக்கண்ணி அல்லது புல்லரிசி என்னும் ஓட்ஸ்”- OATS

காடைக்கண்ணி என்பது நெல்வகையா? பயறு வகையா என்று கேட்கும் காலம் வந்துவிட்டது. 70 நாட்களில் விளையக்கூடிய பயறு வகைகளைப் பார்த்திருக்கிறோம். அறுபதே நாளில் விளையக்கூடிய தானியம் தான் காடைக்கண்ணி எனப்படும் ஓட்ஸ்.

நெல்லைப் போன்ற புற்செடித் தாவரம் ஓட்ஸ். இதன் தாவரவியல் பெயர் அவைனா சடைவா (Avina sativa).
ஓட்ஸ் கூழ் / ஓட்ஸ் கஞ்சி (Oatmeal Porridge) ஓர் ஆரோக்கிய உணவாக உட்கொள்ளப்படுகிறது. ஓட்ஸ் ஈரட்டி (OAT COOKIES) ஒரு பிரபலமான இனிப்பு வகை ஆகும். இது கொழுப்புச்சத்து குறைவானது. ஓட்ஸின் பாரம்பரிய தமிழ் சொல் “காடைக்கண்ணி” ஆகும்.

ஓட்ஸ் மனிதன் உணவாக உட்கொள்ள ஏதுவான தானியம் ஆகும். கரையக் கூடிய நார்ச்சத்து இருப்பதனால் ஓட்ஸ் ஜீரணமாக நேரம் ஆகிறது. எனவே இதில் ஆற்றலானது நீண்டநேரம் மெதுவாக வெளியாவதால் உடல் அளவிலும் மூளை அளவிலும் நீண்ட நேரம் ஆற்றல் அளிக்கக்கூடியது.

ஓட்ஸ் கஞ்சி தயாரிக்க வெந்நீர் அல்லது குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட பாலுடன் சேர்த்து சமைத்து அதனுடன் பழங்கள், கொட்டை வகைகள் மற்றும் வாசனை பொருட்கள் சேர்த்து உட்கொள்ளலாம். ஓட்ஸ் மற்ற பொருட்களுடன் சேர்த்தும் சப்பாத்தி, பரோட்டா அல்லது தோசை, இட்லி அல்லது ஊத்தப்பம் மாவுடன் சேர்த்தும் சமைக்கலாம்.

ஓட்ஸ் இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக துண்டு செய்யப்பட்டு வேக வைக்கப்படுகிறது. இதை ஸ்காட்ச் ஒட்ஸ் என்றழைக்கப்படுகிறது. இது வழவழப்பு தன்மையாக இருக்கிறது.

1.உருட்டப்பட்ட ஓட்ஸ்
தோல் நீக்கப்பட்ட ஓட்ஸ் ஆவியில் வேக வைக்கப்பட்டு பெரிய உருளைகளினால் தட்டையாக்கப்படுகிறது. இது 15 நிமிடங்களில் வேகும் தன்மை கொண்டுள்ளது.

2.விரைவாக வேகும் தன்மை கொண்ட ஓட்ஸ்
தோல் நீக்கப்பட்ட ஓட்ஸானது சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டு ஆவிசியல் வேக வைக்கப்பட்டு உருளைகளினால் உருட்டப்பட்டு அவல் ஆக்கப்படுகிறது. இது வேக வைக்க ஐந்து நிமிடம் ஆகிறது.

3.உடனடி ஓட்ஸ்
உடைத்த ஓட்ஸானது வேக வைக்கப்பட்டு காய வைத்து பின்பு தட்டையாக்கப்படுகிறது. வேக வைக்கப்படுவதால் ஓட்ஸானது மென்மையாகிறது. இதனுடன் நீர் சேர்த்து இந்த கலவை அடுமனை பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் பெறுவது ஓட்ஸ் ஆகும். இந்த ஓட்ஸ்சில் பொதுவாக நார்சத்து அதிகம், ஓட்ஸ் நமது உடலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதுடன் , சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பல நோய்களுக்கு எதிராக நமது உடலை பாதுகாக்கிறது. ஓட்ஸில் ‘பீட்டா-குளூ கான்’ எனும் ஒருவகை சிறப்பு நார்ச் சத்து அடங்கி உள்ளது. இந்த நார் சத்து நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது மேலும் நல்ல கொழுப்பின்_அளவு மாறாமல் அப்படியே இருப்பது தான் இதன் சிறப்பு அம்சம்.
contd..​
 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
Re: தானியங்கள் மற்றும் பருப்புகளின் மருத்&amp

ஓட்ஸ்”- OATS

பிரச்சனைகளும் நோய்களும் இருந்தாலும் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். இது உண்மையில் நடக்கிற காரியமா? நடக்கிற காரியம் தான் என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் நிரூபித்துள்ளனர்.

