Medicinal benefits of flowers - பூக்களின் மருத்துவ பலன்கள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கொழுப்பை குறைக்கும் செம்பருத்தி

மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன.

கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும்.

வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை.

செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.

தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.

இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர்.

அதன் விபரம்: உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது.

சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவபயன்கள் கொண்டது.

இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்
 

Attachments

Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
ரோஜாவின் மருத்துவகுணங்கள்

ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுடையது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். ரோஜா இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது. ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒரு கைப்பிடியளவு இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு தம்ளர் தண்ணீர்விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அதில் பாதி கசாயத்தில் சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலச்சிக்கல் விலகும்.

நீர்கட்டு உடையும், மூலச்சூடு தணியும். ரோஜா மொட்டுகளில் ஒரு கை அளவு கொண்டு வந்து ஆய்ந்து, அதை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியான தயிரில் போட்டுக்கெட்டு கலக்கி காலை வேளையில் மட்டும் குடித்து வர வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.


பித்தம் காரணமாக கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி மற்றும் பித்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு சட்டியில் போட்டு, இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி காலையில் ஒரு டம்ளர் அளவும், மாலையில் ஒரு டம்ளர் அளவும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கலக்கி குடிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் அறவே நீங்கிவிடும். இந்த சமயம் பித்தத்தை உற்பத்தி செய்யும் பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது.

ஆய்ந்து எடுத்த ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு 150 கிராம் சுத்தமான தேனை அதில்விட்டு நன்றாக கிளறி வெயிலில் வைத்து விட வேண்டும். தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி மாலையில் ஒரு தேக்கரண்டி சாப்பிடவேண்டும். காலையில் வெயிலில் வைத்து மாலையில் எடுத்து வைத்துவிடவேண்டும்.

இதை இரத்தபேதி நிற்கும் வரை சாப்பிடவேண்டும். இதை தயாரிக்க சிரமமாக தோன்றினால் தமிழ் மருந்துக்கடைகளில் குல்கந்து என்று கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கி இதே அளவு சாப்பிட்டு வரவேண்டும்.

ஒரு சிலருக்கு அடிக்கடி தும்மல் வரும். இதை நிறுத்த ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை பாத்திரத்தில் போட்டு அரை தம்ளர் அளவு தண்ணீர் விட்டு சுண்டக்காய்ச்சி அந்த தண்ணீரை இறுத்து காட்டுச்சீரகத்தில் ஒரு தேக்கரண்டி அளவு அம்மியில் வைத்து அரைத்து ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டு வந்தால் தும்மல் நிற்கும்.


 

Attachments

Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
செம்பருத்தியின் மருத்துவ குணங்கள்

எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட பூக்களில் ஒன்று,செம்பருத்தி. அவற்றில் சிலவற்றில் இங்கே அறிந்து பயன்படுத்துங்கள்…

* உடல் உஷ்ணம் அதிகமாகிவிட்டால் பலவித வியாதிகள் வர வாய்ப்புண்டு. இதுபோல் வராமல் தடுக்க, ஐந்து செம்பருத்திப் பூவை இட்டு, ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைந்து விடும். சாதாரணக் காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.

* பால்வினை வியாதிகளில் ஒன்றான வெட்டை நோயை செம்பருத்திப் பூ குணமாக்குகிறது. இந்தப் பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் பருக வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.

* இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது. செம்பருத்திப் பூவை 250 கிராம் எடுத்துக் கொண்டு துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும்.

பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி ‘சர்பத்’ தயாரித்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். இதிலிருந்து காலை, மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதயமும் பலம் பெறும்.

* சில பெண்களுக்கு பேன் பெருந்தொல்லை அதிகம் இருக்கும். அவர்கள், செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று, நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும். தவிர, பொடுகு போன்றவை இருந்தாலும் நீங்கிவிடும்.

* சில குழந்தைகள் பிறக்கும்போதே பலவீனமாகப் பிறப்பதுண்டு. இதனால் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறை யைப் போக்கிட, ஐந்து செம்பருத்திப் பூக்களை ஒரு மண் பாண்டத் தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி, பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்.