இதற்கு ஒரே வழி, ஓட்ஸ் சாப்பிடுங்கள். ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன. நீரழிவு, இரத்தக் கொதிப்பு, உயரும் உடல் அம்சங்கள், கொழுத்த சரீரம், உயர் இரத்தக் கொலஸ்ட்ரால் (இது ஆண்மைக் குறைவையும் ஏற்படுத்துகிறது), புற்றுநோய் முதலிய நோய்களையும், தாம்பத்திய வாழ்வில் ஈடுபாடு இல்லாத தன்மைகளையும் மிச்சம் சொச்சம் இல்லாமல் ஓட்ஸ் குணப்படுத்தி விடுகிறது.

மனித மூளையில் உள்ள விம்பிக் சிஸ்டம் என்ற அமைப்பு சரிவரச் செயல்பட்டால் போதும். ஆண்மைக் குறைவும், பெண்மைக் குறைவும் ஏற்படாது. அதற்கு எளிய உணவு மருந்து ஓட்ஸ் உணவுதான் என்று சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள ‘அட்வான்ஸ் ஸ்டடி ஆப் ஹியூமன் செக்ஸுவாலிட்டி’ என்ற அமைப்பு கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. ‘லிபிடோ’ என்று சொல்லப்படும் உணர்ச்சி உந்துதல் குறைவாக இருந்தால் அதுதான் பல மனக்கவலைகளை உருவாக்கிவிடுகிறது. எதிர்காலத்தின் மீது பயத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஓட்ஸ் இந்தக் குறையை மிக எளிதாக நிறைவு செய்துவிடுகிறது. காரணம் என்ன? ஓட்ஸில் உள்ள மருத்துவக் குணம் உடலில் தொற்று நோய் பரவுவதை தடுக்கிறது. தமனி இறுக்கம் குறைந்து மூச்சு விடுவதில் சிரமத்தை குறைக்கிறது. உடல் பலவீனத்தை குறைத்து திசுக்களுக்கு புத்துணர்ச்சியை அளித்து லிபிடோவை அதிகரிக்கச் செய்கிறது. எனவே, உற்சாகமாக வாழ தயாராகி விடுகின்றனர். இத்தன்மை ஓட்ஸ் உணவில் நேரடியாகக் கிடைக்கிறது.

11,12 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள். அதன் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள். சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த பண்டைய மக்களே ஓட்ஸ் சாப்பிட்டு வந்ததை தொல்பொருள் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள் தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன் சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம் தான் என்பதையும், குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். அதனால் இவர்கள் செயல் நோக்குடன் தொடர்ந்து வாழ்கின்றனர். எனவே ஓட்ஸ் மீல் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாப்பிடுங்கள்.

குளங்களில் மீன் வளர்ப்பவர்கள் ஓட்ஸ்சை அதிகளவில் உணவாகப் போட்டால் நிறைய மீன்கள் கிடைக்கும்.
பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50கிராம் வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

கோதுமையும் பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும் போது சேர்த்துச் சாப்பிடவும். இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும்.

இதுபோன்ற பல நன்மைகளை தரும், என்றும் இளமை காக்கும் ஓட்ஸ் தினமும் ஓரு வேளை உணவில் சேர்க்க இன்றே முடிவு செய்யுங்கள், நோயின்றி ஆரோக்கியமாக வாழப் பழகுங்கள்.
contd..​
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
Re: தானியங்கள் மற்றும் பருப்புகளின் மருத்&amp

ஓட்ஸ்”- OATS

அடங்கியுள்ள சத்துக்கள்

ஓட்ஸ் பி – குளுக்கான் என்பது கரையக் கூடிய நார்ச்த்து ஆகும். இது வழவழப்பான பாலி சாக்ரைடு இது சர்க்கரை டி-குளுக்கோன்ஸ் ஆனது. ஆனால் இது கரையாது. 1-4-பி-டி பிணைப்பானது. கரையாதது பி-குளுக்கான் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு மாதிரியாக அமைந்துள்ளது. ஓட்ஸ் தவிடு 5.5 சதவீதம் அதிகமாக உருட்டிய ஓட்ஸ் – 23 சதவீதம் உள்ளாக, முழுமையான ஓட்ஸ் 4 சதவீதம்.

கரையக்கூடிய நார்சத்து
ஓட்ஸ் ஒட்டியுள்ள மேலுறை (தவிடு) இது சாப்பிடும்போது (குறைந்த அளவு) குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புச்சத்து கொண்ட கொழுப்பு இதில் உள்ளதால் இதய நோய் குறைகக்க கூடியது. முழுமையான ஓட்ஸில் 0.75 கிராம் கரையக் கூடிய நார்ச்சத்து ஒரு முறை உண்ணும்போது நமக்கு கிடைக்கிறது. பி-டி குளுக்கோன் என்னும் பாலி சாக்கரைடானது முழு ஓட்ஸில் கரையக்கூடிய நார்சத்து கொண்டதாகும்.

பி-டி குளுக்கோன் பொதுவாக பி-குளுக்கோன்ஸ் கரையாத பாலி சர்க்கரையாக தானியத்திலும், பார்லி, ஈஸ்ட், பாக்டீரியா, ஆல்கா மற்றும் காளனிச் உள்ளது. ஓட்ஸ், பார்லி மற்ற தானியங்களில் இது பொதுவாக என்டோஸ்பெர்ம் ஒட்டியுள்ள செல் சுவரில் உள்ளது.

சத்துக்கள்
ஆற்றல் கி.கலோரி – 390
கார்போநைட்ரேட் (கி)- 66
நார்ச்சத்து (கி)- 11
கொழுப்பு- 7
புரதம் (கி)- 17
பென்தோதனிர் அமிலம் (மி.கி) – 1.3
போலேட் (மை.கி) -56
இரும்பு (மி.கி) -5
மக்னீசியம் (மி.கி) -117
பி குளுக்கான் (கரையக்கூடிய நார்) (கி) -4
தானியங்களில் ஓட்ஸில் மட்டிலும் குளோபுருன் / அவினலின் புரதங்கள் அமைந்துள்ளது. குளோபுளின் நீரில் கரைக்கூடியது. தானிய புரதமாக குருட்டன் மற்றம் ஜீன் புரதமினாக உள்ளது. சிறிய அளவிளான புரதம் புரோலமைன் மற்றும் அவினின் உள்ளது.
ஓட்ஸ் புரத சத்தானது சோயாவிலுள்ள புரதத்திற்கு சமமானது. உலக சுகாதார நிறுவனமானது ஓட்ஸை மாமிசம், முட்டை மற்றம் பாலுக்கு நிகராக புரதசத்தை கொண்டுள்ளதாக கூறியுள்ளது. ஓட்ஸ் சக்கை மாவு ரொட்டி தயாரிக்க ஏற்றது அல்ல. இந்தியாவில் ஓட்ஸ் சக்கையில் அடங்கியுள்ள சத்துக்கள் ஈரப்பதம் – 10, புரதம் – 13.6, கொழுப்பு – 7.6, கார்போஹைட்ரேட்-62.8 மற்றும் சாம்பல் சத்து – 1.8 சதவீதம் தானியமானது. போதிய அளவு பி வைட்டமின் நிறைந்தாக உள்ளது.

அதிக நார்ச்சத்து நிறைந்தது – முக்கிய அமினோ அமிலங்களைக் கொண்டது. லினொலியிக் அமிலம் மற்றும் ஒலியிக் அமிலம் (குறைந்த மற்றும் அதிக கொழுப்பு)

தாது உப்புகள் : மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் (உறுதியான எலும்பு வளர்ச்சிக்கு)

விட்டமின்கள் : பொலாசின், போலிக் அமிலம் (இதய வலிமைக்கு)

ஆன்டி ஆக்ஸிடென்ட் : அவரைரெமைட்ஸ் ஓட்ஸில் தனித்துவம் வாய்ந்த ஆன்டி ஆக்ஸடென்ட் ஆகும். அதிக ஆற்றல் கொண்டது
கரையக் கூடிய நார்ச்சத்து இருப்பதனால் ஓட்ஸட ஜீரணமாக நேரம் ஆகிறது. எனவே இதில் ஆற்றலானது நீண்டநேரம் மெதுவாக வெளியாவதால் உடல் அளவிலும் மூளை அளவிலும் நீண்ட நேரம் ஆற்றல் அளிக்கக்கூடியது.

இதய நோயிலிருந்து பாதிப்பு குறைவு
இதில் கரையக்கூடிய நார்ச்த்து இருப்பதால் இதில் குறைந்த அளவே LDL (குறைந்த அடர்த்தி லிப்போ புரதம்) தீங்கு விளைவிக்கக் கூடிய கொழுப்பு உள்ளது. குறையாத HDL அதிக அடர்த்தி கொண்ட லிப்போ புரதம் (நன்மை செய்யும் கொழுப்பு) உள்ளதால் இது இதய நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவுகிறது. ஓட்சுடன் அதிக அளவு பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்தளவு கொழுப்பு சத்து கொண்ட பால் பொருட்கள் உட்கொள்வதால் இரத்த அழுத்த பாதிப்பில் இருந்து விலகலாம்.
இன்சுலின் அளவை கட்டுப்படுத்துகிறது
கரையக்கூடிய நார்சத்து இருப்பதால் உணவு உண்டவுடன் உயரக்கூடிய குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால் சர்க்கரை வியாதி சமாளிக்க ஏற்றதாகும்.