 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
[h=1]செவ்வரத்தை/ செம்பருத்தி[/h]
செம்பருத்தி பூ பார்க்கறதுக்கு மிகவும் அழகானது. பூஜைக்கு வீடுகளில் பெருவாரியாக பயன்படுகிறது. சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர். வைத்தியத்துக்கும் ரொம்ப சிறப்பானது.

இது பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடி, எட்டடி உயரம் வரைக்கும் நல்லா செழித்து வளரும். இதோட பூக்கள், வருஷம் முழுக்கப் பூத்துக்கிட்டே இருக்கும். இதன் வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைந்தது.

இதோட பூக்கள் இரண்டு வகையா இருக்கும். ஒரு வகை பூக்கள் அடுக்கடுக்கா காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியா அகலமா காட்சியளிக்கும். இதுதான் மருத்துவ ரீதியில் சிறந்தது.
செம்பருத்திப் பூவை சீனாவும் இந்தியாவும் தங்கள் நாட்டு பூ என உரிமை கூறுகிறது. ஆசியாவே இதன் பிறப்பிடம். மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்திதான். மலேசியாவில் அவ்வளவு மதிப்பு செம்பருத்திக்கு.

இத்தாவரங்களில் அமிலங்கள், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், கரோட்டின் என பல வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.

இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டவை. இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. சருமத்திற்கு இதமும், சுகமும் அளிப்பவை. மாதவிடாயைத் தூண்டக் கூடியது. இலைகளை அரைத்து குளிக்கும்போது ஷாம்பூ மாதிரி உபயோகிக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி. முடிக்கு நல்லது. இதழ்களின் வடிசாறு சிறுநீர்ப் போக்கு வலியை நீக்கும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் மருந்தாகிறது.

கூந்தல் வளர்ச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும்பங்கு வகிக்கிறது. காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும். வெள்ளைபடுதல் நிற்கும். இரத்தம் சுத்தமாகும். இதயம் வலுப்பெறும்.

400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை – மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெயை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பத்திப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும். இது ஒரு சிறந்த கூந்தல் தைலம்.

இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். பெண்கள் வீட்டுக்கு விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை நெய்யில் வதக்கிக் தின்பது குணப்படுத்தும்.

காய்ந்த மலர் இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகளை, சுத்தமான தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர பேன், பொடுகு அகலும்.

ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.

பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

இதிலிருந்து காலை, மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.

செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று, நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.

செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து கோப்பி, தேனீர் போல காலை மாலை அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது. தங்கச்சத்து இப்பூவில் இருப்பதால் தாதுவிருத்திக்கு மிகவும் சிறந்ததாகும். தினமும் 10 பூவினை மென்று தின்று பால்அருந்தினால் நாற்பது நாளில் தாது விருத்தி ஏற்படும்
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
செம்பருத்தி இலை- உடல்நல நன்மைகள்

செம்பருத்தி என்ற பூச்செடி, உலகத்தில் உள்ள வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல வட்டாரங்களில் அதிகமாக காணப்படும். இதனை “மார்ஷ் மாலோ” என்றும் அழைக்கின்றனர். செம்பருத்தி இலைகள் என்பது நம் இந்தியாவில் பொதுவான ஒன்றாகும். பல ஆண்டு காலமாக பலவித சிகிச்சைக்காக இதனை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் உலகத்தில் உள்ள பலரும் செம்பருத்தி இலைகளை சூடான அல்லது குளிர்ந்த தேநீரிலும் கலந்து குடிக்கின்றனர். இது நம் உடலுக்கு மிகவும் நல்லதாக விளங்குகிறது.