ஓரே மாதிரி உருவ அமைப்பு/ உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க
ஓட்ஸில் கரைக்கூடிய நார்ச்த்து இருப்பதால் இது நீரை உறிஞ்சு அளவில் பெரிதாகின்றன. எனவே இதனை உட்கொண்டால் வயிறு நிறைந்து காணப்படுவதுடன் நீண்ட நேரம் வராமல் சமாளிக்கப்படுகிறது.

ஓட்ஸ் கஞ்சி தயாரிக்க வெந்நீர் அல்லது குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட பாலுடன் சேர்த்து சமைத்து அதனுடன் பழங்கள், கொட்டை வகைகள் மற்றும் வாசனை பொருட்கள் சேர்த்து உட்கொள்ளலாம். ஓட்ஸ் மற்ற பொருட்களுடன் சேர்த்தும் சப்பாத்தி, புரோட்டா அல்லது தோசை, இட்லி அல்லது ஊத்தப்பம் மாவுடன் சேர்த்தும் சமைக்கலாம்.

உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நிரூபித்துள்ளனர்.

சர்வரோக நிவாரணி
ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் விட்டமின் E, துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மக்னீசியம், மங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன. இதில் அதிக அளவு புரதமும் உள்ளது.

நீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் இரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

தினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறதாம். இதில் உள்ள இரசாயனம் புற்றுநோய் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கின்றன.

கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது.
நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் பருகுவதன் மூலம் அவர்களுக்கு ஜீரணம் மெதுவாக நடைபெற்று இரத்தத்தில் சர்க்கரை உடனே கலப்பது தடுக்கப்பட்டது.

ஓட்ஸ் சக்கை மற்றம் உருளை ஒட்ஸ் பொதுவாக விலங்குகளுக்கு தீவனமாக வழங்கப்படுகிறது. ஓட்ஸ் நிறைய பயன்களை கொண்டது. பொதுவாக ஒட்ஸானது உருட்டப்பட்டு அல்லது கசக்கி ஒட்ஸ் சக்கை அல்லது அரைத்து மாவாக பயன்படுத்தப் படுகிறது. ஓட்ஸ் சக்கையானது கூழாகவும், அடுமனை பொருட்கள் தயாரிக்கவும் அதாவது ஓட்ஸ்கேக், ஓட்ஸ் சக்கை பிஸ்கட் மற்றம் ஓட்ஸ் ரொட்டி சத்தான உணவாக பார்க்கப்படுகிறது.

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
Re: தானியங்கள் மற்றும் பருப்புகளின் மருத்&amp

சோயாவின் மருத்துவ குணங்கள்

உடல் வளர்ச்சிக்கு புரதமே அடிப்படை. உடலில் புதிய திசுக்களைக் கட்டமைக்கவும், அழிந்த திசுக்களுக்குப் பதிலாக புதிய திசுக்களை உருவாக்கவும் புரதம் அவசியம். ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாளைக்கு ஒவ்வொரு கிலோ கிராம் எடைக்கும் ஒரு கிராம் என்ற விகிதத்தில் புரதம் தேவை என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், நம் எல்லோருக்கும் அந்தளவு புரதம் கிடைக்கிறதா என்றால் சந்தேகம்தான்.

நல்ல புரதம் என்று பார்த்தால், எப்போதும் விலங்குகளிடம் இருந்து பெறப்படுகிற புரதம்தான் சிறந்தது. அத்தியாவசிய அமினோ அமிலமான ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதில்தான் இருக்கிறது. அதனால்தான் மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை உண்கிறார்கள். தாவர உணவுகளில் அதற்கு இணையான அதிக புரதம் கொண்ட ஒரே பொருள் சோயா. எனவே, சைவ உணவுக்காரர்கள் அதிக புரதம் பெற சோயாவையே நம்ப வேண்டியிருக்கிறது.

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவற்றில் 100 கிராமுக்கு 20 முதல் 25 கிராம் அளவு புரதம் இருக்கிறது என்றால், சோயாவில் அது 40 சதவிகிதம். அது மட்டுமா..? கல்சியம், B 12, நல்ல கொலஸ்ட்ரால் எல்லாமும் சோயாவில் அதிகம். சோயா என்றதும் பலருக்கும் தெரிந்தது சின்னச் சின்ன உருண்டைகளாக மளிகைக் கடைகளில் கிடைப்பதுதான். உண்மையில் சோயா என்பது ஒரு வகையான பயறு. அதை பயறாக உட்கொள்வது தான் சிறந்தது.

சோயா உருண்டைகள் சோயாவை அரைத்து, அதன் சாரத்தைப் பிழிந்தெடுத்த பிறகு பெறப்படுகிற புண்ணாக்கு மாதிரியான ஒன்றுதான். அதில் சத்துகளோ, அத்தியாவசிய அமினோ அமிலமோ இருக்காது. உருண்டை வடிவில், அவல் மாதிரி, இன்னும் மசாலா சேர்த்தெல்லாம் சோயா கிடைக்கிறது. இதில் ஃப்ளேக்ஸ் வடிவில் கிடைக்கிற சோயாவை பொரியல், கூட்டு செய்யும் போதெல்லாம் சிறிது சேர்த்துக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு வடிவத்தில் சோயாவை வாரத்தில் 2 முறை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். சோயாவை சமையலில் உபயோகிக்கத் தயங்குபவர்கள், அதிலுள்ள லேசான கசப்புத் தன்மையைக் காரணம் காட்டுவதுண்டு. அதுதான் புரதம்.
சோயாவை நேரடியாக உபயோகிக்க விரும்பாதவர்கள், 1 கிலோ கோதுமை மாவுக்கு 100 கிராம் சோயா வீதம் சேர்த்து அரைத்து உபயோகிக்கலாம். சூப் செய்கிற போதும், அதைக் கெட்டியாக்க சோயா மாவை 1 டீஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

100 கிராம் சோயாவில், புரதம் 43.2 கிராம், நல்ல கொழுப்பு 19.5 கிராம், தாதுச் சத்துகள் 4.6 கிராம், நார்ச்சத்து 3.7 கிராம், கார்போஹைட்ரேட் 20.9 கிராம், கலோரி 432 கிலோ, கல்சியம் 240 மி.கி இருக்கிறது

சோயா தரும் நன்மைகள்
எடையைக் குறைப்பதில் சோயாவுக்கு முக்கிய பங்குண்டு. உடலிலுள்ள கெட்ட கொழுப்பை விரட்டுவதில் சோயா உதவும். இதயத்துக்கும் நல்லது. சோயாவிலிருந்து பெறப்படுகிற ப்ரோபயாட்டிக் தயிரில் உள்ள ஈஸ்ட், செரிமானத்துக்கு மிகவும் நல்லது. விளையாட்டு வீரர்களுக்கு புரதத்தின் தேவை அதிகம். அதை ஈடுகட்ட சோயா சிறந்த உணவு. மெனோபாஸ் காலக்கட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைய ஆரம்பித்து, சினைப்பைகளின் செயல்திறனும் மங்கும். வாரத்தில் 5 நாட்கள் சோயா மில்க் எடுத்துக் கொண்டால் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

சோயா பயறை ஊற வைத்து, முளைகட்டச் செய்து, சுண்டலாகச் செய்து சாப்பிட்டால், ஈஸ்ட்ரோஜென் மற்றும் விட்டமின் E தேவை பூர்த்தியாகும்.

பச்சைப்பயறில் 56.7 சதவிகிதமும், ராஜ்மாவில் 60 சதவிகிதமுமாக உள்ள கார்போஹைட்ரேட், சோயாவில் மட்டும்தான் 20.9 சதவிகிதம். எனவேதான் எடைக் குறைப்புக்கு உதவும் உணவுகளில் சோயாவுக்கு முக்கிய இடமிருக்கிறது. எடையைக் குறைக்க நினைப்போர், கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது முதன்மையான விதி. மற்ற பருப்புகளில் இல்லாத அளவு அதிக கல்சியமும் (240 மி.கி.), பாஸ்பரஸ் சத்தும் (690 கிராம்) சோயாவில் உண்டு. இந்த இரண்டும் இதய நோய் பாதித்தவர்கள், குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அவசியம் தேவை. இரும்புச் சத்தும் மற்ற பருப்புகளைவிட, சோயாவில் சற்றே அதிகம். அதாவது, 10.4 சதவிகிதம்.

யாருக்குக் கூடாது?
ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகம் என்பதால், ஆண்கள் சோயா அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம். தசைகளை பில்டப் செய்ய ஜிம் செல்பவர்களை தினமும் 100 கிராம் சோயா எடுக்கச் சொல்வார்கள். ஆனால், அப்படி எடுப்பது செரிமானத்தைப் பாதிக்கும். காலை வேளைகளில் 25 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். இது முற்றிலும் புதிய உணவு என்பதால் இரவில் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். தவிர, வயதானவர்களுக்குக் கொடுக்கும் போதும், சோயாவாக அரைத்துக் கொடுப்பதற்குப் பதில், சோயா உருண்டைகளை சமையலில் சேர்த்துக் கொடுக்கலாம்.