செம்பருத்தி இலைகளில் இன்னும் பல உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது. இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இது உதவுகிறது. மேலும் உணவிற்கு நிறத்தை சேர்க்கும் பொருளாகவும் இது சந்தையில் விற்கப்படுகிறது.செம்பருத்தி இலைகளால் செய்யப்படும் தேநீர் நம் உடலுக்கு மிகவும் நல்லது. அதனை உலகத்தில் உள்ள பல நாடுகளாலும் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்து வருகிறது.புற்று நோயை எதிர்த்து போராடுவதால், முக்கியமான உடல்நல பயனாக இது பார்க்கப்படுகிறது. அதற்கு இந்த இலைகளை வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதன் இலைகளை கொண்டு பேஸ்ட் செய்து புற்று நோயால் ஏற்பட்ட புண்களின் மீதும் தடவலாம்.

செம்பருத்தி இலையில் வைட்டமின் சி வளமையாக உள்ளது. சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணமாக்க இது பெரிதும் உதவுதால், இதுவும் அதன் முக்கிய உடல்நல பயனாக உள்ளது.
செம்பருத்தி இலை உங்கள் ஆற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் மாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் காய்ச்சல் போன்ற வெப்பத்தை தணிக்கவும் இது பெரிதும் உதவுகிறது.

மெட்டபாலிச வீதத்தை அதிகரித்து உடலில் உள்ள நீர்ம சமநிலையை மேம்படுத்த செம்பருத்தி இலைகள் பெரிதும் உதவுவதால், இதுவும் ஒரு முக்கிய உடலநல பயனாக கருதப்படுகிறது.

உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, உடலிலுள்ள தட்பவெப்ப நிலையை மேம்படுத்த உதவுவது செம்பருத்தி இலையின் மற்றொரு உடல்நல பயனாகும்.
செம்பருத்தி இலை கலந்த தேநீர் நம் உடலுக்கு மிகவும் நன்மையானது. செம்பருத்தி இலையால் கிடைக்கும் ஊட்டச்சத்து பயன்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் தேநீரை பருகுவதற்கு முன்பாக, அது இரசாயன முறைப்படி தயாரிக்கப்பட்டுள்ளதா, பதப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா, நல்ல தரத்துடன் பதப்படுத்தப்பட்டதா போன்றவைகளை கவனமாக இருங்கள். சிறுநீரக பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனை உள்ள நோயாளிகள் செம்பருத்தி இலை கலந்த தேநீரை பருகலாம். சிறுநீரக தொற்றுக்களை சரி செய்து, இரத்த கொதிப்பை குறைக்கவும் இது உதவும்.

செம்பருத்தி இலைகளை சீரான முறையில் மென்று வந்தால், முக்கியமாக மாதவிடாய் காலத்தில் பெண்கள், அந்நேரத்தில் ஏற்படும் வழியை போக்கும். மேலும் செரிமானத்திற்கு உதவி புரிந்து உடல் எடையையும் குறைக்கச் செய்யும்.

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
[h=1]ஆவாரை[/h]
ஆவாரை CACSIA AURICULTA
ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டீரோ
சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேகநீ
ரெல்லா மொழிக்கு மெருவகற்று மெல்லவச
மாவாரைப்பம்பரம் போல் லாட்டுத் தொழிலணங்கே
யாவாரை மூலியது.
மோகத்தினாலே விளைத்த சலம் வெட்டையனல்
ஆகத்தின் பிண்ணோ டருங்கிராணி- போகத்தான்
ஆவாரைப் பஞ்சகங் கொள் அத்தி சுரம் தாகமும் போல்
எவாரைக் கண்மடமாதோ?”

இது ஒருமொத்த மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். நமது உடலில் இருக்கும் பல மில்லியன் கலங்களிலும் சேரும் கழிவுகளை நீக்க முடியாமல் போகும் போதுதான் வியாதிகள் வருகின்றன என்பது நமது கீழை நாட்டு வைத்திய தத்துவம் . இது வெற்றியடைந்தால் கலங்களுக்கு அழிவில்லை,என்றும் இளமைதான்.

பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களை உடைய அழகிய குறுஞ்செடி. மெல்லிய தட்டையான காய்களை உடையது. மதிப்புத் தெரியாமல் சாலைகளின் ஓரம் மஞ்சளாக பூப் பூத்து மண்டிக் கிடக்கிறது. இதன் அனைத்து பகுதிகளும் சிறந்த பலன் அளிக்கும் மருத்துவ குணம் உடையது. அதன் வேர் இலைகள், பூ, கிளைகள், காய்கள் அனைத்தையும் சேர்த்து ஆவாரை பஞ்சக சூரணம் தயாரித்து அதை தொடர்ந்து உபயோகித்தால் சர்க்கரை வியாதி குணமாகிறது. விதை காமம் பெருக்கியாகச் செயற்படும்.
இதன் பூக்களை காயவைத்து காலையில் ஆவாரம் தேனீர் தயாரித்து அருந்தலாம். இதுவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். இதனுடன் நாவற்பழத்தின் கொட்டையையும் சேர்த்து பயன்படுத்தலாம். அதிக பயன் தரும்.

உடலில் தேய்த்து குளித்தால் சிலர் மேனியில் வரும் மேனி வாடை போய் விடும். சிறந்த தோல் காப்பான். தொடர்ந்து பூசி குளித்து வர உடல் தங்கம் போல் ஆகும் .

பூச்சூரணத்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள்தோறும் பயன்படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல், வறட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும். தேகம் பொன்னிறமாகும்.ஆவாரையின் பஞ்சங்க (வேர், இலை, பட்டை, பூ, காய்) சூரணம் 10 கிராம் வீதம் காலை, மதியம், மாலை வெந்நீருடன் கொள்ள பிரமேகம், மதுமேகம், மிகுதாகம், மிகுபசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் முழுவதும் வேதனை, பலக்குறைவு, மயக்கம், மூச்சுத் திணறல் ஆகியவை தீரும். 45, 90, 135 நாட்கள் சாப்பிட வேண்டும்.
இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகியவை நீரிழிவு, வெள்ளை, உட்கரு, புண், எலும்பைப் பற்றிய சுரம், நீர் வேட்கை போன்றவற்றை நீக்கும்.
பூவை வதக்கி கண் நோய்க்கு ஒத்தடமிடலாம்.
இதன் பூவை இனிப்புடன் கிளறி அல்வா செய்து சாப்பிட வெள்ளை, மூத்திர ரோகம், குறி எரிச்சல் நீங்கும். தகுந்த முறையில் உபயோகித்தால் நாம் முதுமையை வென்று, நோயின் பிடியில் இருந்து தப்பி மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.
ஆவாரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பிராணி, நல்லெண்ணெயுடன் (ஆவாரைத் தைலம்) காய்ச்சி, தலை முழுகி வர மதுமேகம் உடையவருக்குக் காணும் தோல் வெடிப்பு, வறட்சி, எரிச்சல் குணமாகும்.
20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி.யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்.
 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
ஆவாரம் பூ அதிசயங்கள்
ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று முது மொழி உண்டு ...

இதுதான் ஆவாரம் பூ. “நீரிழிவு” நோய்க்கு ஆவாரம் பூ ஒரு வரப்பிரசாதம்னு சொல்லலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறுனு இப்படி எல்லாத்துக்கும் ஆவாரம் பூ (கஷாயம்) குடிநீர் ஒரு சூப்பர் மருந்து.
ஆவாரம் பூவோட பச்சைப்பயறு சேத்து அரைச்சு உடம்பு மேல பூசி குளிக்கலாம். இதனால தோல் நமைச்சல் தீரும்.
ஆவாரையின் இலை, பட்டை, பூ, வேர், பிசின் இப்படி எல்லாத்திலயும் மருத்துவ குணம் இருக்கு.” தொடர்ந்து ஆவாரம் பூ பற்றி பார்க்கலாம்....

ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

ஆவாரம்பூ என்பது தங்கச் சத்துள்ளது என்பதால் தங்கத்திற்கு சமமாக கருதப்பட்டு விஷுக்கனி தரிசனத்தில் இடம் பெற்றுள்ளது . சாதாரணமாக தங்க பற்பத்தின் விலையும் அதிகம் . தங்கத்தின் விலையும் அதிகம் . சரியாக முடியாத தங்க பற்பம் சிறுநீரகத்தைப் பாதிக்கும் . ஆனால் ஆவாரம்பூ என்பது இயற்கையால் இயற்கையாக முடித்து வைக்கப்பட்டுள்ள தங்க பற்பம் . அதே சமயம் ஆவாரம்பூ மிக எளிதாக , விலையில்லாமல் அங்கங்கே பூத்துக் கிடக்கிறது .

ஒரு முறை மூலிகை ஆராய்ச்சி செய்ய கொல்லி மலைக்குச் சென்ற மாணவர்கள் அங்கே ஒரு சித்தரைக் கண்டார்கள் . அவர் உடல் ஒளி வீசும் பொன்னிறமாக இருந்தது . அவரிடம் அந்த மாணவர்கள் கேட்டார்கள் உங்கள் ஒளி வீசும் பொன்னிற உடலுக்கு காரணம் என்ன என்று கேட்டார்கள் . அதற்கு அவர் சொன்னார் ” ஆவாரம்பூ என்ற இந்த பொன் மூலிகைதான் எனது இந்த பொன்னிற ஒளி வீசும் உடலுக்கு காரணம் “என்றார் . “ஆவாரம்பூ காலையில் ஒரு கைப்பிடி , மாலையில் ஒரு கைப்பிடி பல ஆண்டுகளாக சாப்பிட்டு வருகிறேன் ” என்றார் . “அதன் விளைவாக ஆவாரம்பூவில் உள்ள தங்கச் சத்து எமது உடலில் ஊறி உடல் இப்படி மாறியது ” என்றார் .அவ்வளவு சிறப்பு வாய்ந்த மூலிகை இந்த ஆவாரம்பூ .

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#9
பூப்பெய்த வைக்கும் குங்குமப்பூ!

டாக்டர் ஜீவா சேகர், நேச்சுரோபதி மருத்துவர், சென்னை:
கர்ப்பிணி பெண்கள் எட்டாம் மாதத்தில் தினமும் 2 குங்குமப்பூ கீறலை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர, இரும்புச் சத்து உடம்பில் சேர்ந்து குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.
பிரசவ வலி வந்தும் குழந்தை வெளியில் வராமல் இருக்கும்போது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும்.

வெற்றிலையுடன் சிறிது குங்குமப்பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். வாயும் மணக்கும்.
குழந்தை பிறந்ததும், 3 கிராம் குங்குமப்பூவை தண்ணீர் விட்டு அரைத்து, உருண்டையாக செய்து சாப்பிட, வயிற்றில் உள்ள தேவையில்லாத கசடுகள் வெளியேறும்.அல்சரினால் குடல் புண்ணாகி வெந்து போயிருக்கும். காய்ச்சிய பாலில் 4 குங்குமப்பூ கீறலை சேர்த்து ஒரு மண்டலம் குடித்து வர, புண் ஆறிவிடும்.

25 வயதை எட்டியும் பருவம் எய்தாத பெண்களுக்கு தினமும் பாலில் குங்குமப்பூவை கலந்து கொடுத்து வந்தால் ஆறே மாதத்தில் பூப்படைந்துவிடுவர்.

தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும். குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும். குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும். அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#10
ரோஜாவின் 5 மருத்துவ குணங்கள்!

அனைவரும் விரும்பும் அழகான ரோஜாவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

1. ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரக்கூடியது. இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும்.

2. பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் பிரச்சனைகளை நிறுத்தும். மலமிளக்கியாக செயல்படும்.

3. ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகையளவு இதழை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதி கசாயத்தை எடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும்.

4. ரோஜா மொட்டுகளில் ஒரு கைப்பிடியளவு ஆய்ந்து வந்து , அம்மியில் வைத்தோ அல்லது மிக்ஸியில் போட்டோ மைபோல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும்.

5. பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து தண்ணீலை வடிகட்டி, காலையில் ஒரு டம்ளரும், மாலையில் ஒரு டம்ளரும், குடிக்கவேண்டும் ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.