 

Attachments

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#7
Re: தானியங்கள் மற்றும் பருப்புகளின் மருத்&#29

Wonderful information ! thank you!
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
Re: தானியங்கள் மற்றும் பருப்புகளின் மருத்&amp

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைத்திருக்க சிறுதானியம்

எந்திரத்தனமான இந்த உலகில் நவதானியம் என்பது வருங்கால சந்ததியினருக்கு ஒரு காட்சி பொருளாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அந்த அளவுக்கு பொதுமக்களிடம் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது. நாம் உண்ணும் உணவு உடலுக்கு பசியை போக்குவதாக மட்டும் இருந்தால் போதாது.


உடல் ஆரோக்கியத்தை காப்பதோடு, ஊட்டச்சத்துக்களை அளிப்பதாகவும் இருக்க வேண்டும். அப்பேற்பட்ட உணவு வகைகளை நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம்.

அந்த ஊட்டச்சத்துக்களை நமக்கு தருவது நவதானியம் மட்டுமே. தமிழ்நாட்டின் பிரதான உணவு பயிரான நெல்லுக்கு அடுத்த படியாக உணவு தானிய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பவை சிறு தானிய பயிர்களான சோளம், கம்பு, ராகி, வரகு, பனிவரகு மற்றும் குதிரை வாளியாகும்.

தற்போது மக்களிடம் சத்து மிகுந்த உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் இவ்வகை சிறு தானிய பயிர்களின் தானியங்களுக்கு சிறந்த விற்பனை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இது இனி வரும் ஆண்டுகளில் சிறு தானிய பயிர்கள் விவசாயிகளால் பெருமளவு பயிரிடப்படும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

சிறு தானிய பயிர்களானது நாம் தற்போது அதிக அளவில் உட்கொள்ளும் அரிசியை விட அதிக அளவு ஊட்டச்சத்து, நார்பொருட்கள், வைட்டமின்கள் கொண்டுள்ளது. சிறுதானிய உணவு பொருட்கள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மிகவும் உகந்தது. இவற்றை தொடர்ச்சியாக உட்கொள்ளும் போது சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் முதலியவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

பாரம்பரிய சிறு தானியங்களில் இருந்து உணவு சமைத்து உண்டு வந்த பொழுது அதிக அளவில் உடல் நோயின்றி மக்கள் வாழ்ந்து வந்தார்கள். சிறு தானிய பயன்பாடு குறைந்த பின்பு பல்வேறு வகையான நோய்களுக்குக்கு ஆட்பட்டு உணவுக்கு இணையான அளவு மருந்துகளையும் உண்ணுகின்ற சூழ்நிலைக்கு ஆளாகி விட்டனர்.

குறிப்பாக உலகத்தில் உள்ள 15 கோடி சர்க்கரை நோயாளிகளில் இந்தியாவில் மட்டும் 3 கோடியே 50 லட்சம் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் மக்கள் தொகையான சுமார் 7 கோடியில் 70 லட்சம் பேர் அதாவது 10-ல் ஒரு நபர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையை மாற்ற பாரம்பரியமாக நாம் உண்டு வந்த உணவுகளை வரும் தலை முறையினருக்கு மீண்டும் அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது. பாரம்பரிய பொருட்கள் மற்றும் சிறு தானியங்கள் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து கீழே உள்ளவற்றை உணவாக சமைத்து சாப்பிட்டால் அழிந்து வரும் இந்த பயிர்களும்,மனித வளமும் மேன்மையுறும்.

நம் பண்பாட்டின் பாரம்பரிய உணவு பழக்க வழக்கமும் மீட்டெடுக்கப்படும். வரகரிசி, கேரட், பட்டாணி, பீன்ஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு உள்பட பல பொருட்களை சேர்த்து வரகு தம்பிரியாணி, கம்பு, ராகி, தினை, வரகு, சோளம், துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸ் மில்லட் அடை சமைத்து சாப்பிடலாம்.

கம்பு மாவு, சோளமாவு, ராகிமாவு உள்பட பல பொருட்களை சேர்த்து மிக்ஸ் மில்லட் சப்பாத்தி சமைக்கலாம். முளை கட்டிய ராகி, தேங்காய், இஞ்சி, பூண்டு, கிராம்பு, பச்சை மிளகாய், பொட்டுக் கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து ராகி மஞ்சூரியன் சமைத்து சாப்பிடலாம். தினை அரிசி, பால், தண்ணீர், கன்டென்ஸ்டு மில்க், வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து தினை பயாசம் தயாரிக்கலாம்.

கம்பு மாவு, பச்சைப்பயிறு மாவு, பொடியாக நறுக்கிய பேரிச்சம் பழம், கருப்பட்டி, பால் சேர்த்து கம்பு லட்டு தயாரித்து சாப்பிடலாம். சாமை அரிசி, பயத்தம் பருப்பு, நெய், கல்கண்டு, திராட்சை, முந்திரி சேர்த்து சாமை கல்கண்டு பாத்தும், வரகரிசி, பொட்டுக்கடலை மாவு, வெண்ணை, சூடான எண்ணை, எள், ஓமம் சேர்த்து வரகு முறுக்கும், கம்பரிசி, கடலை பருப்பு, வெல்லம் சேர்த்து கம்பு இலை அடையும் சமைக்கலாம்.

வரகரிசி, பயித்தம் பருப்பு சேர்த்து வரகு பொங்கலும், சோள அரிசி, தண்ணீர் சேர்த்து சோள சாதம் மற்றும் சோளம், பயத்தம்பருப்பு, மிளகு சேர்த்து சோள உசிலி தயாரிக் கலாம். குதிரைவாலி அரிசி, கேரட், பட்டாணி பீன்ஸ், வெங்காயம், கெட்டியான தேங்காய்பால், முந்திரி சேர்த்து குதிரை வாலி புலாவ் செய்யலாம்.

வரகரிசி, அரைத்த தக்காளி விழுது, வெங்காயம், இஞ்சி, பட்டாணி சேர்த்து வரகு தக்காளி பாத் தயாரிக்கலாம். வரகு கம்பு, சோளம், உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தானிய தோசை சமைக்கலாம். வரகு அவல்,சோள அவல், வேக வைத்த கேரட், பட்டாணி உருளை கிழங்கு சேர்த்து மில்லட் அவல் உப்புமா தயாரிக்கலாம்.

கம்பரிசி, பருப்பு, பாசிப்பயிறு சேர்த்து கம்பு பருப்பு சாதம் செய்யலாம்.தினை அரிசி, தேன், ஏலக் காய், நெய் சேர்த்து தினை மாவு தயாரிக்கலாம். உடைத்த் கம்பு குருணை, கடைந்த தயிர், மோர், நறுக் கிய வெங்காயம் சேர்த்து கம்பங்கூழ் செய்யலாம். சோள மாவு, வேக வைத்து மசித்த துவரம் பருப்பு சேர்த்து சோள அமிர்த பலம் தயாரிக்கலாம்.

வெள்ளை சோளம், மக்காச்சோளம், வெங்காயம், வெள்ளரிக்காய், துருவிய கேரட் சேர்த்து சோள மசாலா பொரி தயாரிக்கலாம். சோள அரிசி, சோள அவல், புளித்த தயிர், சர்க்கரை சிட்டிகை சேர்த்து அவல் தோசை செய்யலாம். கம்பரிசி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கம்பு கொழுக்கட்டை தயாரிக்கலாம்.

சோள அரிசி, துவரம் பருப்பு,மிளகு, சீரகம் சேர்த்து சோள உப்புமா செய்யலாம். சோளமாவு, வெந்நீர், சர்க்கரை, எண்ணை, நெய் சேர்த்து சோள ரொட்டி தயாரிக்கலாம். கம்பு அல்லது கம்பரிசி, முழு உளுந்து, வெந்தயம், ஆமணக்குவிதை சேர்த்து கம்பு இட்லி செய்யலாம். சாமை, தயிர், பால், திராட்சை, முந்திரி, மாதுளம் பழம் ஆகியவை சேர்த்து தயிர் சாதம் செய்யலாம்.

 

Attachments

Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#9
Re: தானியங்கள் மற்றும் பருப்புகளின் மருத்&amp

சிறுதானியம்-மருத்துவ பயன்கள்:

குதிரைவாலியில் நார்சத்து மிகுதியாக காணப்படுவதால் உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும் செரித்தலின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது.இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாக பயன்படுகிறது.

உடலில் கப ஆதிக்கம் அபகரித்து அதனால் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுவார்கள். தினை அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளிகாய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.

கேழ்வரகு :

கேழ்வரகிலுள்ள மாவுச் சத்து மெதுவாக சர்க்கரையாக மாறும் தன்மை உள்ளதால் கேழ்வரகினை உண்பதால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும், நீரழிபு நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டினுள் வைக்கவும் உதவுகிறது. மேலும் இதில் நார்சத்து அதிகமாக இருப்பதால் ஜீரண சக்தியையும் அதிக மாக்கவும், ரத்தத்தில் உள்ள தேவையில்லாத சர்க்கரை மற்றும் கொழுப்பு பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது. பனிவரகு எலும்புகள்மற்றும் பற்கள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.இதில் உள்ள நார் சத்து உணவு பொருட்களின் செரிமானத்திற்கு உதவுகிறது.

சோளம் :

தானியம் உணவாகவும், உலர்ந்த சோளத் தட்டை கால் நடை தீவனமாகவும் பயன்படுகின்றது. சோளத்தில் உடலுக்கு தேவையான ஆற்றல், புரதம், உயிர் சத்துகள் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. அரிசி சார்ந்த உணவை விட சோள உணவு சத்துள்ள உணவாக கருதப்படுகிறது. மேலும் சோளம் இதய நோய்கள், ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய் வருவதையும் குறைக்கும்.

மக்காச்சோளம் :

தானியங்கள் உணவாகவும், மாட்டு தீவனமாகவும், கோழித்தீவனமாகவும் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. எரிவாயு தயாரிப்பதற்கு மூலப்பொருளாக கொதிகலன்களில் உலர்ப் பான்களில் பயன்படுகின்றன.மக்காச்சோளம் மாவு, ரொட்டி, புட்டு மற்றும் உணவு கலவை செய்வதற்கும் பயன்படுகிறது. மேலும் இனிப்புகள்,சாஸ், ஐஸ்கிரீம், பிஸ்கட் மற்றும் கேக்குகள் தயாரிப்பதற்கு பயன்படுகிறது.

கம்பு :

மற்ற தானியங்களை விட கம்பு அதிக புரதசத்து மட்டுமல்லாது அமினோ அமிலங்களையும் அதிகம் பெற்று தரம் வாய்ந்ததாக விளங்குகிறது.போதிய அளவு மாவு சத்தும், அதிக ருசியை கொடுக்க கூடிய கொழுப்பும், வைட்டமின்களும், தாது உப்புகளும் இத்தானியத்தில் நிறைந்துள்ளன. மேலும் ரத்த அபிவிருத்திக்கான இரும்பு சத்து மற்ற தானியங்களை விட இதில் அதிக அளவில் உள்ளது.

சாமை :

சாமை உடல் அசதி மற்றும் தளர்ச்சியை போக்கி சுறுசுறுப்பை தரும். எலும்புகளுக்கும் ஊட்டசத்து அளிக்கும். இதை தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு புலப்படும். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் அடிக்கடி பயணம் செய்வதால் ஏற்படும் முதுகு வலி குறையும்,

வரகு :

வரகில் அடங்கியுள்ள அதிக அளவு லெசித்தின் நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது. மேலும் `பி' வைட்டமின்கள் குறிப்பிடும் படியாக நியாசின் மற்றும் போலிக், ஆசிட், தாது உப்புகள், கால்சியம், இரும்பு சத்து போன்றவையும் அடங்கி உள்ளன.

வரகு உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்ல உணவாகும். சீரான எடை குறைப்பிற்கும் உடல் பருமனால் ஏற்படும் மன அழுத்தத்திற்கும் நல்ல தீர்வாக பயன்படுகிறது.
 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#10
Re: தானியங்கள் மற்றும் பருப்புகளின் மருத்&amp

வரகு அரிசி சத்துக்கள்
தானியங்களின் பெயர்கள் கூட தற்போதைய தலை முறையினருக்கு தெரிவதில்லை.சிறுதானியங்களில் முக்கியமானது வரகு.இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். வரகு அரிசி,கோதுமையை விட சிறந்தது.

இதில் நார்ச்சத்து அரிசி,கோதுமையை விட அதிகம்.வரகில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால் ,இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்கள் கொண்டதாகும்.


இது பைட்டிக் அமிலம் குறைந்தும் நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் கொண்டதாகவும் உள்ளது. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.

வரகு, பூண்டு, பால் கஞ்சி தினமும் காலை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டி, உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம். நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது.


இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இதனை அரிசிக்கு மாற்றாக உபயோகப்படுத்தி இட்லி, தோசை, ஆப்பம், பனியாரம்,பொங்கல்,பாயாசம் என்று வகை வகையாக சமைத்து உண்ணலாம்.

வரகு அரிசி கஞ்சி

வரகு அரிசி - கால் கப்
பூண்டு பற்கள் - 10
சுக்கு - சிறிய துண்டு
சீரகம் - கால் ஸ்பூன்
வெந்தயம் - சிறிதளவு
பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

• சுத்தம் செய்த வரகு அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் வேகவிடவும்.

• பாதி வெந்ததும், உரித்த பூண்டுப் பற்கள், சுக்கு, சீரகம், வெந்தயம், பால் சேர்த்து வேகவிடவும்.

• நன்றாக வெந்த*தும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

• இதற்கு தொட்டு கொள்ள கறிவேற்றிலை துவையல் நன்றாக இருக்கும்.

 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.